தோஹா: தோஹாவில் கத்தார் கிளாசிக் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அபய் சிங், உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள எகிப்தின் கரீம் கவாட்டுடன் மோதினார். 41 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அபய் சிங் 11-6, 11-4, 1-11, 11-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். அபய் சிங், உலகத் தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் உள்ள வீரரை வீழ்த்துவது இதுவே முதன்முறையாகும்.
Author: admin
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. இந்த துயரச் சம்பவம் குறித்த அரசியல் கட்சித் தலைவர்களின் பார்வை இது… விஜயிடமும் கேள்விகளை கேளுங்கள்: துணை முதல்வர் உதயநிதி: கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு துணை முதல்வர் உதயநிதி நேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “கரூரில் இதுபோன்ற மிக, மிக துயரமான சம்பவம் நடந்திருக்கக் கூடாது. அரசு சார்பில் முழு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தும் கோர விபத்து நடந்துவிட்டது. செய்தி அறிந்தவுடன் முதல்வர் இரவோடு, இரவாக கரூருக்கு வந்து துயர்துடைப்பு பணிகளை துரிதப்படுத்தினார். இந்த சம்பவத்தை முதல்வரால் தாங்க முடியவில்லை. மிகுந்த சோகத்தில் என்னை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். குடும்பத்துடன் வெளிநாடு ஓய்வுக்கு சென்றிருந்த நான் உடனடியாக…
இன்றைய சுகாதார உணர்வுள்ள உலகில், கெட்டோ, மத்திய தரைக்கடல், தாவர அடிப்படையிலான உணவு மற்றும் இடைப்பட்ட உண்ணாவிரதம் போன்ற உணவுகள் உரையாடல்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒவ்வொன்றும் விரைவான முடிவுகளை உறுதியளிக்கிறது, இது எடை இழப்பு, மேம்பட்ட ஆற்றல் அல்லது சிறந்த ஒட்டுமொத்த ஆரோக்கியம். ஆனால் அது உங்கள் இதயத்திற்கு வரும்போது, ஒவ்வொரு உணவும் அதன் வாக்குறுதிகளை வழங்குவதில்லை.ஹைப்பிலிருந்து உண்மையை பிரிக்க, விக்டர் சாங் இருதய ஆராய்ச்சி நிறுவனத்தின் இருதயநோய் நிபுணரும் இயக்குநருமான பேராசிரியர் ஜேசன் கோவாசிக், செப்டம்பர் 17 இன்ஸ்டாகிராம் இடுகையில் பிரபலமான உணவுகள் மற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் குறித்த தனது நிபுணர் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். எந்த போக்குகள் இருதய நல்வாழ்வை உண்மையிலேயே ஆதரிக்கின்றன என்பதையும், எந்தெந்தவை அமைதியாக தீங்கு விளைவிக்கும் என்பதையும் அவரது தரவரிசை வெளிப்படுத்துகிறது.கார்னிவோர் முதல் மத்திய தரைக்கடல் வரை: எந்த உணவு உங்கள் இதயத்தை உண்மையிலேயே பாதுகாக்கிறதுமாமிச உணவுடாக்டர் ஜேசன் மாமிச உணவுக்கு மிகக்…
இம்பால்: மணிப்பூர் மாநிலம் விஷ்ணுபூர் மாவட்டம் கும்பி பஜாரில் தடை செய்யப்பட்ட மக்கள் விடுதலை ராணுவத்தைச் (பிஎல்ஏ) சேர்ந்த ஞானேஷ்வர் சிங் (49) கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். அவர் பிஎல்ஏ அமைப்புக்கு போக்குவரத்து சேவைகளை வழங்கியதாக அரசு தெரிவித்துள்ளது. பிஎல்ஏ அமைப்பைச் சேர்ந்த லைஷ்ராம் ஜிதன் சிங் (56) இம்பால் மேற்கு மாவட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். மேலும் இதே அமைப்பைச் சேர்ந்த சோபி சிங் (50) இம்பால் கிழக்கு மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். என்ஆர்எப்எம் அமைப்பைச் சேர்ந்த சுனிலா தேவி என்ற பெண், இம்பால் கிழக்கு மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். தடை செய்யப்பட்ட காங்கில்பாக் கம்யூனிஸ்ட் கட்சியின் முஜ்புர் ரஹ்மான் (44), ஷோரென்ஷங்பம் (44) ஆகிய இருவரும் தவுபால் மற்றும் இம்பால் மேற்கு மாவட்டங்களில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக இந்திய அணி கோப்பையை வென்றது. ஆனால் பரிசளிப்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வியிடமிருந்து ஆசியக் கோப்பையை சாம்பியனான இந்திய அணி வாங்க மறுத்தது, இதனையடுத்து பரிசளிப்பு நிகழ்ச்சி ஒரு மணி நேரம் கால தாமதமானது. இந்திய அணிக்குச் சேர வேண்டிய கோப்பையையும் பதக்கங்களையும் மோசின் நக்வி எடுத்துச் சென்றது கடும் எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது. மோசின் நக்வி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் என்பதோடு பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் கூட. இதனையடுத்து பிசிசிஐ செயலர் தேவஜித் சைகியா செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “மோசின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற மாட்டோம் என்று முடிவெடுத்தோம். அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முக்கியத் தலைவர்களுள் ஒருவர். அதனால் நாங்கள் அவரிடமிருந்து கோப்பையை வாங்க மறுத்தோம், இதனால் அந்தக் கோப்பையை அவர் எடுத்துக் கொள்ளட்டும் என்று அர்த்தமல்ல. அதனால் கோப்பையும்…
