Author: admin

சினிமாவுக்கு என் முழு பலத்தையும் கொடுப்பேன் என்று கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது நடிகர் விக்ரம் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. அதில் 2022-ம் ஆண்டுக்கான நடிகருக்கான கலைமாமணி விருது பெறவுள்ளார் விக்ரம் பிரபு. இந்த விருது வென்றது குறித்து விக்ரம் பிரபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “2022-ம் ஆண்டிற்கான கலைமாமணி விருதை தமிழக அரசிடமிருந்து பெறுவதில் நான் பெருமையும், பணிவும் அடைகிறேன். இந்த அங்கீகாரத்துக்காக அரசுக்கும், நடுவர் குழுவுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் குடும்பத்தினர், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சக ஊழியர்கள், நலம் விரும்பிகள் மற்றும் என் பார்வையாளர்கள் – உங்கள் நிலையான அன்பு மற்றும் ஊக்கத்துக்கு நன்றி. இந்த அங்கீகாரம் எனக்குச் சொந்தமானது போலவே உங்களுக்கும் சொந்தமானது. சினிமா எனக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறது. நான் தொடர்ந்து அதற்கு என் முழு பலத்தையும்…

Read More

சென்னை: ‘திமுகவின் தோல்வி மாடல் அரசு ரூ.4.5 லட்சம் கோடி கடன் வாங்கி தமிழகத்தின் நிதி நிலைமையை படுபாதாளத்தில் தள்ளிவிட்டது’ என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் கடன் சுமையை வரலாறு காணாத அளவுக்கு ஏற்றிவிட்டு, இந்திய அளவில் கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிவிட்டு, வெற்று விளம்பரங்கள் மூலம் தமிழ்நாட்டு மக்களை நான்கரை ஆண்டுகளாக ஏமாற்றி வரும் விடியா திமுக ஃபெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசு, ஆகஸ்ட் 2025-க்கான மாநில கணக்கு தணிக்கை அறிக்கையின்படி, ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் நிதிச் சுமையில் தள்ளாடி வருவதை தெளிவாகக் காண முடிகிறது. 2021-ல் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் மாநிலத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், கடன் சுமையை குறைக்கவும் ஆலோசனை வழங்க இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட பொருளாதார வல்லுநர்…

Read More

ஆப்டிகல் மாயைகள் மிகவும் வெளிப்படையான விவரங்களைக் கூட புறக்கணிக்க நம் மனதை முட்டாளாக்கும் அற்புதமான திறனைக் கொண்டுள்ளன. அவை நம் கண்பார்வை மட்டுமல்ல, நமது பொறுமை, கவனம் மற்றும் விவரங்களுக்கு கவனம் செலுத்துகின்றன. இங்கே படம் ஒரு அழகான ஆனால் தந்திரமான ஒன்றாகும். முதல் பார்வையில், இது வண்ணமயமான ஆடைகளை அணிந்த அழகான சிறிய நாய்கள் நிறைந்த ஒரு அழகான வடிவத்தை ஒத்திருக்கிறது, இவை அனைத்தும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத் தோன்றுகின்றன. ஆனால் அவற்றில் ஒரு விசித்திரமான நாய்க்குட்டி மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறது, அதைக் கண்டுபிடிக்க நீங்கள் நெருக்கமாகப் பார்க்க முடிந்தால்.படம்: பிழைத்திருத்தம் 309/ ரெடிட்இந்த புதிர் ஒரு விளையாட்டுத்தனமான காட்சி பணி மட்டுமல்ல, இது கண்காணிப்பு திறன்களின் உண்மையான சவால். அதே வடிவங்கள் மற்றும் வண்ணங்களின் சிந்தனையுடன் மீண்டும் மீண்டும் வருவது ஊடுருவும் நபரைக் கண்டறிவது மிகவும் கடினமானது. ஒற்றைப்படை நாய்க்குட்டி குழுவில் நன்கு உருமாற்றம் கொண்டுள்ளது, மேலும் உங்களால் முடிந்தவரை…

