சென்னை: பாலாற்றில் ஒரு தடுப்பணையாவது கட்டியதுண்டா என பாமக தலைவர் அன்புமணி பேசி இருந்ததற்கு பதிலளித்துள்ள அமைச்சர் துரைமுருகன், விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டு சரியான புள்ளிவிவரத்துடன் அன்புமணி பேச வேண்டும் என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பாமகவைச் சேர்ந்த அன்புமணி, தன் தந்தையான ராமதாஸை எதிர்த்து தமிழகத்தில் திக் விஜயம் செய்ய புறப்பட்டிருக்கிறார். வேலூருக்கு வந்து ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, என்மீது ஒரு சிறிய பாசமழையை பொழிந்துவிட்டு, அதே வேகத்தில் நான் அமைச்சராக இருந்து ஆற்றிய பணிகள் குறித்து விவரம் தெரியாமல் கொச்சைப்படுத்தி ஒரு குற்றச்சாட்டை என்மீது சுமத்தியிருக்கிறார். அதாவது, இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார். பாலாற்றில் ஒரு தடுப்பணையாவது கட்டியதுண்டா என்று முழக்கமிட்டிருக்கிறார். அன்புமணி அவர்கள் கொஞ்சம் விவரமானவர் என்று இதுநாள் வரை நினைத்திருந்தேன். ஆனால், வேலூரில் என் மீது அவர் சாட்டிய தவறான குற்றச்சாட்டிலிருந்து விவரம் தெரியாதவர் என்று நிரூபித்திருக்கிறார். மறைந்த கருணாநிதி பொதுப்பணித்துறை…
Author: admin
பெரும் பயணங்கள் சிறிய அடிவைப்புகளில் தான் தொடங்குகின்றன. இது ஒரு சீனப் பழமொழி. இந்த அடிவைப்பு நிலத்தில் மட்டுமல்ல நீரிலும் அமையலாம். டிரான்ஸ்வேர்ல்ட் (Transworld) நிறுவனத்தின் தொடக்கம் அப்படித்தான் அமைந்தது. 1999ஆம் ஆண்டு கடல்வழி சரக்குப் போக்கு வரத்திற்காக, சிங்கப்பூரின் ஆன்சன் வீதியில் நான்கு ஊழியர்களுடன் தொடங்கப்பட்ட நிறுவனம், இன்று 11 நாடுகளில் பரந்திருக்கிறது. ஊழியர்கள்: 2000 பேர். மதிப்பு 400 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.3,500 கோடி). மகேஷ் சிவசாமிக்கு இந்த நிறுவனத்தைத் தொடங்கியபோதே இதன் வளர்ச்சியைக் குறித்த தொலை நோக்கு இருந்திருக்கும். அவரது தந்தை ஆர்.சிவசாமி எழுபதுகளில் கடல்வழி சரக்குப் போக்குவரத்து நிறுவனத்தை மும்பையில் தொடங்கினார். 1977இல் அதன் தலைமையகத்தை துபாய்க்கு மாற்றினார். வணிகம் வளர்ந்தது. 1989இல் அவர் எதிர்பாராத விதமாக இறந்து போனார். தனயன் ராமகிருஷ்ணன் சிவசாமி பொறுப்பேற்றார். வணிகம் மேலும் வளர்ந்தது. பத்தாண்டுகளுக்குப் பிறகு தம்பி மகேஷ் சிவசாமிக்குச் சிறகு முளைத்தது. அவர் மத்திய கிழக்கிலிருந்து…
புதுடெல்லி: ரயில் பாதைகளை கடக்க முயன்ற போது அடிபட்டு 186 யானைகள் உயிரிழந்துள்ளன என்று மத்திய வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வனப்பகுதிகள் வழியாகவும், வனப்பகுதிகளையொட்டி உள்ள பகுதிகளிலும் ரயில்வே தண்டவாளங்கள் செல்கின்றன. வனப்பகுதியிலிருந்து வெளியே வரும் யானைகள் இந்த ரயில் பாதைகளை கடக்கும்போது ரயிலில் அடிபட்டு இறக்கின்றன. இதைத் தடுப்பது தொடர்பான ஆய்வை மத்திய வனத்துறை அமைச்சகம் முன்னெடுத்தது. இதுதொடர்பான ஆய்வுகள் முடிந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நமது நாட்டில் 2009-10-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை ரயில்பாதைகளை கடக்க முயன்ற 186 யானைகள் அடிபட்டு இறந்துள்ளன. இதையடுத்து யானை வழித்தடங்களைக் கண்டறிந்து அந்தப் பகுதிகளில் பாலம், அல்லது யானைகள் அடிபடாதவாறு செல்வதற்கான வனத்தைப் போன்ற அமைப்பு போன்றவற்றை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 14 மாநிலங்களில் செல்லும் 127 ரயில்பாதைகளில் சுமார் 3,452 கிலோமீட்டர் தூரத்துக்கு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மத்திய சுற்றுச்சூழல், ரயில்வே அமைச்சகங்களும், மாநில…
