வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவரான வாரன் பபெட் பலருக்கு ஒரு உத்வேகம். அவர் ஞானம், மலிவான தன்மை மற்றும் நீண்டகால முதலீட்டு தத்துவத்திற்கு பெயர் பெற்றவர். அவருடைய ஆழ்ந்த மேற்கோள்களில் சிலவற்றை இங்கே பட்டியலிடுகிறோம்:
Author: admin
புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்திய விமானப்படைத் தளபதி ஏர்மார்ஷல் அமர் பிரீத் சிங், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் இன்று (மே.4) சந்தித்தார். முன்னதாக நேற்று (சனிக்கிழமை) பிரதமர் மோடியை கடற்படையின் தலைமை அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி சந்தித்த நிலையில் இன்று விமானப் படை தளபதியின் சந்திப்பு நடந்துள்ளது. இந்தச் சந்திப்பானது பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகள் தலைமைத் தளபதி அணில் சவுகான் மற்றும் முப்படைத் தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்துக்கு சில நாட்களுக்கு பின்னர் நடக்கிறது. முன்னதாக, ஏப்.22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டத்தைத் தொடர்ந்து, ஏப்.23-ம் தேதி பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் நடந்தது. அதில், பயங்கரவாதத்துக்கு பதிலடி கொடுப்பது…
அல்லு அர்ஜுன் படம் தாமதமாவதால், வெங்கடேஷ் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் த்ரிவிக்ரம். ‘புஷ்பா 2’ படத்துக்குப் பிறகு, த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டது. ஆனால், இப்படம் எப்போது தொடங்கும் என்பதே தெரியாமல் இருந்தது. இப்படம் வரலாற்று கதையொன்றை பின்னணியாக கொண்டது எனவும், பெரும் பொருட்செலவில் இது உருவாக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், அட்லி இயக்கவுள்ள படத்துக்கு தேதிகள் ஒதுக்கிவிட்டார் அல்லு அர்ஜுன். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இதனால், த்ரிவிக்ரம் படம் மீண்டும் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை கணக்கில் கொண்டு அல்லு அர்ஜுன் படத்துக்கு முன்பாக, வெங்கடேஷ் நடிக்கும் படத்தினை இயக்க முடிவு செய்துள்ளார் த்ரிவிக்ரம். இதனை ஹரிகா அண்ட் ஹாசினி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இசையமைப்பாளராக தமன் பணிபுரியவுள்ளார். இந்தக் கூட்டணி தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை, கூவாகம் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் மற்றும் சிறுமியின் பெற்றோர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் நிதியுதவியும் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், ஆவிகொளப்பாக்கம் குறுவட்டம், வடக்கு நெமிலி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் கண்மணி தம்பதியரின் மகள் செல்வி ஜெயலெட்சுமி (10) மற்றும் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் வட்டம், டி. எடையார் கிராமத்தைச் சேர்ந்த விஜி மற்றும் சினேகா தம்பதியரின் மகன் செல்வன் நித்தேஷ் (5) ஆகிய இருவரும் சனிக்கிழமை மதியம் சுமார் 2.00 மணியளவில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, கூவாகம் கிராமத்தில் உள்ள கூவாகம் ஏரியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் மற்றும் சிறுமியின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு,…
புதுடெல்லி: பத்மஸ்ரீ விருது பெற்ற ஆன்மிக குரு பாபா சிவானந்த் உடல்நலக் குறைவால் வாரணாசியில் நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாபா சிவானந்துக்கு, ஏப்ரல் 30 ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால், வாராணாசியிலுள்ள பனராஸ் இந்து பல்கலைகழகத்தின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (சனிக்கிழமை) இரவு அவர் காலமானார். மக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல், வாராணாசியின் கபீர்நகர் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் இன்று (ஞாயிற்றுக் கிழமை) மாலை நடைபெறும் என்று சீடர்கள் தெரிவித்தனர். சிவானந்துக்கு வயது 128 என அவரது சீடர்களால் கூறப்படுகிறது. பாபாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பிரதமர் பகிர்ந்த பதிவில், “சிவானந்த்…
