Author: admin

சென்னை: தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக வணிகர் சங்கத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு தொழிலாளர் துறை ஆணையர் சி.அ.ராமன் அறிவுறுத்தியுள்ளார். சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தமிழில் பெயர்ப்பலகைகள் வைப்பது தொடர்பாக தொழிலாளர் துறை மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து நடத்திய வணிகர் சங்கப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. தொழிலாளர் துறை ஆணையர் சி.அ.ராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழில் பெயர்ப்பலகைகள் வைப்பதை உறுதிசெய்ய அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவில் உறுப்பினர் செயலராக தொழிலாளர் உதவி ஆணையர்கள் (அமலாக்கம்), தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இணை இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், மாநகராட்சி ஆணையர், நகராட்சி ஆணையர், பேரூராட்சி உதவி இயக்குநர், ஊராட்சி உதவி…

Read More

பனாஜி: கோவா மாநில கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த துயரச் சம்பவம் சனிக்கிழமை (மே 3) அதிகாலை நடந்துள்ளது. கோவா மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகோ பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ லைராய் தேவி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜாத்ரா திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழாவில் மக்கள் அதிகம் திரண்ட நிலையில் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்தவர்கள் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மபுஸாவில் உள்ள வடக்கு கோவா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, காயமடைந்தவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் ஆறுதல் கூறினார். அதோடு கள சூழலையும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். கோயில் திருவிழாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்த அதிகாரபூர்வ தகவலை இன்னும் அதிகாரிகள் தெரிவிக்காமல் உள்ளனர். எனினும், இதுவரை…

Read More

அகமதாபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் போது குஜராத் அணியின் பேட்ஸ்மேனான ஜாஸ் பட்லர் 12 ரன்களை கடந்த போது ஐபிஎல் தொடர்களில் 4 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இந்த சாதனையை அவர், தனது 117-வது ஆட்டத்தில் நிகழ்த்தி உள்ளார். ஐபிஎல் வரலாற்றில் 4 ஆயிரம் ரன்களை எட்டும் முதல் இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் ஆவார். மேலும் குறைந்த பந்துகளில் 4 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர்களில் 3-வது இடத்தையும் பிடித்துள்ளார் ஜாஸ் பட்லர். அவர், 2,677 பந்துகளில் 4 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார். இந்த வகை சாதனையில் கிறிஸ் கெய்ல் (2,653), ஏபி டி வில்லியர்ஸ் (2,658) முதல் இரு இடங்களில் உள்ளனர்.

Read More

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 42-வது வணிகர் தின மாநாடு மதுராந்தகத்தில் மே 5-ம் தேதி நடைபெறுகிறது. அன்று தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை விடப்பட உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வணிகர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்குத் தீர்வுகாண, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆண்டுதோறும் மே 5-ம் தேதி வணிகர் தின மாநாடு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு 42-வது வணிகர் தின மாநில மாநாடு செங்கல்பட்டு அடுத்த மதுராந்தகத்தில் மாலை 3.35 மணிக்கு தொடங்குகிறது. சுமார் 29 ஏக்கரில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. போதிய வாகன நிறுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இம்மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான வணிகர்கள் குடும்பத்துடன் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். வணிகளின் நலனைக் காக்கவும், வணிகத்தை மேம்படுத்தவும், வணிகர்களின் அத்தியாவசிய கோரிக்கைகள் பிரகடனப்படுத்தப்பட்டு தீர்வுகாணப்பட உள்ளன. மாலையில்…

Read More

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள மங்களூருவில் பஜ்ரங் தள நிர்வாகி சுஹாஸ் ஷெட்டி கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மங்களூருவில் 6-ம் தேதி வ‌ரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த சுஹாஸ் ஷெட்டி (38) பஜ்ரங் தளம் அமைப்பில் தென்பகுதி செயலாளராக இருந்தார். இவர் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உட்பட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2022ம் ஆண்டு சுள்ளியாவை சேர்ந்த பாஜக இளைஞர் அணி நிர்வாகி பிரவீன் நெட்டாரு (27) வெட்டிக் கொல்லப்பட்டார். இதற்கு பழிக்கு பழியாக அடுத்த சில தினங்களில் முகமது பைசல் (23) கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சுஹாஸ் ஷெட்டிக்கு நேரடி தொடர்பு இருந்ததால் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். தற்போது அந்த வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்த சுஹாஸ் ஷெட்டி நேற்று மாலை மங்களூரு புறநகர் சாலையில் காரில்…

Read More

சென்னை: தமிழக தடகள சங்கம் சார்பில் யு-16, யு-18, யு-20 வயதுக்கு உட்பட்டோருக்கான தமிழ்நாடு மண்டல தடகள சாம்பியன்ஷிப் சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று (3-ம் தேதி) நடைபெறுகிறது. ஒருநாள் மட்டும் நடைபெறும் இந்த நிகழ்வில் 12 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. காலை 7.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் போட்டிகளில் சுமார் 600 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.

