சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறை அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சில கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 3 மற்றும் 4-ம் தேதி அன்று தொடர்வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதை தொடர்ந்து “வேலை செய்யாவிட்டால் ஊதியம் இல்லை” என்ற அடிப்படையில் ஊதியம் மற்றும் படிகள் வழங்க இயலாது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் செப்டம்பர் 25 முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட பணியை முற்றிலுமாக புறக்கணித்து அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு அதன் விவரங்களை அரசுக்கு அனுப்புமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில், செப்.3 மற்றும் 4-ம்…
Author: admin
இரும்பு என்பது நம் உடலுக்கு ஒரு அவசியமான கனிமமாகும். இது ஆக்ஸிஜன் போக்குவரத்து, ஆற்றல், நோய் எதிர்ப்பு சக்தி, மூளை செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இரும்புச்சத்து குறைபாடு சோர்வு, பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி, இரத்த சோகை மற்றும் வளர்ச்சி சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இரும்பு அளவை பராமரிப்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முக்கியமானது. உலர்ந்த பழங்கள், விதைகள், கோழி அல்லது பீன்ஸ் போன்ற முழு உணவுகளும் இரும்பின் முதன்மை ஆதாரங்களாக இருக்கலாம், சில நேரங்களில் இந்த உணவுப் பொருட்களிலிருந்து இரும்பு உட்கொள்ளல் போதுமானதாக இல்லை. உணவு மற்றும் உறிஞ்சுதல் போதுமானதாக இல்லாதபோது, இரும்பு சப்ளிமெண்ட்ஸ் பாதுகாப்பு வலையாக செயல்படுகிறது.வரவு: கேன்வாஇரும்பு சப்ளிமெண்ட்ஸ் குறைபாடுகளைக் கையாள்வதில் பயனுள்ளதாக இருந்தாலும், சில சந்தர்ப்பங்களில், அவை பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் மற்றும் மிகவும் பொதுவானவை இரைப்பை குடல். இந்த பக்க விளைவுகள் பொதுவாக பயன்படுத்தப்படும் இரும்பு வகை மற்றும் தனிப்பட்ட சகிப்புத்தன்மை ஆகியவற்றைப் பொறுத்தது.…
புதுடெல்லி: பிஹாரில் முதல்வரின் மகளிர் வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவியை அவர் வழங்கினார். பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி அரசு ஆட்சி நடத்தி வருகிறது. அந்த மாநில அரசு சார்பில் முதல்வரின் மகளிர் வேலைவாய்ப்பு திட்டம் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதன்படி பிஹாரில் ஒவ்வொரு குடும்பத்திலும் தலா ஒரு பெண்ணுக்கு சுயதொழில் தொடங்க ரூ.10,000 நிதியுதவி வழங்கப்படும். இந்த திட்டத்தில் இணைந்து சாதனை படைக்கும் பெண்களுக்கு கூடுதலாக ரூ.2 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் நிதிஷ் குமார் உறுதி அளித்து உள்ளார். இந்தச் சூழலில் பிஹார் அரசின் முதல்வரின் மகளிர் வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார். அப்போது மாநிலம் முழுவதும் 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி…
துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேச அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது பாகிஸ்தான் அணி. வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 135 ரன்களே சேர்த்த போதிலும் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றி தேடி கொடுத்தனர். குறிப்பாக ஷாகின் ஷா அப்ரீடி பேட்டிங்கில் 13 பந்துகளில் 19 ரன்களும், பந்து வீச்சில் 17 ரன்களை மட்டும் வழங்கி 3 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் நாளை (28-ம் தேதி) நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது பாகிஸ்தான் அணி. வங்கதேச அணிக்கு எதிரான வெற்றிக்குப் பின்னர் பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் அலி ஆகா கூறும்போது, “இதுபோன்ற ஆட்டங்களில் வெற்றி பெறுவதற்கு, நாங்கள் ஒரு சிறப்பு அணியாக இருக்க வேண்டும். அனைவரும் சிறப்பாக விளையாடினார்கள். பேட்டிங்கில்…
பிரபல இசையமைப்பாளர் தேவா சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்றிருந்தார். அவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கவுரவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “செப். 24-ம் தேதி ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் மிகுந்த மரியாதையுடன் என்னை வரவேற்றனர். அவைத்தலைவர் இருக்கையில் அமர வாய்ப்பு அளிக்கப்பட்டது. பின்னர் மரியாதைக்குரிய செங்கோல் வழங்கப்பட்டது. அந்த தருணம் எனக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் இசை மற்றும் கலாச்சாரத்தைப் பரப்பி வரும் ஒவ்வொரு தெற்காசிய கலைஞருக்கும் சொந்தம். இந்த அங்கீகாரத்தை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன். இதற்காக லாரன்ஸ் அண்ணாதுரை மற்றும் ஆஸ்திரேலிய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி” என்று கூறியுள்ளார்.
