Author: admin

சென்னை: கரூர் பிரச்​சார கூட்​டத்​தின்​போது கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு தலா ரூ.20 லட்​ச​மும், காயமடைந்​தவர்​களுக்கு தலா ரூ.2 லட்​ச​மும் நிவாரணம் வழங்​கப்​படு​வ​தாக தவெக தலை​வர் விஜய் அறி​வித்​துள்​ளார். கரூர் வேலு​சாமிபுரத்​தில் கூட்ட நெரிசல் ஏற்​பட்​ட நிலை​யில், நேற்று முன்தினம் இரவே திருச்சி வந்த விஜய், தனி விமானம் மூலம் உடனடி​யாக சென்னை திரும்​பி​னார். பிரச்​சார கூட்​டத்​தில் திடீரென நெரிசல் ஏற்​பட்​டதற்​கான காரணம், பாதிக்​கப்​பட்​ட​வர்​களின் குடும்​பங்​களுக்கு செய்ய வேண்​டிய உதவி​கள், அவர்​களது குடும்​பத்​தினரை சந்​தித்து ஆறு​தல் கூறு​வது ஆகியவை தொடர்​பாக கட்சி நிர்​வாகி​களு​டன் விஜய் ஆலோ​சனை நடத்​தி​னார். இதையடுத்​து, உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினரை நேரில் சந்​தித்து ஆறு​தல்கூறு​வதற்​காக விஜய் மீண்​டும் கரூர் செல்ல அனு​மதி கேட்​டு, கட்​சித் தரப்​பில் காவல் துறை​யில் மனு கொடுக்​கப்பட உள்​ள​தாக​வும்கூறப்​படு​கிறது. இதற்​கிடையே, விஜய் வெளி​யிட்டஅறிக்​கை: இதயம் நொறுங்​கிப் போய் இருக்​கிறேன். தாங்க முடி​யாத, வார்த்​தைகளால் சொல்ல முடி​யாத வேதனை​யிலும், துயரத்​தி​லும் உழன்று கொண்​டிருக்​கிறேன். நம் உறவு​களை…

Read More

சென்னை: ‘கரூர் சம்​பவம், விபத்​து​போல தெரிய​வில்​லை. திட்​ட​மிட்ட சதி​போலவே தெரி​கிறது. எனவே, சிபிஐ அல்​லது சிறப்பு புல​னாய்வு குழு​வைக் கொண்டு உரிய முறை​யில் விசா​ரணை நடத்த வேண்​டும்’ என்று உயர் நீதி​மன்ற விடு​முறைக் கால நீதிப​தி​யிடம் தவெக​வினர் முறை​யிட்டனர். உயர் நீதி​மன்​றத்​துக்கு தற்​போது தசரா விடு​முறை என்​ப​தால், விடு​முறைக்கால நீதிப​தி​யான தண்​ட​பாணியை சென்னை ராஜா அண்​ணா​மலைபுரம் பசுமைவழிச் சாலை​யில் உள்ள அவரது இல்​லத்​தில் தவெக வழக்​கறிஞர் அணி​யினர் நேற்று சந்​தித்​தனர். அப்​போது, நீதிப​தி​யிடம் தவெக வழக்​கறிஞர் அறிவழகன், இணை பொதுச் செய​லா​ளர் சிடிஆர். நிர்​மல்​கு​மார் ஆகியோர் முறை​யிட்​ட​தாவது: கரூரில் நடை​பெற்ற விஜய் பிரச்​சார கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி 40 பேர் உயி​ரிழந்த சம்​பவம், விபத்​து​போல தெரிய​வில்​லை. திட்​ட​மிட்ட சதி​போலவே தெரி​கிறது. பிரச்​சா​ரம் நடந்​து​கொண்டு இருந்​த​போது, திடீரென எங்​கிருந்தோ கற்​கள் வீசப்​பட்​டன. போலீ​ஸார் தடியடி நடத்​தி​யுள்​ளனர். எனவே, இதுதொடர்​பாக சிபிஐ அல்​லது சிறப்பு புல​னாய்வு குழு​வைக் கொண்டு உரிய முறை​யில் விசா​ரணை நடத்த…

