பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஹாக்கிப் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய மகளிர் ஹாக்கி அணி போட்டிகளில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய ஏ, ஆஸ்திரேலிய சீனியர் அணிக்கெதிரான ஹாக்கிப் போட்டிகளில் இந்திய அணி தோல்வி கண்டிருந்தது. இந்நிலையில், நேற்று பெர்த்தில் உள்ள ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலிய மகளிர் அணியை வீழ்த்தியது. இந்திய அணியின் நவ்நீத் கவுர் 21-வது நிமிடத்தில் ஒரு கோலடித்தார். அதுவே வெற்றி கோலாக மாறியது.
Author: admin
சென்னை: கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பக்தர்களை காக்க கோயில்களில் கீற்று பந்தல், தேங்காய் நார் விரிப்புகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கோதண்ட ராமர் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை 2,911 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இன்றையதினம் மட்டும் 31 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. வரும் ஜூலை மாதத்துக்குள் 3,000 கும்பாபிஷேகங்களை நிச்சயம் எட்டுவோம். மேலும், இதுவரை கோயில்களுக்கு சொந்தமான ரூ.7,665.61 கோடி மதிப்பிலான 7,546.33 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. மாநில வல்லுநர் குழுவால் 11,808 கோயில்களுக்கு திருப்பணி அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.5,917.11 கோடி மதிப்பிலான 25,150 திருப்பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரலாற்றிலே இல்லாத அளவிற்கு இந்து…
தீவிரமான தூசி, மாசுபாடு, வானிலை, நீரின் தரம் மற்றும் தயாரிப்பு பயன்பாடு ஆகியவற்றின் மத்தியில், கிட்டத்தட்ட ஒவ்வொரு பெண்ணும் முடி உதிர்தலுடன் போராடுகிறார்கள். தயாரிக்கப்பட்ட ஹேர்கேர் தயாரிப்புகளை அதிகமாகப் பயன்படுத்துவதன் மூலம், நம் தலைமுடி பிரச்சினைகளுக்கு உதவ இயற்கையான வழிகளுக்கு நாம் எப்போதும் திரும்பும் ஒரு காலம் வருகிறது. டன் விருப்பங்களில், இதுபோன்ற ஒரு இயற்கை சூப்பர்ஃபுட் இன்னும் ஒளி தேவைப்படுகிறது மற்றும் நுகரப்படுகிறது, ஆனால் பயன்படுத்தப்படவில்லை. நாங்கள் மோரிங்கா ஓலிஃபெரா மரத்திலிருந்து வரும் மோரிங்காவைப் பற்றி பேசுகிறோம், மேலும் சுறுசுறுப்பான முடி ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதற்காக அறியப்படுகிறோம். வைட்டமின்கள் ஏ, சி மற்றும் துத்தநாகத்தின் குணங்களைக் கொண்டு, இது பயன்படுத்த எளிதானது மற்றும் சந்தையில் கிடைக்கிறது. கோடையில் முடி வளர்ச்சிக்கு இந்த சூப்பர்ஃபுட் பயன்படுத்த 5 வழிகளைப் பார்ப்போம்.
