புதுடெல்லி: பேங்க் ஆப் இந்தியாவில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் ஹிதேஷ் சிங்லா (32). இவர் வேலை பார்த்த வங்கிகிளையில் தணிக்கை நடைபெற்ற போது இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. 2023 மே முதல் 2025 ஜூலை வரையிலான காலகட்டத்தில் எப்டி, பிபிஎப், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மற்றும் செயலற்ற கணக்குகளில் உள்ள ரூ.16.10 கோடி மதிப்பிலான பணத்தை சிங்லா தன் வங்கி கணக்கிற்கு மாற்றிக் கொண்டுள்ளார். குறிப்பாக, மூத்த குடிமக்கள், மைனர், இறந்தவர்கள் மற்றும் அரிதாகவே இருப்பை சரிபார்க்கும் வாடிக்கையாளர்களை குறிவைத்து அவர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். செயலற்ற மூடப்பட்ட கணக்குகளிலிருந்து பெருமளவிலான பணம் சிங்லாவின் தனிப்பட்ட எஸ்பிஐ வங்கி கணக்கிற்கு திருப்பி விடப்பட்டுள்ளது. அதை அவர் பங்கு வர்த்தகம், கிரிப்டோகரன்ஸி, ஆன்லைன் சூதாட்ட தளங்களில் முதலீடு செய்துள்ளார். முதலில் அதிக அளவில் லாபம் கிடைத்த போதிலும் அடுத்தடுத்து இழப்புகளை சந்தித்துள்ளார். இழந்ததை பிடிக்க தனது பந்தயங்களை இரட்டிப்பாக்கி சிங்லா…
Author: admin
துபாய்: கைகுலுக்க மறுத்து இந்திய அணி கிரிக்கெட்டை அவமதிக்கிறது என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா குற்றச்சாட்டு வைத்துள்ளார். நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகளில் வீழ்த்தி உள்ளது இந்திய அணி. இந்த தொடரில் மூன்றாவது முறையாக பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தி உள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்த மூன்று போட்டியிலும் இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்து விட்டனர். இதோடு வெற்றிக் கோப்பையை பாகிஸ்தான் அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான மோசின் நக்வியிடம் இருந்து பெற முடியாது என இந்தியா தெரிவித்தது. இந்த சூழலில் இந்திய அணிக்கு கோப்பையை வழங்காமல் கையோடு அவர் கொண்டு சென்றார். இந்த தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடிய மூன்று போட்டியின் போதும் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா உடன் டாஸின் போது…
கரூர்: கரூரில் தவெக தலைவர் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு மாணவர் சங்கம் சார்பில சுவரொட்டிகள் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் வேலுசாமிபுரத்தில் நேற்று முன்தினம் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தற்போது மேலும் இருவர் மரணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கரூரில் கரூர் கோவை சாலை, ஈரோடு சாலை, வேலுசாமிபுரம், காந்திகிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு மாணவர் சங்கம் சார்பில் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி சுவரொட்டிகள் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சுவரொட்டியில், அதில் தவெக தலைவர் விஜய் கைகளை உயர தூக்கியுள்ள நிலையில் அவரது கைகளில் இருந்து ரத்தம் வடிவது போலவும், ‘தமிழக அரசே அப்பாவி உயிர்களைப் பலி வாங்கி தப்பி ஓடிய விஜய் என்கிற அரசியல் தற்குறியை கொலைக் குற்றவாளி என கைது செய் -…
முட்டைகளை சமைக்கும்போது கொதிக்கும் நீரில் உப்பு சேர்ப்பது ஒரு பாரம்பரிய சமையலறை பழக்கத்தை விட அதிகம் -இது ஒரு உண்மையான அறிவியல் நோக்கத்தைக் கொண்டுள்ளது. தோலுரிக்க இது உதவுகிறது என்று பலர் நம்புகையில், அதன் உண்மையான பங்கு முட்டை வெள்ளை நிறத்தில் உள்ள புரதங்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதில் உள்ளது. உப்பு புரத சூழலை மாற்றுகிறது, இதனால் அவை வேகமாக ஒட்டிக்கொள்ளும், இது கொதிக்கும் போது ஒரு முட்டை விரிசல் ஏற்பட்டால் குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும். இது திரவ முட்டை வெள்ளை தண்ணீரில் கசிந்து கொள்வதைத் தடுக்கிறது மற்றும் மீதமுள்ள முட்டையை அப்படியே வைத்திருக்கிறது. இந்த எளிய மற்றும் பயனுள்ள நுட்பத்தைப் புரிந்துகொள்வது ஒவ்வொரு முறையும் வீட்டு சமையல்காரர்களுக்கு தொடர்ச்சியான உறுதியான, நன்கு சமைத்த முட்டைகளை அடைய உதவும்.