நெல்லை: திருநெல்வேலியில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் நவீன நூலகம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை மாநில பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். பாளையங்கோட்டையில் மாவட்ட தொழில் மையம் அருகில் 3 ஏக்கர் பரப்பளவில் ரூ.100 கோடியில் நவீன நூலகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தையும், பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி பகுதியில் பொருநை அருங்காட்சியக கட்டுமானப் பணிகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியது: “தென்மாவட்டங்களிலுள்ள அனைத்து தரப்பு மக்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் இந்த நூலகம் அமையும். இந்த நூலகத்தில் மினி திரையரங்கம், ஆடிட்டோரியம், மாற்றுத் திறனாளிகளுக்கென தனி அறை போன்ற எண்ணற்ற வசதிகள் அமையவுள்ளது. நூலகத்துக்கான மாதிரி வரைப்படம் தயார் செய்யப்பட்டு தமிழக முதல்வரின் ஒப்புதல் பெறப்பட்டு, டெண்டர் கோரப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும். தமிழகத்தின் தொன்மையான வரலாற்றினை உலகறிய செய்யும்…
Author: admin
ஆப்டிகல் மாயைகள் நம் மூளையை உடற்பயிற்சி செய்கின்றன, மேலும் இது நமது அவதானிக்கும் திறன்களின் சரியான சோதனையாகவும், ஆர்வமுள்ள கண்ணாகவும் இருக்கலாம். ஒரு ஆப்டிகல் மாயை என்பது ஒரு காட்சி நிகழ்வு ஆகும், அங்கு கண்கள் உணர்ந்ததை மூளை தவறாகப் புரிந்துகொள்கிறது. கண்களால் அனுப்பப்பட்ட தகவல்கள் மூளை எவ்வாறு செயலாக்குகிறது மற்றும் அது பார்ப்பதை புரிந்துகொள்கிறது என்பதோடு முரண்படும்போது இது நிகழ்கிறது.இந்த மாயைகள் பெரும்பாலும் இல்லாத விஷயங்களைப் பார்ப்பதற்கு அல்லது யதார்த்தத்திலிருந்து வித்தியாசமாக பொருட்களை உணருவதில் நம்மை ஏமாற்றுகின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு நிலையான படம் நகரும் என்று தோன்றலாம், அல்லது இரண்டு வடிவங்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும் அவை சமமற்றதாகத் தோன்றலாம்.மனிதனின் முகத்தை நீங்கள் கண்டுபிடிக்க முடியுமா?இது ஒரு மயிலின் படம், இது முதல் தோற்றத்தில் மிகவும் வழக்கமானதாகத் தெரிகிறது. இருப்பினும், மயிலின் இறகுகளுக்குள் ஒரு மனிதனின் முகம் மறைக்கப்பட்டுள்ளது. மனிதன் “என் புளூபியர்ட்” என்று அழைக்கப்படுகிறான், ஒரே நேரத்தில் கண்டுபிடிப்பது…
ஹைதராபாத்: இந்தியா – இலங்கை மீனவர்கள் நல்லிணக்கத்தின் மூலமும், இரு நாடுகள் பரஸ்பர ஒத்துழைப்பின் மூலமும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று ஆந்திர துணை முதல்வரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்தில் 5 வெவ்வேறு சம்பவங்களில், 24 இந்திய மீனவர்கள் இன்னல்களுக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகியிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. குறிப்பாக நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நமது மீனவர்கள் தாக்குதலுக்குள்ளாகி, காயமடைந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது மிகுந்த கவலையளிக்கிறது. இந்தியா மற்றும் இலங்கை இடையே உள்ள தூதரக நல்லுறவுகளை அடிப்படையாகக் கொண்டு, இது போன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க, நமது வெளியுறவுத் துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் மூலமும், பரஸ்பர ஒத்துழைப்பின் மூலமும், இரு நாடுகளும் இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாத வகையில் துரிதமான தீர்வை காண வேண்டும். எல்லைகள்…
மறைமலைநகர்: “திமுக எப்போதும் வணிகர்களுக்கு எதிரான கட்சி. திமுகவினருக்கு சாதகமாக உள்ள ஒரு சில வணிகர்களை பயன்படுத்தி வணிகர்களிடையே பிளவு ஏற்படுத்துவது திமுகவுக்கு கைவந்த கலை. வணிகர்களின் நலனை பாதுகாப்பதில் அதிமுக எப்போதும் உறுதுணையாக இருக்கும்,” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் 42-வது வணிகர் தினம் மற்றும் 7-வது மாநில மாநாடு மறைமலைநகர் பகுதியில் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அப்போது அவர் பேசியது: “எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வணிகர்கள் நலனில் அதிக அக்கறை கொண்டவர்கள். சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு என்று வந்தபோது மக்களவையில் அந்த மசோதாவை அதிமுக எதிர்த்தது. அதிமுக வணிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இரவு 10 மணிக்கு மேல் கடைகளைத் திறந்து வியாபாரம் நடத்த சிறப்பு உத்தரவை பிறப்பித்தது. மக்களவையில் சில்லரை வணிகத்தில் எதிர்ப்பு தெரிவிக்காமல் விட்டிருந்தால்…
சென்னை: பிஇ, பிடெக் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 7-ம் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூிரிகள் என அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும். இக்கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்பில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு முறையில் நிரப்பப்படும். இந்தக் கலந்தாய்வை தமிழக அரசு சார்பில் தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டு (2025-2026) பிஇ, பிடெக் சேர்க்கைக்கைக்கான (அரசு ஒதுக்கீட்டு இடங்கள்) ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 7-ம் தேதி (புதன்கிழமை) தொடங்கும் என்றும், ஆன்லைன் பதிவை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார் என்றும் உயர் கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை…