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய படுகொலையை தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள ராணுவ ஜெனரல்கள் மற்றும் பல முக்கிய அமைச்சர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற முடிவு செய்து விட்டதாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று மேலும் தெரிவித்துள்ளதாவது: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பிரதமர் மோடியின் தலைமையிடமிருந்து தீர்க்கமான பதிலடியை உலகம் எதிர்பார்த்து காத்திருக்கிறது. பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் இஸ்லாமாபாத்தில் முக்கிய தலைவர்களிடையே பயத்தை வரவழைத்துள்ளது. இதன் காரணமாக, பாகிஸ்தானின் ராணுவ ஜெனரல்கள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகள் பலர் நாட்டைவிட்டு வெளியேற முடிவு செய்துவிட்டனர். அதற்கான டிக்கெட்டுகளையும் அவர்கள் ஏற்கெனவே முன்பதிவு செய்துவிட்டனர். பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா இனியும் பொறுமை காக்காது என்பது பாகிஸ்தான் அமைச்சர்கள் நன்றாக புரிந்துகொண்டுள்ளனர். எனவேதான் பதிலடி தாக்குதல் நடத்தப்படும்பட்சத்தில் அவர்கள் இங்கிலாந்துக்கு சென்றுவிடுவதாக கூறுகின்றனர். தீவிரவாதிகளை மண்ணை கவ்வச்…
சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆயுஷ் மாத்ரே பதற்றமே இல்லாமல் விளையாடுகிறார் என்று அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: ஆயுஷ் மாத்ரே மிகச் சிறப்பாக விளையாடுகிறார். அவரிடம் திறமை இருக்கிறது. மேலும், அவரது பேட்டிங்கில் ஒரு சில்க்கி ஸ்விங் உள்ளது. அதேபோல் ஆக்ரோஷமாகவும் விளையாடக் கூடியவராக உள்ளார். அழுத்தம் உள்ள போட்டிகளில் கூட அவர் பதற்றமின்றி விளையாடுகிறார். அது ஒரு பேட்ஸ்மேனுக்கு முக்கியமாகும். மேலும், ஒரு நவீன கால டி20 கிரிக்கெட் வீரருக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் ஆயுஷ் மாத்ரேவிடம் உள்ளன. இவை எல்லாவற்றையும் கடந்து, அவர் சிறிது கூட பதற்றம் இல்லாமல் பயிற்சி போட்டிகளிலும், மிகப்பெரிய போட்டியிலும் ரன்களை குவித்ததுதான் என்னை அதிகம் ஈர்த்துவிட்டது. அவருக்கு ஏற்றபடி சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் நாளில் இருந்தே அவர் உற்சாகமாக உள்ளார். அவருடன் சிஎஸ்கே அணி ஒரு நீண்ட தூரம்…
தஞ்சாவூர்: மெலட்டூரில் பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் சார்பில் வரும் 11-ம் தேதி பாகவத மேளா தொடங்குகிறது. ஸ்ரீலஷ்மி நரசிம்ம ஜெயந்தியையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூரில் பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் சார்பில் ஆண்டுதோறும் பாகவத மேளா நாட்டிய நாடகம் (தெலுங்கு மொழியில்) நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு விழா மெலட்டூர் வரதராஜப் பெருமாள் கோயில் சந்நிதியில் மே 11 -ம் தேதி இரவு தொடங்குகிறது. தொடக்க விழாவில் பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம், மத்திய அரசின் கலாச்சார அமைச்சக இயக்குநர் அணீஷ் பி.ராஜன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இரவு 9.30 மணிக்கு பிரகலாத சரித்திரம்- பாகவத மேளா நாடகம் நடைபெறும். வரும் 12 -ம் தேதி இரவு 8 மணிக்கு பரதநாட்டியம், 9 மணிக்கு தமிழில் பரிஷ்வாங்க பட்டாபிஷேகம், 13-ம் தேதி இரவு 9 மணிக்கு பாகவத மேளா நாடகம் – ஹரிச்சந்திரா நாட்டிய நாடகம் முதல் பாகம்,…
உணவு மற்றும் ஃபேஷன் வழக்கமாக கைகோர்த்துச் செல்லாது, நீங்கள் உங்கள் மதிய உணவை தற்செயலாக அணியாவிட்டால், ஆனால் AI க்கு நன்றி, அந்த காம்போ ஒரு காட்டு மற்றும் வியக்கத்தக்க ஸ்டைலான திருப்பத்தை எடுத்துள்ளது. பாஸ்தாவிலிருந்து நடனமாடும் சுஷி வரை, AI- உருவாக்கிய உணவு உள்ளடக்கம் சமூக ஊடகங்களில் சிறிது காலமாக சுற்றுகளைச் செய்து வருகிறது. ஆனால் கண் இமைகளைப் பிடிக்க சமீபத்திய வைரஸ் ரீல்? இது இந்திய தெரு உணவை முழுக்க முழுக்க பேஷன் அறிக்கைகளாக மாற்றுகிறது.Instagram Page @hoohoocriations80 ஆல் இடுகையிடப்பட்டது, ரீல் ஒரு மகிழ்ச்சியான கேள்வியை எழுப்புகிறது: “நாம் விரும்பும் உணவு மட்டுமே சாப்பிடக்கூடாது, ஆனால் அணிந்து, சுமந்து, வாழ்ந்தால் என்ன?” நேர்மையாக, AI மிகவும் எதிர்பாராத (மற்றும் பெருங்களிப்புடைய) வழிகளில் பதிலளிக்கிறது.வீடியோ ஒரு உண்மையான தேசி தருணத்துடன் திறக்கிறது, ஒரு பெண் ஒரு தோசை சேலை. ஆம், நீங்கள் அதை சரியாகப் படித்தீர்கள். ஒரு தோசியின்…
