Author: admin

முதன்முறையாக தமிழக மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வாக்களிக்கப் போகின்றனர் என மதுரை திருமங்கலத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று தெரிவித்தார். திருமங்கலத்தில் இன்று அமமுக சார்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் டேவிட் அண்ணாத் துரை தலைமையில் நடைபெற்றது. இதில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் பங்கேற்று பேசினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது: தமிழக முதல்வர் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லாததால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. திமுக அளித்த 520 வாக்குறுதிகளில் பெரும்பாலானவை இன்னும் நிறைவேற்றப்படாததால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் முதல் விவசாயிகள் வரை தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் போராடிக் கொண்டிருக்கின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. பாலியல் வன்கொடுமைகள், கொலைகள் தினமும் நடந்து வருகிறது. இன்றுகூட காவல்துறை அதிகாரி தாக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளார். காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் கொல்லப்படுகின்றனர். சட்ட விரோத செயல்களை தடுக்கும்…

Read More

டேராடூன்: உத்தராகண்ட் மானசா தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் புகழ்பெற்ற மானசா தேவி கோயில் உள்ளது. சிவாலிக் மலைப் பகுதியில் பில்வா பர்வத் உச்சியில் அமைந்துள்ள இந்தக் கோயிலுக்கு ஆண்டுதோறும் ஜூலை – ஆகஸ்டில் வரும் ஷ்ரவண மாதத்தில் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். அந்த வகையில், கடந்த 11-ம் தேதி ஷ்ரவண மாதம் தொடங்கியதால் மானசா தேவி கோயிலுக்கு பக்தர் வருகை அதிகரித்துள்ளது. நேற்று காலை மானசா தேவி கோயிலுக்கு படிக்கட்டுகள் வழியாக பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கூட்டம் அதிகமாக இருந்ததால் சிலர் கீழே விழுந்துள்ளனர். ஆனால், அந்தப் பாதையில் மின்சாரம் செல்லும் வயர் இருப்பதாக சிலர் கூச்சலிட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் அங்கிருந்து ஒரே நேரத்தில் இறங்கிச் செல்ல முயற்சித்துள்ளனர். இதனால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டு சிலர் கீழே விழுந்துள்ளனர். இதைப் பொருட்படுத்தாமல்…

Read More

ராமேசுவரம்: மறைந்த முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 10-வது நினைவு தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் உள்ள கலாம் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர். இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் தனது குடியரசுத் தலைவர் பதவி காலத்திற்கு பின்னர், நாடு முழுவதும் பயணம் செய்து கல்லூரி, பள்ளிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவர்களுக்கு உத்வேகத்தை அளித்து வந்தார். மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள கல்லூரி விழாவில் கடந்த 27.07.2015 அன்று மாணவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது உயிரிழந்தார். பின்னர் கலாமின் உடல் ராமேசுவரம் தீவில் உள்ள பேக்கரும்பு என்னும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் மறைந்து முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பத்தாவது ஆண்டு நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. ராமேசுவரத்தில் உள்ள பேக்கரும்பு அப்துல் கலாம் நினைவிடத்தில் கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கலாமின் கலாமின்…

Read More

அரியலூர்: கங்​கைகொண்ட சோழபுரம் முப்பெரும் விழாவில் பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் விசிக தலைவர்​ திருமாவளவன் பங்கேற்றுள்ளார். அரியலூர் மாவட்டம் கங்​கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில், ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திரு​வாதிரை விழா, கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இதற்காக ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பொன்னேரியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடுக்கு அவர் வருகை தந்தார். அங்கிருந்து காரில் ரோடு ஷோவாக கோயிலுக்கு வந்தார். வரும் வழியில் பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் அவருக்கு மலர் தூவி வரவேற்பு அளித்தனர். கங்​கை​கொண்ட சோழபுரம் பிரகதீஸ்​வரர் கோயிலுக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு கோயில் வளாகத்​தில் திருவாவடுதுறை ஆதீனம் தலைமையில் பூரண கும்ப மரியாதை…

Read More

மான்செஸ்டர்: இங்கிலாந்து அணி உடனான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியை டிரா செய்துள்ளது இந்திய அணி. வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜடேஜா இணைந்து 203 ரன்கள் கூட்டணி அமைத்தனர். இருவரும் சதம் கடந்து அசத்தினர். ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 358 ரன்களும், இங்கிலாந்து 669 ரன்களும் எடுத்தன. 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை இந்தியா தொடங்கியது. இரண்டாவது இன்னிங்ஸின் முதல் ஓவரின் அடுத்தடுத்த பந்துகளில் ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோர் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் இணைந்து 188 ரன்கள் கூட்டணி அமைத்தனர். ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் முதல் செஷனில் ராகுல் 90 ரன்களிலும், கில் 103 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் இணைந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா…

