சூரி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற மண்டாடி திரைப்படம் அக்டோபர் 8 ஆம் தேதி முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. மதிமாறன் புகழேந்தி இயக்கிய இந்த திரைப்படம் தமிழக கடலோர பகுதிகளில் நடைபெறும் பாரம்பரிய பாய்மரப் படகுப் போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. திரையரங்குகளில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக படக்குழு தெரிவித்துள்ள நிலையில், தற்போது ஓடிடி வெளியீட்டிலும் கவனம் பெற்றுள்ளது
திரைப்படத்தில் சூரி படகுடன் சுழலில் சிக்கிக்கொள்ளும் காட்சி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. சில காட்சிகளில் கிராபிக்ஸ் குறைகள் இருந்தாலும், அந்த காட்சி பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்துகிறது.
மண்டாடி திரைப்படம் அக்டோபர் 8 முதல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
