திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் 80.30 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்த தேர்தலில் த.வெ.க சார்பில் சத்தியபாமா, அ.தி.மு.க சார்பில் பானுமதி, தி.மு.க சார்பில் சுகன்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன் உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

சத்தியபாமா ஏற்கனவே அ.தி.மு.க சார்பில் இந்த தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக இருந்த நிலையில், பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்ததால் இந்த இடைத்தேர்தல் நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில் அ.தி.மு.க 2,639 வாக்குகளும், த.வெ.க 2,634 வாக்குகளும் பெற்றதால் வெறும் 5 வாக்குகள் வித்தியாசத்தில் போட்டி தொடங்கியது. தி.மு.க 2,019 வாக்குகளுடன் அடுத்த இடத்தில் இருந்தது.
தாராபுரத்தில் தொடர்ந்து நெருக்கமான போட்டி நிலவி வருவதால், இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
