திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் இன்று இரவு பிரசித்தி பெற்ற கருடசேவை நடைபெற உள்ளது. இதையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக் கொடுத்த மலர் மாலைகள், கிளி, பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் நேற்று மதியம் திருமலையை வந்தடைந்தன. தமிழக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மாரிமுத்து, நிர்வாக அதிகாரி சக்கரை அம்மாள், ஆச்சாரியார் ரமேஷ் ரங்கராஜன் ஆகியோர் மங்கலப் பொருட்களை கொண்டுவந்தனர். இவற்றை ஜீயர்கள் பெற்றுக்கொண்டனர். இந்த மங்கலப் பொருட்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதன் பின்னர் மாட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, இவை கோயிலில் ஒப்படைக்கப்பட்டன. இந்த மலர் மாலைகளும், கிளியும் இன்று இரவு நடைபெற உள்ள கருடசேவையின் போது உற்சவர் அணிவது ஐதீகம். இது வழக்கமான பவுர்ணமி கருடசேவையில் இடம்பெறாது என்பது குறிப்பிடத்தக்கது. இரு சக்கர வாகனங்களுக்கு தடை: கருடசேவையை முன்னிட்டு நேற்று இரவு 9 மணி முதல் திருப்பதியில் இருந்து…
Author: admin
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று (27.9.2025) கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 8 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 36 பேர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் அறிந்து சொல்லொண்ணாத் துயரமும் வேதனையும் அடைந்தேன். விலைமதிக்க முடியாத அந்த உயிரிழப்புகள் நம் அனைவரின் நெஞ்சத்தையும் உலுக்கியுள்ளது. ஈடு செய்ய முடியாத பேரிழப்பை எதிர்கொண்டுள்ள அந்தக் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும். அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். மருத்துவ சிகிச்சைக்கான சிறப்பு ஏற்பாடுகளை துரிதப்படுத்த ள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் மருத்துவம் மற்றும்…
வயதான செயல்முறையை மெதுவாக்கும் போது, விலையுயர்ந்த கூடுதல் மற்றும் சிக்கலான உடற்பயிற்சி விதிமுறைகள் பொதுவாக மைய கட்டத்தில் இருக்கும். ஆனால் புதிய ஆராய்ச்சி உண்மையான ரகசியம் மிகவும் நேரடியானதாக இருக்கலாம் என்று கூறுகிறது – நடைபயிற்சி.மனித உயிரியலின் ஆண்டுகளில் ஒரு ஆய்வு 5,823 அமெரிக்க பெரியவர்களிடமிருந்து தரவுகளை மதிப்பிட்டது, மேலும் நடக்கவாதிகள் அல்லாதவர்களுடன் ஒப்பிடுகையில் வாரத்திற்கு குறைந்தது 150 நிமிட நடைபயிற்சி நீண்ட டெலோமியர்களுடன் தொடர்புடையது என்று தீர்மானித்தது. எங்கள் டி.என்.ஏ இழைகளின் முனைகளில் டெலோமியர்ஸ் எப்போதும் விவாதிக்கப்படும் பாதுகாப்பு தொப்பிகள். அவை வயதுக்கு ஏற்பக் குறைக்கப்படுகின்றன, மேலும் விரைவான சுருக்கம் இதய நோய், புற்றுநோய், நீரிழிவு மற்றும் முன்கூட்டிய இறப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது. அதாவது, நீண்ட டெலோமியர்ஸ் மெதுவான உயிரியல் வயதான ஒரு குறிப்பானாகும்.இது உடல் செயல்பாடு மற்றும் நீண்ட ஆயுள் பற்றிய விரிவான ஆய்வுகளுக்கு ஏற்ப உள்ளது. உதாரணமாக, 650,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் சம்பந்தப்பட்ட ஹார்வர்ட் ஆய்வுகள்,…
