தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் 16-ம் தேதி நடை திறக்கப்படுவதையொட்டி தரிசனத்துக்காக பக்தர்கள் ஆன்லைனில் மும்முரமாக முன்பதிவு செய்து வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைபுத்தரி பூஜைக்காக கடந்த 29-ம் தேதி நடை திறக்கப்பட்டது. பின்பு 30-ம் தேதி ஒரு நாள் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் புதிய நெற்கதிர்கள் ஆபரணப்பெட்டியில் வைத்து தலைச்சுமையாக சபரிமலைக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்பு அவை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டு நடை சாத்தப்பட்டது. இந்நிலையில் மாதாந்திர பூஜைக்காக வரும் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டு 21-ம் தேதி வரை தொடர் வழிபாடு நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவுகள் சில தினங்களுக்கு முன்பு தொடங்கின. மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் நெரிசல் அதிகம் இருக்கும் என்பதால் பலரும் மாதாந்திர வழிபாடுகளில் பங்கேற்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தற்போது முன்பதிவுகள் மும்முரமாக நடக்கிறது.
Author: admin
விசிக உள்ளிட்ட சில கட்சிகள் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளரை நியமித்து கட்சியை வளர்க்கலாமா என பேசிக்கொண்டிருக்கும் நிலையில், அதிமுக-வில் மாநில பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் சிலரே மாவட்டச் செயலாளர் பதவிகளையும் உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டு தொங்குவதால் கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக அதிமுக-வினர் புலம்புகிறார்கள். அதுவும் திண்டுக்கல் மாவட்டத்தில் இந்தப் புலம்பல் சற்று சத்தமாகவே கேட்கிறது. அதிமுக துணைப் பொதுச்செயலாளரான நத்தம் இரா.விசுவநாதன் திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார். அதேபோல் திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளரான திண்டுக்கல் சி.சீனிவாசன் மாநில பொருளாளராக இருக்கிறார். முன்னாள் அமைச்சர்களான இவர்கள் இருவரும் இப்போது எம்எல்ஏ-க்களாகவும் இருக்கிறார்கள். இத்தனை பொறுப்புகளை வைத்திருக்கும் இவர்கள் இருவரும், மாவட்ட அரசியலில் அவ்வளவாய் கவனம் செலுத்துவதில்லை என்கிறார்கள். மாவட்ட அளவிலான கட்சிக் கூட்டங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் மட்டுமே தலைகாட்டிவிட்டுப் போகும் இவர்களால் திண்டுக்கல் மாவட்ட அதிமுக மந்த நிலைக்குப் போய்விட்டதாக மற்ற நிர்வாகிகள் குறைபட்டுக் கொள்கிறார்கள்.…
ஆரோக்கியமான எலும்புகளுக்கு கால்சியத்திற்கு அப்பால் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் தேவை. அதிக உப்பு நுகர்வு உடலை கால்சியத்தை வெளியிட தூண்டுகிறது, இதனால் எலும்புகளை பலவீனப்படுத்துகிறது. போதுமான பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்ட சரியான உணவின் பற்றாக்குறை, போதிய கால்சியம் நிறைந்த உணவு நுகர்வு மற்றும் முற்போக்கான எலும்பு அடர்த்தி இழப்புக்கு வழிவகுக்கிறது. எலும்புகளுக்கு மெக்னீசியம், வைட்டமின் கே மற்றும் வலிமை பராமரிப்புக்காக புரதம் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன, இருப்பினும் மக்கள் இந்த கூறுகளை அடிக்கடி புறக்கணிக்கிறார்கள்.வலுவான எலும்புகளுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகளின் சீரான உட்கொள்ளலை பால் பொருட்கள், வலுவூட்டப்பட்ட தாவர பால் மற்றும் மெலிந்த புரதங்கள், கொட்டைகள் மற்றும் விதைகளுடன் இணைக்கும் உணவு தேவைப்படுகிறது. அதிக உப்பு உள்ளடக்கம் கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.ஆதாரங்கள்:கரெல் கிளினிக், “7 பழக்கவழக்கங்கள் ‘எலும்புக்கு மோசமானவை’,” 2025எஃப்.எம்.சி பஹாமாஸ், “உங்கள் எலும்புகளை பலவீனப்படுத்தக்கூடிய அன்றாட பழக்கம்,” 2025நியூட்ராபே இதழ், “எலும்பு ஆரோக்கியத்தை சேதப்படுத்தும்…
