Author: admin

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் காருடன் விழுந்த ஒரு பெண்ணை பத்திரமாக மீட்ட 7 தமிழர்களை பாராட்டிய அந்நாட்டு அதிபர், வரும் 3-ம் தேதி விருந்து அளிக்க திட்டமிட்டுள்ளார். சிங்கப்பூரில் உள்ள தஞ்சோங் கட்டோங் சாலையின் ஒரு பகுதி கடந்த ஜூலை 26-ம் தேதி திடீரென உள்வாங்கியது. அப்போது அந்த வழியாக சென்ற ஒரு கார் அந்த பள்ளத்துக்குள் விழுந்தது. இதையடுத்து அப்பகுதியில் பணியில் இருந்த பிச்சை உடையப்பன் தலைமையிலான 7 தமிழர்கள் அந்த பள்ளத்தில் எட்டிப் பார்த்துள்ளனர். சகதியாக இருந்த அந்த பள்ளத்தில் ஒரு பெண் காரிலிருந்து வெளியில் வந்துள்ளார். இதையடுத்​து, அவரை மீட்​கும் முயற்​சி​யில் அவர்​கள் ஈடு​பட்​டனர். இதன் ஒரு பகு​தி​யாக, ஒரு நைலான் கயிறை விட்டு அந்​தப் பெண்ணை பத்​திர​மாக மீட்​டனர். இந்​நிலை​யில், அந்​தப் பெண்ணை மீட்ட தமிழர்​களுக்கு பாராட்டு குவிந்து வரு​கிறது. இதனிடையே, அந்த 7 பேருக்​கும் பாராட்டு தெரி​வித்​துள்ள அந்​நாட்டு அதிபர்…

Read More

திருப்பத்தூர்: பழமை​யான கோயில்​களில் ஆகம விதி​முறை​களுக்கு உட்​பட்டே அர்ச்​சகர்​களை நியமிக்க வேண்​டும் என்று ஸ்ரீவில்லிபுத்​தூர் ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயர் கூறி​னார். சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் அரு​கே​யுள்ள திருக்​கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெரு​மாள் கோயி​லில் அஷ்​டாங்க விமானத்​துக்கு தங்​கத் தகடு பதிக்​கும் பணி நடை​பெற்று வரு​கிறது. 3 தளங்​கள் கொண்ட இந்த விமானத்​தில் தங்​கத் தகடு பதிப்​ப​தற்​காக 18 ஆண்​டு​களுக்கு மேலாக தங்​கம் சேகரிக்​கப்​பட்​டது. கடந்த ஆண்டு நவ. 14-ம் தேதி தங்​கத்தகடு பதிக்​கும் பணி தொடங்கியது. இந்​நிலை​யில், திருக்​கோஷ்டியூர் கோயிலுக்கு நேற்று வந்த ஸ்ரீவில்​லிபுத்​தூர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர், அஷ்​டாங்க விமானத்​தில் பொருத்​தப்பட உள்ள தங்​கத் தகட்​டில் தங்க இலைகளை ஒட்​டி​னார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அறநிலை​யத் துறை செயல்​பாடு​களில் எனக்கு குறை ஒன்​றும் தெரிய​வில்​லை. நாம் ஒற்​றுமை​யாக சாமி கும்​பிட்​டால் தகராறு வராது. அரசும் கோயில் விவ​காரத்​தில் தலை​யி​டாது. நமக்​குள் தகராறு ஏற்படுவதால், கோயில்​களை அரசு எடுத்​துக்…

Read More

சென்னை: தமிழகத்தில் நாளை டெல்டா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மேற்கு திசைக்காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று (ஆக.1) ஓரிரு இடங்களிலும், ஆக. 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். தமிழகத்​தில் நாளை (ஆக. 2) டெல்டா மாவட்​டங்​களான தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகபட்​டினம், மயி​லாடு​துறை, புதுக்​கோட்டை மற்​றும் கடலூர், விழுப்​புரம் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது. வரும் 3-ம் தேதி டெல்டா மாவட்​டங்​கள் மற்​றும் புதுக்​கோட்​டை, கடலூர், விழுப்​புரம், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு மாவட்​டங்​களி​லும், 4-ம் தேதி டெல்டா மாவட்​டங்​கள், கடலூர்,…

