ஒரு தசாப்தத்திற்குள் பிறந்தவர்களிடையே கிட்டத்தட்ட 12 மில்லியன் புற்றுநோய் வழக்குகளுக்கு பொதுவான வயிற்று பாக்டீரியா காரணமாக இருக்கலாம் என்று ஒரு திடுக்கிடும் புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. பாக்டீரியம், ஹெலிகோபாக்டர் பைலோரி (எச். பைலோரி), ஏற்கனவே புண்கள் மற்றும் நாள்பட்ட அழற்சிக்கு ஒரு முக்கிய காரணமாக அறியப்படுகிறது, ஆனால் நேச்சர் மெடிசினில் வெளியிடப்பட்ட இந்த புதிய பகுப்பாய்வு, 2008 மற்றும் 2017 க்கு இடையில் பிறந்தவர்களில் 76% வயிற்று புற்றுநோய் வழக்குகளுடன் நேரடியாக இணைகிறது. இந்த கூட்டாளரைச் சேர்ந்த 15.6 மில்லியன் மக்கள் தங்கள் வாழ்நாளில் வயிற்று புற்றுநோயை உருவாக்குவார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர். இந்த பாக்டீரியா அச்சுறுத்தலை மிகவும் தாமதமாகிவிடும் முன் கண்டறிந்து அகற்ற அவசர உலகளாவிய நடவடிக்கைக்கு வல்லுநர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.எச். பைலோரி நோய்த்தொற்றுடன் பிணைக்கப்பட்ட புற்றுநோய் அபாயங்கள் பெரும்பாலும் ஆரம்ப ஆண்டுகளில் கவனிக்கப்படாமல் போகின்றனஎச். பைலோரி என்பது ஒரு சுழல் வடிவ பாக்டீரியமாகும், இது பொதுவாக குழந்தை…
Author: admin
Last Updated : 25 Jul, 2025 06:53 AM Published : 25 Jul 2025 06:53 AM Last Updated : 25 Jul 2025 06:53 AM சண்டிகர்: பஞ்சாபில் பாகிஸ்தான் எல்லையில் இருந்து வந்த 6 டிரோன்களை பிஎஸ்எப் வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். இதுகுறித்து எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டம் மோதே கிராமத்துக்கு அருகில் இந்திய – பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் பிஎஸ்எப் வீரர்கள் புதன்கிழமை இரவு கண்காணிப்பு பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவிய 5 டிரோன்களை சுட்டு வீழ்த்தினர். இதில் 3 துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் 1 கிலோ ஹெராயின் போதைப்பொருளை கைப்பற்றினர். இதுபோல் அட்டாரி கிராமத்துக்கு அருகில் வியாழக்கிழமை அதிகாலை பாகிஸ்தான் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதில் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார். லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து…
மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அரசுத் தரப்புச் சாட்சியாக (அப்ரூவர்) மாற சிபிஐ தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் 2020 ஜூன் 19-ல் போலீஸாரால் தாக்கப்பட்டதில் உயிர்இழந்தனர். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் முத்துராஜா, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில் முத்து உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் 4 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. இந்நிலையில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவராக மாறப்போவதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், “சாத்தான்குளம் வழக்கில் குற்றம் செய்தோருக்குத் தண்டனை கிடைக்க வேண்டும். நான் அப்ரூவராக மாற விரும்புகிறேன்.…
