பெங்களூரு/ஹைதராபாத்: கர்நாடகாவில் கடந்த 2011-ல் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியில் ஜனார்த்தன ரெட்டி சுற்றுலா, தொழில்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது அவர் கர்நாடகாவில் பெல்லாரி, பீஜாப்பூரிலும், ஆந்திராவில் அனந்தப்பூரிலும் சுரங்க நிறுவனங்களை நடத்தி வந்தார். இந்நிலையில் இரும்பு தாதுக்களை சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தியதாக ஜனார்த்தன ரெட்டி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இவ்வழக்கில் ஹைதராபாத் சிபிஐ நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பில், ‘‘ஓபலாபுரம் சுரங்க நிறுவனத்தின் இயக்குநர் னிவாச ரெட்டி, சுரங்க அதிபர் ஜனார்த்தன ரெட்டி, அவரது உதவியாளர் மெக்ரூஃப் அலி கான், சுரங்கத் துறையின் முன்னாள் இயக்குநர் வி.டி. ராஜகோபால் ஆகியோர் குற்றவாளிகளிகளாக கருதப்படுகின்றனர். இந்த நால்வருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து 4 பேரையும் போலீஸார் காவலில் எடுத்துள்ளனர். ஜனார்த்தன ரெட்டி இப்போது பாஜக…
Author: admin
சென்னை: பாகிஸ்தானியர்களை கண்டறிந்து வெளியேற்றக்கோரி சென்னை மாவட்ட ஆட்சியரிடம் பாஜக மனு அளித்துள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானியர்களை இந்தியாவில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பாகிஸ்தானியர்களை கண்டறிந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் பாஜகவினர் மனு அளித்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை மாவட்ட ஆட்சியரிடம் பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் நேற்று கோரிக்கை மனு அளித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாகிஸ்தான் துணையோடு நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை கண்டித்து பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நாளை(இன்று) போர் பதற்ற ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியா முழுவதும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதை சுட்டிக்காட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை வழங்கியிருக்கிறோம். அதன்படி, மத்திய அரசின்…
சென்னை: தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை உயர்ந்தது. பவுன் ரூ.72,800-க்கு விற்பனையானது. சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த மாதம் 14-ம் தேதி ஒரு பவுன் ரூ.69,760-க்கு விற்பனையானது. பின்னர், படிப்படியாக அதிகரித்தது. 22-ம் தேதி ஒரு பவுன் ரூ.74,320-க்கு உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்தது. பின்னர் விலை குறைந்தது. இம்மாதம் 2-ம் தேதி ஒரு பவுன் ரூ.70,040-க்கு விற்பனையானது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 2 முறை அதிகரித்து ‘ஷாக்’ கொடுத்தது. அதன்படி, நேற்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ.125 அதிகரித்து ரூ.9,025-க்கும், ஒரு பவுனுக்கு ரூ.1,000-ம் அதிகரித்து ரூ.72,200-க்கும் விற்பனையானது. பின்னர், மதியம் மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. அதன்படி, ஒரு கிராம் ரூ.75 அதிகரித்து ரூ.9,100-க்கும், ஒரு பவுன் ரூ.600 அதிகரித்து ரூ.72,800-க்கும் விற்பனையானது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு…
