புதுடெல்லி: அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். அப்போது, உலக நாடுகளின் பொருட்களுக்கான இறக்குமதி வரி பட்டியலை வெளியிட்டார். இது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்தது. பின்னர் இந்த புதிய வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். இதன்படி, கடந்த ஜூலை 9-ம் தேதி கெடு முடிய இருந்த நிலையில் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நீட்டித்தார். இதனிடையே, பல்வேறு நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதில் ஜப்பான், இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்டவற்றுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதுபோல இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பாக இதுவரை 5 சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. வரி விதிப்பு அமலாவதற்கான காலக்கெடு (ஆகஸ்ட் 1) நெருங்கிவிட்ட நிலையில், இரு நாடுகளுக்கிடையே இடைக்கால ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து 6-வது சுற்று…
Author: admin
பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத், தமிழில் விஜய்யின் ‘லியோ’ படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ரசிகை ஒருவர் ரூ.72 கோடி மதிப்புள்ள சொத்தை எழுதி வைத்ததாகச் செய்திகள் வெளியானது. இது போலியான செய்தி என்று கூறப்பட்ட நிலையில். இதுபற்றி சஞ்சய் தத்திடம் கேட்டபோது, அது உண்மைதான் என்றார். மும்பையை சேர்ந்த நிஷா பாட்டீல் (62) என்ற பெண், சஞ்சய் தத்தின் தீவிர ரசிகை. நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தான் இறந்த பிறகு ரூ.72 கோடி மதிப்புள்ள தனது சொத்துகளை சஞ்சய் தத்திடம் ஒப்படைக்குமாறு தனது வங்கிக்குத் தெரிவித்திருந்தார். அவர் இறந்த பிறகு வங்கியில் இருந்து சஞ்சய் தத்திடம் இதுகுறித்து கூறினர். அதை ஏற்க மறுத்த அவர், அந்தப் பெண்ணின் குடும்பத்துக்குத் திருப்பிக் கொடுத்துள்ளார். இதுகுறித்து சமீபத்தில் அளித்துள்ள பேட்டி யில் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னையில் ரூ.2.38 கோடியில் அமைக்கப்பட்டு வரும் பாரா விளையாட்டு மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாரா விளையாட்டுகளை ஊக்குவிக்கும் விதமாக நாட்டிலேயே முதல்முறையாக, தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கடலூர், திருநெல்வேலி, சேலம் என 6 மாவட்டங்களில் ரூ.7.38 கோடி மதிப்பீட்டில் பாரா விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் சென்னையைத் தவிர, 5 மாவட்டங்களில் தலா ரூ.1 கோடியில் பாரா விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சென்னை மாவட்டத்தில் கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா விளையாட்டு வளாகத்தில் ரூ.2.38 கோடியில் பாரா விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மைதானத்தில் திறந்தவெளி மேற்கூரை கொண்ட பாரா-இறகுப்பந்து ஆடுகளம், உட்கார்ந்து விளையாடும் பாரா-கையுந்து பந்து ஆடுகளம், பாரா-டேபிள் டென்னிஸ் ஆடுகளம், பாரா-போச்சியா ஆடுகளம், பாரா-டேக்வாண்டோ ஆடுகளம், பாரா-ஜூடோ ஆடுகளம், பாரா-கோல்பால் ஆடுகளம், பாரா-பளுதூக்குதல் களம் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன. இத்துடன், நிர்வாக அலுவலகக் கட்டிடம், உபகரணங்கள்…
செல்வாக்குள்ள உலகம் ஊழலைக் கடந்தபோது, பேட்ரிக் போர்கள் என்று பிரபலமாக அறியப்பட்ட பிரதீக் க aus சிக், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு நிமிட மறுபிரவேசம் வீடியோவைப் பதிவேற்றுவதன் மூலம் தீயை வெளிப்படுத்தினார். பிரதீக் க aus சிக் அக்கா பேட்ரிக் இடுகைகள் இங்கே திரும்பத் தூண்டுகிறது புதிய சர்ச்சையைத் தூண்டுகிறதுஆனால் காற்றைத் துடைப்பதற்கு பதிலாக, பேட்ரிக்கின் தெளிவற்ற “நன்றி” செய்தி அவரது ரசிகர்களுக்கு பலருடன் சரியாக அமரவில்லை. சில விசுவாசிகள் அவர் திரும்பியதற்காக உற்சாகப்படுத்தப்பட்டபோது, இணையம் மிகவும் உரத்த ஒரு கேள்வியைக் கேட்டது: “கதையின் உங்கள் பக்கம் எங்கே? நீங்கள் சொல்வது சரி என்பதற்கான ஆதாரம் எங்கே?” அதேசமயம், பல ரசிகர்கள் அவரது மறுபிரவேசத்தை பாராட்டினர், மேலும் அவரை அவர்களது குடும்பத்தினர் என்று அழைத்தனர், மேலும் அவர் மீண்டும் வருவது குறித்து பல எமோ ரீல்களைச் செய்தார். அவரது இடுகையின் வீடியோ விளக்கம் படித்தது, “என்னுடன் நின்ற அனைவருக்கும், எனது நண்பர்கள்,…
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் காரா, பாகிஸ்தான் எல்லையில் உள்ள ரஜவுரி பகுதிக்கு 3 நாள் பயணமாக சென்றுள்ளார். அவர் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘ஆபரேஷன் சிந்தூர்’ நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் எல்லையோரம் உள்ள பூஞ்ச் மற்றும் ரஜவுரி மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் மீது பீரங்கிகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் 28 பேர் உயிரிழந்தனர். போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு காஷ்மீருக்கு வருகை தந்த ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, பாகிஸ்தான் தாக்குதலில் ஒன்று அல்லது இரண்டு பெற்றோரை இழந்த குழந்தைகள் பட்டியலை