
ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் நடிப்பில் உருவாகியுள்ள ஹைக்கூ திரைப்படம் அக்டோபர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
யுவராஜ் சின்னசாமி இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். பெண்கள் கல்லூரியில் படிக்கும் ஒரே ஆண் மாணவனை மையமாகக் கொண்டு காதல் மற்றும் உறவுகளை பின்னணியாக வைத்து கதை உருவாகியுள்ளது.
இரண்டு கதாநாயகிகளுடன் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளன.
திரையரங்கு வெளியீட்டுக்குப் பிறகு ஹைக்கூ திரைப்படத்தின் வசூல் நிலவரம் தெரியவரும் நிலையில், படம் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்து வருகிறது.
