பொதுவாக மருத்துவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறை களின்கீழ் உள்ள உயர் பணிகள், ‘ஒயிட் காலர் ஜாப்ஸ்’ என்று குறிப்பிடப்படுவதைக் கவனித் திருக்கலாம். அதேபோல் அதிக உடல் உழைப்பு தேவைப்படும் பணிகள் ‘புளூ காலர் ஜாப்ஸ்’ என்று குறிப்பிடப்படுகின்றன. பெரும்பாலானோர் அறிந்தது இந்த இரண்டு வகை ‘காலர் ஜாப்ஸ்’தான். என்றாலும் வேலையின் தன்மை, ஊதியம் ஆகியவற்றைப் பொறுத்து சுமார் பத்துக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. அவற்றில் சில: புளூ காலர்: கட்டுமானத் துறை, வேளாண்மை, விளையாட் டுத் துறையைப் போன்று திறந்தவெளியில் அதிக உடல் உழைப்பைச் செலுத் தக்கூடிய வேலைகள் ‘புளூ காலர்’ பட்டியலின் கீழ் குறிப்பிடப்படுகின்றன. தொழிற்சாலைகள், பெரு நிறுவனங்களில் மேற் கொள்ளப்படும் இயந்திரப் பணிகளும் இப்பட்டியலில் சேரும். யெல்லோ காலர்: ஒயிட்-புளூ காலர் பணிகள், பணியாளர்களுக்கு இடையே ஒரு பாலமாக இயங்குபவர் யெல்லோ காலர் பணியாளர்கள். உதாரண மாக, இதழியல் துறை, வரைகலை வடிவமைப்பு, அனி மேஷன்,…
Author: admin
’எதற்கும் துணிந்தவன்’ படம் தொடர்பாக இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ள கருத்து பெரும் விவாதமாக மாறியிருக்கிறது. பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘தலைவன் தலைவி’ திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் அதிக வசூல் செய்த விஜய் சேதுபதி படம் என்ற சாதனையை படைக்கும் என தெரிகிறது. இப்படம் வெளியீட்டிற்குப் பின் இயக்குநர் பாண்டிராஜ் பேட்டியொன்று அளித்துள்ளார். அதில் ‘எதற்கும் துணிந்தவன்’ படம் குறித்து பேசியிருப்பது பெரும் விவாதமாக மாறியிருக்கிறது. அப்பேட்டியில் பாண்டிராஜ், ”சூர்யா சாருக்கு மட்டும் ப்ளாப் படம் கொடுத்துவிட்டு, மற்ற நாயகர்கள் அனைவருக்கும் ஹிட் கொடுக்கிறீர்கள் என்கிறார்கள். கரோனா காலத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்கு தான் 3 ஆண்டுகள் வேலை பார்த்தேன். அப்படத்துக்கு தான் அதிகமாக உழைத்தேன், மக்களிடையே வரவேற்பு பெறாதது நம் கையில் இல்லை. தம்பிக்கு ‘கடைக்குட்டி சிங்கம்’ பெரிய ஹிட் கொடுத்தோம். அண்ணனுக்கு அதைவிட பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என்று தான் வேலை பார்த்தோம். ஏதோ ஒரு…
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேகச் செயலி அக்கட்சியால் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று அறிமுகம் செய்தார். இதில், தவெக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் விஜய் பேசியதாவது: இதற்கு முன்னால் தமிழக அரசியலில் நடந்த மிகப்பெரிய இரண்டு தேர்தல்களைப் போல 2026 தேர்தலும் அமையப் போகிறது. அந்த இரண்டு மாபெரும் தேர்தல்களில் ஏற்கெனவே தொடர்ந்து ஜெயித்துக் கொண்டிருந்த அதிகார பலம், அசுர பலம் அனைத்தையும் எதிர்த்து நின்றுதான் புதிதாக வந்தவர்கள் ஜெயித்தனர். ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு என்ற அனைத்து மக்களையும் சந்தித்தனர். அண்ணா சொன்ன அதே விஷயத்தை நானும் இங்கே சொல்ல விரும்புகிறேன். மக்களிடம் செல், மக்களிடமிருந்து கற்றுக் கொள், மக்களுடன் வாழ், மக்களுடன் சேர்ந்து திட்டமிடு. இதைச் சரியாக செய்தாலே போதும். அதனால்தான் இந்தச் செயலியை அறிமுகப்படுத்துவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதன் பிறகு…
