
2026ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் நவி பிள்ளைக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய டிரம்ப், பல சர்வதேச மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்ததாக கூறியதுடன், நோபல் அமைதிப் பரிசு தனக்கு கிடைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிபராக தனக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், விருது வழங்கப்பட்ட விதம் நார்வேக்கு ஒரு அவமானம் என்றும் டிரம்ப் விமர்சித்தார்.
நோபல் அமைதிப் பரிசை நார்வே அரசு நேரடியாக வழங்குவதில்லை. நார்வே அரசிடமிருந்து சுயாதீனமாக செயல்படும் நார்வே நோபல் குழுவே இந்த விருதுக்கான தேர்வை மேற்கொள்கிறது.
2026ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு நவி பிள்ளைக்கு சர்வதேச சட்டம் மற்றும் அமைதியை மேம்படுத்த அவர் ஆற்றிய பணிக்காக வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