கொல்கத்தா: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது. அஜிங்க்ய ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணி 10 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 5 தோல்விகளுடன், 9 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. கடைசியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது கொல்கத்தா அணி. அந்த ஆட்டத்தில் பந்து வீச்சில் சுனில் நரேன், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு கூட்டாக 5 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவியிருந்தனர். இந்த சுழல் கூட்டணி பார்முக்கு திரும்பியிருப்பது அணியின் பலத்தை அதிகரிக்கக்கூடும். இன்றைய ஆட்டம் உட்பட கொல்கத்தா அணிக்கு 4 ஆட்டங்கள் எஞ்சியுள்ளது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தை தொடர்ந்து ஈடன் கார்டனில் வரும் 7-ம் தேதி…
‘டூரிஸ்ட் பேமிலி’ படத்துக்கு காட்சிகள் அதிகரித்திருப்பதால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். சசிகுமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. மே 1-ம் தேதி ‘ரெட்ரோ’ படத்துடன் வெளியான இப்படத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது. இப்படத்தினை பார்த்த யாருமே, குறைச் சொல்லாத காரணத்தினால் நாளுக்கு நாள் காட்சிகள் அதிகரித்து வருகிறது. இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். முதலில் சில திரையரங்குகளில், சின்ன திரைகளே கிடைத்தன. தற்போது பெரிய திரைகளில் சில காட்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. முதல் நாளில் மாயாஜாலில் 15 காட்சிகள் மட்டுமே ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்துக்கு கொடுக்கப்பட்டது. தற்போது 30-க்கும் அதிகமான காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பல்வேறு திரையரங்குகளிலும் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த வரவேற்பினால் வசூலும் அதிகரித்து வருகிறது. அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர், பக்ஸ் பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. மில்லியன் டாலர்…
சென்னை: நீட் தேர்வுக்கு அஞ்சி மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்; இரு மாதங்களில் 5 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர், உயிர்க்கொல்லி நீட் தேர்வு எப்போது தான் ஒழியும்? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு இன்று நடைபெறும் நிலையில், அத்தேர்வில் வெற்றி பெற்றுவிட முடியுமா? என்ற அச்சத்தில் மேல்மருவத்தூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாணவியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 2017-ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வுக்கு முந்தைய மாதமும், நீட் தேர்வு முடிவு வெளியாவதையொட்டிய சில காலங்களும் தற்கொலைக் காலங்களாக மாறி விடுகின்றன. இந்தக் கொடுமையிலிருந்து நடப்பாண்டும் தப்பவில்லை. கடந்த மார்ச் மாதம் 2-ஆம்…
பிரபலங்கள் மற்றும் அவர்களின் ஓ-மிகவும் சரியான வாழ்க்கையைப் பொறுத்தவரை, மக்கள் அவர்களைப் பற்றி மேலும் அறிய ஆர்வமாக உள்ளனர். முன்னதாக, இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மான் கில் ‘காட் ஆஃப் கிரிக்கெட்’ சச்சின் டெண்டுல்கரின் ஒரே மகள் சாரா டெண்டுல்கர் டேட்டிங் பற்றி வதந்திகள் பரவலாக இருந்தன, இருவரும் நகர்ந்ததாகத் தெரிகிறது. இப்போது சலசலப்பு என்னவென்றால், சாரா டெண்டுல்கர் டேட்டிங் நடிகர் சித்தந்த் சதுர்வேதியாக இருக்கலாம், ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் ஒன்றாகக் காணப்பட்டுள்ளதாக ஃபிலிம்ஃபேர் தெரிவித்துள்ளது.இதை வெளிப்படுத்திய, ஒரு ஆதாரம் பிலிம்பேரிடம் கூறியது, “இது சித்தந்த் மற்றும் சாராவின் நட்பில் இன்னும் ஆரம்ப நாட்கள் தான், ஆனால் வேதியியல் மிகவும் அதிகம். அவர்கள் ஒருவருக்கொருவர் நிறுவனத்தை ரசிப்பதாகத் தோன்றியது, ஒருவருக்கொருவர் மிகவும் வசதியாக இருந்தது. அவர்கள் இப்போது விஷயங்களை குறைந்த முக்கியமாக வைத்திருக்கிறார்கள் என்பது அர்த்தமுள்ளதாக இருக்கிறது.” விஷயங்களை குறைந்த முக்கியமாக வைத்திருப்பதன் அவசியத்தைப் பற்றி மேலும், “நேர்மையாக, இந்த அழகான…
புதுடெல்லி: பாகிஸ்தான் நாட்டின் அரசியல் ஆளுமைகளாக உள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோவின் எக்ஸ் தள கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன. அரசின் சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்களது எக்ஸ் தள கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தாக்குதலை தொடர்ந்து பிரபல பாகிஸ்தான் நடிகர்கள் மகிரா கான், ஹனியா ஆமிர், சனம் சயீத், அலி ஜாபர் ஆகியோரின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஒருவர் இந்த நடிகர்களின் பக்கங்களை அணுக முயன்றால், மத்திய அரசின் சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று அவரது கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வருகிறது. பாகிஸ்தான் நடிகர்களான பிலால் அப்பாஸ், இக்ரா அஜீஸ், அயேசா…