கல்லீரல் புற்றுநோய் என்பது கல்லீரலில் உருவாகும் ஒரு வீரியம் மிக்க (புற்றுநோய்) கட்டியாகும். இது முதன்மையானது, கல்லீரலில் தோன்றலாம் அல்லது இரண்டாம் நிலை, அதாவது இது உடலில் வேறு இடங்களிலிருந்து கல்லீரலுக்கு பரவியுள்ளது. பெரியவர்களில் முதன்மை கல்லீரல் புற்றுநோயின் மிகவும் பொதுவான வகை ஹெபடோசெல்லுலர் கார்சினோமா (எச்.சி.சி) ஆகும். இருப்பினும், கல்லீரல் புற்றுநோயின் சில ஆரம்ப அறிகுறிகள் மிகவும் கவனிக்கத்தக்கதாக இருக்காது, எனவே இந்த 5 அறிகுறிகளுக்கு ஒருவர் கவனம் செலுத்த வேண்டும் …எடை இழப்புஉணவு மாற்றங்கள் இல்லாமல் எடை இழப்பு, பசியின் இழப்புடன், கல்லீரல் புற்றுநோயின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம். குறைந்த அளவு உணவை சாப்பிட்ட பிறகு உங்கள் வயிறு முழுமையாக உணரும். இந்த விளைவை உருவாக்க, வளர்ந்து வரும் கட்டி உங்கள் செரிமான அமைப்பு மற்றும் வளர்சிதை மாற்ற செயல்முறைகளில் தலையிடுகிறது. இதன் காரணமாக, எந்த முயற்சியும் இல்லாமல் கூட நீங்கள் விரைவாக உடல் எடையை குறைப்பீர்கள்.மேல்…
புதுடெல்லி: மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீ்ட்டிக்க வகை செய்யும் தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் அறிமுகப்படுத்த உள்ளார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைத்தேயி மற்றும் குகி ஆகிய இரு இனக் குழுக்களுக்கு இடையே கடந்த 2023-ம் ஆண்டு மே 3-ம் தேதி தொடங்கிய மோதல் பெரும் வன்முறையாக வெடித்தது. இதில், 250 பேர் உயிரிழந்ததுடன் 60,000-க்கும் மேற்பட்டோர் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் தனது பதவியை ராஜினமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து, கடந்த பிப்ரவரி 13 முதல் மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், மேலும், 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை நீ்ட்டிக்க வகை செய்யும் தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் அறிமுகப்படுத்த உள்ளார். இது தொடர்பாக மக்களவை…
காலணிகள், தோல் பைகள், பெல்ட், பர்ஸ்… இப்படிப் பல்வேறு தோல் பொருள்கள் நமது அன்றாடப் பயன்பாட்டில் உள்ளன. இத்தகைய தோல் பொருள்கள் உள்நாட்டுப் பயன்பாட்டுக்காக உற்பத்தி செய்யப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தோல் உற்பத்தியிலும் தோல் ஏற்றுமதியிலும் முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாட்டில் சென்னை, ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட்டு, வேலூர், திண்டுக்கல், திருச்சி, ஈரோடு போன்றவை தோல் பதனீட்டுத் தொழிலுக்கும் தோல் பொருள் உற்பத்தித் தொழிலுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களாகத் திகழ்கின்றன. எனவே, காலத்திற்கேற்ற நவீனத் தோல் தொழில்நுட்பப் பயிற்சிகளுடன் கூடிய தனித்திறமையாளர்கள் தேவைப்படுகிறார்கள். இதற்கேற்ற வகையில் தனித் தொழில்நுட்பப் படிப்புகள் உள்ளன. லெதர் டெக்னாலஜி: தோல் தொழில்நுட்பம் (லெதர் டெக்னாலஜி) பட்டப்படிப்பில் சேரும் மாணவர்களுக்குத் தோல் பதனிடுதல், காலணிகள் உள்ளிட்ட தோல் பொருள்களை உற்பத்தி செய்தல், அதற்குப் பயன்படும் கருவிகளை இயக்குதல் உள்ளிட்ட தோல் தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு அம்சங்கள் கற்றுத்தரப்படுகின்றன. லெதர் டெக்னாலஜி பட்டப் படிப்புகளைப் படித்த மாணவர்களுக்குத் தோல்…