Read More

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தை சேர்ந்த மூத்த பெண் மருத்துவர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த மார்ச் 15 முதல் ஜூன் 25 வரையில் என்னுடைய செல்போனில் வாட்ஸ்-அப்பில் அழைத்த ஒரு பெண், தனது பெயர் ஜோதி விஸ்வநாத் என்றும் தொலைத்தொடர்புத் துறையில் இருந்து பேசுவதாகவும் கூறினார். இதுபோல காவல் துணை ஆய்வாளர் என மோகன் சிங் என்பவரும் அரசு வழக்கறிஞர்கள் எனக் கூறி மேலும் 3 பேரும் செல்போனில் அழைத்தனர். அப்போது, என்​னுடைய செல்​போனிலிருந்து ஆட்​சேபனைக்​குரிய தகவல்​கள் அனுப்​பப்​பட்​டுள்​ள​தாக அவர்​கள் அனை​வரும் கூறினர். என்​னுடைய ஆதார் எண்ணை கேட்​டனர். பின்​னர் என்​னுடைய வங்​கிக் கணக்கு பண மோசடி நடவடிக்​கைகளுக்​காக பயன்​படுத்​தப்​பட்​டுள்​ள​தாகக் கூறினர். மேலும் என் மீது அந்​நிய செலா​வணி நிர்​வாக சட்​டம் மற்​றும் சட்​ட​விரோத பணப்​பரிவர்த்​தனை தடுப்பு சட்​டத்​தின் கீழ் அமலாக்​கத் துறை வழக்கு பதிவு செய்​திருப்​ப​தாக​வும் அது தொடர்​பான ஆவணத்​தை​யும் அனுப்​பினர். வழக்​கி​லிருந்து தப்​பிக்க வேண்​டு​மா​னால் ரூ.20…

Read More

சென்னை: தமிழகம் முழு​வதும் அனைத்து மக்​களும் பயன்​பெறும் வகையி​லான ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ மருத்​துவ முகாமை சென்​னை​யில் முதல்​வர் ஸ்டா​லின் நாளை தொடங்கி வைக்​கிறார். இதுகுறித்து முதல்​வர் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: கடந்த 2021-ம் ஆண்டு திமுக அரசு அமைந்த பிறகு, ‘எல்​லார்க்​கும் எல்லாம்’ என்ற நோக்​குடன் பல்​வேறு திட்​டங்​களை செயல்​படுத்​தி, தமிழகத்தை அனைத்து துறை​யிலும் முன்​னேறிய மாநில​மாக உயர்த்​திக் காட்​டி​யுள்​ளோம். அந்த வகை​யில், சுகா​தாரத் துறை சார்​பில், மக்​களைத் தேடி மருத்து​வம், நம்மை காக்​கும் 48 ஆகிய திட்​டங்​களை தொடர்ந்​து, மருத்​துவ சேவை​களை கடைக்​கோடி மனிதருக்​கும் கொண்டு சேர்க்க வேண்​டும் என்ற எண்​ணத்​தில் ஒரு திட்​டத்தை உருவாக்கினோம். அதன் அடிப்​படை​யில், உயர் மருத்​துவ சேவை​கள் வழங்க ரூ.12.78 கோடி​யில் மருத்​துவ முகாம்​கள் நடத்​தப்​படும் என்று சட்​டப்​பேரவை​யில் சுகா​தாரத் துறை அமைச்​சர் கடந்த ஏப்​ரல் 21-ம் தேதி அறி​வித்​தார். இதை செயல்​படுத்​தும் வித​மாக, ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ மருத்​துவ முகாம்​களை, சென்னை…

Read More

பட கடன்: ஆதித்யா சுப்பிரமணியன் இது எடை இழப்பின் கதை மட்டுமல்ல, இது உயிர்வாழ்வது, சுய மரியாதை மற்றும் வாழ்க்கையை விளிம்பில் இருந்து மீட்டெடுப்பது. 25 வயதில், ஆதித்யா சுப்பிரமணியன் 189.6 கிலோவை எட்டினார், சுகாதார பிரச்சினைகள், உணர்ச்சி தனிமைப்படுத்தல் மற்றும் ஒரு தொற்றுநோயுக்குப் பின்னர் போராடினார். ஆனால் விட்டுக்கொடுப்பதற்குப் பதிலாக, ஒரு முடிவு எடுக்கப்பட்டது, ஒரு குறிப்பிட்ட அளவிற்கு பொருந்தாது, ஆனால் மீண்டும் எதிர்காலத்தைக் கண்டுபிடிக்க. பின்வருவது மிகவும் தேவைப்படும் ஒரு மாற்றத்தின் நேர்மையான, ஆழமான மனிதக் கதை.”நான் கனமாக இல்லை, நான் கண்ணுக்கு தெரியாதவனாகவும், உடைந்தவனாகவும், நான் நன்றாக இருப்பதாக நடிப்பதில் சோர்வாகவும் உணர்ந்தேன்”189.6 கிலோஸில், எல்லாமே ஒரு போராட்டமாக உணர்ந்தன. என் படுக்கை உண்மையில் என்னைக் கைவிட்டது. இரண்டு முறை. இரவில் சுவாசிக்க எனக்கு இயந்திரங்கள் தேவைப்பட்டன. இரத்த அழுத்தம்? விளக்கப்படங்களில் இருந்து. கொழுப்பு கல்லீரல்? சரிபார்க்கவும். முன்கூட்டியே? கிட்டத்தட்ட அங்கே. வெறும் 25 வயதில், என்…

