சென்னை தீவுத்திடலில் தீபாவளி பட்டாசு விற்பனைக்காக இடம் ஒதுக்கக் கோரி பட்டாசு விற்பனையாளர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தீவுத்திடலில் பட்டாசு விற்பனை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த பகுதி பேருந்து நிலையமாக பயன்படுத்தப்படுவதால் பட்டாசு கடைகளுக்கு ஒதுக்கப்படும் இடம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த ஆண்டு தீவுத்திடலில் வழக்கம்போல் பட்டாசு விற்பனை நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு அக்டோபர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால் தீபாவளி நெருங்கி வரும் நிலையில், சென்னை தீவுத்திடலில் இந்த ஆண்டு பட்டாசு கடைகள் அமைக்கப்படுமா அல்லது வேறு இடங்களுக்கு மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