சென்னை: சாதிய ஆணவப் படுகொலைகள் தொடராமலிருக்க தனிச் சட்டம் இயற்ற தமிழக அரசு முன்வர வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி இளைஞர் கவின் சாதிய ஆணவப் படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்திருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. இப்படுகொலையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிப்பதோடு, சாதி – ஆணவ படுகொலையில் ஈடுபட்டவர்களை நீதியின்முன் நிறுத்தி கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறது. படுகொலை செய்யப்பட்ட கவின் சென்னையில் ஐ.டி. துறையில் பணியாற்றி வந்தார். இவர் திருநெல்வேலி சித்த மருத்துவர் சுபாஷினியை நேசித்துள்ளார். இருவரும் மனம் இசைந்து திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதனை ஏற்காத சாதிய ஆதிக்க சக்திகள் 27.07.2025 அன்று கவினை வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். இன்றைய தொழில்நுட்ப உலகில் கல்வியும், அறிவும் வளர்ந்தோங்கும் சூழலில் இதுபோன்ற படுகொலைகள் சமூக…
மீன்வள மீன் உங்கள் இடத்திற்கு அழகைச் சேர்ப்பது மட்டுமல்லாமல், நல்ல அதிர்ஷ்டம், பணம் மற்றும் மகிழ்ச்சியை ஈர்க்கும் என்றும் நம்பப்படுகிறது. உங்கள் வீட்டிற்கு நேர்மறையைக் கொண்டுவரும் 10 நன்னீர் மீன்கள் இங்கே:
புதுடெல்லி: பிஹார் SIR விவகாரம் நாடாளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தர்மேந்திர பிரதான், “அரசியலமைப்பு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு திரிபவர்கள்தான் (ராகுல் காந்தி) அரசியலமைப்புச் சட்டத்தை கேலி செய்கிறார்கள். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்பது தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை. இதை தேர்தல் ஆணையம் பல பத்தாண்டுகளாக செய்து வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்ப்பவர்கள் அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கிறார்கள். இதில் அவர்களின் சொந்த நலன் அடங்கி இருக்கிறது. அவர்களின் எதிர்ப்பு கண்டிக்கத்தக்கது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்கக் கோருவது என்பது தேர்தல் ஆணையத்துக்கு எதிராக விவாதிப்பதற்கான அழைப்பு. தேர்தல் ஆணையத்துக்கு எதிரான விவாதத்தை மக்களவையால் தொடங்க முடியுமா? அரசியலமைப்பின் அமைப்பு முறையை புரிந்து கொள்ளாதவர்களிடம் விவாதிப்பதில் பயன் இல்லை: என விமர்சித்தார். இந்த விவகாரம்…
ஹவாய்: ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக அங்கு சுனாமி தாக்கிய நிலையில், அமெரிக்காவின் ஹவாய் தீவுகளை சுனாமி தாக்கியுள்ளது. ஹவாயில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கடலோரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்குமாறு அரசு வலியுறுத்தியுள்ளது. ஹவாயின் மவுயி நகரில் உள்ள கஹுலுய் என்ற இடத்தில் கடல் மட்டத்திலிருந்து 4 அடி உயரத்தில் சுனாமி அலைகள் தாக்க ஆரம்பித்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வணிக துறைமுகங்களையும் மூடுவதாக ஹவாய் அவசர மேலாண்மை அமைப்பு அறிவித்தது. இந்தச் சூழலில், ஹவாயின் ஹனாலி பகுதியில் முதற்கட்டமாக 3 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்பத் தொடங்கியுள்ளன. சுனாமி அலைகள் தாக்கம் பல மணி நேரம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுனாமி முன்னெச்சரிக்கையாக அமெரிக்க கடலோர காவல்படை அனைத்து வணிகக் கப்பல்களையும், ஹவாயின் துறைமுகங்களையும் காலி செய்ய அறிவுறுத்தியுள்ளது. சுனாமி எச்சரிக்கை நீக்கப்படும்…