தயாரித்து தருமாறு கேட்டிருந்தார். இதன்படி, 22 பேர் பட்டியலை தயாரித்து ராகுல் காந்தியிடம் கொடுத்துள்ளோம். அவர்களின் கல்விச் செலவுக்கு தேவையான நிதியுதவி வழங்கப்படும் என ராகுல் உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வுக்கு ஆகஸ்ட் 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: நடப்பு கல்வியாண்டில் (2025-26) பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்களுக்கு துணை கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதில் பிளஸ்-2 துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் பொது கலந்தாய்வில் கலந்துகொள்ள இயலாத மாணவர்கள் பங்கேற்கலாம். அல்லது ஆகிய இணையதள முகவரிகளை பயன்படுத்தி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மாணவர்கள் வசதிக்காக அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களின் விவரங்களை இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை: நெல்லை ஐடி ஊழியர் கவின் கொலை செய்யப்பட்டதற்கு இயக்குநர் மாரி செல்வராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம். சாதிய பெருமைவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அரசு இன்னும் துரிதமானதாகவும் கடுமையானதாகவும் நிச்சயம் செயல்படுத்தியே ஆகவேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோரையும் இணைத்துள்ளார். நடந்தது என்ன? – தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கவின் (27). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த கவின், உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை அழைத்துக் கொண்டு பாளையங்கோட்டை கேடிசி நகர் அஷ்டலட்சுமி நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். உறவினருடன் மருத்துவமனை முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கவினை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதில் பலத்த…
திருநெல்வேலி: நெல்லை ஆணவக் கொலை விவகாரத்தில், பெண்ணின் பெற்றோர்களான காவல் உதவி ஆய்வாளர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே உடலை வாங்கப் போவதாக உறவினர்கள் உறுதிபடத் தெரிவித்துவிட்டனர். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் கடந்த 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரன் சுர்ஜித் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சாரணடைந்த நிலையில் சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. கொலை செய்யப்பட்ட கவின். சுர்ஜித் பெற்றோர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி இருவரும் காவல்துறை உதவி ஆய்வாளர்களாக உள்ளனர். எனவே இருவரையும் கைது செய்தால் மட்டுமே உடலை வாங்கி அடக்கம் செய்வோம் என கவினின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களிடம்…
நாம் வயதாகும்போது, குறிப்பாக 40 க்குப் பிறகு, வளர்சிதை மாற்றம் மற்றும் தசை வெகுஜனத்தின் இயல்பான சரிவு காரணமாக ஆரோக்கியமான எடையை பராமரிப்பது மிகவும் சவாலாகிறது. மெலிந்த தசையைப் பாதுகாப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த வலிமை, இயக்கம் மற்றும் நல்வாழ்வை ஆதரிப்பதற்கும் முக்கியமானது. இந்த செயல்பாட்டில் ஊட்டச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது, தசையை பராமரிக்கும் போது கொழுப்பை எரிக்க உதவுகிறது. சரியான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது, புரதம், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை, குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை ஏற்படுத்தும். உங்கள் அன்றாட உணவில் ஊட்டச்சத்து-அடர்த்தியான விருப்பங்களை இணைப்பது எடை இழப்பை ஆதரிக்கும், தசை தக்கவைப்பை மேம்படுத்துகிறது மற்றும் வயதான செயல்முறைக்கு நீங்கள் செல்லும்போது நீண்டகால ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும்.மெலிந்ததாக இருக்கவும், 40 க்குப் பிறகு தசைகளைப் பாதுகாக்கவும் இந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்க்கவும்1. மெலிந்த புரத ஆதாரங்கள்: தசை வளர்ச்சி மற்றும் பராமரிப்பை ஆதரிக்க உங்கள் உணவில்…
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதியில் இன்று பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு பூஞ்ச் மாவட்டத்தின் தேக்வார் செக்டாரின் கல்சியன்-குல்பூர் பகுதியில், இரண்டு முதல் மூன்று பயங்கரவாதிகள் ஊடுருவ முயல்வதாக பாதுகாப்புப் படைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையை தொடங்கிய நிலையில், இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இது குறித்து இந்திய ராணுவத்தின் 16-வது படைப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில், “தீவிரவாதிகளின் ஊடுருவல் தடுப்பு நடவடிக்கையான ஆபரேஷன் சிவசக்தி மூலமாக, இந்திய ராணுவத்தின் படைகள் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.” என்று கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் வெற்றிக்கு ஜம்மு காஷ்மீர் காவல்துறையினரும் பங்களித்ததாகவும், தீவிரவாதிகள் எதிர்ப்பு நடவடிக்கையின்போது அவர்களிடமிருந்து மூன்று ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை…
