புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தின் வறண்ட பாலைவனத்தில் சிந்துசமவெளி தொடர்பான நாகரிகம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஆழமான பாலைவன பகுதியில் ஹரப்பா காலத்தின் தொல்பொருட்களும் கிடைத்துள்ளன. இந்தகண்டுபிடிப்பு, பண்டைய சிந்து சமவெளி நாகரிக எல்லைகளை மறுவடிவமைக்கும் முக்கிய தடயங்களை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. இது, ராஜஸ்தானின் ஆழமான பாலைவனத்திலும் சிந்து சமவெளியைப் போன்ற நாகரிக அடையாளம் இருப்பதற்கான முதல் சான்றாகும், மேலும் வடக்கு ராஜஸ்தானுக்கும் குஜராத்துக்கும் நடுவே உள்ள ஹரப்பா தளங்களுக்கு இடையேயான ஒரு முக்கிய இணைப்பாகவும் இது கருதப்படுகிறது. ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள ராட்டாடி ரிதேரியில் சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது. ராம்கர் தாலுகாவிலிருந்து கிட்டத்தட்ட 60 கிமீ தொலைவிலும் பாகிஸ்தானின் சந்தனவாலாவிலிருந்து சுமார் 70 கிமீ தொலைவிலும் உள்ள இது தொலைதூர பாலைவனமாகும். அங்கு ஹரப்பா காலத்திய எச்சங்களும் அதன் அடையாளமான சில தொல்பொருட்களும் காணப்பட்டுள்ளன. இந்த இடம் பிரபல தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பங்கஜ் ஜகானி தலைமையில் தோண்டப்பட்டது. இந்த கண்டுபிடிப்புகளை…
Author: admin
சென்னை: எம்சிசி ஆல்டிஸ் மாஸ்டர்ஸ் தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் சென்னை சேப்பாக்கம் உள்ள எம்சிசி கிரிக்கெட் கிளப்பில் நாளை (ஆகஸ்ட் 2) தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 19 மாநிலங்களைச் சேர்ந்த 185 பேர் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். இந்த தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.4 லட்சம் ஆகும். ஆடவருக்கு 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரை என 8 பிரிவிலும், மகளிருக்கு 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவிலும் போட்டி நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறுபவருக்கு ரூ.20 ஆயிரமும், 2-வது இடம் பெறுபவருக்கு ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது. இத்தகவலை சென்னையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது எம்சிசி தலைவர் விவேக் குமார் ரெட்டி, எம்சிசி ஒருங்கிணைப்பு செயலாளர் பகவன்தாஸ் ராவ் ஆகியோர் தெரிவித்தனர். ஆல்டிஸ் நிறுவனத்தின் சித்தார்த்…
மதுரை: ராமநாதபுரம் ராஜவீதியைச் சேர்ந்த யாசர் அராபத், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ஆக.31-ல் ஓய்வு பெறுகிறார். அடுத்த டிஜிபி பதவிக்கான தகுதி வாய்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு தமிழக அரசு இதுவரை அனுப்பவில்லை. தற்போதைய டிஜிபிக்கு பணி நீட்டிப்பு வழங்கவும், அவரை பொறுப்பு டிஜிபியாக நியமிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவாலை ஓய்வுக்குப் பிறகு, பொறுப்பு டிஜிபியாக நியமிக்கவும், சங்கர் ஜிவாலின் பணிக் காலத்தை நீட்டிப்புச் செய்யவும் இடைக்கால தடை விதித்தும், டிஜிபி பதவிக்கு தகுதியான ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை தமிழக அரசு உடனடியாகத் தயார் செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
மும்பை: புரோ கபடி 12-வது சீசன் வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. 12 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரின் ஆட்டங்கள் இம்முறை விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், சென்னை, டெல்லி உள்ளிட்ட 4 நகரங்களில் நடைபெறுகின்றன. புரோ கபடி லீக்கின் 2025-ம் ஆண்டு சீசனின் முதற்கட்ட போட்டிகள் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 11 வரை விசகாப்பட்டினத்தில் நடைபெறுகிறது. ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு விசாகப்பட்டினத்துக்கு புரோ கபடி லீக் போட்டிகள் திரும்பி உள்ளன. இங்கு கடைசியாக 2018-ம் ஆண்டு 6-வது சீசன் போட்டிகள் நடைபெற்றன. 29-ம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் அணி தமிழ் தலைவாஸை எதிர்கொள்கிறது. அன்றைய தினம் நடைபெறும் 2-வது ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி புனேரி பால்டனை சந்திக்கிறது. 30-ம் தேதி தெலுகு டைட்டன்ஸ் அணி, யுபி யோதாஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.…
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று திடீரென சந்தித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த மக்களவைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றிருந்தது. அந்தக் கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 இடங்கள் வழங்கப்பட்டன. இதுதவிர ஒரு மாநிலங்களவை இடமும் வழங்கப்படுவதாக தேமுதிகவுக்கு உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், கூட்டணி ஒப்பந்தத்தின்படி தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடத்தை அதிமுக வழங்கவில்லை. மாறாக அடுத்தாண்டு நடைபெறவுள்ள தேர்தலில் இடம் வழங்குவதாக அதிமுக அறிவித்தது. இதனால் தேமுதிக தரப்பினர் அதிருப்தி அடைந்தனர். அதைத்தொடர்ந்து, கூட்டணி நிலைப்பாட்டை ஜனவரியில் அறிவிப்போம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார். இதன்மூலம் அதிமுக கூட்டணியில் நீடிக்கவில்லை என்பதை தேமுதிக சூசகமாக தெரிவித்தது. அதன்பின் திமுக, தவெக கட்சிகளுடன் தேமுதிக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் பிரேமலதா…
