ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ல் வெளியாகி, மாபெரும் வெற்றி பெட்ரா படம் ‘அவதார்’. உலக அளவில் அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையை இந்தப் படம் பெற்றுள்ளது. இதன் அடுத்த பாகம் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’, 2022-ம் ஆண்டு வெளியாகி வசூலில் சாதனை படைத்தது. இதன் 3-ம் பாகமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ இந்த ஆண்டு டிச.19-ம் தேதி வெளியாக இருக்கிறது. சாம் வொர்த்திங்டன், ஸோயி சல்டானா, சிகோனி வீவர், ஸ்டீபன் லங் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். இந்தப் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ள இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்பட டிரெய்லரின் முதல் கிளிம்ப்ஸ், வரும் 25-ம் தேதி ‘தி பென்டாஸ்டிக் போர்: பர்ஸ்ட் ஸ்டெப்’ படத்துடன் வெளியாகிறது.
Author: admin
சென்னை: அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியம் உட்பட 4 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, சென்னையில் 72 மணிநேர உண்ணாவிரத போராட்டம் இன்று தொடங்குகிறது. சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட அலுவலர் குழுவை திரும்பப் பெறுவது, பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் வழங்குவது ஆகிய 4 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 72 மணி நேர உண்ணாவிரத போராட்டம் இன்று (23-ம் தேதி) தொடங்குகிறது. சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த போராட்டம் 26-ம் தேதி காலை 10 மணி வரை நடைபெற உள்ளது. சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜெயராஜராஜேஸ்வரன் தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தை தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் த.அமிர்தகுமார் தொடங்கி வைக்கிறார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள்…
புனேவுக்கு பயணம் என்பது வரும் நாட்களில் மென்மையாகவும் தொந்தரவில்லாமலும் பெற உள்ளது. சமீபத்திய செய்தி அறிக்கையின்படி, புனேவிலிருந்து நான்கு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை அறிமுகப்படுத்துவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது, இது ஷேகான், வதோதரா, செகந்திராபாத் மற்றும் பெலகாவி போன்ற நகரங்களுடனான இணைப்பை மேம்படுத்தும். இந்த சேர்த்தல்களுடன், பயணிகளுக்கு மிகவும் வசதியான மற்றும் திறமையான பயண அனுபவத்தை வழங்கும்போது பயண நேரங்கள் கணிசமாக குறையும்.இப்போதைக்கு, புனே இரண்டு செயல்பாட்டு வான்டே பாரத் சேவைகளைக் கொண்டுள்ளது, புனே-கோலாப்பூர் மற்றும் புனே-ஹப்ப்பாலி வழித்தடங்களில் இயங்குகிறது. இப்போது வரவிருக்கும் நான்கு ரயில்களுடன், புனேவிலிருந்து தோன்றிய வாரே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மொத்த எண்ணிக்கை ஆறு ஆக உயரும், இது நகரத்தின் இன்டர்சிட்டி இணைப்பில் கணிசமான முன்னேற்றத்தைக் குறிக்கிறது. மேலும் வாசிக்க: நியூசிலாந்தின் விசா தள்ளுபடி நாடுகள்: இதன் பொருள் என்ன, யார் தகுதியுடையவர்கள்புதிய பாதைகளின் விவரங்கள் பின்வருமாறு:புனே -ஷெகான் வந்தே பாரத்முன்மொழியப்பட்ட புனே -ஷெகான்…
புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகளும் முடங்கின. இதைத் தொடர்ந்து நேற்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியது. அப்போது பஹல்காம், ஆபரேஷன் சிந்தூர், விமான விபத்து தொடர்பான விவகாரங்களை மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் எழுப்பினர். அதோடு பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மீண்டும் மக்களவை கூடியபோது எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து கோஷமிட்டனர். இதன் காரணமாக நாள் முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையிலும் அதே பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்ட அவை, பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின்…
தமிழில் ‘இமைக்கா நொடிகள்’, ‘அடங்கமறு’, ‘அயோக்யா’, ‘சங்கத்தமிழன்’, ‘அரண்மனை 3’. ‘சர்தார்’, ‘திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ராஷி கண்ணா. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வரும் அவர், இப்போது பவன் கல்யாண் நடிக்கும் ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்தில் இணைந்துள்ளார். ‘ஹரி ஹர வீரமல்லு’ படத்தைத் தொடர்ந்து பவன் கல்யாண் நடிக்கும் படம் இது. இதை ஹரிஷ் ஷங்கர் இயக்குகிறார். ஸ்ரீலீலா, கே.எஸ்.ரவிகுமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் ராஷி கண்ணாவின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஸ்லோகா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் தெலுங்கு, தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் வெளியாகிறது.
