பேசல்: மகளிருக்கான யூரோ கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இங்கிலாந்து கால்பந்து அணி. சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலக சாம்பியனான ஸ்பெயின் அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் இங்கிலாந்து வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் யூரோ கோப்பையை இங்கிலாந்து அணி தக்கவைத்துள்ளது. கடந்த 2022-ல் நடைபெற்ற மகளிருக்கான யூரோ கோப்பை தொடரில் முதல் முறையாக யூரோ கோப்பையை இங்கிலாந்து வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஞாயிற்றுக்கிழமை அன்று பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆட்ட நேரத்தில் சுமார் 65 சதவீதம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது ஸ்பெயின் அணி. ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் ஸ்பெயின் தரப்பில் கால்டென்டே கோல் பதிவு செய்தார். பின்னர் இங்கிலாந்து அணி தரப்பில் ரூசோ 57-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்தார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. மேற்கொண்டு இரு அணியும் கோல் பதிவு செய்ய முடியாததால் 90 நிமிடங்கள் நிறைவடைந்தது.…
Author: admin
சென்னை: கொரட்டூர் ஓம்சக்தி நாகவல்லி அம்மன் கோயிலில் ஆடி திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. இதையொட்டி, பால் குடம் எடுத்து, மிளகாய் தூள் சாந்து கரைசலில் குளித்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். கொரட்டூர் டிஎன்எச்பி குடியிருப்பு 47-வது தெருவில் ஓம்சக்தி நாகவல்லி அம்மன் கோயில் அமைந்துள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் புற்றும், வேப்பமரமும் மட்டும் அமைந்திருக்க, நாகவல்லியை இங்கு பிரதிஷ்டை செய்து, பக்தர்கள் வழிபட்டனர். பக்தர்களின் வேண்டுதல்கள் கைகூட, பின்னர் கோயிலாக உருபெற்று, ஓம்சக்தி நாகவல்லி அம்மன் அருள்பாலித்து வருகிறார். சென்னை கொரட்டூரில் உள்ள ஓம்சக்தி நாகவல்லி அம்மன் கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு,பால்குடம் ஏந்தியும், அலகு குத்திக்கொண்டும் பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். வேண்டுவோருக்கு வேண்டும் வரங்களை அள்ளித் தரும் நாகவல்லி அம்மனிடம் குழந்தை வரம், திருமண வரம் வேண்டி வந்து, அப் பலன் பெற்றுச் செல்வோர் உண்டு. இக்கோயிலில் தற்போது ஆடித் திருவிழா கோலாகலமாக…
சென்னை: கோயில் அறங்காவலர் குழு தீர்மானத்தின்படி சட்டவிதிகளைப் பின்பற்றியே கோயில் நிலத்தில், கோயில் நிதியைப் பயன்படுத்தி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறநிலையத்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் கோயில் நிதியில் இருந்து பல்வேறு கட்டிடங்கள் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மயிலாப்பூரைச் சேர்ந்த ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவரான டி.ஆர். ரமேஷ், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கட்டுமானப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளக்கூடாது எனக் கூறி தற்போதைய நிலையே நீடிக்க உத்தரவிட்டது. இந்நிலையில் அறநிலையத்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன் தாக்கல் செய்த பதில் மனு: அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமாக பல லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில் 23 ஆயிரம் கடைகளும், 76,500 கோயில் சார்ந்த கட்டுமானங்களும் உள்ளன. இவற்றின் மூலம் கடந்த 2024 ஏப்ரல் முதல் 2025…
