பெங்களூரு: தர்மஸ்தலா வழக்கில் கைது செய்யப்பட்ட புகார்தாரர் சின்னையா நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். கர்நாடகாவின் தட்சிண கன்னட மாவட்டம், தர்மஸ்தலாவில் புகழ்பெற்ற மஞ்சுநாதா கோயில் உள்ளது. அங்கு கடந்த 1995 முதல் 2014 வரை தூய்மைப் பணியாளராக வேலை செய்த சின்னையா கடந்த ஜூனில் தர்மஸ்தாலா காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்தார். அதில், “மஞ்சுநாதா கோயிலில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் உடல்களை நான் புதைத்தேன்’’ என்று தெரிவித்தார். இதுதொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நடத்திய விசாரணை, சோதனையில் சின்னையா பொய் புகார் அளித்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் கைது செய்யப்பட்டார். இந்த சூழலில் கர்நாடகாவின் பெள்தங்கடி நகர நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையில் சின்னையா நேற்று முன்தினம் வாக்குமூலம் அளித்தார். இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறும்போது, “தர்மஸ்தலா மஞ்சுநாதா கோயில்…
Author: admin
புதுடெல்லி: உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அனுஷ்கா தோக்குர் 2 தங்கப் பதக்கத்தை வென்றார். டெல்லியில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று மகளிர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் இந்திய வீராங்கனை அனுஷ்கா தோக்குர் 461.0 புள்ளிகள் பிடித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். நடப்பு தொடரில் அவர், தங்கம் வெல்வது இது 2-வது முறையாகும். அவர், 50 மீட்டர் ரைபிள் புரோன் பிரிவிலும் தங்கம் வென்றிருந்தார். ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் இந்தியாவின் அட்ரியன் கர்மாக்கர் 454.8 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். இந்த தொடரில் இந்தியா இதுவரை 4 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கம் என 13 பதக்கங்களை வென்றுள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ள நிலையில், இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மனதை உலுக்கும் பின்னணி இது… 2 வயது பாலகன்: கரூர் வேலுசாமிபுரம் வடிவேல் நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி விமல் (25). இவரது மனைவி மாதேஸ்வரி (22). பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுள்ளவர். இவர்களது ஒரே மகன் குரு விஷ்ணு. ஒரு வயது 10 மாதம். சம்பவத்தன்று விமலின் சகோதரி லல்லி, அவரது கணவர் பசுபதி (32) ஆகியோர் தங்கள் குழந்தைகளுடன், குரு விஷ்ணுவையும் கூட்டத்துக்கு அழைத்துச் சென்றனர்.அப்போது கூட்ட நெரிசலில் லல்லியின் கையில் இருந்து நழுவி கீழே விழுந்த குரு விஷ்ணு, கூட்டத்தில் மிதிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு குழந்தை குரு விஷ்ணு. இதுகுறித்து லல்லி கூறியது: விஜய் பேசத் தொடங்கியபோது, திடீரென ஏற்பட்ட மின்வெட்டு மற்றும் மைக்கில் ஏற்பட்ட கோளாறு…
சென்னை: இந்திய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (செப்.29) புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்வதற்கான காரணம் குறித்து பார்ப்போம். சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் – ரஷ்யா போர், இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. இதேபோல வணிகத் துறை நிறுவனங்கள் பல உற்பத்தி மற்றும் முதலீடு சார்ந்து வெள்ளி முதலீடு மற்றும் கொள்முதலில் ஈடுபட்டு வருகின்றன. பல்வேறு மின்சார பொருட்களின் வடிவமைப்பு பணிகளில் வெள்ளி பயன்படுத்தப்படுகிறது. இதோடு உலக நாடுகளும் வெள்ளியை அதிகளவில் முதலீடு செய்து வருவதும் வெள்ளியின் விலை உயர்வுக்கு காரணம் என துறை…
பழைய, இதய நோய்களுக்கு மட்டுமே ஒரு வியாதியாக கருதப்படுவது ஒரு பொதுவான, தீவிரமான மருத்துவ பிரச்சினையாகும், இது பொதுவாக இளைய பெரியவர்களை, 30 களில் அல்லது 20 களில் கூட பாதிக்கிறது. உலகளாவிய, இதய நோய் தான் மரணத்திற்கு எண்ணிக்கையானது, இன்று மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் 20 களில் கூட பலவீனமான இதயத்துடன் வாழ்கின்றனர். இருப்பினும், இதய நோய் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறியும் நோயாளிகள், உடனடி மருத்துவ சேவையைப் பெறலாம், மேலும் சிக்கல்கள் உருவாகாமல் தடுக்கும் தேவையான வாழ்க்கை முறை மாற்றங்களைத் தொடங்கலாம். ஆரோக்கியமற்ற உணவு தேர்வுகள், செயலற்ற வாழ்க்கை முறை, புகைபிடித்தல் மற்றும் மன அழுத்தம் காரணமாக இளைஞர்கள் பொதுவாக இதய நோய் அபாயங்களை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், உடல் பொதுவாக வரவிருக்கும் இதய பிரச்சினைகளுக்கு முன்பு சில அறிகுறிகளைக் கொடுக்கும். 20 மற்றும் 30 களில் இதய நோயின் 5 அறிகுறிகள் இங்கே ….
