
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. ரியல் எஸ்டேட், பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் என அவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் பல. இவற்றில் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய முடியும்.
GIFT City மூலமும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய முடியும்.வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் GIFT City பற்றி அரசல்புரசலாகக் கேள்விப்பட்டு இருக்கலாம். ஆனால், அதை முழுமையாக நீங்கள் தெரிந்துகொள்வதற்கு உங்களுக்கு இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
GIFT City என்பது குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் அமைத்திருக்கும் ஒரு சர்வதேச நிதி மையம். Gujarat International Finance Tech என்பதன் சுருக்கம்தான் GIFT. இந்த நகரில் அமைந்திருக்கும் GIFT City மூலம் நீங்கள் வங்கிச் சேவை, இன்ஷூரன்ஸ் எனப் பல விதமான வசதிகளைப் பெற முடியும். முக்கியமாக, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலும் முதலீடு செய்ய முடியும். இந்த GIFT City மூலம் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும்போது வெளிநாடுகளில் வசிக்கும் முதலீடு முக்கியமான இரண்டு நன்மைகள் கிடைக்கும். ஒன்று, இந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபத்துக்கு எந்த வரியும் கட்டத் தேவை இல்லை.
இரண்டாவது, அமெரிக்க டாலரில் இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து, அந்த முதலீட்டை லாபத்துடன் மீண்டும் அமெரிக்க டாலரிலேயே திரும்ப எடுத்துக்கொள்ளலாம். இதனால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறைவதை வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் எளிதாகத் தடுக்க முடியும்.
