கரூர்: “திமுக குடும்பத்துக்கு ஊழல் பணத்தை கொண்டு சேர்க்கும் பணியில், ஏடிஎம் ஆக மாஜி மந்திரி செயல்பட்டு வருகிறார்” என்று செந்தில் பாலாஜியை மறைமுகமாக குறிப்பிட்டு, தவெக தலைவர் விஜய் பேசினார்.. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று இரவு 7 மணி அளவில் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் தனது பிரச்சார உரையில், “கரூர் அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஊர். இங்கு ஜவுளித் தொழில் சார்ந்த சந்தை மிகவும் பிரபலம். இப்படி கரூரை குறித்து பெருமையாக சொல்லிக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. ஆனால், அண்மைக் காலமாக கரூர் என்று சொன்னாலே இந்தியா முழுவதும் ஒரே ஒருவரின் பெயர்தான் பிரபாலமாக அறியப்படுகிறது. அதற்கு யார் காரணம்? அது யார் என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். கரூர் மாவட்டம் சார்ந்து தற்போதைய ஆட்சியாளர்கள் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்திருந்தனர். அதுகுறித்து கொஞ்சம் பார்க்கலாம். ‘கரூரில் பேரீச்சை வளர்க்க சிறப்பு செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின்…
Author: admin
சாகச அனுபவத்தை நாடுகிறீர்களா? சாகசத்தையும் இயற்கை அழகையும் நாடுபவர்களுக்கு சிக்கிம் சரியான இடமாகும். சிக்கிம் மலை சிகரங்கள், பனிப்பாறைகள், உயர் உயர ஏரிகள் மற்றும் பள்ளத்தாக்குகளிலிருந்து மாறுபட்ட வகைகளைக் கொண்டுள்ளது, அவை முற்றிலும் மூச்சடைக்கின்றன. மலையேற்றங்கள் முதல் உயர் சிகரங்கள் வரை அழகான ஆறுகளில் ராஃப்டிங் வரை, சிக்கிம் வழங்க வேண்டிய நிறைய இருக்கிறது.சிக்கிமில் கட்டாயம் முயற்சிக்கும் சாகச அனுபவங்களைப் பார்ப்போம்:மலையேற்ற பயணங்கள்கஞ்சென்ஜுங்கா மலையின் சில அதிர்ச்சியூட்டும் காட்சிகளை வழங்கும் கோச்சா லா மற்றும் டோங்ரி ட்ரெக்ஸ் போன்ற இமயமலை வழியாக சிக்கிம் நிறைய மலையேற்ற வழிகளை வழங்குகிறார், மேலும் இந்த காடுகளின் வழியாக ஒரு மலையேற்றத்தில் இருக்கும்போது, அவர்கள் பசுமையான காடுகள், பனிப்பாறை ஏரிகள் மற்றும் மாறுபட்ட ஃப்ளோரா மற்றும் விலங்கினங்களைக் காண்பார்கள். மேனம் ஹில், கிரீன் லேக் மற்றும் சிங்கலிலா ரிட்ஜ் போன்ற பல மலையேற்றப் பாதைகளை சிக்கிம் கொண்டுள்ளது. ட்ரெக்கர்கள் இங்குள்ள பண்டைய மடங்கள் மற்றும் தொலைதூர…
லே: லடாக்கில் கைது செய்யப்பட்ட பருவநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக்கிற்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பதாகவும், அவர் வங்கதேசம் சென்று வந்ததாகவும் லடாக்கின் காவல்துறை இயக்குநர் எஸ்டி சிங் ஜம்வால் தெரிவித்தார். லேவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய டிஜிபி எஸ்டி சிங் ஜம்வால், “செப்டம்பர் 24 அன்று ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்தது. நான்கு பேர் உயிரிழந்தனர். ஏராளமான பொதுமக்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் துணை ராணுவ அதிகாரிகள் காயமடைந்தனர். மத்திய அரசுடன் நடந்து கொண்டிருக்கும் பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்க இந்த முயற்சிகள் நடந்தன. இதில் சில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்; அவர்களின் நம்பகத்தன்மையிலும் கேள்விக்குறி உள்ளது. அதில் முதன்மையான பெயர் சோனம் வாங்சுக். அவர் இதுபோன்ற கருத்துகளை வெளியிட்டு பேச்சுவார்த்தையை தடம் புரளச் செய்துள்ளார். அக்டோபர் 6-ம் தேதி உயர் அதிகாரக் குழு கூட்டம் மற்றும் செப்டம்பர் 25-26 தேதிகளில் முதற்கட்ட கூட்டங்களுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் செப்டம்பர் 10-ம் தேதி,…
