Author: admin

சென்னை: ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ மற்​றும் ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ ஆகிய திட்​டங்​களை தற்​போதுள்ள பெயர்​களி​லேயே தொடர்ந்து நடத்த அனு​மதி கோரி தமிழக அரசு தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள மனு மீதான விசா​ரணையை உயர் நீதிமன்றம் ஆக.7-க்கு தள்ளி வைத்​துள்​ளது. தமிழக அரசின் திட்​டங்​களான ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ மற்​றும் ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ ஆகிய திட்​டங்​களில் முதல்​வர் ஸ்டாலின் பெயரையோ அல்​லது உயிருடன் வாழும் அரசி​யல் தலை​வர்​களின் பெயர்​களையோ பயன்​படுத்​தக் கூடாது என தடைகோரி அதி​முக எம்​.பி.​யான சி.​வி.சண்​முகம் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்திருந்​தார். இந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், அரசின் திட்​டங்​களில் உயிருடன் வாழும் அரசி​யல் தலை​வர்​களின் பெயர்​களை பயன்​படுத்​தக்​கூ​டாது என்​றும், அதே​போல அரசின் திட்​டங்​கள் தொடர்​பான விளம்​பரங்​களில் கட்​சி​யின் கொடி, சின்​னம் போன்றவற்​றுடன் கொள்​கை, சித்​தாந்த தலை​வர்​களின் படங்​கள், பெயர்​களை பயன்​படுத்​தக்​கூ​டாது என்​றும் இடைக்​கால உத்தரவு பிறப்​பித்​திருந்​தது. இந்த உத்​தரவை மாற்​றியமைக்​கக் கோரி தமிழக பொதுத்​துறை செயலர்…

Read More

புரதங்கள் மிக முக்கியமானவை, ஆனால் சில ஆதாரங்கள் மற்றவர்களை விட சிறந்தவை என்று டாக்டர் ச ura ரப் சேத்தி கூறுகிறார். பண்ணை வளர்க்கப்பட்ட திலபியா மற்றும் டெலி இறைச்சிகள் அவற்றின் மோசமான ஊட்டச்சத்து உள்ளடக்கம் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாதுகாப்புகள் காரணமாக குறைவாக உள்ளன. காட்டு பிடிபட்ட சால்மன், மத்தி மற்றும் கானாங்கெளுத்தி அவற்றின் ஒமேகா -3 கள் மற்றும் குடல் நட்பு பண்புகளுக்கான பட்டியலில் முதலிடம் வகிக்கின்றன. உங்கள் உடலுக்கு புரதம் தேவை. பல்வேறு திசுக்கள் மற்றும் உடல் செயல்பாடுகளை உருவாக்குவதற்கும், சரிசெய்வதற்கும், பராமரிப்பதற்கும் இந்த மக்ரோனூட்ரியண்ட் அவசியம். குழந்தைகள், பதின்வயதினர் மற்றும் கர்ப்பிணிப் பெண்களில், வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு புரதம் முக்கியமானது. நினைவில் கொள்ளுங்கள், புரதங்கள் வாழ்க்கையின் கட்டுமானத் தொகுதிகள். ஆனால் நீங்கள் உண்ணும் புரதங்கள் உண்மையில் உங்கள் உடலுக்கு எரிபொருளாக இருக்கிறதா? ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்டு-பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணர் மற்றும் கல்லீரல் நிபுணர்…

Read More

சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியின் யு-19 பிரிவில் மணப்பாக்கம் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி வெற்றி பெற்றது. சென்னையை அடுத்த கவரைப்பேட்டை ஆர்.எம்.கே பாடசாலா பள்ளியில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி நேற்று தொடங்கியது. 3 நாட்​கள் நடை​பெறும் இந்த போட்​டியை ஆர்​.எம்​.கே. கல்விக் குழு​மத்​தின் தலை​வர் ஆர்​.எஸ். முனிரத்​தினம் தொடங்கி வைத்​தார். துணைத் தலை​வர் கிஷோர், இயக்​குனர் ஜோதி நாயுடு, செய​லா​ளர் எலமஞ்சி பிரதீப், பாட​சாலா பள்​ளி​யின் முதல்​வர் சந்​திரிகா பிர​சாத் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர். இந்த தொடரில் 200 பள்​ளி​களை சேர்ந்த 5 ஆயிரம் மாணவ, மாணவி​கள் கலந்து கொண்​டுள்​ளனர். தொடக்க நாளில் யு-19 பிரிவில் நடை​பெற்ற ஆட்​டங்​களில் மணப்​பாக்​கம் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி 17-7 என்ற கணக்கில் நாராயணா இ-டெக்னோ பள்​ளியை​யும், முகப்​பேர் டிஏவி 28-16 என்ற கணக்​கில் ஸியோன் பள்​ளியை​யும் தோற்​கடித்​தன. யு-17 பிரி​வில் நடை​பெற்ற ஆட்​டங்​களில் சச்​சி​தானந்த ஜோதி…

