கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 5 சிறுமிகள், 5 சிறுவர்கள், 16 பெண்கள், 13 ஆண்கள் என மொத்தம் 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களில் 5 பேர் கருர் அருகே ஏமூர் என்ற ஊரை சேர்ந்தவர்கள்; அவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், 2 மகள்கள் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கருர் அருகே ஏமூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஹேமலதா (28), மகள்கள் சாய் லக்ஷனா (9), சாய் ஜீவா (5) உயிரிழந்துள்ளனர். மேலும், ஏமூரை சேர்ந்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் சக்தி என்பவரின் மனைவி பிரியா, இவர்களது மகள் தரணிகா ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்களின் உடல்கள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. கரூரில் ஓரே ஊரை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை…
Author: admin
புதுடெல்லி: இந்தியாவில் முதல் முறையாக கார்ப்பரேட் தலைமைத்துவத்தில் பெண்களின் எண்ணிக்கை 20 சதவீதத்தை எட்டியுள்ளது. இதுதொடர்பாக நியூயார்க்கை சேர்ந்த அவதார்-செராமவுண்ட் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் 2016-ல் 13%-மாக இருந்த பெண்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து 2024-ல் 19% அளவுக்கு உயர்ந்தது. இந்த நிலையில் தற்போது தலைமைத்துவத்தில் பெண்களின் பங்கு முதல் முறையாக 20% தொட்டுள்ளது. இது சமூகத்தில் முற்போக்கான நிலையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. உலகம் முழுவதும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில் பெண்களின் பங்கு கணிசமாக அதிகரித்து வருகிறது. அதன்படி இந்த எண்ணிக்கை 2020-ல் 14%, 2021-ல் 15%, 2022-ல் 17%, 2023-ல் 19%, 2024-ல் 19%-ஆக இருந்தது. சிறந்த நிறுவனங்களில் மொத்த பணியாளர்களின் அடிப்படையில் பெண்களின் பிரதிநிதித்துவம் 35.7% -ஆக நிலையானதாக இருந்தது. குறிப்பாக, தொழில்முறை சேவைகள் துறையில் பெண்களின் பங்கு 44.6% என்ற அளவில் அதிகமாக உள்ளது. இதைத் தொடர்ந்து, ஐடிஇஎஸ் (41.7%),…
திண்டுக்கல்: கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல், விளம்பரத்துக்காக விழா நடத்தி மக்களின் வரிப்பணத்தை திமுக அரசு வீணாக்குவதாக பாமக தலைவர் அன்புமணி கூறினார். ‘உரிமை மீட்க; தலைமுறை காக்க’ என்ற பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ள அன்புமணி நேற்று திண்டுக்கல்லில் பொதுமக்கள் மற்றும் பங்குத் தந்தையர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் மாநில அரசு நடத்தும் சாதி வாரி கணக்கெடுப்புக்கு தடை கிடையாது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு மட்டுமல்ல, மாநில அரசுக்கும் முழு அதிகாரம் இருக்கிறது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதன் பிறகும், தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று முதல்வர் சொல்வதை மக்கள் ஏற்க மாட்டார்கள். அவருக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவர். கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல், விளம்பரத்துக்காக விழா நடத்தி மக்களின் வரிப்பணத்தை திமுக அரசு வீணாக்கிக் கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு திண்டுக்கல் வந்த ஸ்டாலின், வன்னிய…
