கும்லா/ ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்டில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 7 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர். வட மாநிலங்களில் குறிப்பாக சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வரும் 2030-ம் ஆண்டுக்குள் மாவோயிஸ்ட்கள் இல்லாத நாட்டை உருவாக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் கடந்த சனிக்கிழமை காலை கும்லா பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட ஜார்க்கண்ட் ஜன் முக்தி பரிஷத் (ஜேஜேஎம்பி) பிரிவினைவாத அமைப்பை சேர்ந்த மாவோயிஸ்ட்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதற்கு பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் ஜேஜேஎம்பி அமைப்பை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். அதேபோல் சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மண்டலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையில் பலத்த துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த என்கவுன்ட்டரில் 4 மாவோயிஸ்ட்கள்…
Author: admin
உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியின் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் பிரிவில் இந்திய வீராங்கனை அங்கிதா தியானி வெள்ளிப் பதக்கம் வென்றார். உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் ஜெர்மனியின் எசென் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வருகின்றன. கடைசி நாளான நேற்று மகளிருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை அங்கிதா பந்தய தூரத்தை 9:31.99 வினாடிகளில் கடந்து 2-வதாக வந்தார். இதையடுத்து அவர் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். ஜெர்மனி வீராங்கனை அடியா புட்டே 9:33.34 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கம் வென்றார். இந்தப் பிரிவில் பின்லாந்தின் இலோனா மரியா 9:31.86 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். ரோட்டரி ஒலிம்பியாட்: 1,500 மாணவர்கள் பங்கேற்பு: சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நேற்று நடைபெற்ற ரோட்டரி ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டியில் 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் 70க்கும் மேற்பட்ட…
ராமேசுவரம்: புவி கண்காணிப்புக்காக நாசாவுடன் இணைந்து இஸ்ரோ உருவாக்கிய செயற்கைக்கோள் ஜூலை 30-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் 10-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி ராமேசுவரத்தில் கலாம் நினைவு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இஸ்ரோ தலைவர் நாராயணண் பேசியதாவது: சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பும் அளவுக்கு இஸ்ரோ பிரம்மாண்டமாக வளர்ச்சி அடைந்துள்ளது. 35 கிலோ ராக்கெட்டில் தொடங்கி 75 ஆயிரம் கிலோ எடை கொண்ட ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பும் வல்லமையைப் பெற்றுள்ளது. இது சுமார் 40 மாடி உயரம் கொண்ட ராக்கெட் ஆகும். புவி கண்காணிப்புக்காக நாசாவுடன் இணைந்து உருவாக்கிய அதிநவீன சிந்தடிக் அப்பர்சர் ரேடார் செயற்கைக்கோளை (NASA-ISRO Synthetic Aperture Radar) ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாக இஸ்ரோ ஜூலை 30-ம் தேதி விண்ணில் செலுத்துகிறது. இது ஜிஎஸ்எல்வி எஃப்-16 வரிசையில் 18-வது ராக்கெட்டாகும். இதற்கான…
பெங்களூரு: இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் நேற்று கூறியுள்ளதாவது: 2026 நிதியாண்டில் 2 சதவீத பணியாளர்களை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய சந்தைகளில் நுழைவது, புதிய தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வது, ஏஐ பயன்படுத்துவது போன்றவற்றால் நிறுவனம், ஊழியர்களுக்கு மீண்டும் பயிற்சி அளித்து மறுபணியமர்த்த உள்ளது. ஆனால், இந்த செயல்முறையின் விளைவாக வேலைவாய்ப்பில் ஒரு பகுதி அதாவது 12,200 வேலைகள் குறைக்கப்படும். எங்களின் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த மாற்றத்தை உரிய கவனத்துடன் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு டிசிஎஸ் தெரிவித்துள்ளது. இந்திய ஐடி துறை நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக, செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு அவை தள்ளப்பட்டுள்ளன. வாடிக்கையாளர் முடிவெடுப்பதிலும், திட்டத்தை தொடங்குவதிலும் காலதாமதம் ஏற்படுவதாக டிசிஎஸ் தலைமை நிர்வாகி கே.