சண்டிகர்: எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் பாகிஸ்தானுக்கு நமது நாட்டின் ராணுவ ரகசியங்களை கசியவிட்டதன் குற்றச்சாட்டின் பேரில் பஞ்சாபில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் உடனான சர்வதேச எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தசூழலில் இந்திய ராணுவத்தின் சில மிக முக்கியமான தகவல்கள் மற்றும் புகைப்படங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்டதன் புகாரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, அவர்கள் இந்திய ராணுவத்தின் கண்டோன்மென்ட் பகுதிகள், அமிர்தசரஸில் உள்ள ஏர்பேஸ் உள்ளிட்ட தகவல்களை பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளனர் என்று பஞ்சாப் போலீஸார் நேற்று தெரிவித்தனர். இதுகுறித்து பஞ்சாப் மாநில டிஜிபி கவுரவ் யாதவ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்ட குற்றச்சாட்டில் பாலக் ஷெர் மாஸி மற்றும் சூரஜ் மாஸி என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் முற்றி வரும் சூழலில் அமிர்தசரஸ் ரூரல் போலீஸின் இந்த நடவடிக்கை மிகவும்…
Author: admin
கொல்கத்தா: நடப்பு ஐபிஎல் சீசனின் 53-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் அதிரடியாக குவித்த 95 ரன்கள் வீணானது. இந்த ஆட்டம் நேற்று மாலை 3.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்றது. முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணியின் ரஹ்மானுல்லா குர்பாஸ் 35, சுனில் நரேன் 11, கேப்டன் அஜிங்கிய ரஹானே 30 ரன்கள் குவித்தனர். 4-வது வீரராக களமிறங்கிய அங்கிரிஷ் ரகுவன்ஷி 31 பந்துகளில் 44 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஆந்த்ரே ரஸ்ஸலும், ரிங்கு சிங்கும், ராஜஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை நொறுக்கினர். ரஸ்ஸல் 57 ரன்களும் (25 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்ஸர்), ரிங்கு சிங் 19…
சென்னை: மதிமுகவின் 32-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மதிமுகவின் 32-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி, மே 6-ம் தேதி (நாளை) காலை 9 மணிக்கு சென்னை, எழும்பூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ ஆகியோர் இதில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர். இதில் மாநில, மாவட்ட, பகுதி வாரியாக உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இடைவிடாத உண்ணாவிரதம் நிறைய புகழ் பெற்றிருந்தாலும், பெரும்பாலான மக்கள் காலை உணவை அன்றைய மிக முக்கியமான உணவாக கருதுகின்றனர். உண்மையில் அது. 10-12 மணி நேரம் சாப்பிடாத பிறகு, உங்கள் உடலுக்கு நாள் கிக்ஸ்டார்ட் செய்ய போதுமான ஆற்றல் தேவை, ஆனால் அதே நேரத்தில், மதிய உணவு நேரம் வரை உங்களை திருப்திப்படுத்த போதுமான அளவு நிரப்ப வேண்டும். நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சித்தாலும், இந்த காலை உணவு விருப்பங்கள் மருத்துவர் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, மேலும் உங்கள் உடல்நலப் பயணத்திற்கு உதவும். பாருங்கள் …பெர்ரி, விதைகள் மற்றும் கொட்டைகள் கொண்ட ஓட்ஸ்ஓட்ஸ் விரைவானது, நிரப்புதல் மற்றும் மிகவும் சுவையாக இருக்கிறது! இது நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது உங்களை முழுமையாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது. ஸ்ட்ராபெர்ரி, அவுரிநெல்லிகள் அல்லது ராஸ்பெர்ரி போன்ற புதிய பெர்ரிகளைச் சேர்ப்பது உங்கள் உணவுக்கு கூடுதல் சர்க்கரை இல்லாமல் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும்…
புதுடெல்லி: ராமர் என்பவர் கற்பனையான புராண கதாபாத்திரம் என்று ராகுல் காந்தி கூறியிருப்பதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். அங்குள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதில், இந்து தேசியவாதம் ஆதிக்கம் செலுத்தும் காலகட்டத்தில் அனைத்து சமூகங்களையும் அரவணைக்கும் மதச்சார்பற்ற அரசியல் எவ்வாறு வடிவம் பெற வேண்டும் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ராகுல் அளித்த பதிலில், “புத்தர், குருநானக், மகாத்மா காந்தி, பி.ஆர்.அம்பேத்கர், கர்நாடகாவின் பசவர், கேரளாவின் நாராயண குரு (ஜோதிராவ்) புலே உள்ளிட்ட இந்தியாவின் சமூக சீர்திருத்தவாதிகள் யாரும் மத வெறியர்கள் அல்ல. இவர்களில் யாரும் நாங்கள் மக்களை தனிமைப்படுத்த விரும்புகிறோம் என்று கூறவில்லை. இவர்கள் அனைவரும் நமது அரசியலமைப்பில் உள்ள குரல்கள், ஒரே விஷயத்தைத்தான் கூறினார்கள். இதுதான் இந்திய பாரம்பரியம் மற்றும்…
