சூர்யாவின் அடுத்த திரைப்படமான Scene தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. Jithu Madhavan இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் முதல் பார்வை வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
இதில் சூர்யா DSP இன்பராஜ் என்ற வித்தியாசமான காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சட்ட விதிமுறைகளை பெரிதாக பொருட்படுத்தாமல், குற்றவாளிகளை பிடிப்பதில் மட்டும் தீவிரமாக செயல்படும் காவல்துறை அதிகாரியாக சூர்யாவின் கதாபாத்திரம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
Aavesham படத்தை இயக்கிய Jithu Madhavan இந்த படத்தை இயக்கியுள்ளதால், Scene திரைப்படத்திலும் அவரது வழக்கமான வித்தியாசமான கதை சொல்லும் பாணி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் Nazriya Nazim, Naslen, Lal உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். Sushin Shyam இசையமைத்துள்ள நிலையில், சூர்யா மற்றும் ஜோதிகாவின் Zhagaram Studios நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.

Scene திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யாவின் வழக்கமான கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக கூறப்படும் DSP இன்பராஜ் கதாபாத்திரம் ரசிகர்களிடம் தற்போது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
