பந்தயத்தில் பங்கேற்க தயாராகி வரும் நடிகர் அஜித், தனக்கு ஆதரவாக ரசிகர்கள் களத்தில் நிற்க வேண்டும் என எதிர்பார்க்கும் நிலையில், ரசிகர்களோ குடும்பப் பொறுப்புகளை கவனிப்பதில் மும்முரமாக இருப்பதாக கூறப்படும் நகைச்சுவையான காட்சி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
ஒருபுறம் அஜித் பந்தய உடையில் நின்று ரசிகர்களிடம் ஆதரவு கேட்பது போலவும், மறுபுறம் ரசிகர்கள் மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத் தேவைகளை கவனித்தபடி அவரை கண்டுகொள்ளாமல் செல்வது போலவும் இந்த காட்சி அமைந்துள்ளது.
இதனை பார்த்த இணையவாசிகள், பல ஆண்டுகளாக நடிகருக்காக கொண்டாட்டங்களில் ஈடுபட்ட ரசிகர்கள் தற்போது குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்களா என நகைச்சுவையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அஜித்துக்கு இந்த முறை போட்டி மற்ற பந்தய வீரர்களுடன் அல்ல, ரசிகர்களின் குடும்பப் பொறுப்புகளுடன் தான் என இணையவாசிகள் கலாய்த்து வருகின்றனர்.
அஜித் சொன்னதை சீரியஸாக பின்பற்றும் ரசிகர்கள்!!!
Leave a Comment