Read More

ஆமிர்கானை வைத்து ‘இரும்புக்கை மாயாவி’ இயக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு லோகேஷ் கனகராஜ் விளக்கமளித்துள்ளார். ரஜினி நடித்துள்ள ’கூலி’ படத்தினை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து நாயகனாக நடிக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக கார்த்தி நடிக்கவுள்ள ‘கைதி 2’ பணிகளை கவனிக்கவுள்ளார். இப்படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ‘கைதி 2’ படத்தினை முடித்துவிட்டு, ஆமிர்கான் நடிக்கவுள்ள படத்தினை இயக்கவிருப்பதை பேட்டியொன்றில் உறுதிப்படுத்தினார் லோகேஷ் கனகராஜ். ’இரும்புக்கை மாயாவி’ கதையைத் தான் ஆமிர்கான் வைத்து இயக்கவுள்ளார் என்று பலரும் தெரிவித்தார்கள். ஏனென்றால், அக்கதையில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக லோகேஷ் கனகராஜ் கூறும்போது, ”’இரும்புக்கை மாயாவி’ படத்தை சூர்யா சாரை தவிர்த்து ஆமிர்கான் சாரை வைத்து இயக்கவிருப்பதாக நினைக்கிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கதை ‘இரும்புக்கை மாயாவி’. சமீபத்தில் வந்த சில…

Read More

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் ஆக.2-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குஜராத் – வடக்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும் தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (ஜூலை 28) முதல் 31-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளையும், நாளை மறுநாளும் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும். ஆக.1, 2 தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு…

Read More

‘சயாரா’ படத்தின் வசூல் ரூ.300 கோடியை கடந்திருக்கிறது. இது, பாலிவுட் வர்த்தக நிபுணர்களை வியப்படைய வைத்திருக்கிறது. ஜூலை 18-ம் தேதி வெளியான இந்திப் படம் ‘சயாரா’. இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே தொடர்ச்சியாக நல்ல வசூல் செய்துவருகிறது. தற்போது இதன் வசூல் ரூ.300 கோடியை கடந்து அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் தயாரிப்பாளருக்கு பலமடங்கு லாபம் ஈட்டிக் கொடுத்துள்ளது. மோகித் சூரி இயக்கத்தில் அகன் பாண்டே மற்றும் அனீத் படா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘சயாரா’. நாயகன் மற்றும் நாயகி இருவருமே இப்படத்தின் மூலமாக தான் அறிமுகமாகிறார்கள். இப்படத்தை யாஷ் ராஜ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இதன் நாயகன் மற்றும் நாயகி இருவருக்குமே பல்வேறு வாய்ப்புகள் குவியத் தொடங்கியிருக்கிறது. அலியா பட், ஜோதிகா, மகேஷ் பாபு உள்ளிட்ட பலரும் இப்படக்குழுவினரை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளனர். இப்படம் முழுமையாக ஓடி முடியும்போது கண்டிப்பாக ரூ.400 கோடி…

Read More

அரியலூர்: ராஜராஜ சோழன் மற்றும் அவரது மைந்தன் ராஜேந்திர சோழன் இருவருக்கும் பிரம்மாண்ட சிலைகள் தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என்று உறுதி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்​டம் கங்​கை​கொண்ட சோழபுரம் பிரகதீஸ்​வரர் கோயில் வளாகத்​தில், மத்​திய கலா​ச்சா​ரத் துறை சார்​பில் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திரு​வா​திரை விழா, கங்​கை​கொண்ட சோழபுரம் பிரகதீஸ்​வரர் கோயில் கட்​டத் தொடங்கிய ஆயிர​மாவது ஆண்டு விழா, தென்​கிழக்கு ஆசிய நாடு​களின் மீது படையெடுத்​துச் சென்ற ஆயிர​மாவது ஆண்டு நிறைவு விழா என முப்​பெரும் விழா நடை​பெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி ‘வணக்கம் சோழ மண்டலம்’ என்று கூறி தனது உரையைத் தொடங்கினார். “நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க, இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க” என்று தமிழில் சிவனைப் போற்றினார். பின்னர் அவர் பேசியதாவது: “பிரகதீஸ்வரரின் பாதங்களில் அமர்ந்து வணங்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது. 140…

Read More

மும்பை: எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெற வேண்டும் என தனது கருத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ளன. இதனால் இந்த தொடரில் இரு அணிகளும் மூன்று முறை நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்யும் வாய்ப்புள்ளது. செப்டம்பர் 14-ம் தேதி அன்று இரு அணிகளும் துபாயில் நடைபெறும் குரூப் சுற்று ஆட்டத்தில் விளையாடுகின்றன. இந்நிலையில், இந்தப் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? பஹல்கம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் மற்றும் அண்மையில் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்கள், பாகிஸ்தான் அணி உடன் விளையாட மறுத்தது போன்றவற்றை முன்வைத்து பலரும் தங்களது கருத்தை…

Read More