Read More

புதுடெல்லி: இந்தியப் பொருளாதாரம் மடிந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடுமையான விமர்சனம் செய்த நிலையில் அது உண்மைதான் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். அமெரிக்கா-இந்தியா இடையே குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாததை யடுத்து, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும், அது இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். மேலும், ரஷ்யாவிடமிருந்து ராணுவ தளவாடங்கள். கச்சா எண்ணெய் வாங்குவதால் அபராதமும் விதிக்கப்படும் என்று கூறியுள்ளார். இந்த நிலை​யில், இந்​திய பொருளா​தா​ரம் செயலிழந்து விட்​டது என்ற கடுமை​யான விமர்​சனத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்​வைத்​துள்​ளார். வரி விதிப்பை அறி​வித்த சில மணி நேரங்​களில் ட்ரம்ப் இவ்​வாறு கூறி​யுள்​ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பதி​வில், ‘‘ரஷ்​யா​வுடன் இந்​தியா வைத்​துள்ள உறவு குறித்து எனக்கு கவலை இல்​லை. ஆனால், அமெரிக்க பொருட்​களுக்கு இந்​தியா விதிக்​கும் வரி​கள்​தான் உலகிலேயே…

Read More

உலகளவில், பக்கவாதம் ஆண்டுதோறும் 15 மில்லியன் நபர்களை பாதிக்கிறது, இதன் விளைவாக 5 மில்லியன் இறப்புகள் மற்றும் மேலும் 5 மில்லியனை நிரந்தர குறைபாடுகள் உள்ளன. பக்கவாதத்தின் கடுமையான விளைவுகளை உணர்ந்து, விஞ்ஞானிகள் நம்பிக்கைக்குரிய புதிய மருந்தை உருவாக்கியுள்ளனர். இந்த புதுமையான சிகிச்சையானது பக்கவாதம் காரணமாக ஏற்படும் மூளை சேதத்தை கணிசமாகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, நோயாளியின் விளைவுகளையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துகிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) படி, ஒவ்வொரு ஆண்டும் 15 மில்லியன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில், 5 மில்லியன் பேர் இறக்கின்றனர், மேலும் 5 மில்லியன் பேர் நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளனர். ஒரு பக்கவாதத்தை விதிவிலக்காக ஆபத்தானதாக மாற்றுவது என்னவென்றால், அது ஆபத்தானது அல்லது நபரை ஊனமுற்றிருக்கலாம். பிந்தையது வாழ்க்கைத் தரத்தை கணிசமாகக் குறைக்கிறது. விஞ்ஞானிகள் இப்போது ஒரு புதிய மருந்தை உருவாக்கியுள்ளனர், இது பக்கவாதம் காரணமாக ஏற்படும் மூளை சேதத்தை கணிசமாகக் குறைக்கலாம்.…

Read More

மும்பை: மகாராஷ்டிராவின் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக முன்னாள் பெண் எம்.பி. பிரக்யா தாக்குர் உட்பட 7 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம், மாலேகான் பகுதியில் உள்ள மசூதியில் கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி குண்டு வெடித்து 6 பேர் உயிரிழந்தனர். 101 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு குறித்து மகாராஷ்டிர தீவிரவாத தடுப்பு (ஏடிஎஸ்) பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். பைக்கில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டுவெடித்து சிதறியது தெரியவந்தது. அந்த பைக்கின் பதிவெண் போலி என்றும் தெரிந்தது. அதன் இன்ஜின் எண், சேசிஸ் எண் ஆகியவை அழிக்கப்பட்டிருந்தன. பின்னர், தடயவியல் சோதனை மூலம் இன்ஜின் எண், சேசிஸ் எண் கண்டுபிடிக்கப்பட்டது. அது, பெண் துறவி பிரக்யா சிங் தாக்குருக்கு சொந்தமான பைக் என்று தெரியவந்தது. 2008 அக்டோபர் 23-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டு, வழக்கின் முதல் எதிரியாக சேர்க்கப்பட்டார். பிறகு, இந்த…

Read More

‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முழக்கத்துடன் திமுக-வினர், வீடு வீடாகச் சென்று மக்களிடம் 6 கேள்விகளைக் கேட்டு வருகின்றனர். இவை பெரும்பாலும் ஆம் என்று பதிலளிக்கும் விதத்திலேயே இருக்கின்றன. இவற்றுக்கு பதில்களைப் பெற்று விருப்பமுள்ளவர்களை கட்சியில் சேர்த்து வருகிறது திமுக. இரண்டு கோடி பேரை கட்சியில் சேர்க்கும் திட்டத்துடன் இதைச் செயல்படுத்தி வரும் திமுக-வினர், வீடுகளில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற ஸ்டிக்கரையும் மறக்காமல் ஒட்டி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக-வினரும், ‘உருட்டுகளும், திருட்டுகளும், துரோக மாடல் உருட்டுகள்’ என்ற தலைப்பில் 10 கேள்விகளை தயார் செய்துள்ளனர். இவை பெரும்பாலும் இல்லை என்று பதில் சொல்லும் விதமாகவே உள்ளன. இவர்களும் வீடு வீடாகச் சென்று இந்தக் கேள்விகளுக்கு பொதுமக்களிடம் பதில்களைக் கேட்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, அரசின் சார்பில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு…

Read More