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா பாட்னாவின் நேற்று (மே 4) நடைபெற்றது. இதில் பிஹார் முதல்வர் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இனி எப்போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் இருக்கப் போகிறேன். முன்பு என்னுடைய கட்சிக்காக இங்கும் அன்றும் செல்ல வேண்டி இருந்தது. ஆனால் அது இனி மீண்டும் நடக்காது. என்னை முதலமைச்சர் ஆக்கியது யார்? அது மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தான்” என்று தெரிவித்தார். 1990களின் மத்தியில் இருந்த பாஜக கூட்டணியில் அங்கும் வகிந்து வந்த நிதிஷ் குமார், 2013ஆம் ஆண்டு அதிலிருந்து விலகிச் சென்றார். அதன் லாலு பிரசாத் யாதவ் கட்சியுடன் கூட்டணி வைத்த அவர், 2017ஆம் ஆண்டு அதை உடைத்து மீண்டும் பாஜக கூட்டணியில் ஐக்கியம் ஆனார். 2022ஆம் ஆண்டு வரை இந்த கூட்டணி நீடித்தது. அதன் பிறகு காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணிக்கு ஆதரவு…
மும்பை: எந்தவொரு பேட்ஸ்மேனுக்கும் பந்துவீசுவதற்கு பயப்பட மாட்டேன் என்று மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ஜஸ்பிரீத் பும்ரா கூறியுள்ளார். உலகில் தற்போதுள்ள வேகப்பந்து வீச்சாளர்களில் மிகவும் அபாயகரமான பந்துவீச்சாளராக கருதப்படுபவர் ஜஸ்பிரீத் பும்ரா. டி20 போட்டிகளின் கடைசி ஓவர்களில் மிகச்சிறந்த முறையில் பந்துவீசி எந்தவொரு பேட்ஸ்மேனையும் திணறடிக்கும் அசாத்திய திறமை பெற்றவர் பும்ரா. கடந்த ஆண்டு ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா சில மாதங்கள் ஓய்வில் இருந்தார். இதைத் தொடர்ந்து நடப்பு ஐபிஎல் தொடரின் பாதியில்தான் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்கினார் பும்ரா. இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 11 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார் அவர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜஸ்பிரீத் பும்ரா கூறியதாவது: ஒவ்வொரு ஆட்டத்தையும் புதிதாக விளையாடுவது போன்றுதான் நான் அணுகுவேன். இதுவரை எந்தவொரு பேட்ஸ்மேனையும் கண்டு பயந்ததில்லை. அவர் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாகவோ அல்லது சராசரியான மட்டை வீச்சாளராகவோ இருக்கலாம். உண்மையில் எந்த வீரரையும் கண்டு…
சென்னை: தமிழகத்தில் நேற்று கத்திரி வெயில் தொடங்கிய நிலையில், அதை தணிக்கும் விதமாக நேற்று மாலை பலத்த காற்றுடன் கோடை மழை பெய்து சென்னை புறநகரை குளிர்வித்தது. தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்தே வெயில் வாட்டி, வதைத்து வருகிறது. இருப்பினும் இடையிடையே, ஆங்காங்கே கனமழையும் பெய்து வருகிறது. சென்னை, புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக வெப்பம் அதிகரித்து வந்தது. பொதுமக்கள் வெயிலுக்கு பயந்து, வெளியில் செல்வதை தவிர்த்து வந்தனர். மாநகராட்சி சார்பில் 20-க்கும் மேற்பட்ட போக்குவரத்து சிக்னல்களில், வெயிலின் தாக்கத்தில் இருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்க பசுமை நிழற்பந்தல்களை அமைத்துள்ளது. அரசியல் கட்சிகள் சார்பில் ஆங்காங்கே கடந்த ஒரு மாதமாக நீர் மோர் பந்தல்கள் அமைத்து, பொதுமக்களுக்கு எலுமிச்சை பழச்சாறு, ரோஸ் மில்க், மோர், வெள்ளரிக்காய், தர்பூசணி பழம், இளநீர் போன்றவற்றை வழங்கி வந்தன. இதற்கிடையில், நேற்று அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலும் தொடங்கியது. வரும் மே 28-ம்…