
ஆழ்கடலில் வாழும் மீன் என்பதால் கடலில் காற்றின் வேகத்தில் அடித்து வரப்பட்டு மீனவர்கள் வலையில் சிக்கியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் வடக்கு கடற்கரையில் 100-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகில் மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் மற்றும் பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் நேற்று மீன்பிடிக்க சென்று இன்று காலை கரைதிரும்பினர். மீன்களின் வரத்து குறைவான வரத்துடன் மீனவர்கள் கரை திரும்பினர். ஒரு நாட்டுப்படகு மீனவரின் வலையில் மட்டும் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் மூன்று ராட்சத மஞ்சள் வால் கேரை மீன்கள் சிக்கின. ஒவ்வொரு மீனும் 100 கிலோக்கு மேல் இருந்து மூன்று மீன் சேர்த்து மொத்தம் 350 கிலோக்கு மேல் இருந்தது.இதனை கேரளாவைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் ஒரு கிலோ மீன் ரூ.180 என மொத்தம் ரூ.63,000 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.இவ்வகை மீன்கள் எப்போதாவது அரிதாக நாட்டுப்படகு மீனவர்கள் வலையில் சிக்கும். ஆழ்கடலில் வாழும் மீன் என்பதால் கடலில் காற்றின் வேகத்தில் அடித்து வரப்பட்டு மீனவர்கள் வலையில் சிக்கியுள்ளது. இம்மீன் சுவை நன்றாக இருக்கும் என்பதால் உணவிற்கு பயன்படுத்தப்படுகிறது. கேரை மீன்களை கேரளாவில் மீன்பிரியர்கள் விரும்பி சாப்பிடுவார்கள் என்பதால் இதனை கேரளாவிற்கு ஏற்றுமதி செய்வதாக மீனவர்கள் கூறினர்.