சென்னை: பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் பல் மருத்துவர்களை கடலூர், புதுக்கோட்டை பல் மருத்துவ கல்லூரிகளுக்கு பணியிட மாற்றம் செய்வதை அரசு கைவிட வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் சென்னை, கடலூர், புதுக்கோட்டையில் அரசு பல் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில், கடலூர், புதுக்கோட்டை கல்லூரிகளில் போதிய பல் மருத்துவர்கள் இல்லாததால், அந்த பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். இல்லாவிட்டால், அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று இந்திய பல் மருத்துவ கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதையடுத்து, மருத்துவ கல்வி ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ), மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககம் (டிஎம்எஸ்) கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் 27 பல் மருத்துவர்கள் அந்த கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அரசு மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பல் மருத்துவர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படவில்லை. அரசு…
சென்னை: பேருந்து இயக்கத்தின்போது ஓட்டுநர்களை கண்காணிக்கும் ஏஐ தொழில்நுட்பத்தை அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை, நந்தம்பாக்கத்தில் பயணிகள் வாகன கண்காட்சி நடைபெற்றது. இதில் அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜான் மோசஸ், கபில் ப்ரீத்தம், ஹரிஷ், கிஷோர் ஆகியோர் தங்களது கண்டுபிடிப்பான பேருந்து இயக்கத்தின்போது ஓட்டுநர்களை கண்காணிக்கும் ஏஐ தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்தியிருந்தனர். அழுத்தம் மூலம் உணரும்: இது தொடர்பாக குழுவைச் சேர்ந்த மூன்றாமாண்டு கணினி பொறியியல் அறிவியல் மாணவர் ஜான் மோசஸ் கூறியதாவது: எங்களது ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது, பேருந்து இயக்கத்தில் ஓட்டுநருக்கு லேசான மயக்கம் போன்றவை ஏற்பட்டால் தானாகவே வேகத்தை குறைத்து, சாலையோரத்தில் பேருந்து நிறுத்தப்படும். உடனடியாக பேருந்து உரிமையாளருக்கும் தகவல் தெரிவிக்கப்படும். ஓட்டுநருக்கு ஏற்படும் உடல் நலப் பிரச்சினையை அவர் பேருந்து உபகரணங்கள் மீது செலுத்தும் அழுத்தத்தின் அளவை வைத்து உணரும் வகையில் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், பிரேக் எப்போது…
ஆண்டிபட்டியில் திமுக எம்பி.- எம்எல்ஏ. பொது மேடையிலேயே பகிரங்கமாக சண்டையிட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, எம்பி.க்கு ஆதரவாக நகர் முழுவதும் பல இடங்களில் நேற்று கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சக்கம்பட்டியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத் தொடக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. நிகழ்ச்சிக்கான வரவேற்பு பேனரில் எம்பி. தங்க தமிழ்ச்செல்வன் படம் இல்லாமல் இருந்தது. இதைப் பார்த்த பின்னர் மேடைக்கு வந்த எம்.பி., இதுகுறித்து அதிகாரிகளிடமும், எம்எல்ஏ. மகாராஜனிடமும் கோபத்தை வெளிப்படுத்தினார். அரசு விழாவின் விதிப்படி எம்பி.யின் படம் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று காரசாரமாக பேசினார். இதனால் கோபத்தில் இருந்த எம்எல்ஏ. மகாராஜன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளைத் தானே வழங்கினார். ஒரு கட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வன் நிவாரணத் தொகை ஆணையை வழங்க முயன்றபோது, அவரிடம் இருந்து மகாராஜன் பறித்து பயனாளிகளுக்கு வழங்கினார். இதையடுத்து, இருவருக்கும் மேடையிலேயே வாக்குவாதம் ஏற்பட்டது.…