Read More

கரூர்: கரூரில் தவெக பிரச்​சா​ரத்​தின்​போது கல்​வீச்சு சம்​பவம் எது​வும் நடை​பெற​வில்லை என ஏடிஜிபி டேவிட்​சன் தேவாசீர்​வாதம் கூறி​னார். கரூர் ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் நேற்று ஆட்​சி​யர் மீ.தங்​கவேல், ஏடிஜிபி டேவிட்​சன் தேவாசீர்​வாதம், மின்​வாரிய தலை​மைப் பொறி​யாளர் ராஜலட்​சுமி ஆகியோர் செய்​தி​யாளர்​களுக்​குப் பேட்​டியளித்​தனர். அப்​போது, ஆட்​சி​யர் மீ.தங்​கவேல் கூறும்​போது, “கூட்ட நெரிசலில் உயி​ரிழந்த 39 பேரும் சடல​மாகத்​தான் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு கொண்டு வரப்​பட்​டனர். மயங்கி விழுந்​தவர்​களில் ஒரு​வர் உயி​ரிழந்​த​தால், உயி​ரிழப்பு எண்​ணிக்கை 40-ஆக உயர்ந்​துள்​ளது. தற்​போது 80 பேர் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்” என்​றார். ஏடிஜிபி டேவிட்​சன் தேவாசீர்​வாதம் கூறிய​தாவது: கரூரில் பிரச்​சா​ரம் மேற்​கொள்ள லைட்​ஹவுஸ் முனை பகு​தியை முதலில் தவெக​வினர் கேட்​டனர். அங்கு பெட்​ரோல் பங்க், அமராவதி ஆறு உள்​ள​தா​லும், நெருக்​கடி​யான இடம் என்​ப​தா​லும் அனு​மதி வழங்​க​வில்​லை. உழவர்​சந்தை பகு​தி​யும் குறுகலான பகுதி என்​ப​தால் அனு​மதி வழங்​க​வில்​லை. வேலு​சாமிபுரத்​தில் ஏற்கெ​னவே வேறு கட்சி பிரச்​சா​ரம் செய்​த​தால் அந்த இடம் வழங்​கப்​பட்​டது.…

Read More

ஒரு துடிப்பான ஆப்டிகல் மாயை பார்வையாளர்களுக்கு ஆரஞ்சு கோமாளி மீன் மற்றும் நண்டுகளின் கடலில் ஒரு மறைக்கப்பட்ட நட்சத்திர மீன் கண்டுபிடிக்க சவால் விடுகிறது. இதேபோன்ற வண்ணங்கள் மற்றும் வடிவங்கள் நட்சத்திர மீன்களைக் கண்டறிவது கடினம், ஏனெனில் நமது மூளை ஒரே மாதிரியான கூறுகளை தொகுக்க முனைகிறது. ஐந்து புள்ளிகள் கொண்ட நட்சத்திர மீன்களை மற்ற கடல் உயிரினங்களிலிருந்து வேறுபடுத்துவதற்கு மெதுவாகவும், வெளிப்புறங்களில் கவனம் செலுத்துவதையும் வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆப்டிகல் மாயைகள் எப்போதுமே பொழுதுபோக்கு அளிக்கின்றன, ஏனென்றால் அவை நம் கண்கள் உண்மையில் எவ்வளவு விவேகமானவை மற்றும் புலனுணர்வுடன் இருக்கின்றன என்பதை சவால் செய்கின்றன. முதல் தோற்றத்தில், மேலே உள்ள படம் ஆரஞ்சு நண்டுகள் மற்றும் அபிமான ஆரஞ்சு கோமாளி மீன் ஆகியவற்றால் முற்றிலும் நிரப்பப்பட்டதாகத் தெரிகிறது. அவற்றின் ஒரே மாதிரியான புள்ளிவிவரங்கள் மற்றும் துடிப்பான ஆரஞ்சு நிறங்கள் முழு உருவமும் ஒரே வடிவமைப்பைக் கொண்டுள்ளன என்று நினைத்து மனதை உடனடியாக…

Read More

சென்னை: கரூரில் நேற்று முன்​தினம் தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரம் செய்​த​போது ஏற்​பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்​தைகள் உட்பட 40 பேர் உயி​ரிழந்​தனர். 50-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். எவரும் எதிர்​பா​ராத இந்த துயர சம்​பவம் ஒட்​டுமொத்த தமிழகத்​தையே சோகத்​தில் ஆழ்த்​தி​யுள்​ளது. கடந்த செப். 14 முதல் மாவட்ட வாரி​யான பிரச்​சா​ரத்தை திருச்​சி​யில் தொடங்​கிய விஜய், தஞ்​சாவூர், நாகை உள்​ளிட்ட மாவட்​டங்​களில் சனிக்​கிழமை​களில் பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார். அவரைக் காண ரசிகர்​கள், தொண்​டர்​கள் மிக அதிக அளவில் திரண்​ட​தால், அவர்​களைக் கட்​டுப்​படுத்​து​வது காவல் துறைக்கு சவாலாக இருந்​தது. மேலும், பல இடங்​களி​லும் பொதுச் சொத்​துகள் சேதமடைந்​தன. அதே​போல, தொண்​டர்​கள், ரசிகர்​கள் சிலர் உயர​மான இடங்​களி​லும், மின்​சார டிரான்​ஸ்​பார்​மர்​கள் மற்​றும் மரங்​களி​லும் ஆபத்​தான முறை​யில் நிற்​பது, விஜய் பிரச்​சார வாக​னத்தை பைக்​கு​களில் பின்​தொடர்​வது என ஆபத்தை உணராமல் செயல்​பட்​டனர். இதனால் தவெக பிரச்​சா​ரங்​களுக்கு காவல் துறை பல்​வேறு கட்​டுப்​பாடு​களை விதித்​தது.…

