Author: admin

சென்னை: ‘உயர் நீதிமன்றம் உடனடியாக கரூர் சம்பவத்தில் தலையிட்டு வழக்குப் பதிந்து, சுயாதீனமான விசாரணையை மேற்கொண்டு, தவெக தலைவர் விஜய் மீதும், பிரச்சாரக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் மீதும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இப்படியான ரோடு ஷோ பிரச்சாரங்களைத் தடை செய்ய வேண்டும்’ என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘கரூரில் நேற்று தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நடைபெற்ற, நடிகர் விஜய்யின் பரப்புரை நிகழ்ச்சி, ஒரு பேரதிர்ச்சியையும் பேராபத்தையும் உருவாக்கியுள்ளது. கூட்ட நெரிசலால் குழந்தைகளும் சிறுவர்களும் உட்பட 39 பேர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னதாகவே உயிரிழந்ததும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மயக்கமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்கள் என்ற செய்திகளும், நம் அனைவரின் உள்ளத்தையும் உருக்குகின்றன. பொதுமக்கள் விஜய்யின் பேச்சைக் கேட்க ஆவலுடன் காலையில் இருந்தே காத்திருந்த நிலையில், 12.00 மணிக்கே…

Read More

உலகளவில் புற்றுநோய் இன்னும் மிகவும் ஆபத்தான நோய்களில் ஒன்றாகும், மேலும் இந்தியா வேறுபட்டதல்ல. ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோய் வழக்குகள் அதிகரித்து வருவதால், இந்திய நோயாளிகளின் குறிப்பிட்ட மரபணு சுயவிவரங்களின்படி சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சிகிச்சைகளுக்கான அதிக தேவை உள்ளது. இந்த கோரிக்கையின் பேரில் செயல்படும் ஐ.ஐ.டி-மட்ராஸ் ஒரு புரட்சிகர புற்றுநோய் மரபணு மற்றும் திசு வங்கியைத் தொடங்கியுள்ளது, இந்திய தனிப்பயனாக்கப்பட்ட புற்றுநோய் சிகிச்சையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.புற்றுநோய் சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்துதல்இந்த திட்டத்தின் மையத்தில் இந்தியா முழுவதும் உள்ள புற்றுநோய் நோயாளிகளிடமிருந்து சுமார் 7,000 கட்டி மாதிரிகள் அறுவடை செய்வது (தேசிய புற்றுநோய் திசு பயோ பேங்க், ஐ.ஐ.டி மெட்ராஸ்) ஐ.ஐ.டி-மட்ராக்ஸில் விஞ்ஞானிகள் இந்த கட்டி செல்களை ஆய்வகத்தில் வெவ்வேறு சிகிச்சைகள் பரிசோதிக்க வளர்த்து வருகின்றனர். நாவல் மூலோபாயம் உண்மையான சிகிச்சைகள் வழங்குவதற்கு முன் தனிப்பட்ட நோயாளிகளுக்கு எது சிறந்தது என்பதை தீர்மானிக்க ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகிறது. புற்றுநோய் சிகிச்சையில் யூகங்களைக் குறைப்பதன்…

Read More

புதுடெல்லி: கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா பிரதமர் நரேந்திர மோடி தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமை கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவியை தமிழக அரசு நேற்று அறிவித்தது. இதேபோல உயிரிழந்தவர்களுக்கு தவெக தலைவர் விஜய் ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடியும் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ‘தமிழகத்தின் கரூரில் நடைபெற்ற அரசியல் கட்சியின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்…

Read More

தவெக கூட்ட நெரிசல் துயரம் குறித்து நடிகர் விஷால் காட்டமாக பதிவிட்டுள்ளார். கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் கரூர் மாநகரை கண்ணீரில் மூழ்கடித்துள்ளது. இந்தச் சம்பவத்துக்கு பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கரூர் துயரச் சம்பவம் குறித்து விஷால் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “முழுக்க முட்டாள்தனம். நடிகர், அரசியல் கட்சித் தலைவர் விஜய்யின் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைக் கேள்விப்படுவது மனதை வேதனைப்படுத்துகிறது, முற்றிலும் சரியல்ல. பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் ஒவ்வொருவருக்கும் என் இதயம் அஞ்சலி செலுத்துகிறது. மேலும், அவர்கள் ஒவ்வொருவருக்கும்…