கிருத்திவாசன் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய ஆய்வில் ஆண்டுதோறும் உலகளாவிய இறப்புகளில் கல்லீரல் நோய் 4% கணக்கைக் குறிக்கிறது, ஆண்கள் விகிதாசாரமாக பாதிக்கப்படுகிறார்கள். டாக்டர் ச ura ரப் சேத்தி மஞ்சள் காமாலை, ஸ்பைடர் ஆஞ்சியோமாஸ், பால்மர் எரித்மா மற்றும் அரிப்பு போன்ற தோல் அறிகுறிகளை எடுத்துக்காட்டுகிறார், இது கல்லீரல் செயலிழப்பைக் குறிக்கலாம். இந்த அறிகுறிகளை அங்கீகரிப்பதன் மூலம் முன்கூட்டியே கண்டறிதல் சரியான நேரத்தில் மருத்துவ தலையீட்டிற்கு முக்கியமானது. கல்லீரல் நோய் ஆண்டுதோறும் சுமார் இரண்டு மில்லியன் உயிர்களைக் கோருகிறது, இது அனைத்து இறப்புகளிலும் 4% (உலகளவில் ஒவ்வொரு 25 இறப்புகளில் 1), 2023 ஆய்வின்படி. இதில், கல்லீரல் தொடர்பான அனைத்து இறப்புகளிலும் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு ஆண்களில் நிகழ்கிறது. சிரோசிஸ் மற்றும் ஹெபடோசெல்லுலர் கார்சினோமா ஆகியவை மரணத்திற்கு முக்கிய காரணங்களாகும், அவற்றில் முந்தையது வைரஸ் ஹெபடைடிஸ், ஆல்கஹால் மற்றும் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயுடன் இணைக்கப்பட்டுள்ளது. கல்லீரல் நோய்களை அடையாளம் காண ஆரம்பகால…
சென்னை: விஜய் தவிர வேறு புகைப்படங்களை பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும், கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று தவெக நிர்வாகிகளுக்கு பொதுச் செயலாளர் ஆனந்த் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் குறிக்கோள்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகக் கட்சியினர் ஒருபோதும் செயல்படக் கூடாது. தேர்தல் பரப்புரை மற்றும் உறுப்பினர் சேர்க்கை பணிகளுக்காக வீடுவீடாகச் செல்லும்போது, கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக அனுமதித்துள்ள பரப்புரை வாசகங்கள் மற்றும் புகைப்படத்தைக் கொண்ட ஸ்டிக்கர் மட்டுமே ஒட்ட வேண்டும். பரப்புரை சார்ந்து அங்கீகரிக்கப்படாத பேனர் டிசைன்கள், இலச்சினைகள், வாசகங்களைப் பயன்படுத்தக் கூடாது. மேலும், கட்சியின் அனைத்து நிலை அமைப்புகளின் சார்பில் நடத்தப்படும் உள்ளரங்கு மற்றும் பொதுவெளி, பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல், கட்சி நிகழ்ச்சிகளின்போது பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறும் இல்லாமல்…
ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2-ம் சீசனுக்காக 60 வகையான, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வண்ண மலர்ச் செடிகள், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2 லட்சம் விதைகள் மற்றும் நாற்றுகளை நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கர்நாடக அரசு பூங்காவில் மஞ்சள் நிறத்தில் நடன மங்கை ஆடுவதைப்போல காட்சிதரும் ‘ஆனிசைடம்’ என்றழைக்கப்படும் ஆர்கிட் மலர்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன. அந்த மலர்களின் அருகில் நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர். இந்த மஞ்சள் நிற ஆர்கிட் மலர்களை கர்நாடகா பூங்காவில் மட்டுமே காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 3 நாள் ஓய்வுக்கு பிறகு வழக்கமான பணிகளை மேற்கொள்ளவுள்ளார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த 21-ம் தேதி காலையில் வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்ட போது அவருக்கு லேசான தலைச் சுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து, காலை 10.50 மணியளவில் அவர் சென்னை ஆயிரம்விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 24-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட கூடுதல் பரிசோதனையில் அவருடை தலைசுற்றல் பிரச்சினைக்கு, அவரது இதய துடிப்பு சீரற்று இருந்ததே காரணம் என்பது தெரியவந்தது. இதய இடையீட்டு சிகிச்சை நிபுணர் ஜி.செங்கோட்டுவேலு தலைமையிலான மருத்துவர் குழுவினர் முதல்வருக்கு இதய துடிப்பை சீராக்குவதற்கான சிகிச்சையை மேற்கொண்டனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோ பரிசோதனையில் வேறு எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதியானது. முதல்வரின் உடல்நிலையை மருத்துவர்கள்…
உணர்ச்சிகள் அதிகமாக இயங்கும்போது, குழந்தைகள் பெரும்பாலும் தங்கள் மூளையின் பகுத்தறிவு பகுதியை அணுக முடியாது.விரிவுரைகளை விட அதிகமாக உதவுவது “கண்ணாடி பேச்சு”. இதன் பொருள் அவர்களின் உடல் மொழி, தொனி மற்றும் உணர்வுகளை அமைதியான பச்சாத்தாபத்துடன் பிரதிபலிக்கிறது. உதாரணமாக, ஒரு குழந்தை கைமுட்டிகளையும் கூச்சல்களையும் பிடுங்கினால், அமைதியான குரலில் பதிலளித்தால், “அந்த கைமுட்டிகள் மிகவும் இறுக்கமாகத் தெரிகின்றன… இப்போது ஏதோ மிகவும் நியாயமற்றதாக உணர்கிறதா?” கேலி செய்யப்படாமல், குழந்தைக்கு பிரதிபலிக்க உதவுகிறது.இந்த நுட்பம் விளையாட்டு சிகிச்சை மற்றும் உணர்ச்சி ரீதியான அணுகல் உத்திகளிலிருந்து வருகிறது, மேலும் இது நம்பிக்கையை வளர்க்க உதவுகிறது. ஒரு குழந்தை உண்மையிலேயே புரிந்து கொள்ளப்படும்போது, கோபம் பெரும்பாலும் உரையாடலில் உருகும்.
சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குஜராத் – வடக்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (ஜூலை 28) முதல் 31-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக் கூடும். ஆகஸ்ட் 1, 2-ம் தேதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகரில் ஒருசில பகுதிகளில் இன்று லேசான மழை பெய்ய…