அரிதா, சிட்ர் மற்றும் ஷிகாக்காய், நேரம் சோதிக்கப்பட்ட இயற்கை பொருட்களின் முடி பராமரிப்புக்கு தனித்துவமான நன்மைகளை வழங்குகின்றன. அரிதா டீப் எண்ணெய் உச்சந்தலையில் சுத்திகரிக்கிறது, சிட்ர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் போது உலர்ந்த மற்றும் உணர்திறன் வாய்ந்தவற்றை ஆற்றுகிறது, மேலும் ஷிகாகாய் பலவீனமான முடியை பலப்படுத்துகிறது. இந்த பொடிகளை இணைப்பது ஒரு சக்திவாய்ந்த DIY சுத்தப்படுத்தியை உருவாக்குகிறது, ஆரோக்கியமான, புத்துயிர் பெற்ற இழைகளுக்கு பல்வேறு முடி கவலைகளை நிவர்த்தி செய்கிறது. இந்த மூலிகை வைத்தியம் கனவு முடியை அடைவதற்கு இயற்கையான மாற்றீட்டை வழங்குகிறது. சரி, உண்மையாக இருக்கட்டும், நம்மில் பெரும்பாலோர் எப்போதும் நம் தலைமுடியை சரிசெய்யும் ஒரு விஷயத்தைத் துரத்துகிறார்கள். இது முடி வீழ்ச்சி, மெதுவான வளர்ச்சி, அல்லது மந்தமான, உயிரற்ற இழைகளாக இருந்தாலும், முடி பிரச்சினைகள் குறித்து நாம் அனைவரும் நியாயமான பங்கைக் கொண்டிருந்தோம். ஆடம்பரமான சீரம் முதல் விலையுயர்ந்த வரவேற்புரை சிகிச்சைகள் வரை அனைத்தையும் நாங்கள் முயற்சித்தபோது, நல்ல பழைய…
புதுடெல்லி: உள்நாட்டு பொருட்களை மட்டுமே விற்க வேண்டும். உள்நாட்டு பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இதன்படி 124-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில் அவர் கூறியிருப்பதாவது: இந்திய விண்வெளி வீரர் ஷுபான்ஷு சுக்லா விண்வெளி பயணத்தை நிறைவு செய்து அண்மையில் பூமிக்கு திரும்பினார். அவர் தரையைத் தொட்டபோது இந்தியா திருவிழா கோலம் பூண்டது. அனைத்து இந்தியர்களும் வெற்றி கொண்டாடத்தில் திளைத்தனர். ஒட்டுமொத்த தேசமும் பெருமிதத்தில் பொங்கியது. கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்திரயான் – 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியபோதும் இதே சூழல் காணப்பட்டது. அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி குறித்து இந்திய சிறார் மனதில் ஆர்வம் துளிர்த்திருக்கிறது. பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை தூண்ட இன்ஸ்பயர்-மானக் என்ற திட்டம்…
சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சென்னையில் நடைபெற்று வருவதாகவும், தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் வகுப்புகளில் பங்கேற்று பயனடையுமாறும் மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் அனைத்து வகை மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு நடத்தப்படும் குரூப்-2, 2ஏ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் கடந்த 21-ம் தேதிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை மயிலாப்பூரில் உள்ள சிஎஸ்ஐ காது கேளாதோர் மேல்நிலைப் பள்ளியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 முதல் மதியம் 1 மணிவரை பயிற்சி வழங்கப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஆக. 13-ம் தேதியாகும். பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அந்த வகையில் சென்னையை சேர்ந்த தகுதிவாய்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளி மாணவ,…
சென்னை: தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பல்வேறு புதிய கட்டமைப்புகளை உருவாக்கி பொதுப்பணித் துறை சாதனை புரிந்துள்ளதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொதுப்பணித் துறை, தமிழகத்தின் வளம பெருக்கும் கட்டமைப்புகளை, வரலாற்றுச் சிறப்புமிக்க கலைச் சின்னங்களை உருவாக்கும் பெருமைக் குரியதுறையாகும். துறை சார்பில் வள்ளுவர் கோட்டம், ரூ.80 கோடியில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.240.53 கோடியில் கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை உட்பட 4 ஆண்டுகளில் பல புதிய கட்டமைப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ளார். 2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓராண்டில் சென்னை கிண்டியில் ரூ.240.53 கோடியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, ரூ.210.80 கோடியில் 560 படுக்கை வசதியுடன் கொளத்தூரில் பெரியார் மருத்துவமனை, ரூ.187.79 கோடியில் மதுரை ராஜாஜி மருத்துவமனை கட்டிடம் ரூ.4,179 கோடியில் அரியலூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாகை, நாமக்கல், உதகை,…