திருமலை: திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் நாயகனான உற்சவர் மலையப்ப சுவாமிக்கு நேற்று சிறப்பு திருமஞ்சன சேவை நடத்தப்பட்டது. உலர் பழங்கள் மற்றும் மலர்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. திருப்பதி கோயில் பிரம்மோற்சவ விழாவின் 9 நாட்களும் தினமும் பிற்பகலில் கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் உற்சவர்களுக்கு திருமஞ்சன சேவை (அபிஷேகம்) நடத்துவது ஐதீகம். இதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பருக்கு இரண்டு முறை சிறப்பு திருமஞ்சன சேவை நடத்தப்படும். பிரம்மோற்சவத்தின் 4-ம் நாளும், 7-ம் நாளும் உற்சவ மூர்த்திகளுக்கு இவ்வாறு சிறப்பு திருமஞ்சன சேவை நடத்துவது ஐதீகம். நேற்று 4-ம் நாள் என்பதால் கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்ளிடவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதன் பின்னர் உலர் பழங்களாலும் மலர்களாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பாதாம், பிஸ்தா, குங்குமப்பூ, வெட்டிவேர், கொம்பு மஞ்சள், உலர் திராட்சை, ஏலக்காய், துளசி…
சென்னை: கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட குழந்தைகள், பெண்கள் உள்பட 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் கரூர் மாநகரை கண்ணீரில் மூழ்கடித்துள்ளது. அவசர உதவி எண்கள் அறிவிப்பு: இந்நிலையில், கரூரில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தான விபரங்களை தெரிந்து கொள்ள, தொடர்பு கொள்ள வேண்டிய கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அவசர உதவி மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மக்கள் நேரடி எண்: 04324 256306 வாட்ஸ் அப் எண்: 7010806322 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம். கரூர் கூட்ட நெரிசல் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்ல, “நான் இன்றிரவே கரூர் சென்று மேற்படி துயர சம்பவத்தில் உயிரழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, ஆறுதல் தெரிவிக்கவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்கவும் உள்ளேன்.” என்று தமிழக…
புதிய ஆராய்ச்சி உணவு நுரையீரலை காற்று மாசுபாட்டிலிருந்து பாதுகாக்க முடியும் என்பதைக் குறிக்கிறது, குறிப்பாக பெண்களில். 200,000 பங்கேற்பாளர்களின் ஒரு ஆய்வில், தினசரி சில உணவுகளை உட்கொள்ளும் பெண்கள் PM2.5 வெளிப்பாடு இருந்தபோதிலும் நுரையீரல் செயல்பாட்டில் சிறிய குறைப்புகளை அனுபவித்தனர். இந்த பாதுகாப்பு விளைவு ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு சேர்மங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய சுவாச சமுதாயத்தில் வழங்கப்பட்ட ஒரு புதிய ஆய்வு காங்கிரசில், சில உணவுப் பழக்கவழக்கங்கள் நுரையீரல் செயல்பாட்டை காற்று மாசுபாட்டின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து பாதுகாக்க உதவும் என்று கூறுகிறது. நீங்கள் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும், விஞ்ஞானிகள் இப்போது சரியான உணவு நுரையீரலை காற்று மாசுபாட்டிலிருந்து பாதுகாக்க முடியும் என்பதை கண்டுபிடித்துள்ளனர். நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஐரோப்பிய சுவாச சங்கம் காங்கிரசில் வழங்கப்பட்ட சமீபத்திய ஆராய்ச்சி, ஆச்சரியமான அன்றாட உணவு நுரையீரல் செயல்பாட்டில் காற்று மாசுபாட்டின் விளைவுகளை குறைக்கக்கூடும் என்று கூறுகிறது!உணவு…
