நியூயார்க்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தை பார்க்க தூக்கத்தில் இருந்து விழித்ததாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்திறனையும் அவர் புகழ்ந்துள்ளார். இது குறித்து பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுக வீரராக வைபவ் விளையாடினர். 14 வயதான அவர், இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடிய இளவயது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். 2 ஃபோர், 3 சிக்ஸர்களை விளாசினார். ஐபிஎல் அரங்கில் அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி கலக்கினார். “ஐபிஎல் கிரிக்கெட்டில் 8-ம் வகுப்பு படிக்கும் ஒருவரின் ஆட்டத்தை பார்ப்பதற்காக விழித்துள்ளேன். தரமான அறிமுகம்” என சுந்தர் பிச்சை கூறியுள்ளார். 181 ரன்கள் இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ்…
Author: admin
பெய்ஜிங்: அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை 34% ஆக உயர்த்தி சீனா பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். உலக நாடுகளுக்கான இந்த வரி விதிப்பை ஏப்ரல் 2-ம் தேதி அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அதன்படி, இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு 27 சதவீத பரஸ்பர வரியும், சீனாவுக்கு 34 சதவீதம், வங்கதேசம் 37 சதவீதம், வியட்நாம் 46 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீதம், ஜப்பான் 24 சதவீதம், இந்தோனேசியா 32 சதவீதம், பாகிஸ்தான் 29 சதவீதம், தாய்லாந்து 36 சதவீதம் என வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 10 சதவீத அடிப்படை வரி விதிப்பு ஏப்ரல் 5-ம் தேதியிலிருந்தும், கூடுதல் வரி விதிப்பு ஏப்ரல் 9-ம் தேதிக்குப் பிறகும்…
வெயில் காலம் தொடங்கிய நிலையில், பழநி முருகன் கோயிலில் தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் இலவசமாக மோர் வழங்கப்படுகிறது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். பக்தர்கள் அதிகாலை 4 மணி முதல் மலைக் கோயிலுக்கு செல்கின்றனர். பெரும்பாலான பக்தர்கள் படிப்பாதை மற்றும் யானைப் பாதையைப் பயன்படுத்தி மலையேறிச் செல்கின்றனர். அவ்வாறு செல்லும் பக்தர்களுக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் சுக்கு காபி இலவசமாக வழங்கப்பட்டது. தற்போது கோடை காலம் என்பதால் பழநி பகுதியில் வெயில் சுட்டெரிக்கிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் யானைப் பாதை மற்றும் படிப்பாதை வழியாக மலையேறும் பக்தர்களுக்கு இலவசமாக மோர் வழங்கப்படுகிறது. மலைக் கோயிலுக்கு செல்லும் வழியில் இடும்பர் கோயில் அருகே காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தினமும்…
ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள ‘கலியுகம்’ படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது படக்குழு. பிரமோத் சுந்தர் இயக்கத்தில் உருவான படம் ‘கலியுகம்’. இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் நீண்ட மாதங்களாக நடைபெற்று வந்தன. தற்போது இப்படத்தின் வெளியீட்டு தேதியினை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார். மே 9-ம் தேதி இப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. முன்னணி நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத் மற்றும் ஆடுகளம் கிஷோர் நடிப்பில், போஸ்ட் அபோகலிப்டிக் களத்தில், புதுவிதமான சைக்கலாஜிகல் த்ரில்லராக இப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தினை ஆர்.