Read More

சென்னை: கரூர் உயிரிழப்புக்கு காரணமான நடிகர் விஜய், தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பாஜகவின் மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரம் செய்த கூட்டத்தில், அதிமான மக்கள் கூடியதால் கடும் நெரிசல் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் மயக்கமடைந்த நிலையில் 39 பேர் உயிரிழந்துள்ள விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். அதற்கான தொகையை தமிழக வெற்றி கழகம், தமிழக அரசுக்கு உடனடியாக வழங்க வேண்டும். இது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒரு பாடமாக முன் உதாரணமாக இருக்க வேண்டும். காவல் துறைக்கு பொறுப்பு அமைச்சராக உள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியல் நாகரிகத்துடன் தார்மிக பொறுப்பேற்று உடனடியாக காவல்துறை பொறுப்பு…

Read More

கிட்டத்தட்ட இரண்டு வருட டேட்டிங் பிறகு செலினா கோம்ஸ் அதிகாரப்பூர்வமாக பென்னி பிளாங்கோவுடன் முடிச்சு கட்டியுள்ளார். பாடகரும் நடிகையும் சனிக்கிழமை (உள்ளூர் நேரம்) இன்ஸ்டாகிராமில் கனவான திருமண புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டனர், கலிபோர்னியாவின் சாண்டா பார்பராவில் நடந்த அவரது நட்சத்திரம் நிறைந்த விழாவின் ஒரு காட்சியை ரசிகர்களுக்கு வழங்கினர்.செலினாவின் பெரிய நாள் இணையத்தை அன்பால் வெள்ளத்தில் மூழ்கடித்தாலும், அனைவரின் கவனமும் திருமண விவரங்களில் மட்டுமே இல்லை. சில ரசிகர்கள் அவரது முன்னாள் காதலன் ஜஸ்டின் பீபர் மீது தங்கள் கவனத்தைத் திருப்பினர், அதன் சமீபத்திய ஆன்லைன் செயல்பாடு சில புருவங்களை உயர்த்தியுள்ளது.ஜஸ்டின்-செலினா லோர் உங்களுக்குத் தெரிந்தால், ஜஸ்டின் அவளுடன் தொடர்புடைய எதையும் வரும்போது ஒருபோதும் நுட்பமாக இருந்ததில்லை என்பது உங்களுக்குத் தெரியும். 2010 மற்றும் 2018 க்கு இடையில் எட்டு ஆண்டுகளாக பிரபலமாக தேதியிட்ட இருவரும், ஜஸ்டின் ஹெய்லி பால்ட்வினை (இப்போது பீபர்) திருமணம் செய்யும் வரை எப்போதும் பின்னிப்பிணைந்ததாகத் தோன்றியது.…

Read More

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் கான்​பூரில் மிலாது நபி பண்​டிகையை முன்​னிட்​டு, இம்​மாத தொடக்​கத்​தில் ‘ஐ லவ் முஹமது’ என்ற பெயரில் பதாகை வைக்​கப்​பட்​ட​தால் சர்ச்சை எழுந்​தது. இதுதொடர்​பாக உ.பி. போலீ​ஸார், வழக்​குப் பதிவு செய்து முதல் தகவல் அறிக்​கையை (எப்​ஐஆர்) பதிவு செய்​தனர். இதைக் கண்​டித்து முஸ்​லிம்​கள் ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இதற்கு பதிலாக இந்து அமைப்​பினர் ‘ஐ லவ் மகாதேவ்’ பதாகைகளை ஏந்தி ஆர்ப்​பாட்​டம் நடத்​தினர். உத்தர பிரதேச மாநிலம் பரேலி​யில் நேற்று முன்​தினம் வெள்​ளிக்​கிழமை பேரணி நடை​பெற்​றது. இந்தப் பேரணி​யில் சிலர் போலீ​ஸார் மீது கற்​களை வீசி​ய​தால் வன்​முறை ஏற்​பட்​டது. இந்தப் பேரணி​யில் வந்​தவர்​களைக் கலைக்க போலீ​ஸார் தடியடி நடத்​தினர். இதில் ஏற்​பட்ட மோதலில் 10 போலீ​ஸார் காயமடைந்​தனர். இதுதொடர்​பாக இது​வரை 8 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். மேலும், அடை​யாளம் தெரி​யாத நபர்​கள் 1,700 பேர் மீது வழக்​கு​களை போலீ​ஸார் பதிவு செய்​துள்​ளனர். இந்​நிலை​யில் போராட்​டங்​களுக்கு அழைப்பு விடுத்த…

