செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் மதுராந்தகம் தொகுதியில் 86.26 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்த தொகுதியில் திமுக, த.வெ.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர். த.வெ.க சார்பில் மரகதம் குமரவேல் போட்டியிட்டுள்ளார்.
மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் 27 வேட்பாளர்கள் களத்தில் இருந்த நிலையில், இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கை முடிவை அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் எதிர்பார்த்து வருகின்றனர்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
