

சமீபகாலமாக அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.குறிப்பாக, அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.55-லிருந்து ரூ.75 வரை உயர்ந்துள்ளதும், சமையல் எண்ணெய், காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதும் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்திர வரவு செலவுத் திட்டத்தைப் பெருமளவில் பாதித்திருக்கிறது.
இந்நிலையில் இந்த திடீர் விலைவாசி உயர்வுக்கு காரணம் என்ன? அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்ற கேள்விகளுடன் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவிடம் பேசினோம்.நம்மிடம் பேசிய அவர், தமிழகத்தில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுக்குப் பலதரப்பட்ட காரணங்கள் நிலவுகின்றன. முதற்கட்டமாக, நீர் ஆதாரங்களின் பற்றாக்குறையும் தொடர் வறட்சியும் வேளாண் உற்பத்தியைப் பெருமளவில் பாதித்துள்ளன.இந்நிலையில் இந்த திடீர் விலைவாசி உயர்வுக்கு காரணம் என்ன? அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்ற கேள்விகளுடன் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவிடம் பேசினோம்.
நம்மிடம் பேசிய அவர், “தமிழகத்தில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுக்குப் பலதரப்பட்ட காரணங்கள் நிலவுகின்றன. முதற்கட்டமாக, நீர் ஆதாரங்களின் பற்றாக்குறையும் தொடர் வறட்சியும் வேளாண் உற்பத்தியைப் பெருமளவில் பாதித்துள்ளன.
இந்நிலையில் இந்த திடீர் விலைவாசி உயர்வுக்கு காரணம் என்ன? அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்ற கேள்விகளுடன் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவிடம் பேசினோம்.நம்மிடம் பேசிய அவர், தமிழகத்தில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுக்குப் பலதரப்பட்ட காரணங்கள் நிலவுகின்றன. முதற்கட்டமாக, நீர் ஆதாரங்களின் பற்றாக்குறையும் தொடர் வறட்சியும் வேளாண் உற்பத்தியைப் பெருமளவில் பாதித்துள்ளன.
ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் 25 லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக நடைபெற்று வந்த நெல் விவசாயம், தற்போது 10 லட்சம் ஏக்கருக்கும் கீழாகக் குறைந்துள்ளது. இதனால் அரிசி உற்பத்தியில் தன்னிறைவு இழந்து, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களையே நம்பியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையை மாற்ற, அரசு நீர் ஆதாரங்களைப் பெருக்கவும், ஏரி-குளங்களைத் தூர்வாரிச் சீரமைக்கவும் பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, நேர்மையான அதிகாரிகளின் மூலம் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
விவசாயத்தில் நிலவும் ஆட்களின் பற்றாக்குறை மற்றும் கூலி உயர்வு ஆகியவை உற்பத்திச் செலவை அதிகரிக்கும் மற்றொரு முக்கிய காரணியாக இருக்கின்றன.
கிராமப்புறங்களில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் போன்ற காரணங்களால் விவசாயப் பணிகளுக்குக் கூலி ஆட்கள் கிடைப்பது அரிதாகியுள்ளது.போதிய வருமானமும் பாதுகாப்பான சேமிப்பு வசதிகளும் இல்லாத சூழலில், விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து விவசாயத்தைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