மில்லியன் கணக்கானவர்கள் அதிக எல்.டி.எல் கொழுப்பைப் பிடித்து, இதய நோய் அபாயங்களை அதிகரிக்கும். இந்த கட்டுரை கெட்ட கொழுப்பைக் குறைக்க நான்கு இயற்கை வழிகளைக் குறிக்கிறது. சிவப்பு இறைச்சிகளிலிருந்து நிறைவுற்ற கொழுப்புகளை குறைத்து, எண்ணெய் மீன் மற்றும் கொட்டைகளில் காணப்படும் நிறைவுறா கொழுப்புகளைத் தேர்ந்தெடுப்பது முக்கியமானது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு கொழுப்பின் அளவைக் குறைப்பது முக்கியமானது. குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் (எல்.டி.எல்) உடன் மில்லியன் கணக்கானவர்கள் போராடுகிறார்கள். ‘மோசமான’ கொழுப்பு ‘எல்.டி.எல் என்றும் அழைக்கப்படுகிறது, பக்கவாதம் உள்ளிட்ட இருதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. இருப்பினும், சில வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வது எல்.டி.எல் வீழ்த்தவும் அதிக அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் (எச்.டி.எல்) ஐ அதிகரிக்கவும் உதவக்கூடும், இது ‘நல்ல கொழுப்பு’ ஆகும். இயற்கையாகவே கெட்ட கொழுப்பைக் குறைக்க நான்கு அறிவியல் ஆதரவு வழிகள் இங்கே. கொழுப்பு உணவைக் குறைக்கவும்நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள். ஆரோக்கியத்திற்கு வரும்போது இது 100% உண்மை. கொழுப்பின் அளவை…
புதுடெல்லி: பிஹாரில் நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்களையும், இறந்தவர்களையும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதை அனுமதிக்க முடியுமா? என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேற்று கேள்வி யெழுப்பி உள்ளார். பிஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் தொடர்பாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: மிகச்சரியான வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் தேர்தல் ஆணையம் வெளிப்படையான அணுகுமுறை யுடன் செயல்படுகிறது. நியாயமான தேர்தல், வலுவான ஜனநாயகத்தின் அடித்தளம் இல்லையா? தகுதியற்ற நபர்களை முதலில் பிஹாரிலும் பின்னர் நாடு முழுமைக்கும் வாக்களிக்க அனுமதிப்பது நமது அரசியலமைப்பிற்கு எதிரானது. இந்த கேள்விகள் குறித்து இந்திய குடிமக்களாகிய நாம் அனைவரும் அரசியல் சித்தாந்தங்களுக்கு அப்பால் எப்போதாவது ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். எனவே, இடம்பெயர்ந்து சென்றவர்களையும், இறந்தவர்களையும் வாக்காளர் பட்டியலில் இருப்பதை அனுமதிக்க முடியாது. இவ்வாறு ஞானேஷ் குமார் கூறினார்.
காஞ்சிபுரம்: குன்றத்தூர் அருகே தனது 2 குழந்தைகளை கொலை செய்த தாய் மற்றும் ஆண் நண்பருக்கு சாகும் வரை சிறை தண்டனை அளித்து காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற இந்த கொலை சம்பவம் குறித்த விவரம் வருமாறு: குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் விஜய்(30). இவர் தனியார் வங்கியில் பணி செய்து வருகிறார். இவருக்கு அபிராமி(25) என்ற மனைவியும் அஜய்(7) என்ற மகனும் கார்னிகா(4) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், அபிராமிக்கும் அருகாமையில் உள்ள பிரியாணி கடை ஊழியர் மீனாட்சி சுந்தரத்துக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் வெளியில் தெரியவர, அபிராமி வீட்டார் கண்டித்தனர். அதைத்தொடர்ந்து, கணவர் மற்றும் இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தலைமறை வாக அபிராமியும் அவரது ஆண் நண்பரும் முடிவு செய்தனர். தான் வீட்டை விட்டு வெளியேறியதால் மனமுடைந்து தனது 2 குழந்தைகளுடன் விஜய்…
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தகுதியான மாணவ, மாணவிகளின் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. கடந்த ஆண்டைப் போலவே நடப்பாண்டும் 11,350 மருத்துவ இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. இந்நிலையில், தகுதியான மாணவ, மாணவிகளின் தரவரிசைப் பட்டியல் இன்று காலை 10 மணிக்கு கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிடுகிறார். இதையடுத்து, மருத்துவப் படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 30-ம் தேதி தொடங்குகிறது.