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப்பின் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லையில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தானின் உள் பகுதிக்கு தங்கள் முகாம்களை மாற்றின. தற்போது லஷ்கர்-இ-தொய்பா அமைப்பும் பாகிஸ்தானின் உள்பகுதிக்கு இடம் மாறியுள்ளது. எதிர்காலத்தில் இந்தியாவின் தாக்குதலை தவிர்ப்பதற்காக, இந்த அமைப்புகள் தங்களின் இருப்பிடத்தை மாற்றி உள்ளன. ஆப்கன் எல்லையிலிருந்து 47 கி.மீ தொலைவில் உள்ள திர் மாவட்டத்தில் மர்கஷ் ஜிகாத்-இ-அக் ஷா என்ற புதிய மையத்தை லஷ்கர்-இ-தொய்பா கட்டியுள்ளதை செயற்கைக்கோள் படங்கள் உறுதி செய்துள்ளன. இத்தகவலை இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
ஈரோடு: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு தனது சொந்த தொகுதியான கோபியில் அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளிக்கவில்லை. அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து கோவை வழியாக விமானத்தில் சென்னை செல்வதற்காக நேற்று புறப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை செல்கிறேன். இரவே வீடு திரும்புகிறேன். எனது கருத்துக்கு பொதுச் செயலாளர் இதுவரை பதில் அளிக்கவில்லை. இது தொடர்பான எனது கருத்தை ஏற்கெனவே தெரிவித்துவிட்டேன். கட்சி ஒருங்கிணைப்பு பணிகள் எப்படி போகிறது என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது, கோபியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, கேள்விக்கு பதில் அளிக்காமல், கை கூப்பி வணக்கம் தெரிவித்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி 4 தென் அமெரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதுதொடர்பான தகவலை காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பவன் கேரா வெளியிட்டுள்ளார். ராகுல் காந்தியுடன் பவன் கேராவும் தென் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். 4 நாடுகளை உள்ளடக்கிய இந்த பயணத்தின்போது அரசியல் தலைவர்களையும், பல்கலைக்கழக மாணவர்களையும், தொழில்துறை தலைவர்களையும் ராகுல் காந்தி சந்தித்து உரையாட உள்ளார் என்று பவன் கேரா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ராகுல் பயணிக்கும் 4 நாடுகளின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. எனினும் அந்த நாடுகளின் பட்டியலில் பிரேசில், கொலம்பியா நாடுகள் இடம்பெறும் என்று தெரிகிறது. மேலும், ராகுல் காந்தி எத்தனை நாள் பயணம் மேற்கொண்டுள்ளார் என்ற தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தென் அமெரிக்க நாடுகளின் அதிபர்கள் மற்றும் மூத்த அரசியல் தலைவர்களை, ராகுல் காந்தி சந்தித்துப் பேச திட்டமிட்டிருப்பதாகவும், ஜனநாயக மற்றும் இருநாட்டு நல்லுறவை பலப்படுத்தும்…
சென்னை: வால்வோ கார் இந்தியா நிறுவனம் இ.எக்ஸ்.30 மாடல் மின்சார காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஜோதி மல்ஹோத்ரா கூறியுள்ளதாவது: பண்டிகை காலத்தை முன்னிட்டு வால்வோவின் புதிய தயாரிப்பான இ.எக்ஸ்.30 மாடல் மின்சார கார் சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இதன் விலை ரூ.41 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அக்டோபர் 19-க்கு முன் முன்பதிவு செய்தவர்களுக்கு ரூ.39,99,000 என்ற சலுகை விலையில் இந்த கார் வழங்கப்படும். நவம்பர் முதல் வாரத்திலிருந்து டெலிவரி செய்யப்படும். வால்வோவின் 3-வது இவி மாடலான இ.எக்ஸ்.30 பெங்களூருவின் ஹோசகோட்டேயில் உள்ள ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது. ஒவ்வொரு இ.எக்ஸ்.30 காருடன் 11-கிலோவாட் சார்ஜர் சலுகையாக வருகிறது. புதுமையான தொழில்நுட்பம், சமரசம் செய்யாத பாதுகாப்பு இதன் சிறப்பம்சம். விபத்துகளை தடுப்பதற்கான எச்சரிக்கை கருவிகள், 5 கேமராக்கள், 5 ரேடார்கள், 12 அல்ட்ராசோனிக் சென்சார்கள் கொண்ட மேம்பட்ட பாதுகாப்பு கருவிகளை இ.எக்ஸ்.30 கொண்டுள்ளது. 3 வருட…
