இயக்குநர் மிஷ்கின் தற்போது ‘பிசாசு 2’ மற்றும் ‘ட்ரெயின்’ என அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள ‘பிசாசு 2’ திரைப்படமும், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘ட்ரெயின்’ திரைப்படமும் நீண்ட நாட்களாக வெளியீட்டுக்காக காத்திருக்கின்றன.
இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய மிஷ்கின், தனக்கு வந்த வித்தியாசமான கனவு குறித்து பகிர்ந்துள்ளார்.
இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய மிஷ்கின், தனக்கு வந்த வித்தியாசமான கனவு குறித்து பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், தனது கனவில் யானை ஒன்று இரண்டு குட்டி யானைகளை தனது வீட்டில் உள்ள கிணற்றில் போட்டதாக தெரிவித்துள்ளார். அந்த இரண்டு குட்டி யானைகளும் ஏற்கனவே இறந்த நிலையில் இருந்ததாகவும், அவற்றுக்காக பால் மற்றும் பழங்களை கிணற்றுக்குள் வைத்ததாகவும் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
பின்னர், தனது குட்டிகளைத் தேடி தாய் யானை வீட்டிற்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிஷ்கினின் இந்த கனவு குறித்த பேச்சு தற்போது கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக, நீண்ட நாட்களாக வெளியீட்டுக்காக காத்திருக்கும் ‘பிசாசு 2’ மற்றும் ‘ட்ரெயின்’ ஆகிய இரண்டு திரைப்படங்களுடன் இந்த கனவை தொடர்புபடுத்தி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இரண்டு திரைப்படங்களும் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து இருந்து வரும் நிலையில், மிஷ்கின் பகிர்ந்துள்ள இந்த கனவு குறித்த தகவலும் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