கே இன்டர்நேஷனல் மற்றும் பிரைம் சினிமாஸ் நிறுவனங்கள் சார்பில் கே.எஸ்.ராமகிருஷ்ணா மற்றும் கே.ராம்சரண் ஆகியோர் தயாரித்துள்ளனர். ஒரு கற்பனையான டிஸ்டோபியன் எதிர்காலத்தில் நடப்பதாக இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. பேரழிவு நிகழ்வுகளால் சூறையாடப்பட்ட உலகில், உயிர் வாழ்வதே மிக சிக்கலாக இருக்கிறது, ஒழுக்கம் மற்றும் அன்பு எல்லாம் உடைந்து போன உலகில், மனிதர்கள் வாழ முயலும் உணர்ச்சிகரமான உளவியல் போராட்டத்தை இப்படம் சொல்கிறது. முற்றிலும்…
இப்போதைக்கு சாக்குப் போக்குச் சொன்னாலும் பாஜக-வுடன் அதிமுக கூட்டணி சேருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதனால் இரண்டு கட்சிகளுக்குள்ளும் புது உற்சாகம் பீரிட்டு அடிக்கிறது. “வரட்டும் பார்க்கலாம்” என விட்டேத்தியாய் இருந்தவர்கள் எல்லாம் இப்போது தங்களுக்கான தொகுதிகளுக்கு துண்டு போட்டு இடம் பிடிக்கப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 2021 தேர்தலில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் 4 தொகுதிகளை திமுக-வும், 2 தொகுதிகளை அதிமுக-வும் வென்றன. ஒரே ஒரு தொகுதியை மட்டும் பாமக கைப்பற்றியது. இம்முறை திமுக 4 தொகுதிகளை தனக்கு வைத்துக் கொண்டு 3 தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்கலாம் என்கிறார்கள். தான் போட்டியிடும் நான்கு தொகுதிகளுக்கும் திமுக வலுவான வேட்பாளர்களை கைவசம் வைத்திருக்கிறது. ஆனால் அதிமுக தரப்பில், செஞ்சி, விழுப்புரம், திருக்கோவிலூர் தொகுதிகளுக்கு திமுக-வுக்கு வலுவான போட்டியைத் தருமளவுக்கு தகுதியான வேட்பாளர்களை எங்கே போய்த் தேடுவது என அந்தக் கட்சியினர் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் முன்னாள் மத்திய இணை…
ராமேசுவரம்: இந்தியா முழுவதும் தேசிய கடல்சார் மீனவர்களின் கணக்கெடுப்பை நவம்பர் மாதம் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் தொடங்குகிறது. இந்தியாவின் முதல் மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் (cmfri) ராமேசுவரம் அருகே மரைக்காயர் பட்டினத்தில் 1947ம் ஆண்டு நிறுவப்பட்டது. தற்போது இந்தியாவிலுள்ள பல்வேறு கடலோர மாநிலங்களில் பிராந்திய மையங்களும், பிராந்திய நிலையங்களும் செயல்பட்டு வருகிறது. கடந்த 78 ஆண்டுகளில் இந்த ஆராய்ச்சி நிலையம் பல தனித்துவம் வாய்ந்த ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை செய்து தேசிய மற்றும் உலகளாவிய நற்பெயரினை பெற்றுள்ளது. இந்நிலையில், மத்திய மீன்வளத் துறை அமைச்சகத்தின் சார்பாக தேசிய கடல்சார் மீனவர்களின் கணக்கெடுப்பை மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் நவம்பர் மாதம் தொடங்குகிறது. இதற்கு முன் 2016-ஆம் ஆண்டு தேசிய கடல்சார் மீனவர் கணக்கெடுப்பை மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் மேற்கொண்டது. எதிர்வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 45 நாட்கள் இடைவெளியில் நாட்டிலுள்ள அனைத்து…