ஒரு சூடான மழைக்குப் பிறகு 24 வயதான ஜிம்-கோரின் அபாயகரமான சரிவு, வொர்க்அவுட்டுக்கு பிந்தைய மீட்பைப் புறக்கணிப்பதன் ஆபத்துக்களை எடுத்துக்காட்டுகிறது. தீவிரமான உடற்பயிற்சி நீரிழப்புக்கு வழிவகுக்கிறது, மேலும் அடுத்தடுத்த சூடான மழை இரத்த அழுத்தத்தில் கூர்மையான வீழ்ச்சியை ஏற்படுத்தும், இது மயக்கத்திற்கு வழிவகுக்கும். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க உடற்பயிற்சிகளுக்குப் பிறகு உடனடியாக மறுசீரமைப்பு, ஓய்வெடுப்பது மற்றும் சூடான மழையைத் தவிர்ப்பது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஒரு கடுமையான பயிற்சிக்குப் பிறகு பொழிவது பேச்சுவார்த்தைக்குட்பட்டது அல்ல. ஆனால் நீங்கள் ஒரு சூடான அல்லது குளிர் மழை எடுத்துக்கொள்கிறீர்களா? சரி, நீங்கள் குளிக்கும் நீரின் வெப்பநிலை உண்மையில் முக்கியமானது. ஏனென்றால், தவறான ஒருவர் உங்களை ஒரு தீவிர சிகிச்சை பிரிவில் தரையிறக்கக்கூடும், மேலும் ஆபத்தானது. ஆம், தவறான வெப்பநிலை உங்களைக் கொல்லக்கூடும். பொது மருத்துவரும் மருத்துவக் கல்வியாளருமான டாக்டர் அதிதிஜ் தமிஜா சமீபத்தில் 24 வயதான ஒரு நபரின் ஒரு குளிர்ச்சியான வழக்கைப் பகிர்ந்துள்ளார்,…
சென்னை மதுரவாயலில் இருந்து பெங்களூர் வரை தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த 5 ஆண்டு களுக்கும் மேலாக மந்தகதியில் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மாம்பாக்கம் பகுதியில், இரு வேறு இடங்களில் தற்போது, பாலம் கட்டுவதற்கு, சாலையை ஒட்டி 15 அடி நீளத்துக்கும், 10 அடி ஆழத்திலும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. சாலையை ஒட்டி பணிகள் நடந்து வரும் நிலையில் பள்ளத்தை சுற்றி, இரும்பு தடுப்புகள் அமைக்கப்படாமலும், எச்சரிக்கை பலகை இல்லாமலும் பாதுகாப்பற்ற முறையில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலம் கட்டும் பணிகள் காரணமாக சாலையும் குறுகலாக உள்ளதால், கனரக வாகனங்களை முந்தி செல்ல முயன்று, இருசக்கர வாகனங்கள்,அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. இதில் வாகன ஓட்டிகள் தவறி விழுந்தால் அசம்பாவிதம் நிகழும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே பள்ளத்தை சுற்றி, இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.…
சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கி வரும் மெரினா கடற்கரைக்கு வாரநாட்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். அதுவே வார இறுதி நாட்கள், விடுமுறை தினங்களில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் பேர் வருகை தருகின்றனர். குடும்பத்துடன் சிறுவர்கள் விளையாடி மகிழ விளையாட்டுகள், முதியோர் நடைபயிற்சி செய்ய நீண்ட நடைபாதை, இளைஞர்கள் நண்பர்களுடன் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டு பேசி மகிழ உணவகங்கள் என அனைத்து தரப்பினரையும் கவர்வதால் மெரினாவுக்கு வர, சிறுவர்கள் முதல் முதியோர் வரை விரும்புகின்றனர். இதனால் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெரினாவில் மாலை முதல் இரவு வரை கூட்டம் அலைமோதி வருகிறது. காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை மெரினாவுக்குள் நுழையும் கடற்கரை சாலையில் இருசக்கர வாகனங்களும், கார்களும் நிரம்பி வழிகின்றன. பொதுமக்கள் நடந்து செல்லவே முடியாத படி வாகன நெருக்கடி இருந்து வருகிறது. மெரினா நீச்சல் குளம் முதல்…
புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடைபயிற்சி மேற்கொண்ட தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் இருந்து, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் தங்க நகையை பறித்துச் சென்றார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருவதால், மயிலாடுதுறை மக்களவை தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. சுதா ராமகிருஷ்ணன், டெல்லி சாணக்யபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ளார். இந்நிலையில், சாணக்யபுரியின் சாந்திபாத் பகுதியில் அவரும், திமுக மாநிலங்களவை எம்.பி. சல்மாவும் நேற்று காலை 6.15 மணி அளவில் நடைபயிற்சி மேற்கொண்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் சுதாவின் கழுத்தில் இருந்த தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பினார். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சுதா புகார் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: டெல்லி சாணக்யபுரியில் போலந்து தூதரகம் அருகே காலையில் நடைபயிற்சி மேற்கொண்டபோது, ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் எனது கழுத்தில் இருந்த தங்க…