Read More

புதுடெல்லி: ஓடிபி எண்​ணைப் பயன்​படுத்தி ஓரணி​யில் தமிழ்​நாடு உறுப்​பினர் சேர்க்​கைக்கு உயர் நீதி​மன்ற மதுரை கிளை விதித்த தடையை நீக்​கக்​கோரி திமுக தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்ட மேல்​முறை​யீட்டு மனுவை உச்ச நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்துள்​ளது. தமிழகம் முழு​வதும் திமுக​வினர் நடத்​தும் ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ என்ற உறுப்​பினர் சேர்க்கை முகாமின்​போது பொதுமக்களிடமிருந்து ஆதார் உள்​ளிட்ட விவரங்​கள் மூல​மாக ‘ஓடிபி’ எண்​ணைப் பெறக்​கூ​டாது என உயர் நீதி​மன்ற மதுரை கிளை இடைக்​காலத்​தடை விதித்து உத்​தர​விட்​டிருந்​தது. இதை எதிர்த்து திமுக வழக்​கறிஞர் அனு​ராதா அற்​புதம் உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மேல்​முறை​யீட்டு மனு: ஓரணியில் தமிழ்​நாடு உறுப்​பினர் சேர்க்கை முகாமின்​போது உண்​மைத்​தன்​மையை உறுதி செய்​யவே ஓடிபி பெறப்​படு்கிறது. பிர​தான எதிர்க்​கட்​சி​யான அதி​முக நடை​பெறவுள்ள சட்​டப்​பேர​வைத் தேர்​தலை மனதில் கொண்டு பொது​மக்​களுக்கு திமுக தொல்லை அளித்து வரு​வ​தாகக்​கூறி இது​போன்ற தடைகளை ஏற்​படுத்தி வரு​கிறது. திமுக​வில் சேர விருப்​பம் தெரிவிக்​கும் நபர்​களிடம் மட்​டுமே ஓடிபி எண் பெறப்​பட்டு விவரங்​கள்…

Read More

புதுடெல்லி: அமெரிக்​கா​வின் அழுத்​தத்தை மீறி ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெயை இந்​தியா தொடர்ந்து வாங்கி வரு​கிறது. 4 சரக்கு கப்​பல்​களில் ரஷ்ய கச்சா எண்​ணெய் குஜ​ராத் வந்​திருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. ரஷ்​யா, உக்​ரைன் இடையே மூன்​றரை ஆண்​டு​களுக்​கும் மேலாக போர் நீடித்து வரு​கிறது. இந்த போர் காரண​மாக ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய், இயற்கை எரி​வா​யுவை இறக்​குமதி செய்​வதை ஐரோப்​பிய நாடு​கள் முழு​மை​யாக நிறுத்​தி​விட்​டன. இதைத் தொடர்ந்து ரஷ்​யா​விடம் இருந்து மிகக் குறைந்த விலை​யில் கச்சா எண்​ணெயை இந்​தியா இறக்​குமதி செய்து வரு​கிறது. தற்​போது இந்​தி​யா​வின் கச்சா எண்​ணெய் தேவை​யில் 40 சதவீதத்தை ரஷ்யா பூர்த்தி செய்து வரு​கிறது. இந்த சூழலில் ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெயை இறக்​குமதி செய்​தால் இந்​தி​யா​வுக்கு அபராதம் விதிக்​கப்​படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்​மை​யில் எச்​சரிக்கை விடுத்​தார். இந்த சூழலில் அமெரிக்​கா​வின் அழுத்​தத்தை மீறி ரஷ்​யா​வில் இருந்து 4 சரக்கு கப்​பல்​களில்…

