புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீர் நிறுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில், செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாக்லிஹார் அணையில் இருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் சிந்து நதி நீர் தடையின்றி செல்வதற்காக இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சிந்து நதியின் ஒரு பகுதியான செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாக்லிஹார் அணையின் மதகுகள் மூடப்பட்டதால் அந்த ஆற்றின் வழியாக பாகிஸ்தானுக்கு தண்ணீர் பாய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், செனாப் நதியின் வழித்தடம் நீரின்றி காய்ந்து காணப்படுகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ரியாசி என்ற பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில், “இது…
Author: admin
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர், இதுவரை சரிவர ஆடாமல் இருந்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஜாஷ் இங்லிஸை 3-ம் நிலையில் இறக்கி மாஸ்டர் ஸ்ட்ரோக் அடித்தார். இந்த திடீர் ‘காய்’ நகர்த்தலில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் திக்குமுக்காடினார். மயங்க் யாதவ் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு பந்து வீச வந்தார். அவரை ஜாஷ் இங்லிஸ் 2-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி லக்னோவின் அடிப்படைகளைத் தகர்த்ததோடு, பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகத்துக்கு உத்வேக மூட்டினார். இங்லிஸ் 14 பந்துகளில் 30 ரன்களை விளாசினார். இதில் 1 பவுண்டரி 4 சிக்ஸர்கள் அடங்கும். இதனால் பவர் ப்ளேயில் பஞ்சாப் கிங்ஸ் 66 ரன்களை விளாசிட மாறாக லக்னோ தங்கள் பவர் ப்ளேயில் 3 விக்கெட்டுகளை இழந்து வெறும் 38 ரன்களையே எடுத்தனர். 237 ரன்கள் இலக்கை விரட்டும்…
மெட்ராஸ் கந்தசாமி ராதாகிருஷ்ணன் என்கிற எம்.கே.ராதா, ஏழு வயதிலேயே நாடகத்தில் நடிக்கத் தொடங்கியவர். சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் தேசபக்தி நாடகங்களில் நடித்து மக்கள் மனதில் முன்னணி நடிகராக இடம் பிடித்திருந்தார். எல்லீஸ் ஆர்.டங்கனின் ‘சதி லீலாவதி’யில் நாயகனாக அறிமுகமானவர். தொடர்ந்து அனாதை பெண், வனமோகினி, சந்திரலேகா, அபூர்வ சகோதரர்கள் என பல படங்களில் நடித்துள்ளார். அவர் நாயகனாக நடித்த படங்களில் ஒன்று, ‘கண்ணின் மணிகள்’. இதில், அவருடன் பத்மினி, எம்.வி.ராஜம்மா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், சுந்தர், டி.பி.முத்துலட்சுமி, ஏ.கருணாநிதி, எம்.வி.ராஜம்மா, டி.ஏ.மதுரம் என பலர் நடித்தனர். அந்த காலகட்டத்தில் பிரபலமாக இருந்த ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ஜானகிராமன், இந்தப் படத்தைத் தனது மகேஸ்வரி பிக்சர்ஸ் மூலம் தயாரித்து, ஒளிப்பதிவு செய்து இயக்கினார். ஏ.எல்.நாராயணனும் கணபதியப்பனும் வசனத்தை எழுதினர். எஸ்.வி.வெங்கட்ராமன் இசை அமைத்தார். பாபநாசம் சிவன், கம்பதாசன், சுப்பு ஆறுமுகம், ஏ.மருதகாசி என பலர் பாடல்கள் எழுதினர். நாகரிக வாழ்க்கையை நையாண்டி செய்து என்.எஸ்.கிருஷ்ணன் பாடிய,…
ஒருவழியாக அதிமுக – பாஜக கூட்டணி அமைந்தேவிட்டதால், இனி எப்படி கூடுதல் தொகுதிகளைக் கேட்கமுடியும் என்ற கவலையில் இருக்கின்றன திமுக கூட்டணியில் இருக்கும் தோழமைக் கட்சிகள். சில வாரங்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, தவெக என சிறிய கட்சிகளுக்கு 4 விதமான கூட்டணி வாய்ப்புகள் இருந்தன. அது இப்போது திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி என இரண்டாக சுருங்கிவிட்டது. அதிமுக, தவெக ஆப்ஷன்கள் இருந்தவரை திமுக கூட்டணி கட்சிகள் தங்கள் பேர வலிமையை அதிகப்படுத்தலாம் என்று கனவுக் கோட்டை கட்டின. அதன் வெளிப்பாடாகவே தங்களுக்கு குறைந்தது 25 தொகுதிகள் வேண்டும் என விசிக நிர்வாகிகள் பொதுத்தளத்தில் கோரிக்கை வைத்தனர். சிபிஎம், சிபிஐ கட்சிகளும் அவ்வப்போது ஆட்சியின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி அழுத்தம் கொடுத்தன. காங்கிரஸ் தரப்பிலும் கூடுதல் தொகுதிகள், கூட்டணி ஆட்சி போன்ற வார்த்தை தூண்டில்களை வீசிப் பார்த்தனர். மதிமுக-வும் மனதில் ஆசையோடு இருந்தது. 2019 மக்களவைத் தேர்தல்…
