திருஷ்யம் படத்தின் முதல் இரண்டு பாகங்களும் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படங்களின் இந்தி ரீமேக்காக உருவான நிலையில் மூன்றாம் பாகம் முற்றிலும் மாறுபட்ட கதையுடன் உருவாகிறது.
அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி வரும் திருஷ்யம் 3 திரைப்படம் மோகன்லால் நடிப்பில் உருவாகும் மலையாள திருஷ்யம் 3 படத்தின் ரீமேக் இல்லை என்று அஜய் தேவ்கன் தெரிவித்துள்ளார்.
இந்தி பதிப்புக்காக முற்றிலும் புதிய திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் மலையாள பதிப்பின் கதையை அப்படியே பின்பற்றவில்லை என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

இதனால் மலையாள திருஷ்யம் 3 படத்தையும் இந்தி திருஷ்யம் 3 படத்தையும் ரசிகர்கள் ஒரே கதையின் இரண்டு பதிப்புகளாக பார்க்க முடியாது. இரு படங்களும் தனித்தனி கதைக்களத்தில் பயணிக்க உள்ளன.
அஜய் தேவ்கன் விஜய் சல்கோன்கர் கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்கிறார். இதனால் திருஷ்யம் தொடரின் ரசிகர்களிடையே மூன்றாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் திருஷ்யம் 3 ஒரு பக்கம் உருவாகி வரும் நிலையில் அஜய் தேவ்கனின் இந்தி திருஷ்யம் 3 முற்றிலும் புதிய கதையுடன் வருவது ரசிகர்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