Read More

மஞ்சள் ஒரு மேஜிக் புல்லட் அல்ல, இது ஒரு ஆதரவு கருவி. குர்குமின் வீக்கத்தைக் குறைப்பது, கூட்டு விறைப்பை எளிதாக்குவது, செரிமானம் அல்லது கொழுப்பை ஆதரித்தல் ஆகியவற்றைக் குறைப்பது அர்த்தமுள்ள நன்மைகளைக் கொண்டுவரக்கூடும், ஆனால் உங்களுக்கு சரியான டோஸ், உருவாக்கம் மற்றும் தயாரிப்பு தேவை. குறைவாகத் தொடங்குங்கள். அதை உணவுடன் இணைக்கவும். இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள். பக்க விளைவுகளைப் பாருங்கள். மற்றும் புத்திசாலித்தனமாக வாங்கவும். சிந்தனையுடன் பயன்படுத்தும்போது, மஞ்சள் கூடுதல் ஒரு பயனுள்ள கூடுதலாக இருக்கும். ஆனால் கவனக்குறைவாகப் பயன்படுத்தும்போது, “மேலும் சிறந்தது” என்று கருதி, அது கனமாக இருக்கும். உங்கள் உடலை அறிந்து கொள்ளுங்கள், மெதுவாக நகர்த்தவும், நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதைக் கேட்க உங்களுக்கு இடமளிக்கவும்.

Read More

புதுடெல்லி: பிஹாரில் மேற்​கொள்​ளப்​பட்டு வரும் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் (எஸ்​ஐஆர்) குறித்து விவா​திக்க கோரி எதிர்க்​கட்​சிகள் தொடர்ச்​சி​யாக முழக்​கம் எழுப்​பியதையடுத்து நேற்று மக்​களவை நாள் முழு​வதும் ஒத்​திவைக்​கப்​பட்​டது. விரை​வில் சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெறவுள்ள பிஹார் மாநிலத்​தில் தேர்​தல் ஆணை​யம் வாக்​காளர் பட்​டியல் சரி​பார்ப்பு பணி​களை தீவிரப்​படுத்​தி​யுள்​ளது. அந்த மாநிலத்​திலிருந்து இடம்​பெயர்ந்து சென்​றவர்​களின் பெயர்​கள் மற்​றும் இறந்​தவர்​களின் பெயர்​களை நீக்​கும் பணி​யில் தேர்​தல் ஆணை​யம் ஈடு​பட்​டுள்​ளது. இது​வரை பல லட்​சம் பேர் வாக்​காளப் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. இதற்கு எதிர்க்​கட்​சிகள் கடும் எதிர்ப்பு தெரி​வித்து மக்​களவை செயல்​பாடு​களை தொடர்ந்து முடக்கி வரு​கின்றன . நேற்று மக்​களவை கூடியபோது பிஹார் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தம் குறித்து விவா​திக்க கோரி தொடர்ந்து எதிர்க்​கட்சிகள் கூச்​சல் குழப்​பத்​தில் ஈடு​பட்​டன. அப்​போது சபா​நாயகர் ஓம்​பிர்லா கூறுகை​யில், ‘‘கடந்த காலத்​தில் நான் செய்​தது போல் உங்கள் ஒவ்​வொரு​வருக்​கும் உங்​களது பிரச்​சினை​களை எழுப்ப…

Read More

கரூர்: கரூர் மாவட்​டம் கிருஷ்ண​ராயபுரம் வட்​டம் மேட்டு மகா​தானபுரம் மகாலட்​சுமி அம்​மன் கோயி​லில் ஆண்​டு​தோறும் ஆடிப் பெருக்​குக்கு மறு​நாள் 19-ம் தேதி​யன்​று, பக்​தர்​கள் தலை​யில் தேங்​காய் உடைக்​கும் நிகழ்ச்சி நடை​பெறு​வது வழக்​கம். இவ்​விழாவையொட்டி காவிரி ஆற்​றில் இருந்து நேற்று முன்​தினம் தீர்த்​தம் ஊர்​வல​மாகக் கொண்டு வரப்​பட்டு அம்​மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடை​பெற்​றது. தொடர்ந்​து, இரவு அம்​மன் காவிரி ஆற்​றில் தீர்த்​த​வாரிக்கு எழுந் தருளி​னார். நேற்று 500-க்​கும் மேற்பட்ட பக்​தர்​கள் முடி காணிக்கை செலுத்​தி​விட்டு வரிசை​யாக அமர்ந்​திருந்​தனர். அதைத்​தொடர்ந்து கோயில் பரம்​பரை பூசாரி பெரிய​சாமி, பாதக்​குரடு (ஆணி செருப்​பு) அணிந்​து, அம்பு போட்​ட​வுடன் (இரும்​புப் பட்டை கம்​பி​யால் அடித்​துக் கொள்​ளுதல்) அருள் பெற்​று, பக்​தர்​களின் தலை​யில் தேங்​காய் உடைத்​தார். இதில், சிலருக்கு தலை​யில் காயம் ஏற்​பட்டு ரத்​தம் கசிந்​தது. அவர்​களுக்கு கோயில் நிர்​வாகம் சார்​பில் தலை​யில் மஞ்​சள் வைக்கப்பட்​டது. சற்று அதிக காயமடைந்த பக்​தர்​களுக்கு அங்கு அமைக்​கப்​பட்​டிருந்த மருத்​துவ முகாமில் தலை​யில் தையல்…