நடிகர் அஜித்குமார், சினிமாவில் அடியெடுத்து வைத்து 33 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்கள் நிறைவு செய்கிறேன். ஆனால், இதைக் கொண்டாடுவதற்காக எழுதவில்லை. எனக்கு எண்களின் மீது நம்பிக்கை இல்லை. சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எனக்கு முக்கியமானதுதான். இந்தப் பயணத்துக்காக முழுமனதுடன் கைகூப்பி நன்றி தெரிவிக்கிறேன். இந்தப் பயணம் எனக்கு எளிதாக இல்லை. இந்தத் துறைக்கு எந்தப் பின்புலமோ அல்லது யாருடைய சிபாரிசோ இல்லாமல்தான் நுழைந்தேன். என் சுய முயற்சியால் மட்டுமே நுழைந்தேன். காயங்கள், மீண்டு வருதல், தோல்வி மற்றும் அமைதி என வாழ்க்கை என்னை பல வழிகளில் சோதித்தது. நான் தளர்ந்து போகவில்லை. முயற்சி செய்தேன். மீண்டு வந்தேன், தொடர்ந்து முன்னேறுகிறேன். ஏனெனில், விடாமுயற்சி என்பதை வெறுமனே நான் கற்றுக் கொள்ளவில்லை. அதைப் பரிசோதித்து அவ்வண்ணமே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். எண்ணில்…
சென்னை: ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரனின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன் (81) உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் நேற்று காலமானார். அவரது மறைவையொட்டி தலைவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்திகளில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனருமான சிபு சோரன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். சுரண்டலுக்கு எதிரான இடைவிடாத எதிர்ப்பு மற்றும் சமூக நீதிக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் அவரது வாழ்க்கை வரையறுக்கப்பட்டது. பழங்குடியின மக்களின் பல்லாண்டுகால உரிமை கோரலான புதிய மாநிலத்தை தோற்றுவித்த அரசியல் சக்தி. அவரை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். பாமக தலைவர் அன்புமணி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் தன்னிகரற்ற தலைவர்களில் ஒருவரான சிபு சோரன், தனது 18 வயதில் பொது வாழ்க்கைக்கு வந்து…
சூப்பர் சென்டெனாரியன்களுக்கு பெயர் பெற்ற ஜப்பான், ஒரு புதிய நீண்ட ஆயுள் ஐகானைக் கண்டுபிடித்தது. 114 வயதில், ஷிகேகோ ககாவா தனது முன்னோடி மியோகோ ஹிரோயாசு சமீபத்தில் காலமான பிறகு ஜப்பானின் மூத்த உயிரின நபர்களாக மாறுவதற்கான வேறுபாட்டைப் பெற்றுள்ளார். எனவே, ஷிகேகோ ககாவாவின் நீண்ட ஆயுளுக்கு என்ன ரகசியம்? நாங்கள் கண்டுபிடிக்கிறோம் …ஆரம்பகால வாழ்க்கை: தாழ்மையான தொடக்கங்கள்ஷிகெகோ ககாவா 28 மே 1911 அன்று, ஜப்பான் ஆழ்ந்த மாற்றங்களை சந்தித்த காலகட்டத்தில் பிறந்தார். ஒசாகா மகளிர் மருத்துவக் கல்லூரியில் (இப்போது கன்சாய் மருத்துவ பல்கலைக்கழகம்) தனது படிப்பை முடித்த பின்னர், பெண்கள் மருத்துவர்கள் பற்றாக்குறையாக இருந்த ஒரு சகாப்தத்தின் போது மருத்துவ பயிற்சியைத் தொடர்ந்தார். அவரது வாழ்க்கை அனுபவம் சவால்கள் மற்றும் நம்பிக்கை இரண்டையும் இணைத்தது, இது அவரது சமூகத்திற்கு சேவை செய்வதற்கும் மற்றவர்களுக்கு சுகாதாரத்தை வழங்குவதற்கும் அவரது அர்ப்பணிப்புடன் வளர்ந்தது.மருத்துவராக தொழில்திருமதி ககாவா தனது இருபதுகளின் போது, இரண்டாம்…
அமராவதி: ‘ஸ்ரீ சக்தி’ எனும் பெயரில் வரும் 15-ம் தேதி முதல் ஆந்திர மாநில அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டம் அமலாகவுள்ளது. ஆந்திர மாநிலம் அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் நேற்று மாநில போக்குவரத்து துறை அமைச்சர் எம். ராம் பிரசாத் ரெட்டி தலைமையில் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வரும் 15-ம் தேதி முதல் அமல்படுத்தப்போகும் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன் பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் எம். ராம் பிரசாத் ரெட்டி கூறியதாவது: சுதந்திர தினமான வரும் 15-ம் தேதி முதல், தேர்தலில் கொடுத்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் அமல் படுத்தப்பட உள்ளது. இதற்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு ‘ஸ்ரீ சக்தி’ என பெயரிட்டுள்ளார். இந்த ஸ்ரீ சக்தி திட்டத்துக்காக 6,700 அரசு பேருந்துகள் உபயோகப்படுத்தப்பட உள்ளன. இத்திட்டத்தை நமது மாநிலத்தில்…