‘தி பாரடைஸ்’ படத்திலிருந்து மோகன் பாபுவின் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கத்தில் நானி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தி பாரடைஸ்’. இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதன் போஸ்டர்கள், உருவாகும் விதம் வீடியோக்கள் உள்ளிட்டவை இணையத்தில் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றன. இப்படத்தில் மோகன் பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், படக்குழு உறுதிப்படுத்தாமல் இருந்தது. தற்போது ’ஷிகஞ்சா மாலிக்’ என்ற கதாபாத்திரத்தில் மோகன் பாபு நடிக்கவிருப்பதாக அறிவித்துள்ளது படக்குழு. மேலும், படத்திலிருந்து அவருடைய லுக்கை போஸ்டராக வெளியிட்டுள்ளார்கள். இதற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நீண்ட காலமாக பெரிதாக வெளி படங்களில் நடிக்காமல் இருந்தார் மோகன் பாபு. ஆனால், ஸ்ரீகாந்த் ஓடிலா கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே ‘தி பாரடைஸ்’ படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். தற்போது நானி, மோகன் பாபு…
பெருங்களத்தூரில் கண்துடைப்புக்காக கட்டப் பட்டுள்ள உரக்கிடங்கால் ரூ.1 கோடி மதிப்பிலான மக்களின் வரிப் பணம் வீணாகியுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுத்து உரக்கிடங்கை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தாம்பரம் மாநகராட்சி, 4-வது மண்டலம், பெருங்களத்தூர் பகுதியில் உள்ள 54, 55-வது வார்டுகளில் சேகரமாகும் குப்பை, கன்னடப் பாளையம் கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகிறது. குப்பைகளை கொண்டு உரம் தயாரிக்க ஏதுவாக 55-வது வார்டில் உள்ள மெட்ரோ கிளாசிக் ஹவுசிங் லேஅவுட்டில் உள்ள அரசு இடத்தில் ரூ.50 லட்சம் செலவில் உரக்கிடங்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டது. குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்க சுமார் 50 லட்சத்துக்கும் மேல் செலவு செய்து இயந்திரங்கள் வாங்கப்பட்டு பயன்படுத்தப்படாமல் வைக்கப்பட்டுள்ளன. கிடங்கு இருக்கும் இடத்தை சுற்றி புதர் மண்டி காடுபோல் காட்சியளிக்கிறது. இந்த இடத்துக்கு செல்வதற்கு போதிய சாலை வசதி ஏற்படுத்தவில்லை. அதனால் உரக்கிடங்கை ஒரு வருடத்துக்கு மேலாக பயன்பாட்டுக்கு…
கல்லீரல் நோய்கள் அதிகரித்து வருவதால், குறிப்பாக இளைஞர்களிடையே, சமையல் எண்ணெய் போன்ற உணவுத் தேர்வுகள் முக்கியமானவை. சில சமையல் எண்ணெய்கள் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திற்கு எதிராக பாதுகாப்பை வழங்கும் அதே வேளையில், மற்றவர்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை அழிக்கிறார்கள். கல்லீரல் நோய்களுடன் போராடும் நபர்கள் சமையல் எண்ணெயைத் தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் சேர்க்கும் எண்ணெய் உங்கள் கல்லீரலை தீவிர ஆபத்தில் ஆழ்த்தக்கூடும். உங்கள் சமையல் தேவைகளுக்கு எந்த எண்ணெய் வாங்க வேண்டும் என்று யோசிக்கிறீர்களா? மேலும் பார்க்க வேண்டாம். கல்லீரல் நோய்கள் அதிகரித்து வருகின்றன, மது அல்லாத நோய்கள் இளைஞர்களிடையே பெருகிய முறையில் பொதுவானவை. கல்லீரல் நோயின் வளர்ச்சியில் உணவு போன்ற வாழ்க்கை முறை காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மிக முக்கியமான உணவு தேர்வுகளில் ஒன்று நீங்கள் தினமும் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் வகை. வதக்கப்பட்ட காய்கறிகளிலிருந்து மதிய உணவுக்கு நீங்கள் வைத்திருக்கும் மீன் வரை,…