Read More

புதுடெல்லி: சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டதற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லடாக் மக்களுக்கு பாஜக தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது என்று குற்றம்சாட்டினார். இது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், “லடாக்கில் நிலைமையை அரசு மோசமாக கையாண்டதையும், அதைத் தொடர்ந்து கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டதையும் காங்கிரஸ் கடுமையாக கண்டிக்கிறது. லடாக் மக்களின் விருப்பங்களுக்கு பாஜக தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. ஓர் ஆண்டுக்கும் மேலாக, லடாக்கில் கொந்தளிப்பு நிலவுகிறது, அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் சேர்க்கப்பட வேண்டும் என்ற லடாக் மக்களின் கூக்குரல்களை பொறுமையாகக் கேட்பதற்குப் பதிலாக, மோடி அரசு வன்முறையால் பதிலளிக்கிறது. பாஜக இந்தப் பகுதிக்கு ஆறாவது அட்டவணை அந்தஸ்து வழங்குவதாக உறுதியளித்து இருந்தது. துரதிருஷ்டவசமாக அந்த வாக்குறுதி முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் லடாக்கில் அமைதியைத்…

Read More

டோவினோ தாமஸ் நடிப்பில் ‘லோகா: சாப்டர் 2’ உருவாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். டாமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான படம் ‘லோகா: சாப்டர் 1’. துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வசூல் சாதனை புரிந்தது. கேரளாவில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. இதில் டோவினோ தாமஸ், துல்கர் சல்மான் உள்ளிட்டோர் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இதன் தொடர்ச்சியாக அடுத்டுத்த பாகங்கள் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்திருந்தது. தற்போது இதன் 2-ம் பாகத்தினை துல்கர் சல்மான் அறிவித்துள்ளார். இதில் டோவினோ தாமஸ் நாயகனாக நடிக்கவிருப்பதாக அறிவித்து வீடியோ பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார். ’லோகா: சாப்டர் 1’ படத்தில் பணிபுரிந்த அதே தொழில்நுட்பக் குழுவினர் தான் இதிலும் பணிபுரிய இருக்கிறார்கள். விரைவில் படப்பிடிப்பினை தொடங்கி, அடுத்தாண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. முதல் பாகம் போல் அல்லாமல், இப்படத்தினை அதிக பொருட்செலவில் தயாரிக்க…

Read More

சென்​னை​யில் அண்​மைக் கால​மாக தெரு நாய்​கள் தொல்​லை​யும், நாய் கடிப்​ப​தால் பரவும் ரேபிஸ் நோயால் பாதிப்​போர் எண்ணிக்​கை​யும் அதி​கரித்து வரு​கின்​றன. சில தினங்​களுக்கு முன்பு ராயப்​பேட்​டையை சேர்ந்த ஒரு​வர் ரேபிஸ் நோயால் பாதிக்​கப்​பட்டு உயி​ரிழந்​தார். இது​போன்ற நாய்​கள் தொல்லை தொடர்​பாக மாநகரின் பல்​வேறு பகு​தி​களை சேர்ந்த பொது​மக்​கள் கூறிய​தாவது: நாய் கடித்​தால் காலில் கடும் வலி ஏற்​படு​கிறது. இது தொடர்​பாக மாநக​ராட்​சி​யிடம் புகார் தெரி​வித்​தால், கால​தாமத​மாக வந்​து, நாயை பிடித்​துச் சென்​று, கருத்​தடை செய்​து, ஒரு வாரத்​துக்கு பிறகு, அதே இடத்​தில் விட்​டு​விட்​டு, எங்​கள் புகார் மீது தீர்வு கண்​டு​விட்​ட​தாக புகாரை முடித்​து​விடு​கின்​றனர். அந்த நாய் தெரு​வில் செல்​வோரை மீண்​டும் விரட்டி சென்று அச்​சுறுத்​துகிறது. தற்போதுள்ள சட்​டங்​கள் நாய்​களுக்கு பாது​காப்பை வழங்​கு​கின்​றன. மனிதர்​களுக்கு பாது​காப்​பற்ற நிலை உள்​ளது. பெரும்​பாலான பகு​தி​களில் உள்ள நாய்​கள் கடிக்​கா​விட்​டாலும் குறைப்​பது, விரட்டி அச்​சுறுத்​து​வது அதி​க​மாக உள்​ளது. இயற்​கை​யின் படைப்​பில் ஒவ்​வொரு உயி​ரினத்​தின் இனப்பெருக்​கத்​தை​யும் கட்​டுப்​படுத்த ஒரு…