விழுப்புரம்: காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறையால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு குடும்பம் குடும்பமாக கார் உள்ளிட்ட வாகனங்களில் மக்கள் நேற்று முன்தினம் இரவு முதல் புறப்பட்டுச் செல்கின்றனர். இதனால் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள சுங்கச் சாவடியில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, வாகனங்கள் எளிதாக கடந்து செல்ல கூடுதலாக 2 வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டன. மொத்தம் 9 வழித்தடங்களில் வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டாலும் 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் நேற்று மாலை 4 மணி வரை 32 ஆயிரம் வாகனங்கள் விக்கிரவாண்டி சுங்கச் சாவடியை கடந்து சென்றுள்ளன. வழக்கமாக 24 ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்லும் நிலையில் கூடுதலாக 8 ஆயிரம் வாகனங்கள் கடந்துள்ளன. இதன் எண்ணிக்கை நள்ளிரவு 12 மணியளவில் சுமார் 40 ஆயிரத்தை கடந்தது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மீண்டும் ரூ.85 ஆயிரத்தை தாண்டியது. பவுனுக்கு ரூ.720 உயர்ந்து, ரூ.85,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், வெள்ளி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அதன் அடிப்படையில், செப்.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்தஒரு பவுன் ஆபரணத் தங்கம், செப்.23-ம் தேதி ரூ.85,120 ஆக உயர்ந்தது. எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்க அரசு உயர்த்தியது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை தங்கம் விலைஉயர்வுக்கு முக்கியக்காரணமாக அமைந்தன. இதன்பிறகு, இரண்டு நாட்கள் தங்கம் விலை குறைந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் தங்கம் விலை உயர்ந்தது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மீண்டும் ரூ.85 ஆயிரத்தை தாண்டியது. அதாவது பவுனுக்கு ரூ.720 உயர்ந்து, ரூ.85,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.90 உயர்ந்து, ரூ.10,640-க்கு…
இந்த ஆப்டிகல் மாயை பார்வையாளர்களுக்கு ஒரு மூங்கில் மூடிய சுவர் வடிவமைப்பிற்குள் “மறைத்து தேடுங்கள்” என்ற மறைக்கப்பட்ட சொற்றொடரைக் கண்டுபிடிக்க சவால் விடுகிறது. கடிதங்கள் புத்திசாலித்தனமாக உருமறைப்பு, கண்காணிப்பு திறன்களைச் சோதிக்கின்றன, மேலும் நமது மூளையை வடிவங்களால் எவ்வளவு எளிதில் ஏமாற்ற முடியும் என்பதை எடுத்துக்காட்டுகின்றன. இத்தகைய புதிர்கள் தினசரி நடைமுறையின் மூலம் கவனத்தை ஈர்க்க உதவுகின்றன. ஆப்டிகல் மாயைகள் உங்கள் கண்களையும் மனதையும் ஒத்துழைக்க சவால் விடும் மனதை வளைக்கும் மூளை விளையாட்டுகள். மிகவும் வெளிப்படையான விவரங்களைக் கூட புறக்கணிக்க அவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள், உங்கள் கண்காணிப்பு திறன் உண்மையில் எவ்வளவு கவனத்துடன் இருக்கிறது என்பதை சோதிக்கிறது. இன்றைய புதிர் என்பது ஒரு வகையான சோதனை.வரவு: இப்போது நேரங்கள்சாதாரண ஆய்வில், படம் வெற்று மூங்கில் மூடிய சுவராகத் தோன்றுகிறது. ஆனால் இந்த வடிவமைப்பில் புத்திசாலித்தனமாக மறைக்கப்பட்டிருப்பது நிலப்பரப்பில் கிட்டத்தட்ட புரிந்துகொள்ள முடியாத சொற்கள். உங்கள் சவால் எளிதானது, ஆனால் கடினம்,…