எங்கள் கல்லீரல் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும், இது உடலை நச்சுத்தன்மையாக்குகிறது, உணவை ஜீரணிக்க உதவுகிறது, வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது. இன்று நாம் எதிர்கொள்ளும் மிகவும் பொதுவான வாழ்க்கை முறை நிலைமைகளில் ஒன்று கொழுப்பு கல்லீரல், இது ஆல்கஹால் அல்லது மதுபானமற்றதாக இருக்கலாம். கொழுப்பு கல்லீரல் கவலைக்குரியது என்றாலும், அது உயிருக்கு ஆபத்தானது அல்ல, அது கல்லீரல் சிரோசிஸாக மாறாவிட்டால், இது கடுமையான நிலை, ஆரோக்கியமான கல்லீரல் திசு வடு திசுக்களால் மாற்றப்பட்டு, கல்லீரலின் செயல்பாட்டைக் குறைக்கிறது. இருப்பினும், கல்லீரல் சிரோசிஸ் என்பது திடீர் நிலை அல்ல, பொதுவாக இது பல ஆண்டுகளாக கல்லீரல் பாதிப்பால் ஏற்படுகிறது, இது ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் முற்றிலும் தடுக்கப்படலாம். அதிகப்படியான சர்க்கரை நுகர்வு தவிர, இந்த பழக்கவழக்கங்களும் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும் ..
புதுடெல்லி: நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்து இல்லை என அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி கூறியுள்ளார். சனாதன ஆதரவாளர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக, ராகுல் கோயில்களுக்குள் நுழைவதற்கும் தடை விதிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அவரது இந்தக் கருத்து சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. வட மாநிலங்களின் சர்ச்சை துறவியாகக் கருதப்படுபவர் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி. இவர், உத்தரகாண்ட் மாநிலம் ஜோதிஷ்வர் பீடத்தின் சங்கராச்சாரியராகவும் கருதப்படுகிறார். பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலரையும் விமர்சித்துள்ளார். இதனால், அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி, ஒரு சர்ச்சை துறவி எனவும் பெயர் எடுத்தவர். இந்த வகையில் அவர், காங்கிரஸின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியை ‘இந்து அல்லாதவர்’ என்று அறிவித்துள்ளார். இத்துடன், அவரை இந்து மதத்திலிருந்து நீக்குவதாகவும் அறிவித்துள்ளார். இது குறித்து சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் தனது உத்தராகண்ட் யாத்திரையின் போது செய்தியாளர்களிடம் கூறுகையில், “சில காலத்துக்கு முன்பு நாடாளுமன்றத்தில் மனுஸ்மிருதி குறித்து ராகுல் பேசினார். இதில் அவர்,…
கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு என்று விஜய் சொன்னாலும் சொன்னார் எல்லாக் கட்சிகளும் இப்போது இதை முக்கிய அஜென்டாவாக வைக்கத் தொடங்கிவிட்டன. திமுக கூட்டணிக்குள் சலசலப்பை உண்டாக்க வேண்டும் அங்கிருக்கும் கட்சிகளுக்கும் சபலத்தை உண்டாக்க வேண்டும் என்பதற்காகவே கட்சியின் முதல் மாநாட்டிலேயே போகிற போக்கில் ‘அதிகாரத்தில் பங்கு’ என்று கொளுத்திப் போட்டார் விஜய். அது இப்போது நன்றாகவே பற்றி எரிய ஆரம்பித்திருக்கிறது. “2026-ல் தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமையும்” என அமித் ஷா வெளியிட்ட அறிவிப்பானது அதிமுக – பாஜக கூட்டணிக்குள் ஆளுக்கொரு விதமாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இருந்தாலும் இதை இப்போது சர்ச்சையாக்க வேண்டாம் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என இரண்டு கட்சிகளுமே அர்த்தத்துடன் அடக்கி வாசிக்கின்றன. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கும் அமைச்சராகும் ஆசை அடிமனதில் இருக்கிறது. ஆனால், திமுக என்ன நினைக்குமோ என்ற அச்சத்தில் அதன் தலைவர்கள் அதை வெளிப்படையாகச் சொல்லத் தயங்குகிறார்கள்.…
