
நவராத்திரி விழா அக்டோபர் 11ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் துர்கா தேவியின் முதல் வடிவமான சைலபுத்ரி அம்மனை பக்தர்கள் வழிபட்டனர். நவராத்திரியின் தொடக்கத்தை குறிக்கும் வகையில் வீடுகள் மற்றும் கோவில்களில் கலச ஸ்தாபனம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
முதல் நாளுக்கான பாரம்பரிய நிறமாக ஆரஞ்சு நிறம் கடைப்பிடிக்கப்படுகிறது. சைலபுத்ரி தேவி வலிமை, அமைதி மற்றும் ஆன்மிக வளர்ச்சியின் அடையாளமாக கருதப்படுகிறார்.

தமிழ்நாட்டிலும் நவராத்திரியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அலங்காரங்கள், அம்மன் வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. வீடுகளில் கொலு வைப்பது, சுண்டல் மற்றும் பிரசாதம் வழங்குவது உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்வுகளும் தொடங்கியுள்ளன.
ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழா அக்டோபர் 19ஆம் தேதி நிறைவடைந்து, அக்டோபர் 20ஆம் தேதி விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