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், எல்சேவியருடன் இணைந்து, உலகின் சிறந்த 2% விஞ்ஞானிகளின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வருடாந்திர பட்டியலை வெளியிட்டுள்ளது, பல்வேறு அறிவியல் களங்களில் மிகவும் செல்வாக்கு மிக்க ஆராய்ச்சியாளர்களை எடுத்துக்காட்டுகிறது. உலகளவில் 230,000 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளை இந்த தரவரிசை மதிப்பீடு செய்கிறது, இது பல தசாப்தங்களாக விரிவான நூலியல் தரவுகளிலிருந்து பெறப்பட்ட ஒரு கூட்டு மேற்கோள் தாக்க மதிப்பெண்ணின் அடிப்படையில். இந்த மதிப்புமிக்க பட்டியல் ஆராய்ச்சியாளர்களை அங்கீகரிக்கிறது, அதன் பணி கணிசமான உலகளாவிய தாக்கத்தையும் செல்வாக்கையும் கொண்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, 2025 பதிப்பு குறிப்பிடத்தக்க பிரதிநிதித்துவத்தைக் கொண்டுவருகிறது, ஆயிரக்கணக்கான இந்திய விஞ்ஞானிகள் இந்த உயரடுக்கு குழுவில் இடம் பெறுகிறார்கள். இந்த பட்டியல் விஞ்ஞான சிறப்பை மதிப்பிடுவதற்கான ஒரு முக்கியமான அளவுகோலாக மாறியுள்ளது மற்றும் கல்வி அங்கீகாரம், ஒத்துழைப்புகள் மற்றும் நிதி வாய்ப்புகளுக்கு உலகளவில் பயன்படுத்தப்படுகிறது.முதல் 2% பட்டியலில் உள்ள இந்திய விஞ்ஞானிகள் ஸ்டான்போர்ட்2025 ஸ்டான்போர்ட்-எல்சீவியர் தரவரிசையில் உலகளவில் முதல் 2% பேரில்…
மூலவர்: சூரிய நாராயண பெருமாள் தாயார்: லட்சுமி நாராயணி தல வரலாறு: ராமபிரான் இலங்கைக்கு பாலம் கட்டும் போது சுரைக்காயூர் புஜபதீஸ்வரர் கோயிலின் தலவிருட்சமான பாலக்காட்டு மூலிகைகொடி வேண்டும் என்று ஆஞ்சநேயரிடம் தெரிவித்தார். ஆஞ்சநேயரும் சுரைக்காயூர் வந்து பாலக்காட்டு மூலிகை கொடிகளை பறிக்கும்போது அவை, “தட்சன் சிவபெருமானை மதிக்காது யாகம் நடத்தினார். அந்த யாகத்தில் கலந்துகொண்டு அக்னி வழங்கிய சூரிய பகவானுக்கு பல விதமான சாபங்கள் ஏற்பட்டன. இதனால் சூரிய லோக மூலிகைகளான எங்களுக்கு பொலிவின்றி இருக்கக்கூடிய நிலை ஏற்பட்டது. எங்களது நிலையை மாற்ற தாங்கள் ஏதேனும் செய்ய வேண்டும்” என்றன. நடந்த அனைத்து விஷயங்களையும் ஆஞ்சநேயர் ஸ்ரீ ராமச்சந்திர பிரபுவிடம் எடுத்துரைத்தார். ஸ்ரீ ராமச்சந்திர பிரபு தன்னுடைய வனவாசம் முடிந்ததும், இவ்விடத்துக்கு வந்து தன்னுடைய குல தெய்வத்தை (சூரிய நாராயண பெருமாள்) முதன் முதலாக பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார். இதைத் தொடர்ந்து சூரியலோக மூலிகைகள் அனைத்தும் புதுப் பொலிவு…
சென்னை: தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் நள்ளிரவில் கரூர் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “மிகுந்த துயரத்தோடு, கனத்த இதயத்தோடு உங்கள் முன்பு நிற்கிறேன். கரூரில் நடந்தது பெருந்துயரம் குறித்து என்னால் பேச முடியவில்லை. நேற்று இரவு 7.30 மணிக்கு கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறல்…
சென்னை: விவசாயிகளை தொழில் முனைவோராக மாற்றி புதிய ஏற்றுமதியாளர்களாக உருவாக்குவோம் என்று சென்னையில் நடைபெற்ற வேளாண் திருவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் இரண்டுநாள் வேளாண் திருவிழா மற்றும் வேளாண் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. இவ்விழாவை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், 200 அரங்குகள் அடங்கிய கண்காட்சியையும் பார்வையிட்டார். அதன்பின் முதல்வர் பேசியதாவது: தமிழகம் வேளாண்மையில் முன்னோடி மாநிலமாக உயர்ந்து வருகிறது. குறுவைசாகுபடிக்கு மேட்டூர் அணையை முன்பைப் போல அல்லாமல் தாமதமின்றி குறித்த நாளில் திறந்து வருகிறோம். இந்த ஆண்டு, 5.66 லட்சம் ஹெக்டரில் நெல் சாகுபடி நடந்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 1 லட்சத்து 28,494 ஏக்கர் கூடுதலாகும். இதற்கு தேவையான உரங்களை, தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளில் 456.44 லட்சம் டன் உணவு தானிய…