சென்னை: பள்ளி மாணவர்கள் அடிப்படை கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ‘டிஎன் ஸ்பார்க்’ என்ற புதிய திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். புதிதாக தேர்வான 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினார். ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. நியமன ஆணைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் மொழி, கணித திறன் மேம்பாட்டுக்காக, ‘திறன்’ (THIRAN-Targeted Help for Improving Remediation and Academic Nurturing) திட்டத்தின்கீழ் தயாரிக்கப்பட்டுள்ள புத்தகங்களை வெளியிட்டார். புதிய பாடத் திட்ட நூல்கள்: மாணவர்களுக்கு கணினிசார் அடிப்படை அறிவியல், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திறனை கற்பிக்கும் வகையில் உருவாக்கப்பட் டுள்ள TN SPARK (TamilNadu…
ஆயுர்வேத உணவுத் திட்டம் ஒளி மற்றும் புதிய இயற்கை உணவுகளைக் கொண்டுள்ளது, அவை கல்லீரல் அவற்றை எளிதாக செயலாக்க அனுமதிக்கின்றன.கீரை, காலே மற்றும் வெந்தயம் உள்ளிட்ட கசப்பான கீரைகளை ஏராளமாக சாப்பிடுங்கள். பாரம்பரிய நம்பிக்கைகளின்படி, கசப்பான உணவுகள் கல்லீரலுக்கு ஒரு சுத்திகரிப்பு மற்றும் புத்துணர்ச்சியூட்டும் முகவராக செயல்படுகின்றன.எண்ணெய், வறுத்த பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் கல்லீரலைச் சுமப்பதால் அவற்றை உட்கொள்வதை நீங்கள் தவிர்க்க வேண்டும்.உங்கள் உணவு கனமான இறைச்சிகள் மற்றும் பால் பொருட்களுக்கு பதிலாக முழு தானியங்களுடன் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டிருக்க வேண்டும்.காரமான மற்றும் அமில உணவு உட்கொள்ளல் கட்டுப்படுத்தப்பட வேண்டும், ஏனென்றால் நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணம் போன்ற அதிகப்படியான பிட்டா அறிகுறிகள் தோன்றும்.நச்சுத்தன்மையுள்ள உணவுகள் பீட், கேரட் மற்றும் முள்ளங்கி, உங்கள் உணவு திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்.காலையில் சூடான எலுமிச்சை உட்செலுத்தப்பட்ட நீர் அல்லது மூலிகை தேநீர் (இஞ்சி அல்லது துளசி போன்றவை) குடிப்பது கல்லீரல் செயல்பாட்டிற்கான…
மும்பை: அனில் அம்பானியின் குழும நிறுவனங்கள் வங்கிகளில் கடன் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக அமலாக்கத் துறை (இடி) நேற்று ஒரே நேரத்தில் பல இடங்களில் சோதனையில் ஈடுபட்டது. அனில் அம்பானி குழும நிறுவனங்கள் வங்கியில் ரூ.1000 கோடி அளவிற்கு கடன் மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அனில் அம்பானி குழுமத்தின் 50 நிறுவனங்களுக்குச் சொந்தமான 35-க்கும் மேற்பட்ட இடங்கள் மற்றும் 25 நபர்களிடம் அமலாக்கத் துறை நேற்று சோதனை நடத்தியது. டெல்லியை தளமாகக் கொண்ட இடி புலனாய்வு பிரிவு இந்த விசாரணையை மேற்கொண்டது. 2017 மற்றும் 2019-க்கு இடையில் அம்பானியின் குழும நிறுவனங்களுக்கு யெஸ் வங்கி வழங்கிய சுமார் ரூ.3,000 கோடி கடன் சட்டவிரோதமாக திருப்பி விடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் விசாரணை நடத்தி வருவதாக இடி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே அமலாக்கத் துறை நடத்தி வரும் சோதனைகள் குழும நிறுவனங்களின்…