Read More

மீன்தொழில்கள் மேலாண்மை தொடர்பான எம்பிஏ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை முட்டுக்காட்டில் அமைந்துள்ள தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக மீன்வள வணிக கல்லூரியில் எம்பிஏ (மீன்தொழில்கள் மேலாண்மை) படிப்பு வழங்கப்படுகிறது. நடப்பு 2025-26 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தற்போது ஆன்லைனில் பெறப்பட்டு வருகின்றன. மொத்தம் 20 இடங்கள் உள்ளன. ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தற்போது இறுதி ஆண்டு பட்டப் படிப்பு பயில்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். இந்த படிப்பில் சேர விரும்புவோர் பல்கலைக் கழகத்தின் இணையதளம் (www.tnjfu.ac.in) மூலமாக அக்.24-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப் பிக்கலாம். பட்டப் படிப்பு மதிப்பெண், பெற்ற விருதுகள், சிறப்பு பயிற்சி, கருத்தரங்குகளில் பங்கேற்பு, பணி அனுபவம், விளையாட்டு, என்எஸ்எஸ், என்சிசி செயல்பாடு, நேர்காணல் என ஒவ்வொன்றுக்கும்…

Read More

கரூரில் ஏற்பட்ட துயரச் சம்பவம் குறித்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்துள்ளனர். கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தை கண்ணீரில் மூழ்கடித்துள்ளது. இந்தச் சம்பவத்துக்கு பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கரூர் துயரச் சம்பவம் குறித்து திரையுலக பிரபலங்களும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்துள்ளனர். அவற்றின் தொகுப்பு: பிரபுதேவா: கரூரில் ஏற்பட்ட துயரமான உயிர் இழப்பு சம்பவத்தால் வருத்தமடைந்தேன். குடும்பத்தினருக்கு எனது பிரார்த்தனைகளும், ஆழ்ந்த இரங்கலும். கங்கனா ரனாவத்: தமிழ்நாட்டின் கரூரில் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட உயிர் இழப்பைக் கேள்விபட்டு வேதனையடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும்…

Read More

கரூர்: சிதறிக்கிடக்கும் காலணிகள், தவெக தொண்டர்கள் அணிந்திருந்த கசங்கிய கட்சி துண்டுகள், கிழிந்து கிடக்கும் பேனர்கள் என கரூர் வேலுசாமிபுரத்தின் கூட்டம் நடந்த இடம் சோகத்தின் அத்தனை வடுக்களையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. நடிகரும் தவெக தலைவருமான விஜய் தங்கள் பகுதிக்கு வருகிறார் என்பதால் அப்பகுதி மக்கள் நேற்று அடைந்த உற்சாகத்தை பல்வேறு தொலைக்காட்சிகளும் சமூக ஊடகங்களும் வெளிப்படுத்தியதை அத்தனை எளிதில் மறந்துவிட முடியாது. ஆனால், அந்த உற்சாகம் இன்று அப்பகுதியின் மாபெரும் சோகமாக மாறியுள்ளது. கூட்டம் நடந்த இடத்துக்கு அதிகாலை முதல் ஏராளமான மக்கள் வந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். சிதறிக் கிடக்கும் காலணிகள், தவெக தொண்டர்கள் அணிந்திருந்த கசங்கிய கட்சி துண்டுகள், கிழிந்து கிடக்கும் பேனர்கள், உடைந்து கிடக்கும் மரக்கிளை என்று அப்பகுதி பெரும் சோகத்தின் அடையாளமாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. நேற்று இரவு என்ன நடந்தது என்பதன் வாழும் சாட்சிகளாக உள்ள பலரும், தாங்கள் நேரில் கண்ட பெரும்…

Read More