Read More

சென்னை: பாதாள சாக்கடை குழியில் தவறி விழுந்த சிறுவன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். சென்னை அமைந்தகரை, வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் ராஜன் (12). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கிறார். இச்சிறுவன் கடந்த 3 நாட்களுக்கு முன் விளையாடுவதற்காக, வெள்ளாளர் தெரு வழியாக நண்பர்களுடன் கிரிக்கெட் பேட்டுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையின் நடுவே, சீரமைப்பு பணிக்காக திறந்து வைக்கப்பட்டிருந்த பாதாள சாக்கடை குழியில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். உடனிருந்த நண்பர்கள் கூச்சலிடவே, அங்கிருந்தோர் விரைந்து ஏணி மூலம் சிறுவனை மீட்டனர். இந்த விபத்தில் சிறுவனின் காலில் காயம் ஏற்பட்டது. கழிவுநீர் இணைப்பு வழங்காமல் இருந்ததால் அசம்பாவிதம் எதும் நடக்கவில்லை. இந்நிலையில், சிறுவன் பாதாள சாக்கடை குழியில் விழுந்த சிசிடிவி காட்சிகள் நேற்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More

புதுடெல்லி: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபின் அதிகாரப்பூர்வ யூடியூப் உட்பட 17 சேனல்களை முடக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், பாகிஸ்தானுக்கு தொடர்புள்ளதாக கூறப்படும் நிலையில் அந்த நாட்டுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தானைச் சேர்ந்த யூடியூப் சேனல்களை இந்தியாவில் முடக்க எடுக்கப்படும் தொடர் நடவடிக்கையில் அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபின் அதிகாரப்பூர்வ சேனலும் சிக்கியுள்ளது. இதனுடன் சேர்த்து மேலும் 16 முக்கிய பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதில், டான், சாமா டிவி, ஏஆர்ஒய் நியூஸ், ஜியோ நியூஸ், போல் நியூஸ் உள்ளிட்டவையும் அடங்கும். இவற்றின் மொத்த சப்ஸ்கிரைபர் எண்ணிக்கை 63 மில்லியன். இந்தியா மற்றும் அதன் பாதுகாப்பு படைகளை இலக்காக வைத்து ஆத்திரமூட்டும், வகுப்புவாத உணர்வுப்பூர்வமான உள்ளடக்கம்…

Read More

மாட்ரிட்: ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்றில் நடப்பு சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியா டெக், 4-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காஃபை எதிர்த்து விளையாடினார். 64 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் கோகோ காஃப் 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரை இறுதியில் பெலாரஸின் அரினா சபலென்கா, உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவை எதிர்த்து விளையாடினார். இதில் அரினா சபலென்கா 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இறுதிப் போட்டியில் கோகோ காஃப் – அரினா சபலென்கா பலப்பரீட்சை நடத்துகின்றனர். ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 15-ம் நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூட் 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவை…

Read More

சென்னை: சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு வரும் 7-ம் தேதி தேரோட்டமும், 10-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. தொண்டை மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று சைதாப்பேட்டை சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோயில். சுமார் 450 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் சித்திரை பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்தவகையில், இந்தாண்டு சித்திரை பெருவிழா நேற்று முன் தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து, காலை 10 மணிக்கு அஸ்தமானகிரி விமான புறப்பாடு, நூதன புஷ்ப மாவடி சேவை நடைபெற்றது. நாதஸ்வரம், தேவார இன்னிசை: 2-ம் நாளான நேற்று சூரிய விருத்தம், சந்திர பிறை நிகழ்வு நடந்தது. 3-ம் நாளான இன்று அதிகார நந்தி சேவையும், மே.5-ம் தேதி மகா அபிஷேகம், வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலாவும் நடைபெறுகிறது. சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே.7-ம் தேதி காலை 6 மணிக்கு…

Read More