கனடாவின் மிசிசாகா தீபாவளிக்கு முன்னதாக பட்டாசுக்கு முழுமையான தடையை அளிக்கிறது. (புகைப்படம்: AI) கனடாவில் உள்ள இந்து குழுக்கள் மிசிசாகாவின் முன்மொழியப்பட்ட பட்டாசுத் தடைக்கு எதிராக போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன, இது தீபாவளிக்கு முன்னதாக கனடாவில் இந்துக்களை இலக்காகக் கொண்டது. இந்து கனேடிய அறக்கட்டளை மற்றும் வட அமெரிக்காவின் இந்துக்களின் கூட்டணி மேயர் கரோலின் பாரிஷை வெளியேற்றி, பட்டாசு தடைக்கு பின்னால் காரணம் தெளிவற்றது என்று கூறினார். “ஒரு சிறிய, ஒருங்கிணைந்த குழு அமைதியின்மையைத் தூண்டுவதற்கும் புகார்களைத் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது, இப்போது ஆயிரக்கணக்கான அமைதியான கொண்டாட்டக்காரர்களை பாதிக்கும் தடையை நியாயப்படுத்த ஆயுதம் ஏந்தியுள்ளது” என்று எச்.சி.எஃப் கூறியது, அவர்கள் பட்டாசுக்கு மீதான நிரந்தர, முழு தடை பொதுக் கொள்கை அல்ல, ஆனால் “விலக்கப்பட்ட சட்டம்” என்று தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக கூறினார். “மிசிசாகா மேயர் @கரோலின்ஃபாரிஷ் மீண்டும் பட்டாசுகளை தடை செய்ய முயற்சிக்கிறார், பலவீனமான மற்றும் ஆதாரமற்ற சாக்குகளைப் பயன்படுத்துகிறார்.…
பரேலி: ‘ஐ லவ் முகம்மது’ பிரச்சாரத்தை ஆதரித்து போராட்டம் நடத்த அழைப்பு விடுத்த உள்ளூர் மதகுருவும், இத்தேஹாத்-இ-மில்லாத் கவுன்சிலின் தலைவருமான தவுகீர் ராசா கான் மற்றும் ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் உள்ள ராவத்பூரில் கடந்த 4-ம் தேதி மிலாது நபி விழா நடைபெற்றது. இதையொட்டி அந்த கிராமத்தில் ‘ஐ லவ் முகம்மது’ என்ற வாசகத்துடன் மின்சாரப் பலகை நிறுவப்பட்டது. முதல் முறையான இந்தப் பலகை மிலாது நபி ஊர்வலத்திலும் எடுத்துச் செல்லப்பட்டது. இதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் முஸ்லிம்களின் வாசகப் பலகை அகற்றப்பட்டது. இதையடுத்து வகுப்புவாதத்தை தூண்டியதாக அடையாளம் தெரியாத 15 பேர் உட்பட 24 பேர் மீது உத்தரப் பிரதேச காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்குப் பதிவு நடவடிக்கை சமூக வலைதளங்களில் வைரலானது. நபிகள் நாயகம்…
சினிமாவுக்கு என் முழு பலத்தையும் கொடுப்பேன் என்று கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது நடிகர் விக்ரம் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. அதில் 2022-ம் ஆண்டுக்கான நடிகருக்கான கலைமாமணி விருது பெறவுள்ளார் விக்ரம் பிரபு. இந்த விருது வென்றது குறித்து விக்ரம் பிரபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “2022-ம் ஆண்டிற்கான கலைமாமணி விருதை தமிழக அரசிடமிருந்து பெறுவதில் நான் பெருமையும், பணிவும் அடைகிறேன். இந்த அங்கீகாரத்துக்காக அரசுக்கும், நடுவர் குழுவுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் குடும்பத்தினர், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சக ஊழியர்கள், நலம் விரும்பிகள் மற்றும் என் பார்வையாளர்கள் – உங்கள் நிலையான அன்பு மற்றும் ஊக்கத்துக்கு நன்றி. இந்த அங்கீகாரம் எனக்குச் சொந்தமானது போலவே உங்களுக்கும் சொந்தமானது. சினிமா எனக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறது. நான் தொடர்ந்து அதற்கு என் முழு பலத்தையும்…
சென்னை: ‘திமுகவின் தோல்வி மாடல் அரசு ரூ.4.5 லட்சம் கோடி கடன் வாங்கி தமிழகத்தின் நிதி நிலைமையை படுபாதாளத்தில் தள்ளிவிட்டது’ என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் கடன் சுமையை வரலாறு காணாத அளவுக்கு ஏற்றிவிட்டு, இந்திய அளவில் கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிவிட்டு, வெற்று விளம்பரங்கள் மூலம் தமிழ்நாட்டு மக்களை நான்கரை ஆண்டுகளாக ஏமாற்றி வரும் விடியா திமுக ஃபெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசு, ஆகஸ்ட் 2025-க்கான மாநில கணக்கு தணிக்கை அறிக்கையின்படி, ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் நிதிச் சுமையில் தள்ளாடி வருவதை தெளிவாகக் காண முடிகிறது. 2021-ல் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் மாநிலத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், கடன் சுமையை குறைக்கவும் ஆலோசனை வழங்க இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட பொருளாதார வல்லுநர்…