இளவரசர் வில்லியம் மேகன் மார்க்ல் மற்றும் இளவரசர் ஹாரி ஆகியோரை அவர்களின் HRH பட்டங்களை அகற்ற திட்டமிட்டுள்ளார். இளவரசர் வில்லியம் பிரிட்டிஷ் சிம்மாசனத்தில் ஏறிய பின்னர் இது நடக்கக்கூடும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.இளவரசர் வில்லியம் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே ஆகியோரை அவர் ராஜாவாக மாறும்போது அவர்களின் HRH (அவரது/அவள் ராயல் ஹைனஸ்) தலைப்புகளின் பட்டப்படிப்பார், மேகன் க honor ரவத்தை தொடர்ந்து பயன்படுத்த திட்டமிட்டுள்ளார் என்பதை தெளிவுபடுத்திய பின்னர், டெய்லி பீஸ்ட் ஆதாரங்களை மேற்கோள் காட்டியுள்ளது. “மேகனும் ஹாரியும் மறைந்த ராணி எலிசபெத் 2020 ஆம் ஆண்டில் அரச குடும்பத்தை விட்டு வெளியேறும்போது எச்.ஆர்.எச் பட்டங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவதாக உறுதியளித்தனர், ஆனால் மேகன் அந்த வாக்குறுதியை நிராகரித்துள்ளார்” என்று அறிக்கை மேலும் கூறியுள்ளது.அவர் சமீபத்தில் தனது தனிப்பட்ட பிராண்டின் விளம்பரத்தில் “அவரது ராயல் ஹைனெஸ்” ஐப் பயன்படுத்தினார்.தலைப்பைப் பயன்படுத்த தனக்கு உரிமை உண்டு என்று மேகன் கூறுகிறார்”ஹாரியும்…
பிரதிநிதி படம் மற்றொரு கல்வி ஆண்டு நெருங்கும்போது, ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் உயர் கல்விக்கு தயாராகி வருகின்றனர். இருப்பினும், கடுமையான அமெரிக்க குடியேற்றக் கொள்கைகள் இந்த ஆண்டு ஒரு நிழலை செலுத்துகின்றன. அமெரிக்க பல்கலைக்கழகங்களின் அறிக்கைகள் மாணவர் விசா திரும்பப்பெறுதல்களைக் குறிக்கின்றன அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (யு.எஸ்.சி.ஐ.எஸ்) விசா விண்ணப்பதாரர்களின் சமூக ஊடக உள்ளடக்கத்தைத் திரையிடுவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இறுக்கமான விசா ஒப்புதல்களைப் பற்றிய கவலைகள் இருந்தபோதிலும், தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் அமெரிக்காவில் படிக்க இந்திய மாணவர்களின் விருப்பம் வலுவாக உள்ளது, குறிப்பாக பட்டதாரி அறிவியல்அருவடிக்கு தொழில்நுட்பம்அருவடிக்கு பொறியியல்மற்றும் கணிதம் (STEM) புலங்கள், அத்துடன் செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்ட திட்டங்கள். நீடித்த முறையீடு அமெரிக்காவின் ஒப்பிடமுடியாத ஆராய்ச்சி சூழல்கள், உலகளாவிய வெளிப்பாடு, முதுகலை வேலைவாய்ப்பு வாய்ப்புகள் மற்றும் முன்னணி விளிம்பில் உள்ள தொழில்களுக்கான அணுகல் ஆகியவற்றில் உள்ளது. “கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்கலைக்கழகங்கள் தொடங்கிய…
புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதல் விவகாரம் குறித்து ஆலோசிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக கடந்த 23-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது, சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, பாகிஸ்தானியருக்கான விசா ரத்து, அட்டாரி எல்லை மூடல், பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றம், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் முப்படை ஆலோசகர்கள் பதவியிடங்கள் ரத்து ஆகிய 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த 24-ம் தேதி தலைநகர் டெல்லியில் அனைத்து கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்…
சென்னை: இந்தியாவில் ரியல்மி ஜிடி 7 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ப்ரீமியம் செக்மென்ட்டில் கேம் ஆர்வலர்களை கருத்தில் கொண்டு இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு, பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. தற்போது ரியல்மி ஜிடி 7 புரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இது ப்ரீமியம் செக்மென்ட் போனாக சந்தையில் வெளிவந்துள்ளது. சிறப்பு அம்சங்கள் 6.78 இன்ச் AMOLED டிஸ்பிளே ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் ஸ்னாப்டிராகன்…