Read More

நாள் முழுவதும் நீர் உட்கொள்ளலை சீராக வைத்திருப்பது முக்கியம், இருப்பினும், ஒரு ஷோவருக்கு முந்தைய நீர் குறிப்பாக நன்றாக வேலை செய்ய முடியும், ஏனெனில் இது திடீர் இருதய மாற்றங்களுக்கான அமைப்பை முதன்மையாக மாற்றுகிறது. இரத்த அழுத்தத்தில் திடீர் சொட்டுகளுக்கு பாதிக்கப்படக்கூடியவர்கள் தினசரி சடங்காக பொழிவதற்கு முன்பு குடிநீரை மாற்றியமைக்க வேண்டும். . குடிநீர் ஒரு “அழுத்தும் விளைவை” தூண்டுகிறது, தற்காலிகமாக இரத்த அழுத்தத்தை உயர்த்துகிறது மற்றும் புழக்கத்தை மேம்படுத்துகிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. அத்தகைய குழுக்களுக்கு, ஒரு மழைக்கு முன் குடிநீர் ஒரு பாதுகாப்பு இடையகமாக செயல்பட முடியும்.

Read More

அராரியா(பிஹார்): பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், மாநிலத்தில் இருந்து ஊடுருவல்காரர்கள் விரட்டி அடிக்கப்படுவார்கள் என்று பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார். பிஹாரில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அராரியா நகரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, “பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே ராகுல் காந்தி மற்றும் லாலு பிரசாத் யாதவின் ஒரே நோக்கம். லாலு தனது மகனை முதல்வராக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த தேர்தலை முக்கியமானதாகக் கருதுகிறார். ஆனால், பாஜகவினருக்கு அப்படியல்ல. பாஜக தொண்டர்களைப் பொறுத்தவரை, ஊடுருவல்காரர்களை விரட்டுவதற்கான தேர்தல் இது. மூன்றில் இரண்டு பங்கு வெற்றியுடன் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பதை நீங்கள் உறுதி செய்யுங்கள். பிஹார் எனும் புனித பூமியில் இருந்து இந்த ஊடுருவல்காரர்களை விரட்டும் பணியை பாஜக செய்யும் என்று…

Read More

’எஸ்.டி.ஆர் 49’ படத்தின் இசையமைப்பாளராக அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் ‘எஸ்.டி.ஆர் 49’. முழுக்க வடசென்னை பின்னணியில் இக்கதையினை உருவாக்கி இருக்கிறார் வெற்றிமாறன். தாணு தயாரிக்கவுள்ள இப்படத்தின் ப்ரோமோ அக்டோபர் 4-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் இசையமைப்பாளராக அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. வெற்றிமாறன் படங்களுக்கு இதுவரை அனிருத் இசையமைத்தது இல்லை. முதன்முறையாக வெற்றிமாறன் – அனிருத் கூட்டணி இப்படத்தின் மூலம் உருவாகும் எனத் தெரிகிறது. இந்தக் கூட்டணியை சிம்புவே பேச்சுவார்த்தையின் மூலம் உருவாக்கி இருக்கிறார். சம்பளப் பேச்சுவார்த்தை முடிந்தபின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என தெரிகிறது. மேலும், ப்ரோமோ வீடியோவின் மூலம் அனிருத் தான் இசையமைப்பாளர் என்று அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இதுமட்டுமன்றி, இப்படத்தினை தாணு மட்டுமன்றி அட்மேன் பிலிம் ஆர்ட்ஸ் நிறுவனமும் தயாரிக்கும் என தெரிகிறது. சிம்புவுடன் நீண்ட மாதங்களாக நடைபெற்ற சம்பளப் பேச்சுவார்த்தையின் முடிவில், இப்படத்திலிருந்து…

Read More

விழுப்புரம்: திமுகவுக்கு எதிரான வாக்குகளைதான் தவெக தலைவர் விஜய் பிரிப்பார் என மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார். விழுப்புரத்தில் இன்று (செப்.27) நடைபெற்ற அமைதியை நோக்கி வாழ்வியல் கண்காட்சியில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக அரசு கொண்டு வந்த வக்பு திருத்தச் சட்டத்தை திமுக உட்பட இண்டியா கூட்டணி கட்சியினர், இரு அவைகளிலும் மிகக் கடுமையாக எதிர்த்தார்கள். இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால தடையை உச்ச நீதிமன்றம் விதித்தது. ஒரு சில நல்ல அம்சங்கள் மட்டும் உள்ளது. பல பாதகமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த சூழலில் வக்பு வாரியத்தின் பதவிக் காலம் முடிந்துவிட்டது. புதிய வக்பு வாரியத்தை அமைக்க வேண்டிய நிலை உள்ளது. வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்த வழக்குகளுக்கு இறுதி தீர்ப்பு வரும் வரை, புதிய வக்பு வாரியம் அமைப்பதை நிறுத்தி வைப்பதாக தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார். இதற்காக…

Read More