நடிகை ராஷ்மிகா மந்தனா, தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருகிறார். அவர் நடித்து அடுத்து ‘த கேர்ள் ஃபிரண்ட்’ உள்பட சில படங்கள் வெளியாக இருக்கின்றன. இதற்கிடையே ‘டியர் டைரி’ என்ற வாசனை திரவிய பிராண்ட் ஒன்றை அவர் ஆரம்பித்து அறிமுகப்படுத்தியுள்ளார். அழகு மற்றும் வாசனை திரவிய உற்பத்தியில் முன்னணியில் உள்ள பிசிஏ குழுமத்துடன் இணைந்து அவர் இதைத் தயாரிக்கிறார். ‘டியர் டைரி’யின் ஆரம்ப தொகுப்பில், ‘நேஷனல் க்ரஷ்’, ‘இன்ரிபிளேசபிள்’, ‘கான்ட்ரவர்சியல்’ ஆகிய தனித்துவமான 3 வாசனை திரவியங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி அவர் கூறும்போது, “என் வாழ்க்கையில் வாசனை திரவியம் முக்கியமான பகுதியாக இருந்து வருகிறது. அது தொடர்பான தொழிலைத் தொடங்கி இருப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். மிகவும் உற்சாகமாக இருக்கும் அதே நேரம் பதற்றமாகவும் உணர்கிறேன். இந்த நிறுவனத்துக்கு உங்களின் ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து…
Author: admin
சென்னை: வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணிக்கு வருமாறு அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி விடுத்த அழைப்பை தவெக தலைவர் விஜய்யும், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் உடனே நிராகரித்தனர். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “திமுகவை தோற்கடிக்க ஒருமித்த எண்ணம் கொண்ட அனைத்து கட்சிகளும் அதிமுகவுடன் கைகோக்க வேண்டும். இது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் பொருந்தும். இதுவரை தவெகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை” என கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் கொள்கை விளக்க மாநாடு பற்றிய புகைப்படம் தவெகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “மாற்றத்தை விரும்பும் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய் தலைமையில் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று, புதிய…
புதுடெல்லி: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த மாதம் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அதில் எரிபொருள் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போயிங் ட்ரீம்லைனர் விமானங்களின் இன்ஜின் எரிபொருள் சுவிட்சுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று அனைத்து விமான நிறுவனங்களுக்கும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டது. இந்நிலையில், ‘‘அனைத்து போயிங் விமானங்களிலும் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் அமைப்புகளை ஆய்வு செய்துவிட்டோம். இதில் எந்தப் பிரச்சினையும் கண்டறியப்படவில்லை’’ என ஏர் இந்தியா அதிகாரி தெரிவித்தார்.
இந்தி நடிகையான கல்கி கோச்சலின் தமிழில், ‘நேர்கொண்ட பார்வை’, ‘நேசிப்பாயா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல இந்தி நடிகரும் இயக்குநருமான அனுராக் காஷ்யப்பை காதலித்துக் கடந்த 2011-ம் ஆண்டு ஊட்டியில் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2015-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் தனது விவாகரத்து குறித்துப் பேசியுள்ள கல்கி கோச்சலின், “இருவரும் ஒருவருக்கொருவர் விலகி இருக்க வேண்டும் என்று உணர்ந்த ஒரு கட்டம் வந்ததால் பிரிந்தோம். பிரிந்த ஆரம்ப நாட்களில் அவரை வேறொரு பெண்ணுடன் பார்ப்பது கடினமாகவே இருந்தது. இப்போது நாங்கள் நல்ல நிலையில் இருக்கிறோம், அவ்வப்போது எங்களால் சந்தித்துப் பேச முடிகிறது. இந்த மனநிலையைப் பெறுவதற்கு எங்களுக்கு சில காலம் எடுத்துக் கொண்டது” என்று தெரிவித்துள்ளார். கல்கி கோச்சலின், இஸ்ரேலிய இசைக் கலைஞர் கை ஹெர்ஷ்பெர்க்கை 2020-ல் மணந்தார். இவர்களுக்குத் திருமணத்துக்கு முன்பே, மகள் பிறந்தார். இதுபற்றி அவர் கூறும்போது, “திருமணத்துக்கு முன்பே…
சென்னை: தமிழகம் முழுவதும் 100 நாட்களுக்கு தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வரும் 25-ம் தேதி திருப்போரூரில் இருந்து தொடங்குகிறார். இதுதொடர்பாக நேற்று பாமக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள்விரோத, சமூகநீதிக்கு எதிரான முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை அகற்ற வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10 வகையான உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்குடன் பாமக தலைவர் அன்புமணி வரும் 25-ம் தேதி திருப்போரூரில் தொடங்கி தமிழகம் முழுவதும் 100 நாள்களுக்கு தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறார். சமூக நீதிக்கான உரிமை, வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை, வேலைக்கான உரிமை, விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை, ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை உட்பட 10 அம்சங்களை முன்வைத்து இந்த பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது. பசுமைத் தாயகம் நாளாக கொண்டாடப்படும்…
இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் ஜோசப் சல்ஹாப் கல்லீரல் ஆரோக்கியத்திற்கான உணவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறார் மற்றும் குறிப்பிட்ட காய்கறிகளை இணைக்க பரிந்துரைக்கிறார். சல்போராபேன்ஸ் நிறைந்த ப்ரோக்கோலி, எய்ட்ஸ் நச்சுத்தன்மை, பீட்ரூட், பீட்டாலெயின்களைக் கொண்டுள்ளது, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் கல்லீரல் நொதிகளைக் குறைக்கிறது. சயனூரின் நிரம்பிய கூனைப்பூக்கள், ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகின்றன, கல்லீரல் உயிரணு மீளுருவாக்கம் மற்றும் மேம்பட்ட பித்த உற்பத்தியை ஊக்குவிக்கின்றன. மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு, கல்லீரல் புரதங்களின் செரிமானம், கனிம சேமிப்பு, பித்த உற்பத்தி மற்றும் இரத்த வடிகட்டுதல் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட செயல்பாடுகளைச் செய்கிறது. அதன் முக்கியத்துவம் இருந்தபோதிலும், கல்லீரல் நோய்கள் உலகம் முழுவதும் அதிகரித்து வருகின்றன. உணவு உள்ளிட்ட வாழ்க்கை முறை காரணிகள் கல்லீரல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. புளோரிடாவை தளமாகக் கொண்ட காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் டாக்டர் ஜோசப் சல்ஹாப், கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்க தனது உணவில் இணைத்த மூன்று காய்கறிகளைப்…
புதுடெல்லி: கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி மும்பை புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 189 பேர் உயிரிழந்தனர். 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு 12 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது. இவர்களில் 5 பேருக்கு மரண தண்டனையும் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, குற்றவாளிகள் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், குற்றவாளிகள் மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டதாகக் கூறி 12 பேரையும் விடுதலை செய்யுமாறு திங்கள்கிழமை உத்தரவிட்டது. இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிர அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு செய்யப்பட்டது. மாநில அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,…
ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ல் வெளியாகி, மாபெரும் வெற்றி பெட்ரா படம் ‘அவதார்’. உலக அளவில் அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையை இந்தப் படம் பெற்றுள்ளது. இதன் அடுத்த பாகம் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’, 2022-ம் ஆண்டு வெளியாகி வசூலில் சாதனை படைத்தது. இதன் 3-ம் பாகமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ இந்த ஆண்டு டிச.19-ம் தேதி வெளியாக இருக்கிறது. சாம் வொர்த்திங்டன், ஸோயி சல்டானா, சிகோனி வீவர், ஸ்டீபன் லங் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். இந்தப் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ள இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்பட டிரெய்லரின் முதல் கிளிம்ப்ஸ், வரும் 25-ம் தேதி ‘தி பென்டாஸ்டிக் போர்: பர்ஸ்ட் ஸ்டெப்’ படத்துடன் வெளியாகிறது.
சென்னை: அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியம் உட்பட 4 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, சென்னையில் 72 மணிநேர உண்ணாவிரத போராட்டம் இன்று தொடங்குகிறது. சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட அலுவலர் குழுவை திரும்பப் பெறுவது, பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் வழங்குவது ஆகிய 4 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 72 மணி நேர உண்ணாவிரத போராட்டம் இன்று (23-ம் தேதி) தொடங்குகிறது. சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த போராட்டம் 26-ம் தேதி காலை 10 மணி வரை நடைபெற உள்ளது. சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜெயராஜராஜேஸ்வரன் தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தை தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் த.அமிர்தகுமார் தொடங்கி வைக்கிறார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள்…
புனேவுக்கு பயணம் என்பது வரும் நாட்களில் மென்மையாகவும் தொந்தரவில்லாமலும் பெற உள்ளது. சமீபத்திய செய்தி அறிக்கையின்படி, புனேவிலிருந்து நான்கு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை அறிமுகப்படுத்துவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது, இது ஷேகான், வதோதரா, செகந்திராபாத் மற்றும் பெலகாவி போன்ற நகரங்களுடனான இணைப்பை மேம்படுத்தும். இந்த சேர்த்தல்களுடன், பயணிகளுக்கு மிகவும் வசதியான மற்றும் திறமையான பயண அனுபவத்தை வழங்கும்போது பயண நேரங்கள் கணிசமாக குறையும்.இப்போதைக்கு, புனே இரண்டு செயல்பாட்டு வான்டே பாரத் சேவைகளைக் கொண்டுள்ளது, புனே-கோலாப்பூர் மற்றும் புனே-ஹப்ப்பாலி வழித்தடங்களில் இயங்குகிறது. இப்போது வரவிருக்கும் நான்கு ரயில்களுடன், புனேவிலிருந்து தோன்றிய வாரே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மொத்த எண்ணிக்கை ஆறு ஆக உயரும், இது நகரத்தின் இன்டர்சிட்டி இணைப்பில் கணிசமான முன்னேற்றத்தைக் குறிக்கிறது. மேலும் வாசிக்க: நியூசிலாந்தின் விசா தள்ளுபடி நாடுகள்: இதன் பொருள் என்ன, யார் தகுதியுடையவர்கள்புதிய பாதைகளின் விவரங்கள் பின்வருமாறு:புனே -ஷெகான் வந்தே பாரத்முன்மொழியப்பட்ட புனே -ஷெகான்…