ரிவர் சர்ச் சின்சினாட்டி பாஸ்டர் கோரி போமன், துணைத் தலைவர் ஜே.டி.வான்ஸின் அரை சகோதரரும் சின்சினாட்டி மேயர் வேட்பாளருமான, ஏப்ரல் 20, 2025 ஞாயிற்றுக்கிழமை, சின்சினாட்டியில் ஹேஸ் போர்ட்டர் தொடக்கப்பள்ளி உடற்பயிற்சி நிலையத்தில் ஈஸ்டர் வழிபாட்டு சேவையின் போது பிரசங்கிக்கிறார். (AP புகைப்படம்/கரோலின் காஸ்டர்) 36 வயதான சின்சினாட்டி குடியிருப்பாளரான கோரி போமன், மேயர் வேட்பாளராக அரசியல் கவனத்தை ஈர்த்து வருகிறார். முதன்மையாக துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸின் அரை சகோதரர் என்று அழைக்கப்படும் போமன் அரசியல் நிலப்பரப்பில் தனது சொந்த பாதையை செதுக்குகிறார். போதகர் மற்றும் தொழில்முனைவோரிடமிருந்து அரசியல் ஆர்வலருக்கான அவரது பயணம் வழக்கத்திற்கு மாறானது போலவே புதிரானது.கோரி போமன் மற்றும் ஜே.டி.வான்ஸ் டொனால்ட் போமனுக்கு பிறந்தனர். அறிக்கையின்படி, டொனால்ட் போமன் வான்ஸின் தாயார் பெவர்லி ஐகின்ஸின் இரண்டாவது கணவர் ஆவார், பின்னர் ஜே.டி.வான்ஸின் பெயரை ஜேம்ஸ் டொனால்ட் போமனில் இருந்து ஜேம்ஸ் டேவிட் ஹமலுக்கு மறுமணம் செய்து மாற்றினார். பின்னர்…
புதுடெல்லி: ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புதிய போர்க்கப்பல் வரும் 28-ம் தேதி இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. ரஷ்ய கடற்படையில் அட்மிரல் கிரிகோரோவிச் போர்க்கப்பல்கள் பயன்பாட்டில் உள்ளன. இதே ரகத்தை சேர்ந்த 2 போர்க்கப்பல்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்க இந்தியா முடிவு செய்தது. இதுதொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பரில் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு போர்க்கப்பல்களின் விலை ரூ.8,000 கோடி ஆகும். இதன்படி கடந்த ஆண்டு டிசம்பரில் முதல் போர்க்கப்பலை இந்தியாவிடம் ரஷ்யா ஒப்படைத்தது. இந்த போர்க்கப்பலுக்கு ஐஎன்எஸ் துஷில் என்று பெயரிடப்பட்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து இரண்டாவது போர்க்கப்பலை வரும் 28-ம் தேதி இந்தியாவிடம் ரஷ்யா ஒப்படைக்க உள்ளது. புதிய போர்க்கப்பலுக்கு ஐஎன்எஸ் தமால் என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த போர்க்கப்பல் உடனடியாக இந்திய கடற்படையில் சேர்க்கப்படும். இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் புதிய போர்க்கப்பலின் வருகை…
சென்னை: திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரர் கோயிலில் சித்திரை பெருவிழாவையொட்டி மே.9-ம் தேதி ரத உற்சவம் நடைபெறுகிறது. திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரன் பேட்டையில் மிகவும் பழமைவாய்ந்த பல வரலாற்று சிறப்புகளை உள்ளடக்கிய செண்பகாம்பிகை உடனுறை திருவேட்டீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவிழாக்களில் சித்திரைப் பெருவிழா, பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு சிறப்பிக்கும் மிக முக்கியமான திருவிழாவாகும். மே 12 திருக்கல்யாணம்: அந்தவகையில், இந்த ஆண்டு சித்திரை பெருவிழா மே.3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மே.1-ம் தேதி கிராம தேவதை பூஜையும், 2-ம் தேதி விநாயகர் உற்சவமும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான அதிகார நந்தி சேவை நேற்று முன் தினம் காலை 6.30 மணிக்கு நடந்தது. அதனை தொடர்ந்து, புதன், பூதகி, சிம்ம வாகன வீதி உலாவும், 4-ம் நாள் திருவிழாவில் (நேற்று) புருஷாமிருக சேவை, நாகவாகன சேவையும் நடைபெற்றன. மே 7-ம் தேதி (இன்று) பவழக்கால் விமான சேவை,…
பெண்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அல்லது துஷ்பிரயோகங்களைப் ஊக்குவிக்கும் அல்லது அமைதியாக இருக்கும் எந்தவொரு நபரும் உண்மையான தலைவர் என்று அழைக்கப்படுவதற்குத் தகுதியற்றவர் என்று திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு: “உங்களுக்கு விஜய் பிடிக்குமா அல்லது அஜித் பிடிக்குமா என்று என்னிடம் சிலர் கேட்கின்றனர். நான் எப்போதும் சொல்வதைப் போல எனக்கு அஜித் பிடிக்கும். அவர் மிகச் சிறந்த நடிகர். மிக முக்கியமாக அவர் பெண்களை மதிக்கிறார். அவர் ஒரு குடும்பத் தலைவர். அவர் தனது வாழ்க்கையில் பெண்களை மிகுந்த மரியாதையுடன் நடத்துகிறார். மேலும் அவரது ரசிகர்கள் அவரை போற்றிப் பின்பற்றுகிறார்கள் அஜித் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பெண்களைத் அவமதிப்பதில்லை. அவர்கள் கோழைகள் அல்ல. அவர்கள் கண்ணியத்துடனும், தரத்துடனும் நடந்து கொள்கிறார்கள். அஜித் ஒருபோதும் தனது ரசிகர்கள் ஆன்லைனில் பெண்களை அச்சுறுத்தவோ அல்லது அவமதிக்கவோ அனுமதிக்க மாட்டார். விளம்பரம் தேடாமல் அமைதியாக பலருக்கு அவர்…