Read More

சென்னை: தமிழக காவல் துறை​யின் தலைமை டிஜிபி​யான சங்​கர் ஜிவால் ஆக. 31-ம் தேதி​யுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்​து, புதிய டிஜிபி யார் என்ற எதிர்​பார்ப்பு எழுந்​துள்​ளது. சீனி​யாரிட்டி அடிப்​படை​யில் 1990-ல் தேர்​வாகி தற்​போது டிஜிபிக்களாக உள்ள தீயணைப்​புத் துறை இயக்​குநர் சீமா அகர்​வால், 1992-ல் தேர்​வான ஆவின் விஜிலன்ஸ் டிஜிபி ராஜீவ்​கு​மார், அதே ஆண்​டில் தேர்​வான காவல் உயர் பயிற்​சியக டிஜிபி சந்​தீப் ராய் ரத்​தோர் முறையே முதல் 3 இடங்​களில் உள்​ளனர். அடுத்தடுத்த இடங்​களில் டிஜிபிக்​களான அபய்​கு​மார் சிங், வன்​னியபெரு​மாள், மகேஷ்கு​மார் அகர்​வால், வெங்​கட்​ராமன், வினித்​தேவ் வான்​கடே உள்​ளனர். வழக்​க​மாக புதிய சட்​டம்- ஒழுங்கு டிஜிபி பணி​யிடம் காலி​யாக உள்ள 3 மாதங்​களுக்கு முன்​னரே தமிழக அரசு அடுத்த தகு​தி​யான 8 பேரின் பட்​டியலை மத்​திய அரசு பணி​யாளர் தேர்​வாணை​யத்​துக்கு அனுப்​பிவைக்​கும். அதில், எந்த குற்​றச்​சாட்​டு​களுக்​கும் உள்​ளா​காத சீனி​யாரிட்டி மற்​றும் தகு​தி​யின் அடிப்​படை​யில் முதல் 3 இடங்​களில்…

Read More

பெங்களூரு: அ​திக சம்​பளம் வாங்​கும் இந்​திய ஐடி துறை சிஇஓ-க்​களின் பட்​டியலில் ஹெச்​சிஎல் டெக் நிறு​வனத்​தின் சி.​விஜயகுமார் முதலிடம் பிடித்​துள்​ளார். கடந்த 2024-25 நிதி​யாண்​டில் விஜயகு​மாருக்கு ரூ.94.6 கோடி சம்​பளம் வழங்​கப்​பட்​டுள்​ளது. இதில், அடிப்​படை சம்​பளம் ரூ.15.8 கோடி, செயல்​திறன் சார்ந்த போனஸ் ரூ.13.9 கோடி உள்​ளிட்​ட​வை​யும் அடக்​கம். இவரையடுத்து இன்​போசிஸ் சிஇஓ சலில் பரேக்​கின் சம்​பளம் 22 சதவீதம் அதி​கரித்து ரூ.80.6 கோடி​யாக​வும், விப்​ரோ சிஇஓ நி​வாச பலியா ரூ.53.6 கோடி​யும் சம்​பள​மாக பெற்​றுள்​ளனர். டிசிஎஸ் சிஇஓ கே. கிருத்​தி​வாசன் ரூ.26.5 கோடியை கடந்த 2023-24-ல் சம்​பாத்​தி​ய​மாக பெற்​றுள்​ளார். ஹெச்​சிஎல் டெக் ஆண்டறிக்கை​யில் கூறி​யுள்​ளபடி, விஜயகு​மாருக்கு கடந்த நிதி​யாண்​டில் வழங்​கப்​பட்ட சம்​பளம் முந்​தைய நிதி​யாண்டை விட 7.9% அதி​கரித்​துள்​ளது. அதேசம​யம், நிர்​வாக பணி​யாளர்​களைத் தவிர இதர ஊழியர்​களுக்​கான சராசரி சம்பள உயர்வு 3.1% ஆக மட்​டுமே இருந்​தது. சிஇஓ விஜயகு​மாரின் சம்​பளம் ஊழியர்​களின் சராசரி ஊதி​யத்தை விட 662.5 மடங்கு…

Read More