Author: admin

சென்னை: தவெக பிரச்சாரக் கூட்டத்துக்கு 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்று அனுமதி கோரப்பட்ட நிலையில், அங்கு 27 ஆயிரம் பேர் வந்ததாக பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் தெரிவித்தார். இதுகுறித்து பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் கூறியதாவது“கரூரில் நடந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தற்போது வந்த தகவல்களின் அடிப்படையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38. அதில் ஆண்கள் 12, பெண்கள் 16, குழந்தைகள் 10. இந்த சம்பவம் குறித்து தெரிந்தவுடன் காவல்துறை சார்பாக ஆலோசனை நடத்தி சம்பவ இடத்தி 2000 போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் திருச்சியிலும், திருவாரூரிலும், நாகையிலும் வந்த கூட்டத்தை மனதில் வைத்துதான் அவர்கள் கேட்டதை விட பெரிய இடமாக இருக்கும் என்றுதான் இந்த இடத்துக்கு காவல்துறை அனுமதி கொடுத்தது. இதே இடத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு மாநில கட்சி பரப்புரை செய்திருக்கிறது. அவர்கள் சொன்னது 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்பதாக. ஆனால் வந்ததோ 27 ஆயிரத்துக்கு மேல்.…

Read More

சென்னை: இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன் என்று கரூர் நெரிசல் சம்பவத்துக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன். தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்” இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார். இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை… — TVK Vijay (@TVKVijayHQ) September 27, 2025 கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது…

Read More

சென்னை: கரூரில் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நடந்த உயிரிழப்புகள் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “கோர காட்சிகள் நம்மை கதிகலங்க வைக்கிறது. யாருக்கு ஆறுதல் சொல்வது எப்படி தேற்றுவது என தெரியாமல் தவிக்கிறேன். கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும். நண்பர்களுக்கும் , உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்” என்று தெரிவித்துள்ளார். கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் கரூர் மாநகரை கண்ணீரில் மூழ்கடித்துள்ளது. இந்தச் சம்பவத்துக்கு பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Read More

புதுடெல்லி: தவெக தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 31 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் போன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் துயரச் செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது இரங்கல் செய்தியில், “தமிழ்நாட்டின் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த துயர சம்பவத்தால் ஆழ்ந்த வேதனை அடைகிறேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரத்தைத் தாங்கும் வலிமையையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.…

Read More

கரூர்: கரூரில் நடை​பெற்ற தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரத்​தின்​போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்​தைகள் உட்பட 36 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்​தான நிலை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இந்த சம்​பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் வேலு​சாமிபுரத்​தில் தவெக தலை​வர் விஜய் நேற்​றிரவு தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டார். முன்​ன​தாக காலை 10.30 மணிக்கு விஜய் பிரச்​சா​ரம் செய்ய காவல் துறை தரப்​பில் அனு​மதி அளிக்​கப்​பட்​டிருந்​தது. ஆனால், நாமக்​கல்​லில் பிரச்​சா​ரம் செய்​து​விட்டு பிற்​பகல் 3 மணிக்​குப் பிறகு​தான் விஜய் அங்​கிருந்து கிளம்​பி​னார். இதற்​கிடையே, கரூர் வேலு​சாமிபுரத்​தில் பகல் 12 மணி முதலே தொண்​டர்​கள், ரசிகர்​கள் திரள ஆரம்​பித்​தனர். கரூர் மாவட்ட எல்​லை​யான வேலா​யுதம்​பாளை​யத்​தில் இருந்தே கூட்​டம் அதி​க​மாக இருந்​த​தால் பிரச்​சா​ரப் பேருந்து மிக​வும் மெது​வாக நகர்ந்​தது. இதனால் இரவு 7.15 மணிக்​கு​தான் பிரச்​சார இடத்​துக்கு விஜய் வர முடிந்​தது. அங்கு விஜய் பேச ஆரம்​பித்​த​போது, அவரது மைக்…

Read More

சென்னை: கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 31 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கருத்தை தெரிவித்துள்ளார். “இது எதிர்பாராமல் நடந்த விபத்துதான். திட்டமிட்டு யாரும் இப்படி செய்வதில்லை. இந்த மரணம் நம் எல்லோருக்கும் காயத்தையும், வலியையும் கொடுத்துள்ளது. நம்மைவிட அதிக மன வேதனையில் விஜய் இருப்பார். உயிரிழந்த தமிழ் பிள்ளைகளுக்கு எனது கண்ணீர் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என சீமான் தெரிவித்தார். கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது தமிழக அரசு.

Read More

புதுடெல்லி: கரூரில் விஜய்யின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் நடந்த பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் வேதனையளிக்கிறது. அப்பாவி மக்களின் உயிரிழப்பு இதயத்தை நொறுக்குவதாக உள்ளது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவாக குணமடைய இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார். 31 பேர் உயிரிழப்பு: தவெக தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக 31 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள், பெண்கள் உள்பட 25-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தகவலை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி செய்தார்.

Read More

புதுடெல்லி: தவெக தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 31 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் “தமிழ்நாட்டின் கரூரில் நடந்த ஒரு அரசியல் கூட்டத்தில் நடந்த துயரச் சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. இதில் பல விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோயுள்ளன. அவர்களின் அன்புக்குரியவர்களுக்காக என் இதயம் துடிக்கிறது. காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய விழைகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அனைத்து உதவிகளை வழங்கவும், நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளில் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றவும் காங்கிரஸ் தொண்டர்களையும் தலைவர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் கரூர் மாநகரை…

Read More

நீங்கள் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மார்ச் 4, 1907 அன்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஸ்பானிஷ் பெற்றோருக்கு பிறந்த மோரேரா, ஆரோக்கியமான உணவைக் கடைப்பிடித்தார். அவர் ஒரு சீரான மத்திய தரைக்கடல் உணவான உலகின் ஆரோக்கியமான உணவைப் பின்பற்றினார்! ஆம், அது சரி. மத்திய தரைக்கடல் உணவில் காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், பருப்பு வகைகள், கொட்டைகள், விதைகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவை உள்ளன, அவை இதயம், மூளை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த உணவில் மிதமான அளவு மீன் மற்றும் கோழி, குறைந்த கொழுப்புள்ள பால் மற்றும் குறைந்த அளவு சிவப்பு இறைச்சி, இனிப்புகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவை அடங்கும்.

Read More

கரூர்: தவெக தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக 31 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள், பெண்கள் உள்பட 25-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தகவலை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி செய்தார். தவெக தலைவர் விஜய் இன்று இரவு 7 மணியளவில் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அவர் பரப்புரை மேற்கொண்ட வேலுச்சாமிபுரத்தில் ஆயிரகணக்கானோர் திரண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக மக்கள் பலர் மயக்கமடைந்தனர். விஜய் பேசிக்கொண்டிருந்த போதே மயக்கமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில், விஜய் பரப்புரையில் மயக்கமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது. தற்போது கரூர் அரசு மருத்துவமனையில் மட்டும் 30-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிலர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரூர் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். மயக்கமடைந்து சிகிச்சை பெறுபவர்களில் சிலருக்கு செயற்கை சுவாசக் கருவி…

Read More