மென்மையான, பாசமுள்ள, மற்றும் சிறிய அளவிலான, காவலியர் கிங் சார்லஸ் ஸ்பானியல் ஒரு அமைதியான தோழரின் வரையறை. இந்த நாய்கள் அவற்றின் நட்பு மனோபாவத்திற்கு பெயர் பெற்றவை, உண்மையிலேயே அவசியமில்லை. அவர்களின் இனிமையான மற்றும் அமைதியான தன்மை காரணமாக, அவர்கள் குழந்தைகள், வயதானவர்கள் அல்லது பிற செல்லப்பிராணிகளுடன் வீடுகளில் சிறப்பாக செயல்படுகிறார்கள்.
Author: admin
சம்மன் அனுப்பாமல் யாரையும் விசாரணைக்கு அழைத்து துன்புறுத்த கூடாது என காவல் ஆய்வாளர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனக்கு எதிரான சிவில் வழக்கில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தன்னை விசாரணை என்ற பெயரில் அழைத்து எந்த வகையிலும் துன்புறுத்த கூடாது என உத்தரவிட கோரி எம்.ராஜி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது போலீஸார் தரப்பில், ‘மனுதாரருக்கு எதிரான புகார்கள் மீதான விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது. பதிலுக்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.டி.அருணன், ‘‘மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தனது இஷ்டம்போல விசாரணைக்கு வரவழைத்து மனுதாரரை துன்புறுத்தி வருகிறார்’’ என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது:லலிதாகுமாரி வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, முறையான சம்மன் இல்லாமல் யாரையும் விசாரணை என்ற…
கள்ளழகரைப் போற்றும் வகையில் மதுரையில் எம்.ஆர். புரமோட்டர்ஸ் சார்பில் ‘மண்ணதிர… விண்ணதிர… வாராரு வாராரு… கள்ளழகர் வாராரு…’ எனும் பக்திப் பாடல் வெளியீட்டு விழா மதுரை காளவாசலில் உள்ள தங்கம் கிராண்ட் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. மதுரையில் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. வரும் 10-ம் தேதி அழகர்கோவிலிலிருந்து கள்ளழகர் மதுரைக்குப் புறப்படுகிறார். 11-ம் தேதி மூன்றுமாவடியில் எதிர்சேவை நடக்கிறது. 12-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். இவ்விழாவில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பர். இந்நிலையில், கள்ளழகரை வரவேற்க எம்.ஆர். புரமோட்டர்ஸ் சார்பில் ‘மண்ணதிர… விண்ணதிர… வாராரு… வாராரு… கள்ளழகர் வாராரு’ என்ற பக்தி மணம் கமழும் புதிய பாடல் தயாராகியுள்ளது. கள்ளழகர் புகழ் பாடும் இப்பாடலுக்கு இளையவன் இசை அமைத்துள்ளார். பாடலாசிரியர் கலைக்குமார் எழுதிய பாடலை அந்தோணிதாசன் பாடியுள்ளார். இப்பாடலின் ‘பர்ஸ்ட் லுக்’ மற்றும் சிடி-க்கள் வெளியீட்டு விழா நேற்று மதுரை காளவாசல் சந்திப்பில் உள்ள தங்கம்…
மத்திய பாஜக அரசின் அச்சுறுத்தல்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம் என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். மதுரையில் ஜூன் 1-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதல்வரும், கட்சித் தலைவருமான ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. முதலில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும், மறைந்த போப் பிரான்சிஸ்க்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்: திமுக அரசின் 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது, தமிழகம் முழுவதும் 1,244 இடங்களில் திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்துவது, மதுரையில் ஜூன் 1-ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவது, அமலாக்கத் துறை போன்ற அமைப்புகளை அரசியல் பழிவாங்கலுக்கு பயன்படுத்தும்…
தவெக தலைவர் விஜய் திமுக எதிர்ப்பில் உறுதியாக இருந்து, எங்கள் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம் என்று பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் கூறினார். மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிபுரிந்த காங்கிரஸ் கட்சியோ, மத்திய அரசில் 15 ஆண்டுகளாக அங்கம் வகித்த திமுகவோ சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முயற்சிக்கவில்லை. தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு முழுமையடையும்போது தமிழகத்தில் பல்வேறு சமூகங்களுக்கு நீதி கிடைக்கும். பல சமூகங்கள் பயனடையும். அடுத்தாண்டு கணக்கெடுப்பு தொடங்கப்பட்டு, ஓராண்டில் முடிவடையும். சமூக நீதி கிடைக்கவும், சமூகங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் வழங்கவும் இந்த கணக்கெடுப்பு உதவும். பாஜக-அதிமுக கூட்டணியை பார்த்து திமுக பயப்படுகிறது. தவெக தலைவர் விஜய் திமுக எதிர்ப்பில் உறுதியாக இருந்து, எங்கள் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம். திமுவுக்கு எதிரான ஒவ்வொரு வாக்கும் எங்களுக்கு முக்கியம். எனவே, திமுவை…
ஆலங்குடி அருகே கல்லாலங்குடியில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 691 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் 40 பேர் காயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கல்லாலங்குடியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டை கோட்டாட்சியர் (பொ) அக்பர்அலி தொடங்கிவைத்தார். புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த 691 காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்குவதற்கு 250 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். காளைகள் முட்டியதில் 40 பேர் காயமடைந்தனர். அவர்களில் 10 பேர் புதுக்கோட்டை, ஆலங்குடி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டில் அவிழ்த்துவிடப்பட்ட மேலாத்தூரைச் சேர்ந்த தேவா ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான காளை பள்ளத்திவிடுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தும், திருச்சி ஏர்போர்ட் சிவா என்பவருக்கு சொந்தமான காளையின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு மரத்தில் மாட்டிக்கொண்டதால் கழுத்து நெரிபட்டும் இறந்தன. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆலங்குடி போலீஸார் செய்திருந்தனர்.
தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகளின் விவரங்களை சேகரித்து அனுப்ப பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் 3,088 உயர்நிலைப் பள்ளிகள், 3,174 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள் மற்றும் அதன் ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதை செயல்படுத்தும் விதமாக, பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும், 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள் மற்றும் அதன் ஆசிரியர்களின் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சேகரிக்க வேண்டும். அவற்றை தொகுத்து இயக்குநரகத்துக்கு 10 நாட்களுக்குள்…
தொகுக்கப்பட்ட சுகாதார பானங்கள் வழக்கமாக இல்லாத நாட்களில், எளிய வீட்டு வைத்தியம் சமையலறை அலமாரியை ஆட்சி செய்தது. இதுபோன்ற ஒரு வயதான கலவையானது சுஹாரா (உலர்ந்த தேதிகள்) மற்றும் மிஷ்ரி (ராக் சர்க்கரை). தாத்தா பாட்டிகளால் நேசிக்கப்பட்டு, அமைதியாக பல இந்திய வீடுகளின் மதிய உணவுப் பெட்டிகளில் நழுவி, இந்த ஜோடி பெரும்பாலும் ஒரு மந்திர கலவையாக கருதப்படுகிறது, குறிப்பாக வெப்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு.இந்த இரட்டையர் ஒரு பாரம்பரிய இனிப்பு விருந்தாகும் என்று கருதுவது எளிது, ஆனால் அது உண்மையில் அதன் சருமத்தின் கீழ் பல சுகாதார ரகசியங்களை மறைக்கிறது. இந்த உலர்ந்த பழம் மற்றும் சர்க்கரை படிக கலவையானது ஒவ்வொரு குழந்தையின் கோடைகால உணவிலும் ஒரு இடத்திற்கு தகுதியானது என்பதற்கான ஐந்து காரணங்கள் இங்கே.
பட கடன்: இன்ஸ்டாகிராம்/பளுதூக்குதல் பெரும்பாலான மக்களுக்கு, 70 இல் முழங்கால் மூட்டுவலி என்பது வலி நிவாரணி மருந்துகள், நடைபயிற்சி குச்சிகள் மற்றும் எச்சரிக்கையான இயக்கங்கள் என்று பொருள். ஆனால் ரோஷ்னி தேவியைப் பொறுத்தவரை, இது வேறுபட்ட ஒன்றைக் குறிக்கிறது: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம். அறிக்கையின்படி, இரண்டு முழங்கால்களிலும் அவர் கீல்வாதம் இருப்பது கண்டறியப்பட்டபோது, நாளுக்கு நாள் அவரது இயக்கம் மோசமடைந்து கொண்டிருந்தது. நிற்பது ஒரு பணியாக மாறியது, நடைபயிற்சி ஒரு தண்டனையாக உணர்ந்தது, மற்றும் படிக்கட்டுகள் கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ஆனால் அவள் 68 வயதை எட்டும்போது ஏதோ மாறியது – அது அவளுடைய மனநிலை மட்டுமல்ல.தனது மகனின் ஊக்கத்துடன், அவள் முதல் முறையாக ஒரு உடற்பயிற்சி கூடத்திற்குள் நுழைந்தாள். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் இப்போது தினமும் 60 கிலோ டெட்லிஃப்ட்ஸ், 40 கிலோ குந்துகைகள் மற்றும் 100 கிலோ கால் அச்சகங்களை செய்கிறார். அவரது கதை வயதை மீறுவதைப்…
புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானில் இருந்து அனைத்து பொருட்கள் இறக்குமதிக்கும் இந்தியா தடை விதித்துள்ளது. இருதரப்பு கடித போக்குவரத்து, இந்திய துறைமுகங்களில் கப்பல்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலையடுத்து, பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது. இதுதவிர, விசா ரத்து, அட்டாரி-வாகா எல்லை மூடல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், இந்த தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை விடுத்தார். இதன் தொடர்ச்சியாக, பாதுகாப்பு அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படை தலைமை தளபதி உள்ளிட்டோர்…