Read More

கரூர்: கரூரில் நேற்று நடந்த கூட்ட நெரிசல் காரணமாக விலைமதிக்க முடியாத உயிர்களை இழந்துள்ளோம் என்று தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசும் விஜய்யும் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கரூரில் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் நேரில் ஆறுதல் தெரிவித்தார். கரூரில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரச்சாரக் கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்ததையடுத்து, அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, இன்று காலை (ஞாயிற்றுக் கிழமை), கரூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அவர்களை நலம் விசாரித்து, ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம்…

Read More

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி வாகை சூடியது. இதன் மூலம் 9வது முறையாக ஆசிய கோப்பை இந்தியா கைப்பற்றியுள்ளது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. பாகிஸ்தான் அணிக்காக சாஹிப்ஸாதா ஃபர்ஹான் மற்றும் பஹர் ஸமான் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த இன்னிங்ஸில் 35 பந்துகளில் அரைசதம் விளாசினார் ஃபர்ஹான். வருண் சக்கரவர்த்தி வீசிய முதல் இன்னிங்ஸின் 10-வது ஓவரில் ஃபர்ஹான் ஆட்டமிழந்தார். அவர் 38 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து வெளியேறினார். 5 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களை அவர் விளாசினார். அதன் பிறகு பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது. சயிம் அயூப் 14, முகமது ஹாரிஸ் 0, ஸமான் 46, ஹுசைன் தலாத்…

Read More

விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி ‘சூப்பர் சிங்கர்’ இதன் 11வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் உடன் இயக்குநர் மிஷ்கினும், இசையமைப்பாளர் தமனும் நடுவராக பங்கேற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியில் இந்த வாரம் இசைஞானி இளையாராஜாவை கொண்டாடும் விதமாக ‘செலிப்ரேட்டிங் இசை’ என்ற தலைப்பில் அடுத்த மூன்று எபிசோடுகள் நடைபெறவுள்ளது. இதில் முழுக்க முழுக்க இளையராஜா பாடல்களை பங்கேற்பாளர்கள் பாடவுள்ளனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் கங்கை அமரன் ஆகிய மூவரும் கலந்துகொண்டனர். இளையராஜாவைப் போலவே பாடிய போட்டியாளர் சரணுக்கு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இளையராஜாவின் புகைப்படம் பதித்த டீசர்ட்டை பரிசளித்து வாழ்த்தியுள்ளார்.

Read More

சென்னை: “கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இறந்து போனவர்களின் உடலை கூட இன்னும் அடக்கம் செய்வதற்குள்ளாகவே இந்த மரணங்களின் பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள நீதிமன்றத்தை நாடுகிறார் விஜய்” என விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு குற்றச்சாட்டு வைத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமை கரூர் மாவட்டம் வேலுசாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தனிநபர் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது தமிழக அரசு. இந்நிலையில், தவெக தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்த விவகாரத்தை நாளை (திங்கட்கிழமை) சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை விசாரிக்க உள்ளது. இந்த சூழலில் இது தொடர்பாக வன்னியரசு, சமூக வளைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். “நடிகர் விஜய்யை காண வந்த ரசிகர்களும் தொண்டர்களுமாக 40 பேர் மரணித்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது.…

Read More

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு தவெக தவறும், அரசின் கவனக்குறைவுமே காரணம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமை கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இது தொடர்பாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறியது: “இதற்கு அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும். குறுகலான சாலையை வழங்கியுள்ளனர். உள்நோக்கத்தோடு வழங்கப்பட்டதா என தெரியவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். குறுகலான இடம், காலதாமதம், மின் தடை, போலீஸ் தடியடி, ஆம்புலன்ஸ் வருகையால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு உயிர் பலி ஏற்பட்டது வருத்தமளிக்கிறது. தவெக தலைவர் விஜய் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு பாதுகாவலர்கள் பாதுகாப்பு அளிக்கும்போது உங்களை நம்பி வரும் தொண்டர்களுக்கும் பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டும்.…

Read More