சென்னை: “அதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் நீட் விலக்கு பெறுவதற்கு தமிழக அரசுக்கு உறுதுணையாக இருந்திருக்க வேண்டும்” என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “நீட் வந்த நாள் முதலே குளறுபடிகள் தான் நடக்கிறது. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் என்பது சட்டரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. இந்த 7.5 சதவீதத்தினால் பலனும் இருக்கின்றது என்கின்ற வகையில், தமிழக முதல்வர், மருத்துவ கல்வி போல் சட்டம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் 7.5 சதவீதத்தை கொண்டு வந்தார். இதனை உயர்த்தி வேறு யாராவது நீதி மன்றங்களுக்கு சென்று சட்டரீதியான சிக்கல் வந்து விடக்கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்கின்றது. 10 சதவீதம் வரை உயர்த்த சட்டரீதியான நுணுக்கங்களை ஆராய வேண்டிய அவசியம் இருக்கிறது. முதல்வர் நிச்சயம் சட்ட விதிகளை பின்பற்றி எந்த நடவடிக்கையானாலும் எடுப்பார். அவசரக்கோலத்தில்…
முகலாயர்களின் பேத்தி மற்றும் செட்போர்ட் உரிமையாளர் என்று கூறும் சுல்தானா பேகூமைச் சந்திக்கவும்-இங்கே எஸ்சி கூறுகிறது ஒரு வரலாற்று சோப் ஓபராவிலிருந்து நேராக ஒரு ராயல் நாடகம் போல, ஒரு பெண் சமீபத்தில் இந்தியாவின் உச்சநீதிமன்றத்தை (எஸ்சி) அணுகினார், அவர் முகலாயர்களின் பேரப்பிள்ளை என்றும், எனவே செங்கலைக் கோட்டையின் சரியான ‘வாரிசு’ என்றும் கூறினார்.ஆம், நீங்கள் அதை சரியாகப் படித்தீர்கள்! முகலாய பேரரசர் பகதூர் ஷா ஜாபரின் பேரரசர் தான் என்று கூறும் மீட்ஸுல்தானா பேகம், எஸ்சி தனது கூற்றுக்களுக்கு எவ்வாறு பதிலளித்தார் என்பது இங்கே.திங்களன்று, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் தலைமையிலான ஒரு பெஞ்ச், செட்போர்ட்டின் உரிமை தொடர்பான தனது மனுவை நிராகரித்து, அதை “தவறாக கருதப்பட்டது” மற்றும் “தகுதி இல்லாதது” என்று கூறியது. சுல்தானாவின் வழக்கறிஞர், அவர் இந்தியாவின் “முதல் சுதந்திர போராளி” உடன் தொடர்புடையவர் என்று உணர்ச்சியுடன் வாதிட்டார், அது நீதிமன்றத்தைத்…
புதுடெல்லி: வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, வழக்கு விசாரணையை மே 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (மே 5) மீண்டும் விசாரணைக்கு வந்தன. கடந்த விசாரணையின்போது, வக்பு சொத்துக்களை மே 5 வரை ரத்து செய்ய மாட்டோம் என்றும், மத்திய வக்பு கவுன்சில் மற்றும் வாரியங்களுக்கு எந்த நியமனங்களையும் செய்ய மாட்டோம் என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்துக்கு உறுதியளித்தது. மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதிகள்…
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கோலாகலமாக தொடங்க உள்ளது. இதற்காக கண்காணிப்பு, சுகாதாரம், பொழுதுபோக்கு, போக்குவரத்து உள்ளிட்ட பக்தர்களுக்கான அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நாளை (மே 6) தொடங்கி மே 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக கடந்த மாதம் 16-ம் தேதி திருக்கம்பம் நடும் விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வருகின்றனர். 8 நாள் நடைபெறும் விழாவில் 24 மணி நேரமும் நடை திறக்கப்பட்டு இருக்கும். பக்தர்களும் நேர்த்திக்கடனை இரவும், பகலும் செலுத்துவர். கோயிலுக்கு வரும் பக்தர்களின் பொழுதுபோக்குக்காக கோயில் அருகே ராட்டினம், சர்க்கஸ், மாயாஜாலம், சாகசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். கோயில் திருவிழா தொடங்க உள்ளதைத் தொடர்ந்து பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேனி, சின்னமனூர் வழித்தடத்தில் பேருந்துகள்செல்லும் வகையில்…
சென்னை: ராணுவம் பற்றி விஷமக் கருத்து பரப்புவோர் மீது தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். “சட்டத்துக்கு புறம்பாக தமிழகத்தில் தங்கியுள்ள பாகிஸ்தான், வங்கதேசத்தை சேர்ந்த நபர்களை உடனடியாக தமிழகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். தமிழக முதல்வர் இவ்விவகாரத்தில் துரிதமாக செயல்பட வேண்டும்” என்று மத்திய இணையமைச்சரும், தமிழக பாஜக மூத்த தலைவருமான எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வளைதள பதிவில், “காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலா பயணிகளை கொன்று குவித்த திவிரவாதிகளுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பஹல்காமில் உயிரிழந்த 26 பேரின் குடும்பத்துக்கு பின்னால் 140 கோடி இந்தியர்கள் ஒன்றிணைந்து நிற்கிறோம் என்பதை உலகுக்கு உணர்த்த வேண்டிய தருணம் இது. தீவிரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. தீவிரவாதத்தின் ஆணி வேராக செயல்படும் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டியே ஆக…