ஒரு உலகளாவிய ஆய்வு டிமென்ஷியா நோயறிதலில் குறிப்பிடத்தக்க தாமதத்தை வெளிப்படுத்துகிறது, ஆரம்ப அறிகுறிகளுக்குப் பிறகு சராசரியாக 3.5 ஆண்டுகள் மற்றும் ஆரம்பகால நிகழ்வுகளுக்கு இன்னும் நீண்டது. அறிகுறி தவறான விளக்கம், களங்கம் மற்றும் சுகாதார அமைப்பு திறமையின்மை போன்ற காரணிகளால் இந்த தாமதம் ஏற்படுகிறது. பொது விழிப்புணர்வு, மேம்பட்ட மருத்துவர் பயிற்சி மற்றும் நோயறிதலை விரைவுபடுத்துவதற்கும் நோயாளியின் விளைவுகளை மேம்படுத்துவதற்கும் அணுகக்கூடிய ஆதரவு ஆகியவற்றின் அவசியத்தை நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். 2021 ஆம் ஆண்டில் உலகளவில் 57 மில்லியன் மக்கள் டிமென்ஷியா வைத்திருந்ததாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 10 மில்லியன் புதிய வழக்குகள் எழுகின்றன. மிகவும் ஆபத்தானது என்னவென்றால், டிமென்ஷியாவின் அறிகுறிகள் பெரும்பாலும் தள்ளுபடி செய்யப்படுகின்றன, மேலும் முதல் அறிகுறிகள் தோன்றிய பின்னர் கண்டறிய பல ஆண்டுகள் ஆகும் என்று ஒரு புதிய ஆய்வின்படி லண்டன் பல்கலைக்கழக கல்லூரி (யு.சி.எல்) ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான ஒரு ஆய்வில்,…
ஆக்ரா: உத்தர பிரதேசத்தில் கடந்த 2008 ஆகஸ்ட் 31-ல் நடைபெற்ற தேர்தல் தொடர்பான வழக்கில் மெயின்புரி காவல் துறையினர், 4 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இவர்கள் அனைவரும் மெயின்புரியின் நாக்லாபந்த் கிராமத்தை சேர்ந்தவர்கள். அப்போது விசாரணை அதிகாரியாக இருந்த ஓம்பிரகாஷ் என்பவர் ஒரு முக்கியமான தவறை செய்துவிட்டார். வழக்கில் சம்பந்தப்பட்ட ராம்வீர் சிங் யாதவுக்கு பதிலாக அவரின் மூத்த சகோதரரான ராஜ்வீர் சிங் யாதவ் பெயரை சேர்த்துவிட்டார். இதையடுத்து டிசம்பர் 1-ம் தேதி ராஜ்வீர் கைது செய்யப்பட்டு 22 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சில வாரங்களில் போலீஸார் இந்த பெயர் மாற்ற தவறை ஒப்புக்கொண்டாலும் பல்வேறு சிக்கல்களால் இந்த வழக்கு முடிவடைய 17 ஆண்டுகள் வரை நீடித்தது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மெயின்புரி நீதிமன்றம் ராஜ்வீர் சிங் யாதவை நிரபாராதி என்று அறிவித்து இந்த வழக்கிலிருந்து அவரை விடுதலை செய்தது. பணியின்போது மிகவும் அலட்சியமாக…
சென்னை: ரயில் நிலையங்களில் குறைந்தபட்சம் 10 நிமிடம் நிறுத்தப்படும் ரயில்களின் கழிப்பறைகளை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும் என்று வாரியம் உத்தரவிட்டுள்ளது. நெடுந்தொலைவு இயக்கப்படும் ரயில்களில் கழிப்பறைகள் முறையாக சுத்தம் செய்யப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. தண்ணீர் குழாய்கள் உடைந்திருப்பது, ரயில்களில் போதிய தண்ணீர் நிரப்பாதது போன்ற காரணங்களால், கழிப்பறைகள் பல நேரங்களில் அசுத்தமாக காணப்படுகின்றன. இந்நிலையில், 10 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் நிறுத்தப்படும் நிலையங்களில், ரயில் கழிப்பறைகளை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும் என்று ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. அத்தகைய நிலையங்கள் தவிர, கழிப்பறையை சுத்தம் செய்ய வேறு புதிய இடங்களையும் பரிந்துரைக்கலாம். இதுகுறித்து ரயில்வே தலைமை இயந்திரவியல் பொறியாளர் முடிவு எடுக்க வேண்டும். அதுபோல, ஒவ்வொரு ரயிலுக்கும் அடையாளம் காணப்பட்ட ரயில் நிலைய இடங்களின் விவரங்களை தொகுத்து, ஜூலை 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பிட்ட நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படும்போது,…