நடிகர் தனுஷ், ‘ராஞ்ஜனா’ என்ற படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். 2013-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கி இருந்தார். சோனம் கபூர் நாயகியாக நடித்திருந்தார். இது தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. இந்நிலையில், 12 வருடங்களுக்குப் பிறகு ஆக.1-ம் தேதி தமிழில் ரீ ரிலீஸ் ஆனது. படத்தில் தனுஷ் கதாபாத்திரம் இறப்பது போல காட்டப்பட்டிருக்கும். ஆனால், ரீ-ரிலீஸில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் தனுஷ் உயிரோடு வருவது போல மாற்றப்பட்டுள்ளது. இதற்குப் படத்தின் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தனுஷும் கண்டனம் தெரிவித்துள்ளார். “ஏஐ உதவியால் ‘ராஞ்ஜனா’வின் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டிருப்பது என்னைத் தொந்தரவு செய்ததுடன் படத்தின் ஆன்மாவைச் சிதைத்துவிட்டது. என் எதிர்ப்பையும் மீறி, சம்பந்தப்பட்டவர்கள் இந்த மாற்றத்தைச் செய்துள்ளனர். இது 12 ஆண்டுகளுக்கு முன் நான் நடித்த படம் இல்லை. திரைப்பட உள்ளடக்கங்களை, ஏஐ தொழில்நுட்பம் மூலம் மாற்றுவது கலை…
சென்னை: சொத்துப்பதிவின் போது, ரூ.20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகை ரொக்கமாக பரிமாறப்பட்ட விவரம் தெரிவிக்கப்பட்டிருந்தால் அதுகுறித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சார் பதிவாளர்களுக்கு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி பதிவுத்துறை மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு நிதிதொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சொத்து பரிமாற்றத்தின்போது, ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமான ரொக்கப் பரிவர்த்தனை நடைபெற்றிருந்தால், அதுகுறித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவறுத்தப்பட்டது. இதுகுறித்து, அப்போதே, அனைத்து சார் பதிவாளர் அலுவலகத்துக்கும் பதிவுத்துறை தலைவர் அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற வழக்கு ஒன்றில் வழங்கிய தீர்ப்பில், ரொக்கப் பரிமாற்றம் குறித்த தகவல் பெரும்பாலும் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படாமல் இருப்பது கவனத்துக்கு வந்துள்ளது. எனவே, சொத்து விற்பனையில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் மேல் ரொக்கப் பரிமாற்றம் நடைபெற்றிருந்தால், சம்பந்தப்பட்ட பகுதி வருமானவரித் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வருமான வரித்துறையும்…
மகத்தான சக்தியால் பதிக்கப்பட்ட சக்தி பீத்தாஸ், இந்து மதத்தில் தெய்வம் வழிபாட்டின் புனித தளங்கள். தக்ஷா-யஜ்னாவில் தன்னை அசைத்தபின், சதி தெய்வத்தின் உடல் பாகங்கள் விழுந்த இடங்கள் என்று சக்தி பீத்தாக்கள் நம்பப்படுகின்றன. சிவன், தனது வருத்தத்தில், விஷ்ணு அவரைத் தடுத்து நிறுத்தி, உடலை 51 துண்டுகளாக பிளவுபடுத்தும் வரை தனது சடலத்தை ஒரு அண்ட தாண்டவ நடனத்தில் சுமந்தார். ஒவ்வொரு உடல் பகுதியும் இந்தியா முழுவதிலும் உள்ள வெவ்வேறு பகுதிகளில் இறங்கி புனிதமான ஆலயங்களாக மாறியது, அங்கு தெய்வத்தின் ஆற்றலும் சக்தி இன்றும் எதிரொலிக்கின்றன.மொத்தம் 51 சக்தி பீத்தாக்கள் உள்ளன, அவற்றில், சிலர் குறைவாகவே அறியப்பட்டிருக்கிறார்கள், ஆனால் மற்றவர்களைப் போலவே குறிப்பிடத்தக்கவர்கள்.இன்று, மறக்கப்பட்ட அல்லது குறைவாக அறியப்படாத அனைத்து சக்த்டி பீத்தாக்களையும் பட்டியலிட்டுள்ளோம், அவை மிகவும் சக்திவாய்ந்தவை:
