Author: admin

சென்னை: தமிழகத்தில் நாளை (மே 4) ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், மே 6-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 3) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே 4ம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான…

Read More

நாம் அனைவரும் நீண்ட காலம் வாழ விரும்புகிறோம்; எங்கள் ஆசை வழக்கமாக அன்பிலிருந்து உருவாகிறது (உங்கள் குழந்தைகள் குடியேறியதைப் பார்த்து, பேரக்குழந்தைகள் செழித்தோங்குகிறார்கள், நீங்கள் அதிர்ஷ்டசாலி என்றால், பெரிய பேரக்குழந்தைகள் கூட!) இப்போது, ​​கடந்த சில தசாப்தங்களாக மருத்துவ அறிவியல் நீண்ட ஆயுட்காலம் வழிவகுத்திருந்தாலும், 100 வயதை எட்டியவர்கள் இன்னும் ஒரு பெரியவர்கள் மட்டுமே, எனவே, உலகம் முழுவதிலுமிருந்து கவனத்தை ஈர்க்கிறார்கள். இப்போது, ​​எத்தேல் கேடர்ஹாம் உலகின் மிகப் பழமையான பெண்ணாக மாறியுள்ளது, இந்த ஆண்டு 115 வயதைத் தொட்டது. ஆனால் அவள் என்ன நீண்ட ஆயுளுக்கு ரகசியம்? ஆழமாக தோண்டுவோம் …எத்தேல் கேட்டர்ஹாம்: கடிகாரத்தைத் திருப்புதல்எத்தேல் ஆகஸ்ட் 21, 1909 அன்று இங்கிலாந்தின் ஹாம்ப்ஷயரில் உள்ள ஷிப்டன் பெல்லிங்கரில் பிறந்தார். அவர் தனது இளமை பருவத்தில் இந்தியாவில் ஆயாவாக பணியாற்றினார், பின்னர் ஒரு பிரிட்டிஷ் இராணுவ மேஜரை மணந்தார். இங்கிலாந்துக்கு இடம் பெயர்வதற்கு முன்பு ஹாங்காங் மற்றும் ஜிப்ரால்டர் போன்ற…

Read More

புதுடெல்லி: பாகிஸ்தானில் இருந்து நேரடியாக அல்லது மறைமுகமாக என அனைத்துவித இறக்குமதிகளுக்கும் இந்தியா உடனடி தடைவிதித்துள்ளதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல் இந்திய துறைமுகங்களிலும் பாகிஸ்தான் கப்பல்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பின் படி, “மறுஉத்தரவு வரும் வரை பாகிஸ்தானில் உற்பத்தியாகும் பொருட்கள் அல்லது அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு உடனடியாக அமலாகும் வகையில் தடைவிதிக்க ஏதுவாக வெளிநாட்டு வர்த்தக கொள்கையில் புதிய திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொதுநலனை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாக். கப்பல்களுக்கும் தடை: அதேபோல், கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் பிறப்பித்துள்ள மற்றொரு உத்தரவில் பாகிஸ்தான் கொடியை தாங்கிய எந்தவொரு கப்பலும் இந்திய துறைமுகங்களுக்குள் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில், “இந்திய சொத்துக்கள், சரக்கு மற்றும் உள்கட்டமைப்பை பாதுகாக்கும் வகையில், வணிகக் கப்பல் சட்டம் 1958, பிரிவு 411-ன் கீழ் உடனடியாக அமலுக்கு வரும்படி இந்த…

Read More

சென்னை: தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பெரியார் பல்கலைக்கழகம் நடத்திய மாணவர் சேர்க்கை, கட்டணக் கொள்ளை ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்), பி.எஸ்.சி (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்) ஆகிய புதிய பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை அறிவிக்கை வெளியிடப் பட்டிருக்கிறது. பெரியார் பல்கலைக்கழகத்திற்கு அதிகாரம் இல்லாத பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பாடங்களை நடத்துவது மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் செயலாகும். இது கண்டிக்கத்தக்கது. இம்மெர்சிவ் தொழில்நுட்பம் சார்ந்த இரு பட்டப்படிப்புகளை நடத்த தனியார் நிறுவனங்களிடமிருந்து பெரியார் பல்கலைக்கழகம் கடந்த மாதம் விருப்பம் கோரியிருந்தது. அப்போதே இப்பாடப்பிரிவுகளை நடத்த பெரியார் பல்கலைக்கழகத்திற்கு அதிகாரம் இல்லை என்பதை சுட்டிக்காட்டியிருந்த நான், இந்த சிக்கலில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு மாணவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவு…

Read More

இரத்த அழுத்தம் உங்கள் தமனிகளின் சுவர்களுக்கு எதிராக இரத்தத்தை பரப்பும் சக்தி. இது பாதரசத்தின் மில்லிமீட்டரில் அளவிடப்படுகிறது (மிமீ எச்ஜி) மற்றும் பொதுவாக இரண்டு எண்களாக வெளிப்படுத்தப்படுகிறது: சிஸ்டாலிக் அழுத்தம் (மேல் எண், இதயம் துடிக்கும் போது அழுத்தம்) மற்றும் டயஸ்டாலிக் அழுத்தம் (கீழ் எண், துடிப்புகளுக்கு இடையிலான அழுத்தம்). இரத்த அழுத்தம் பெரிதும் மாறுபடும், மேலும் உயர் இரத்த அழுத்தம் (உயர் இரத்த அழுத்தம்) அல்லது குறைந்த இரத்த அழுத்தம் (ஹைபோடென்ஷன்) என தன்னை முன்வைக்க முடியும். இரண்டு நிபந்தனைகளும் சுகாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்றாலும், குறைந்த பிபி ஒரு சிறிய வழக்கு பொதுவாக அதிக அக்கறை காட்டாது, இருப்பினும் அதிக பிபியால் பாதிக்கப்படுபவர்கள் எப்போதும் தங்கள் பிபி கண்காணிக்க வேண்டும்.ஆரோக்கியமான நபர்களில், இரத்த அழுத்தம் பொதுவாக 120/80 மிமீ எச்.ஜி.க்கு குறைவாக கருதப்படுகிறது, இருப்பினும் இது வயதுக்கு ஏற்ப மாறுபடும். ஹை பிபி இதய நோய்கள், பக்கவாதம் மற்றும்…

Read More

கன்னடம் பேசும் மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக பிரபல பாடகர் சோனு நிகம் மீது கன்னட அமைப்பைச் சேர்ந்தவர்கள், காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். சமீபத்தில் பெங்களூருவில் பாடகர் சோனு நிகமின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சோனு நிகம் மேடையில் பாடிக் கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவர் கன்னடத்தில் ஒரு பாடல் பாடும்படி கேட்டார். அப்போது பாடுவதை நிறுத்திவிட்டு பேசிய சோனு நிகம், “என்னுடைய வாழ்க்கையில், நான் பல மொழிகளில் பாடல்களைப் பாடியிருக்கிறேன். ஆனால், நான் பாடிய சிறந்த பாடல்கள் கன்னட மொழியில்தான். நான், உங்கள் ஊருக்கு வரும்போதெல்லாம், நிறைய அன்பைக் கொண்டுவருகிறேன். நாங்கள் பல இடங்களில் பல நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். கர்நாடகாவில் நாங்கள் நிகழ்ச்சியை நடத்தும்போதெல்லாம், உங்கள் மீது மிகுந்த மரியாதையுடன் வருகிறோம். நீங்கள் என்னை உங்கள் குடும்பத்தைப் போலவே நடத்தினீர்கள். ஆனால், என்னுடைய கரியர் அளவுக்கு வயது இல்லாத ஒரு பையன் கன்னடத்தில் பாடச் சொல்லி என்னை மிரட்டுவது எனக்குப்…

Read More

சென்னை: “கல்வி உரிமைச் சட்டத்தின்படி மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்குவதையே நிறுத்தி விட அரசு முடிவு செய்திருப்பதாக பரவும் செவிவழிச் செய்திகள் மக்களின் ஐயத்தையும், அச்சத்தையும் அதிகரிக்கின்றன. எனவே மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கையை உடனடியாக வெளியிட்டு, விண்ணப்பங்களையும் பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஒதுக்கீடு செய்யப்படும் 25% இடங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான அறிவிக்கை இன்னும் வெளியிடவில்லை. மே மாதம் பிறந்து, பள்ளிகளுக்கான கோடை விடுமுறை தொடங்கிவிட்ட நிலையில். மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்னும் பெறப்படாதது கண்டிக்கத்தக்கது. 2009-ஆம் ஆண்டின் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி அனைத்து தனியார் பள்ளிகளிலும், கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசு பள்ளிகளிலும் 25% இடங்கள் ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்தப் பிரிவில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கான கட்டணத்தை மத்திய, மாநில அரசுகளே…

Read More

நாய்கள் குரைக்கின்றன, அவர்கள் தொடர்பு கொள்ளும் முக்கிய வழிகளில் இதுவும் ஒன்றாகும். ஆனால் அவற்றின் குரைப்பது வழக்கத்திற்கு மாறாக அதிகமாகவோ அல்லது கிட்டத்தட்ட இடைவிடாமல் மாறும் போது, ​​அது வெறுப்பாகவும், குழப்பமாகவும், பல செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு கவலையின் அறிகுறியாகவும் இருக்கலாம். நாய்கள் மனிதர்களை விட மிகப் பெரிய அளவிலான செவிப்புலன் அதிர்வெண்ணைக் கொண்டுள்ளன, எனவே எங்களுக்கு “சத்தம்” என்று தோன்றுவது பெரும்பாலும் அவர்களுக்கு அர்த்தத்தை சுமக்கிறது. ஒரு நாயின் பட்டை உற்சாகம், பதட்டம், சலிப்பு அல்லது அவற்றின் சூழலில் தூண்டுதல்களுக்கு பதிலளிக்கும் அடையாளமாக இருக்கலாம். ‘ஏன்’ என்பதைத் தேடுவதில் சரியான காரணம் உள்ளது.அதிகப்படியான குரைப்பைப் புரிந்துகொள்வது நாய் அமைதியாக இருப்பதைப் பற்றியது அல்ல, இது நடத்தைக்கு என்ன காரணம் என்பதை அடையாளம் காண்பது மற்றும் ஆரோக்கியமான மற்றும் ஆதரவான வழியில் அதற்கான தீர்வைத் தேடுவது பற்றியது. மனிதர்களைப் போலவே, நாய்களுக்கும் உணர்ச்சி மற்றும் உடல் தேவைகள் உள்ளன, அவற்றின் ஒலிகள் அவர்களுக்குள்…

Read More

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதல் (சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்) நடத்தியதற்கு ஆதாரம் ஏதும் இல்லை, அதை யாரும் பார்க்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி சரண்ஜித் சிங் சன்னி கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு பாஜக கடும் எதிர்வினை ஆற்றியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரான சரண்ஜித் சிங் சன்னி பங்கேற்றார். அப்போது பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடந்து 10 நாட்களான நிலையில் பாகிஸ்தானியர்களின் விசாக்களை ரத்து செய்வது, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வது மாதிரியான நடவடிக்கை அர்த்தமற்றது என அவர் கூறியுள்ளார். “பஹல்காம் தாக்குதல் நடந்து 10 நாட்கள் ஆகிறது. அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொள்ளும் பதிலடியை பார்க்க ஒட்டுமொத்த தேசமும் காத்துக் கொண்டுள்ளது. 56 இன்ச் மார்பு எப்போது செயலில் இருக்கும் என மக்கள்…

Read More

இயக்குநர் மணிரத்னம் படத்தை மட்டும் சரியாக முடித்துக் கொடுப்பது ஏன் என்று நடிகர் சிம்பு பேட்டியொன்றில் பேசியிருக்கிறார். மணிரத்னம் படத்தை மட்டும் சரியாக முடித்துக் கொடுத்துவிடுவார் சிம்பு என்று திரையுலக வட்டாரத்தில் ஒரு பேச்சு இருக்கிறது. இதர இயக்குநர்களின் படங்களுக்கு சரியான நேரத்துக்கு வரமாட்டார் என்று சொல்வார்கள். இந்தப் பேச்சுகளுக்கு பேட்டியொன்றில் பதிலளித்துள்ளார் சிம்பு. அதில் சிம்பு பேசும்போது, “மணி சார் படம் என்றால் சரியாக போய்விடுகிறீர்கள், அவர் மீது பயமா, அவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா என்றெல்லாம் கேட்கிறார்கள். அவர் மீது பயமெல்லாம் இல்லை. எனக்கு அவரை அவ்வளவு பிடிக்கும். அவருடைய படப்பிடிப்புக்கு ஒரு நாள் கூட தாமதமாகச் சென்றதில்லை. சில நாட்கள் அவருக்கும் முன்பே சென்றிருக்கிறேன். அதற்குக் காரணம் என்னவென்றால், நான் ஒரு நடிகன். ஒரு தயாரிப்பாளர், இயக்குநரை நம்பி நடிக்கப் போகிறோம் என்றால், சொன்ன நேரத்தில் படத்தை எடுக்க வேண்டும். இயக்குநர் சரியான நேரத்துக்கு வந்தால் மட்டுமே நடிகர்கள்…

Read More