காசா: இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போரை நிறுத்த 21 அம்ச அமைதித் திட்டத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது. பாலஸ்தீனத்திலுள்ள காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தீவிரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பிணைக் கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரில் சுமார் 65,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காசாவில் போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்யும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு உள்ளது. ஹமாஸிடமிருந்து பிணைக் கைதிகளை மீட்டு போரை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த…
சென்னை: கரூரில் நடந்திருப்பது வரலாறு காணாத கொடுந்துயரம் என்றும், பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள செய்திகள் மிகுந்த வேதனை அளிக்கின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: கரூரில் நடைபெற்ற தவெக கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: விஜய் பரப்புரை கூட்டத்தில் நெரிசலால் அப்பாவி மக்கள் 40 பேர் உயிரிழந்த நிகழ்வுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கு யார் காரணம் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: கரூரில் நடந்த அரசியல் கூட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:…
கொல்கத்தா: நாடு முழுவதும் நவராத்திரி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் பிரம்மாண்டமான வகையில் துர்கா பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பஹராம்பூர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள துர்கா பூஜை பந்தலில், அசுரன் சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலை பார்க்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போலவே உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காக்ரா சமஷான்கட் துர்கா பூஜை கமிட்டி நிர்வாகி பிரதீக் கூறியதாவது: இந்தியாவுக்கு எதிராக அதிபர் ட்ரம்ப் 50 சதவீத வர்த்தக வரி விதித்துள்ளார். அத்துடன் எச்-1பி விசா கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளார். இதன் மூலம் இந்தியர்கள் பாதிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. மேலும், நமது பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்பை நண்பராக பார்க்கிறார். ஆனால், அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை துரோகம் செய்துள்ளார். அதனால், ட்ரம்பை அசுரனாக சித்தரித்து துர்கா பூஜை பந்தலில் வைத்துள்ளோம்’’ என்றார். ட்ரம்ப் உருவத்தில் அசுரன் சிலையை உள்ளூர் கலைஞர் அசிம் பால் உருவாக்கி…
புதுடெல்லி: நடப்பு ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகளில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. இந்நிலையில், இந்திய அணியின் இந்த வெற்றிக்கு தனது வாழ்த்துகளை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் ட்வீட் செய்துள்ளார். அதில், “ஆடுகளத்தில் ஆபரேஷன் சிந்தூர். அதன் விளைவு ஒன்றுதான். இந்தியா வெற்றி பெற்றது. நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துகள்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 146 ரன்கள் எடுத்தது. 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 20 ரன்கள் எடுத்து இந்தியா தடுமாறியது. அப்போது திலக் வர்மா மற்றும் சஞ்சு சாம்சன் கூட்டணி அணியை சரிவிலிருந்து மீட்டது. அவர்கள் இருவரும் 57…
சென்னை: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த நிலையில், விஜய் சுற்றுப்பயணம் தற்காலிகமாக தள்ளிவைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், சென்னையில் விஜய் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கரூரில் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த நிலையில், நேற்றுமுன் தினம் இரவு 11 மணிக்கு அவர் சென்னை திரும்பினார். அவருக்கு ஆதரவாக நேற்று முன்தினம் இரவு ஏராளமான தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து வீட்டின் முன் போராட்டம் நடத்துவதற்காக பல்வேறு அமைப்புகளும் வரவுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில், நேற்று விஜய் வீட்டை முற்றுகையிடுவதற்காக வந்த மாணவர் அமைப்பினர் 20-க்கும் மேற்பட்டோரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மேலும், விஜய் வீடு அமைந்திருக்கும் பகுதியில் தடுப்புகள் அமைத்து, அவ்வழியே வருவோரை தீவிர விசாரணைக்குப் பின்னரே அனுமதிக்கின்றனர். இதற்கிடையில், விஜய்…