கும்பகோணம்: ‘சிறுபான்மையின மக்களை ஏமாற்றுவது திமுகதான்’ என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்று பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நேற்று பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது: இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான கே.என்.நேரு, ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்துக்கு பழனிசாமி வந்து பார்க்கட்டும் என்று அண்மையில் பேசி இருந்தார். அவர் சொன்ன அனைத்து இடங்களுக்கும் நான் செல்லும்போது மக்கள் எழுச்சியுடன் வரவேற்கின்றனர். வரும் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி பெற்று, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஷூட் மட்டும் எடுத்து, 50 மாத காலத்தை கடத்தி விட்டார். தமிழகத்தில் விலைவாசி உயர்ந்து விண்ணை முட்டி விட்டது. கடந்த தேர்தலின்போது, திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் அரசுகாலி பணியிடங்கள் 3 லட்சம் நிரப்பப்படும் என்றார்கள். ஆனால், இதுவரை 50 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே…
வயிற்று புற்றுநோய், இரைப்பை புற்றுநோய் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு வீரியம் மிக்க கட்டியாகும், இது வயிற்றுக் புறணி உருவாகிறது. இது உலகளவில் பொதுவாக கண்டறியப்பட்ட ஐந்தாவது புற்றுநோயாகும். வயிற்று புற்றுநோய் உலகளவில் நிகழ்கிறது, ஆனால் சில நாடுகள் மற்றவர்களை விட கணிசமாக அதிக நிகழ்வுகளை அனுபவிக்கின்றன. இதுபோன்ற 5 நாடுகள் இங்கே (மற்றும் ஏன்)மங்கோலியாமங்கோலியா ஏன் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது:வயிற்று புற்றுநோயானது மங்கோலியாவில் உலகில் அதிக வயதுக்கு உட்பட்டது, 2022 தரவுகளின்படி 100,000 பேருக்கு 35.5 ஆகும். ஆண் மக்கள்தொகையில் வயது-தரப்படுத்தப்பட்ட நிகழ்வு விகிதம் 100,000 பேருக்கு 53.0 ஐ எட்டுகிறது. இந்த உயர் நிகழ்வுகளுக்குப் பின்னால் உள்ள காரணங்கள் பின்வருமாறு:பாரம்பரிய மங்கோலிய உணவுகள் வயிற்று புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் உப்பு மற்றும் புகைபிடித்த உணவுகளைக் கொண்டுள்ளன.மக்கள்தொகையில் அதிக அளவு ஹெலிகோபாக்டர் பைலோரி பாக்டீரியா தொற்று உள்ளது, மேலும் இந்த பாக்டீரியம் வயிற்று புற்றுநோயை ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது.வரையறுக்கப்பட்ட சுகாதார…
ஒரு புதிய விஞ்ஞான ஆய்வு, தெற்கு இங்கிலாந்தில் 5,000 ஆண்டுகள் பழமையான நினைவுச்சின்னமான ஸ்டோன்ஹெஞ்சைக் கட்டியவர்கள், மனித முயற்சி மற்றும் அடிப்படை கருவிகளை மட்டுமே பயன்படுத்தி அதன் பாரிய கற்களை கொண்டு சென்றனர் என்ற நீண்டகால நம்பிக்கைக்கு எடையைச் சேர்த்தது. நெவால் போல்டர் எனப்படும் ஒரு மர்மமான பகுதியை பகுப்பாய்வு செய்வதன் மூலம், பனிப்பாறைகள் இந்த கற்களை பனி யுகத்தின் போது சாலிஸ்பரி சமவெளிக்கு கொண்டு சென்றன என்ற கோட்பாட்டை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நிராகரித்துள்ளனர். அதற்கு பதிலாக, 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேல்ஸின் ப்ரெசெலி மலைகளில் உள்ள குவாரிகளுடன் பாறைகளை நேரடியாக இணைக்கும் புவி வேதியியல் மற்றும் நுண்ணிய சான்றுகள் இருந்தன. சக்கரங்கள் அல்லது உலோகக் கருவிகளுக்கு அணுகல் இல்லாத கற்கால மக்கள் இந்த நம்பமுடியாத சாதனையை புத்தி கூர்மை, சகிப்புத்தன்மை மற்றும் பழமையான ஆனால் பயனுள்ள தொழில்நுட்பத்தின் மூலம் நிர்வகிக்கின்றன என்ற வாதத்தை இது ஆதரிக்கிறது.நெவால் போல்டரில் மறைக்கப்பட்ட…
புதுடெல்லி: அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனம் மூன்று ஏஎச்-64இ அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்திய ராணுவத்திடம் நேற்று ஒப்படைத்தது. இந்திய விமானப் படைத் திறனை நவீனமாக்கும் முயற்சியின் ஒரு முக்கிய மைல்கல்லாக இந்த அப்பாச்சி ஹெலிகாப்டர்களின் வரவு பார்க்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனத்திடமிருந்து இந்திய ராணுவத்துக்கு 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வாங்கும் திட்டத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்தது. இதற்காக, இந்திய அரசு மற்றும் போயிங் நிறுவனத்துக்கு இடையே ரூ.4,618 கோடிக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த அப்பாச்சி ஏஎச்-64இ ரக ஹெலிகாப்டர் உலகின் அதிநவீன பன்முக போர்த்திறன் கொண்டதாக விளங்குகிறது. அமெரிக்க ராணுவம் உள்ளிட்ட பல நாடுகளின் ராணுவத்தில் இந்த ரக ஹெலிகாப்டர்கள் ஏற்கெனவே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. நவீன ஆயுத அமைப்பு, இரவுநேர செயல்பாட்டு திறன், சிக்கலான போர் நடவடிக்கைகள் மற்றும் அனைத்து காலநிலைகளிலும் சிறப்பாக இயங்கக் கூடிய வகையில் இந்த ஹெலிகாப்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் ஆறு…
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் படம், ‘பராசக்தி’. இது அவருடைய 25-வது படம். இதில் வில்லனாக ரவி மோகன் நடிக்கிறார். ஸ்ரீலீலா, அதர்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். பீரியட் படமான இது, கல்லூரி பின்னணியில் நடக்கும் இந்தி எதிர்ப்பு கதையைக் கொண்டது என்று கூறப்படுகிறது. இதன் அடுத்தகட்டப் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் சமீபத்தில் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இதன் படப்பிடிப்பில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் நடிகர் ராணா, ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் அவர் இதில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், படக்குழு இதுகுறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.