திருநெல்வேலி: நெல்லை அருகே ஜெபம் செய்யச் சென்றவர்கள் மீது குங்குமம் பூசியதாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் அலுவலக உதவியாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கீழக்கல்லூர், நடுக்கல்லூர் கிராமங்களுக்கு கடந்த 22-ம் தேதி வந்துள்ளனர். அவர்கள் கீழக்கல்லூர் பகுதியில் மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி, இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் மணிகண்டன் மகாதேவன், பாஜகவைச் சேர்ந்த அங்குராஜ் உட்பட 3 பேர் வழிமறித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களில் சிலரை அருகிலிருந்த கோயிலுக்கு அழைத்துச் சென்று, நெற்றியில் குங்குமம் பூசி, கடவுளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டுச் செல்லும்படி வற்புறுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக ஆலங்குளத்தைச் சேர்ந்த டேவிட் நிர்மல்துரை என்பவர், சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ‘வழக்கறிஞராகவும், கிறிஸ்தவ சபைகளில் பிரசங்கம் செய்யும் ஊழியராகவும் உள்ளேன். பட்டக்கல்லூரை சேர்ந்த சிவபாக்கியம் என்பவரது அழைப்பின்…
புதுடெல்லி: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதால் இந்தியா மீது 25 சதவீத கூடுதல் வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் விதித்துள்ளது. உக்ரைன் உடனான மோதல் காரணமாக உருவான சர்வதேச தடைகளைத் தொடர்ந்து ரஷ்யா கச்சா எண்ணெயை குறைந்த விலையில் வழங்க தொடங்கியது. இதையடுத்து, இந்தியா தனது மொத்த தேவையில் 90% சதவீதத்தை ரஷ்யாவிடமிருந்தே இறக்குமதி செய்து வருகிறது. இதனால், இந்தியாவின் இறக்குமதி செலவினம் வெகுவாக குறைந்தது. இந்த நிலையில், இதேபோன்ற சாதகமான நிலை, ஈரான் மற்றும் வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும்போதுதான் நீடிக்கும். புளும்பெர்க் அறிக்கையின்படி, இந்த வாரத்தில் அமெரிக்காவுக்கு சென்ற இந்திய அதிகாரிகள் கச்சா எண்ணெய் தொடர்பாக தங்களது இந்த நிலைப்பாட்டை அமெரிக்க அதிகாரிகளிடம் தெளிவாக வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிலிருந்து இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு எண்ணெய் வாங்குவதை ஒரே நேரத்தில் கட்டுப்படுத்தினால் அது உலகளாவிய விலை ஏற்றத்தை தூண்டக்கூடும் என்று இந்திய அதிகாரிகள் தரப்பில் விளக்கம்…
சென்னை: டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ முதல்நிலைத் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. மொத்தம் 645 காலியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் இத்தேர்வை 5 லட்சத்து 53,635 பேர் எழுத உள்ளனர். இத்தேர்வுக்கு 5 லட்சத்து 53,635 பேர் விண்ணப்பித்ததனர். அதில் ஒரேயொரு விண்ணப்பதாரரின் விண்ணப்பம் மட்டும் நிராகரிக்கப்பட்டு மற்ற அனைவரின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்த நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல்நிலைத்தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 188 தேர்வுக் கூடங்களில் 53,606 பேர் எழுதுகின்றனர். முதல்நிலைத் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அடுத்தகட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். ‘ஒரு காலியிடத்துக்கு 10 பேர்’ என்ற விகிதாச்சார அடிப்படையில் மெயின் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுசெய்யப்படுவர். அந்த வகையில் தற்போது காலியிடங்களின் எண்ணிக்கை 645 ஆக இருப்பதால் ஏறத்தாழ…
புதுடெல்லி: ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஜோனாதன் கவின் அந்தோணி 244.8 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். இத்தாலியின் லூகா அரிகி (236.3) வெள்ளிப் பதக்கமும், ஸ்பெயினின் லூகாஸ் சான்செஸ் டோம் ( 215.1) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர். மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ராஷ்மிகா சாஹல் 236.1 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: திருப்பதியில் நாளை நடைபெறும் கருட சேவையின்போது மலையப்ப சுவாமிக்கு அணிவிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக் களைந்த மாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் நேற்று திருப்பதிக்கு அனுப்பிவைக்கப்பட்டன. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மூலவர் வடபத்ரசயனர் (பெரிய பெருமாள்) தினசரி பூஜையின்போது ஆண்டாள் சூடிய மாலையை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அதேபோல, மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சித்திரைத் தேரோட்டம், திருப்பதி புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் கருட சேவையின்போது பெருமாளுக்கு அணிவிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக் களைந்த பூமாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்படும். அதன்படி, இந்த ஆண்டு திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் மூலவர் வெங்கடேசப் பெருமாளும், உற்சவர் மலையப்ப சுவாமியும் அணிவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக் கொடுத்த பூமாலை, கிளி, பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. திருப்பதியில் புரட்டாசி…