ஜம்மு: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் வான்வழி தாக்குதலை இந்தியா நடத்திய நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வட இந்தியாவில் 5 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அரசின் இந்த நடவடிக்கையால், ஐந்து விமான நிலையங்களிலும் விமான சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதை விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. ஜம்மு – காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இங்கு கமர்ஷியல் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். லே, ஜம்மு, அமிர்தசரஸ், தரம்சாலா ஆகிய நான்கு விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதை ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், புஜ், ஜாம்நகர், சண்டிகர், ராஜ்கோட் உள்ளிட்ட விமான நிலையங்களில் தங்கள் விமான சேவை புதன்கிழமை (மே 7) பகல் 12…
முடி உதிர்தல் போன்ற முடி உதிர்தலின் ஆரம்ப அறிகுறிகளை அங்கீகரிப்பது சரியான நேரத்தில் தலையீட்டிற்கு முக்கியமானது. முடி வளர்ச்சி சுழற்சியில் ஏற்படும் இடையூறுகள், மரபியல், ஹார்மோன்கள், மன அழுத்தம் மற்றும் மருத்துவ நிலைமைகளால் பாதிக்கப்படுகின்றன, அவை வழுக்கை இடங்களுக்கு வழிவகுக்கும். முடி மெலிந்ததை நிர்வகிப்பதற்கும் மாற்றுவதற்கும் ஒரு சுகாதார நிபுணருடன் முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் ஆலோசனை அவசியம். உங்கள் தூரிகை அல்லது உங்கள் தலையணையில் சில கூடுதல் முடிகளைக் கவனிப்பது அற்பமானதாகத் தோன்றலாம், ஆனால் இந்த நுட்பமான அறிகுறிகள் வளரும் வழுக்கை இடத்தின் ஆரம்ப குறிகாட்டிகளாக இருக்கலாம். முடி உதிர்தல் என்பது ஒரு பொதுவான கவலையாகும், இது எல்லா வயதினரும் பாலினங்களையும் பாதிக்கும். வளரும் வழுக்கை இடத்தின் ஆரம்ப அறிகுறிகளை அங்கீகரிப்பது பிரச்சினையை உடனடியாக தீர்க்குவதில் முக்கியமானது. இந்த ஆரம்ப குறிகாட்டிகளை அடையாளம் காண்பது சரியான நேரத்தில் தலையீட்டை அனுமதிக்கிறது, இது முடி உதிர்தல் முன்னேற்றத்தை மெதுவாக்கும் அல்லது தலைகீழாக மாற்றும்.முடி…
ஒரு சுழல் a கருந்துளை “பிரேம் இழுத்தல்” என்று அழைக்கப்படும் ஒரு விளைவை உருவாக்குகிறது, இது கருந்துளையின் சுழற்சியால் சுழலும் கருந்துளையைச் சுற்றி விண்வெளி நேரம் வளைந்திருக்கும் ஒரு விளைவு. இது நெருக்கமாக இருக்கும் துகள்களை ஆழமாக பாதிக்கிறது, கருப்பு துளையின் சுழற்சியின் திசையில் நகரும் துகள்களுக்கு ஆற்றலை மாற்றுகிறது. சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் முன்னேற்றம் “கருந்துளை வெடிகுண்டு”கோட்பாட்டு இயற்பியலின் கோட்பாடு கோட்பாட்டிலிருந்து ஆய்வகத்திற்குள், மற்றும் கருந்துளைகளின் அறிவியலிலும் அவற்றின் தனித்துவமான பண்புகளிலும் ஒரு பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.’கருந்துளை குண்டு’ கோட்பாட்டின் பின்னால் கண்கவர் அறிவியல்”கருந்துளை குண்டு” கோட்பாடு முதலில் 1970 களில் புத்திசாலித்தனமான விஞ்ஞானிகளான ரோஜர் பென்ரோஸ் மற்றும் யாகோவ் செல்டோவிச் ஆகியோரால் விவாதிக்கப்பட்டது. ஒரு கருந்துளையின் சுழற்சி ஆற்றலைத் தட்டவும் பெரிதாக்க முடியும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் அவற்றின் கோட்பாடு நிறுவப்பட்டது. அவர்களின் கருதுகோளில், அவர்கள் முன்மொழிந்தனர் ஒரு கருந்துளையின் சுழல் சுற்றியுள்ள சூழலில் ஆற்றல் அளவை அதிகரிக்கும்…