கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி முதல் தமிழகத்தில் புதிய வெற்றிப் பயணத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் எக்ஸ்பிரஸ் மற்றும் டீலக்ஸ் உள்ளிட்ட அனைத்து சாதாரண பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற புதிய நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் சாதாரண பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கக்கூடிய மகளிர் விடியல் பயணத் திட்டம் நடைமுறையில் இருந்தது. இந்நிலையில தமிழகத்தில் புதிய வெற்றிப் பயணத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. மாவட்டங்களை இணைக்கும் 40-லிருந்து 80 கிலோமீட்டர் வரையிலான தொலைவு கொண்ட எக்ஸ்பிரஸ் மற்றும் டீலக்ஸ் உள்ளிட்ட அனைத்து சாதாரண பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற புதிய திட்டத்தை கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்.

வெற்றிப் பயணத் திட்டம் ஓரளவுக்குப் பயனுள்ளதாக இருப்பதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், பேருந்துகள் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே நிற்பதாகவும், சற்று தள்ளி நின்றால் கூட பேருந்தை நிறுத்த மறுப்பதாகவும் வயதான பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மருத்துவமனை செல்வதற்காக தினந்தோறும் ஐம்பது ரூபாய் செலவழித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக இந்த இலவசப் பயணம் தங்களுக்கு மிகவும் சௌகரியமாக இருப்பதாக பயணிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். டீ செலவு தவிர மற்ற போக்குவரத்துச் செலவுகள் மிச்சமாவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.