பஃப் டாடி, பி டிடி, மற்றும் டிடி என்றும் அழைக்கப்படும் சீன் “டிடி” காம்ப்ஸ் இந்த வாரம் நீதிமன்றத்திற்கு செல்கிறது. அவரது கூட்டாட்சி சோதனைக்கான ஜூரி தேர்வு மே 5 திங்கள், நியூயார்க்கில் தொடங்குகிறது. ஒரு காலத்தில் கலைஞர்களின் வாழ்க்கையை வடிவமைப்பதற்கும் ஒரு பில்லியன் டாலர் பிராண்டை உருவாக்குவதற்கும் பெயர் பெற்ற இசை தயாரிப்பாளரும் தொழில்முனைவோரும் இப்போது பல ஆண்டுகளாக வதந்திகள் மற்றும் வழக்குகளுக்குப் பிறகு வெடிக்கும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.டிடி என்ன கட்டணம் வசூலிக்கப்படுகிறது? கடன்: xசெப்டம்பர் 16, 2024 அன்று நியூயார்க்கின் மன்ஹாட்டனில் உள்ள ஒரு ஹோட்டலில் ஒரு பெரிய நடுவர் குற்றச்சாட்டைத் தொடர்ந்து சீன் “டிடி” காம்ப்ஸ் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது புரூக்ளினில் உள்ள பெருநகர தடுப்பு மையத்தில் ஜாமீன் இல்லாமல் வைக்கப்பட்டுள்ளார்.பாலியல் கடத்தல், பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் விநியோகம், சாட்சி மிரட்டல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை (மோசடி) நடத்துதல் ஆகியவற்றில் டிடி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.…
புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட கடற்படை வீரர் வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி ட்ரோல் செய்யப்பட்டதற்கு தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் வினய் நர்வாலும் ஒருவர். திருமணமாகி ஒரு வாரமே ஆன நிலையில் அவர் தனது மனைவி ஹிமான்ஷி நர்வால் உடன் பஹல்காம் சென்றிருதபோது பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். வினய் நர்வால் உயிரிழப்பும், ஹிமான்ஷி கதறி அழுததும் நாடு முழுவதும் கவனம் பெற்றது. அண்மையில் ஹிமான்ஷி, “வினய் எங்கிருந்தாலும், ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று முழு தேசமும் அவருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். முஸ்லிம்கள் அல்லது காஷ்மீரிகளுக்கு எதிராக யாரும் செயல்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு அமைதி வேண்டும், அமைதி மட்டுமே வேண்டும். நிச்சயமாக, எங்களுக்கு நீதி வேண்டும்.” என்று கூறியிருந்தார். இந்நிலையில், ஹிமான்ஷி…
சென்னை: சென்னையில் கட்டுமானம் மற்றும் இடிபாடுகள் மேற்கொள்ளும் இடங்களில் மாசு ஏற்படுத்தினால் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் மாநகராட்சி உருவாக்கியுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வரும் மே 21-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி சார்பில் சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானம் குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை, வரும் மே 21-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, ஒரு ஏக்கர் வரை பரப்பளவு கொண்ட புதிய கட்டுமானம் அல்லது கட்டிட இடிபாடுகள் மேற்கொள்ளும் போது 6 மீட்டர் உயரத்துக்கும், ஒரு ஏக்கருக்கும் அதிமான தள பரப்பளவு கொண்ட இடங்களை சுற்றி 10 மீ உயரத்தும் தகரம் அல்லது உலோகத் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். இப்பணிகளின்போது வெளிவரும் தூசித் துகள்கள் பரவுவதைத் தடுக்க அதிக அடர்த்தி கொண்ட துணி, தார்ப்பாய், இரட்டை அடுக்கு பச்சை…