திருமலை: திருமலையில் உள்ள மாட வீதிகளில் நேற்று பிற்பகல் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள பக்தர்களிடம், அன்னபிரசாதம், குடிநீர் போன்றவை சரிவர வழங்கப்படுகிறதா? முதல் உதவி சிகிச்சைகள் உடனுக்குடன் கிடைக்கிறதா? குழந்தைகளுக்கு பால் வழங்கப்படுகிறதா? உள்ளிட்ட பல கேள்விகளை பக்தர்கள் மற்றும் அங்கிருந்த ஸ்ரீவாரி சேவகர்களிடம் அதிகாரி அனில்குமார் சிங்கால் கேட்டறிந்தார். கருட சேவைக்கு திருமலைக்கு நிமிடத்துக்கு ஒரு பேருந்து வீதம் திருப்பதியில் இருந்து திருமலைக்கு இயக்கப்பட்டன. பைக்குகள் அலிபிரியில் நிறுத்தப்படுகின்றன. வாகன சோதனைகள் உடனுக்குடன் நடத்தப்பட்டு திருமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மாட வீதிகளில் காத்திருக்கும் பக்தர்கள், தரிசனத்தை முடித்த பின்னர், அவர்கள் வெளியில் அனுப்பி வைக்கப்பட்டு, வெளியில் காத்திருக்கும் பக்தர்கள் 45 நிமிடத்துக்கு ஒருமுறை மாடவீதிகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 6 ஆயிரம் கேமராக்கள் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் கண்காணிக்கப்பட்டன. போலீஸார், தேவஸ்தான விஜிலென்ஸ் ஊழியர்கள், ஆக்டோபஸ் கமாண்டோ வீரர்கள் என சுமார் 10…
தோஹா: தோஹாவில் கத்தார் கிளாசிக் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அபய் சிங், உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள எகிப்தின் கரீம் கவாட்டுடன் மோதினார். 41 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அபய் சிங் 11-6, 11-4, 1-11, 11-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். அபய் சிங், உலகத் தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் உள்ள வீரரை வீழ்த்துவது இதுவே முதன்முறையாகும்.
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. இந்த துயரச் சம்பவம் குறித்த அரசியல் கட்சித் தலைவர்களின் பார்வை இது… விஜயிடமும் கேள்விகளை கேளுங்கள்: துணை முதல்வர் உதயநிதி: கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு துணை முதல்வர் உதயநிதி நேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “கரூரில் இதுபோன்ற மிக, மிக துயரமான சம்பவம் நடந்திருக்கக் கூடாது. அரசு சார்பில் முழு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தும் கோர விபத்து நடந்துவிட்டது. செய்தி அறிந்தவுடன் முதல்வர் இரவோடு, இரவாக கரூருக்கு வந்து துயர்துடைப்பு பணிகளை துரிதப்படுத்தினார். இந்த சம்பவத்தை முதல்வரால் தாங்க முடியவில்லை. மிகுந்த சோகத்தில் என்னை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். குடும்பத்துடன் வெளிநாடு ஓய்வுக்கு சென்றிருந்த நான் உடனடியாக…
இன்றைய சுகாதார உணர்வுள்ள உலகில், கெட்டோ, மத்திய தரைக்கடல், தாவர அடிப்படையிலான உணவு மற்றும் இடைப்பட்ட உண்ணாவிரதம் போன்ற உணவுகள் உரையாடல்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒவ்வொன்றும் விரைவான முடிவுகளை உறுதியளிக்கிறது, இது எடை இழப்பு, மேம்பட்ட ஆற்றல் அல்லது சிறந்த ஒட்டுமொத்த ஆரோக்கியம். ஆனால் அது உங்கள் இதயத்திற்கு வரும்போது, ஒவ்வொரு உணவும் அதன் வாக்குறுதிகளை வழங்குவதில்லை.ஹைப்பிலிருந்து உண்மையை பிரிக்க, விக்டர் சாங் இருதய ஆராய்ச்சி நிறுவனத்தின் இருதயநோய் நிபுணரும் இயக்குநருமான பேராசிரியர் ஜேசன் கோவாசிக், செப்டம்பர் 17 இன்ஸ்டாகிராம் இடுகையில் பிரபலமான உணவுகள் மற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் குறித்த தனது நிபுணர் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். எந்த போக்குகள் இருதய நல்வாழ்வை உண்மையிலேயே ஆதரிக்கின்றன என்பதையும், எந்தெந்தவை அமைதியாக தீங்கு விளைவிக்கும் என்பதையும் அவரது தரவரிசை வெளிப்படுத்துகிறது.கார்னிவோர் முதல் மத்திய தரைக்கடல் வரை: எந்த உணவு உங்கள் இதயத்தை உண்மையிலேயே பாதுகாக்கிறதுமாமிச உணவுடாக்டர் ஜேசன் மாமிச உணவுக்கு மிகக்…
இம்பால்: மணிப்பூர் மாநிலம் விஷ்ணுபூர் மாவட்டம் கும்பி பஜாரில் தடை செய்யப்பட்ட மக்கள் விடுதலை ராணுவத்தைச் (பிஎல்ஏ) சேர்ந்த ஞானேஷ்வர் சிங் (49) கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். அவர் பிஎல்ஏ அமைப்புக்கு போக்குவரத்து சேவைகளை வழங்கியதாக அரசு தெரிவித்துள்ளது. பிஎல்ஏ அமைப்பைச் சேர்ந்த லைஷ்ராம் ஜிதன் சிங் (56) இம்பால் மேற்கு மாவட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். மேலும் இதே அமைப்பைச் சேர்ந்த சோபி சிங் (50) இம்பால் கிழக்கு மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். என்ஆர்எப்எம் அமைப்பைச் சேர்ந்த சுனிலா தேவி என்ற பெண், இம்பால் கிழக்கு மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். தடை செய்யப்பட்ட காங்கில்பாக் கம்யூனிஸ்ட் கட்சியின் முஜ்புர் ரஹ்மான் (44), ஷோரென்ஷங்பம் (44) ஆகிய இருவரும் தவுபால் மற்றும் இம்பால் மேற்கு மாவட்டங்களில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