தூத்துக்குடியில் 61 வயது சித்த மருத்துவர் நீட் தேர்வு எழுதினார். ‘‘இத்தனை வயதில் நானே நீட் தேர்வு எழுதும்போது, மாணவர்கள் மேலும் சில முறை முயற்சி செய்யலாம். ஒருமுறை தோல்வி அடைந்துவிட்டால் மாணவர்கள் யாரும் மனமுடைந்து தவறான முடிவு எடுக்கக் கூடாது’’ என்று அவர் அறிவுரை கூறியுள்ளார். தூத்துக்குடி சின்னகண்ணுபுரத்தை சேர்ந்தவர் எஸ்.பச்சைமால் (61). சித்த மருத்துவரான இவர், நேற்று தூத்துக்குடி தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நீட் தேர்வு எழுதினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: விவசாய குடும்பத்தில் பிறந்த எனக்கு மருத்துவராக வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால், அப்போது மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இதனால் என்னால் சேர முடியவில்லை. அதன்பிறகு பிஎஸ்எம்எஸ் படித்து சித்த மருத்துவர் ஆகிவிட்டேன். ஆனாலும் எம்பிபிஎஸ் படிக்க வேண்டும் என்ற ஆசை தொடர்ந்து எனக்குள் இருந்தது. தற்போது எம்பிபிஎஸ் படிக்க நீட் தேர்வு வந்துள்ளது. இத்தேர்வுக்கு வயது…
சென்னை: உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் சகாயம் ஐஏஎஸ்-க்கு சிறப்புப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: சகாயம் ஐஏஎஸ், மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியராக பணியாற்றியபோது தொழில்துறை செயலருக்கு எழுதிய கடிதத்தின் வழியே, 2012-ம் ஆண்டில் மிகப்பெரிய கிரானைட் ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். அதில் மதுரை மாவட்டத்தில் இயங்கும் பல கருங்கல் குவாரிகள் ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டியிருந்தார். அதைத்தொடர்ந்து கிரானைட் மற்றும் கனிம மணற்கொள்ளை பற்றி விசாரிக்க சகாயம் தலைமையில் விசாரணைக்குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் 2014-ல் உத்தரவிட்டது. இதற்கிடையே கடந்த 2013-ம் ஆண்டு சகாயம் ஐஏஎஸ், தன்னை கொலை செய்யப்போவதாக மிரட்டல்கள் வருவது குறித்து தமிழக அரசின் தலைமை செயலரை சந்தித்து முறையிட்ட நிலையில், அவருக்கு ஆயுதமேந்திய தனிப்படையை பாதுகாப்புக்கு உயர் நீதிமன்றம்…
புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் போலீஸுக்கும், நாட்டுக்கும் சேவையாற்றவே பிறந்துள்ளேன் என்று ஸ்ரீநகரில் பணியாற்றும் போலீஸ் அதிகாரி உருக்கமாகத் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர் இப்த்கார் அலி (45). இவர் ஜம்மு-காஷ்மீர் போலீஸில் பணியாற்றி வருகிறார். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற இந்திய அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச், ரஜவுரி, ஜம்மு மாவட்டங்களைச் சேர்ந்த 24 பேரை வெளியேற்ற ஜம்மு-காஷ்மீர் அரசு உத்தரவிட்டது. இதில் இப்த்கார் அலி மற்றும் அவரது குடும்பத்தாரும் அடங்குவர். இதையடுத்து அவர்கள் பஞ்சாப் எல்லைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத்தில் அலி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மனுவை விசாரித்த நீதிமன்றம் இப்த்கார் அலி, அவரது குடும்பத்தாரை பாகிஸ்தானுக்கு அனுப்பவேண்டாம் என்று உத்தரவிட்டது. இதுகுறித்து இப்கார் அலி கூறியதாவது: நானும், என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரும், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று கூறி எங்களை பஞ்சாப் எல்லைக்கு…
சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள லாரன்ஸ் வோங்குக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சிங்கப்பூர் பொதுத் தேர்தலில், ஆளும் மக்கள் செயல் கட்சி 97 தொகுதிகளில் போட்டியிட்டு 87 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்துள்ளது. லாரன்ஸ் வோங் மீண்டும் பிரதமர் ஆகிறார். அவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: * பிரதமர் மோடி: பொதுத் தேர்தலில் லாரன்ஸ் வோங் பெற்றுள்ள மகத்தான வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியாவும், சிங்கப்பூரும் மக்களுக்கு இடையிலான நெருங்கிய உறவுகளுடன், வலுவான பன்முக ஒத்துழைப்பை பகிர்ந்து கொள்கின்றன. இந்த ஒத்துழைப்பு, நல்லுறவை மேலும் மேம்படுத்துவதற்காக உங்களுடன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். * முதல்வர் ஸ்டாலின்: மக்கள் செயல் கட்சியை, அதன் 14-வது தொடர்ச்சியான வெற்றிக்கு வழிநடத்திச்…
வீடுகளுக்கு குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தில், இதுவரை 1.49 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். வரும் 2032-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் வழித் தடம் மூலம் எரிவாயு விநியோகம் செய்யப்படும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். வீடுகளுக்கு14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும் எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வரப்படுகிறது. கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் கிடைக்கும் மூலப் பொருளில் இந்த எரிவாயு தயாரிக்கப்படுகிறது. பல மாநிலங்களில் வீடுகளுக்கு குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்படுகிறது. இந்தக் குழாய் வழித்தடம் பூமிக்கடியில் அமைக்கப்படுவதால் சுற்றுச்சூழலை பாதிப்பதில்லை. அத்துடன், சமையல் எரிவாயு சிலிண்டரை விட விலை குறைவு. தமிழகத்தில் குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு விநியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் துறைமுக வளாகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் எல்என்ஜி எனப்படும்…