ஜஸ்டின் டிம்பர்லேக் 31 ஜூலை 2025 அன்று ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார், இன்ஸ்டாகிராம் வழியாக தனது மறக்க நாளை உலக சுற்றுப்பயணத்தில் நிகழ்த்தும் போது அவர் லைம் நோயுடன் வாழ்ந்து வருவதாக அறிவித்தார் – இது துருக்கியில் அதே நாளில் மூடப்பட்டிருந்தது. அவர் அதை “இடைவிடாமல் பலவீனப்படுத்துகிறார், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும்” என்று அழைத்தார்.நாள்பட்ட நரம்பு வலி, தீவிர சோர்வு மற்றும் நோய் இருந்தபோதிலும், டிம்பர்லேக் 15 மாதங்களுக்கும் மேலாக 90 நிகழ்ச்சிகள் மூலம் இயக்கப்படுகிறது. அவர் வெளியேறுவதைப் பற்றி சிந்திப்பதை ஒப்புக்கொண்டார், ஆனால் அவர் கூறினார், “நிகழ்ச்சியின் மகிழ்ச்சி என் உடல் உணரப்பட்ட விரைவான மன அழுத்தத்தை விட அதிகமாக உள்ளது” என்றும் அவர் தொடர்ந்து வருத்தப்படவில்லை என்றும் கூறினார்.முதலில் கண்டறியப்பட்டபோது தான் அதிர்ச்சியடைந்ததாக அவர் விளக்கினார், ஆனால் அவர் ஏன் சில சமயங்களில் பாடலைத் தவிர்த்தார் அல்லது பாடல் நிரப்ப கூட்டத்தில் சாய்ந்தார் என்பதை விளக்க உதவியது. தவறான புரிதல்களைத்…
சென்னை: அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் தரத்தை தொடர்ந்தும் மேம்படுத்த ஆசிரியர்கள் செயலாற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். சென்னை மாவட்ட அளவிலான கற்றல் அடைவுத் தேர்வு (ஸ்லாஸ்) முடிவுகள் குறித்து தலைமை ஆசிரியர்களுடனான ஆய்வுக் கூட்டம் புரசைவாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது: தமிழகத்தில் 16-வது மாவட்டமாக தற்போது சென்னையில் உள்ள தலைமை ஆசிரியர்களை சந்தித்து கருத்துகளை கேட்டுள்ளேன். நமது மாநிலத்தில் மற்ற மாவட்டங்களில் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை குறைவாகும். ஆனால், சென்னையில் தனியார் பள்ளிகள் அதிகம். கடன் வாங்கியாவது தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்த்துவிடலாம் என்ற எண்ணம் சென்னையில் வசிக்கும் பெற்றோரிடம் உள்ளது. தனியார் பள்ளிக்கு சென்றது போக மீதமுள்ளவர்கள் தான் அரசுப் பள்ளிகளைத் தேடி வருகின்றனர். அதைப் புரிந்து கொண்டு அவர்களுக்கான கல்வியை வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பல்வேறு…
பெய்ஜிங்: சீன தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த சனிக்கிழமை முதல் கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். 136 கிராமங்களில் மின்சார விநியோகம் தடைபட்டது. 30-க்கும் மேற்பட்ட சாலைகள் சேதம் அடைந்தன. இதையடுத்து கடந்த 4 நாட்களாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலை யில் இந்த மழை வெள்ளத்தில் சிக்கி 44 பேர் உயிரிழந்ததனர். 9 பேரை காணவில்லை. பெய்ஜிங்கின் வடக்கு மலைப்புர மாவட்டங்களான மியூன், யான் கிங் ஆகியவற்றில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக கடந்த திங்கட்கிழமை சீன அதிபர் ஜி ஜின்பிங், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெய்ஜிங் உள்ளிட்ட 9 பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள சீன நிதி மற்றும் பேரிடர் மேலாண்மை…
ராமநாதபுரம்: தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் பேசி, உரிய தீர்வுகாண முயற்சிப்பேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் பழனிசாமி, ராமநாதபுரத்தில் மீனவர்கள், விவசாயிகள், நெசவாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் நேற்று பேசியதாவது: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதையும், இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை மீட்கவும் மத்திய அரசிடமும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடமும் பேசி, உரிய தீர்வுகாண முயற்சிப்பேன். கடந்த அதிமுக ஆட்சியில் இருமுறை பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.540 கோடி காப்பீட்டுத் தொகை பெற்றுத் தரப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. கண்மாய்கள் ஆழப்படுத்தப்பட்டன. ஏறத்தாழ ரூ.14,400 கோடியில் காவேரி-குண்டாறு திட்டத்தை மேற்கொண்டோம். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டது.…
சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை பட்டப் படிப் புக்கு தொடர்ந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நடப்பு கல்வியாண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிப் பதற்கான கடைசி நாள் ஜூலை 31 (நேற்று) என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் விண்ணப்பப் பதிவை ஆகஸ்ட் 1 (இன்று) முதல் தொடர்ந்து மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் www.tngasa.in என்ற இணைய தளத்தைப் பயன்படுத்தி தொடர்ந்து விண்ணப்பிக்கலாம். ஜூலை 31 வரை விண்ணப் பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு சிறப்புப் பிரிவு மாணவர் களுக்கான கலந்தாய்வு ஆக. 11-ம் தேதியும் பொது கலந்தாய்வு ஆக.13-ம் தேதியும் தொடங்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