கொதிக்கும் நீரில் ஒரு முட்டை விரிசல் ஏற்படும்போது உண்மையில் என்ன நடக்கும்ஒரு முட்டையை கொதிக்க வைப்பது ஒரு மூலக்கூறு சங்கிலி எதிர்வினையைத்…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் கருட வாகன சேவை நேற்று இரவு நடைபெற்றது. நேற்று பிற்பகல் 3 மணியளவில் 4 மாட வீதிகளும் நிரம்பி விட்டன. அதாவது மாட வீதிகளில் மட்டுமே சுமார் 1.90 லட்சம் பக்தர்கள் கருட சேவையை காண இடம் பிடித்து விட்டனர். இவர்களைத் தவிர, மாட வீதிகளுக்குள் நுழைய மேலும் பல்லாயிரக்கணக்கானோர் போலீஸ் கெடுபிடிகளையும் மீறி உள்ளே செல்ல வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு இரவு கருட வாகன சேவை தொடங்கி 1 மணி நேரத்துக்கு பின்னரே அனுமதி வழங்கப்பட்டது. இதற்கிடையில், திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல நேற்று பக்தர்கள் கூட்டம் திருப்பதி பேருந்து நிலையம், அலிபிரி, விஷ்ணு நிவாசம் போன்ற இடங்களில் அலைமோதியது. பைக்குகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கார், ஜீப்கள் மற்றும் பேருந்துகளில் மட்டுமே பக்தர்கள் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால் அலிபிரி மலைப்பாதை சோதனைத் சாவடியில் பல நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட…
துபாய்: நடப்பு ஆசிய கோப்பை தொடரில் தனக்கு கிடைத்த போட்டிக்கான கட்டணத்தை பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்கள் மற்றும் ஆயுதப்படைக்கு அளிப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இந்த தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் 3 போட்டிகள், சூப்பர் 4 சுற்றில் 3 போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி என அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரில் வீழ்த்த முடியாத அணியாக இந்தியா விளங்கியது. அதிலும் பாகிஸ்தான் அணி உடன் இந்த தொடரில் இறுதிப் போட்டி உட்பட மூன்று போட்டிகளில் விளையாடி, மூன்றிலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசிய கோப்பை வெற்றிக்கு பிறகு பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான மோசின் நக்வியிடமிருந்து கோப்பையை இந்திய அணி வாங்க மறுத்தது. அதைத் தொடர்ந்து அவர் கோப்பையை கையோடு கொண்டு சென்றார். இது சர்ச்சையாகி உள்ளது. அதே நேரத்தில் கோப்பையே இல்லாமல் வெற்றியை இந்திய வீரர்கள்…
Last Updated : 29 Sep, 2025 10:05 AM Published : 29 Sep 2025 10:05 AM Last Updated : 29 Sep 2025 10:05 AM திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவில் நேற்றிரவு பிரசித்தி பெற்ற கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின் 5-ம் நாள் என்றாலே கருட சேவைதான் நினைவுக்கு வரும். நாடு முழுவதிலும் இருந்து கருட சேவையை காண பக்தர்கள் நேற்று திருமலைக்கு படை எடுத்து வந்தனர். புரட்டாசி மாதம் என்பதால் தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். நேற்று காலை நடந்த மோகினி அலங்கார வாகன சேவையிலேயே பக்தர்கள் மாட வீதிகளில் குவிய தொடங்கி விட்டனர். எப்போதும் இல்லாத வகையில் அரை மணி நேரம் முன்னதாக நேற்று மாலை 6.15 மணிக்கு வாகன மண்டபத்தில் கருட…
கரூர்: கரூரில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேர் குடும்பங்களுக்கு காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்கை அறிவித்துள்ளார். கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நேற்று நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 39 பேர் உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.பி.ஜோதிமணி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தை கூறும்போது, “கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சார கூட்டத்தில் உயிரிழந்த 39 பேர் குடும்பங்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.1 கோடி நிவாரணத் தொகை வழங்கப்படும்” என்று அறிவித்தார். இந்தச் செய்தியாளர் சந்திப்பில்போது, கரூர் மாநகராட்சி வார்டு கவுன்சிலர் ஸ்டீபன் பாபு, இளைஞர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் லெனின்…
டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் எட் ஷீரன் செலினா கோம்ஸ் மற்றும் பென்னி பிளாங்கோவின் திருமண இரவு இன்னும் மந்திரத்தை உருவாக்கினர். தம்பதியரின் பெரிய வரவேற்பறையில், இரு பாடகர்களும் எல்லோரும் புன்னகைத்ததாகத் தொடும் உரைகளை வழங்கியதாக கூறப்படுகிறது. திருமணமே ஒரு உண்மையான ஹாலிவுட் தருணம். பாடகர் செலினா கோம்ஸ், 33, மற்றும் இசை தயாரிப்பாளர் பென்னி பிளாங்கோ, 37, செப்டம்பர் 27 சனிக்கிழமையன்று கலிபோர்னியாவில் இரண்டு வருட டேட்டிங் பின்னர் முடிச்சு கட்டினார். இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்வதன் மூலம் தம்பதியினர் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தனர். கோம்ஸ், “9.27.25” என்று பதிவிட்டார், அதே நேரத்தில் பிளாங்கோ தனது சொந்த புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டார், “நான் ஒரு நிஜ வாழ்க்கை டிஸ்னி இளவரசியை மணந்தேன்.” அவர்களின் பதிவுகள் ரசிகர்களுக்கு அன்பும் வேடிக்கையும் நிறைந்த ஒரு நாளின் காட்சியைக் கொடுத்தன. செலினா கோம்ஸ் & பென்னி பிளாங்கோ | கடன்: Instagram/@ itsbennyblancoசெலினா கோம்ஸ்…
பெங்களூரு: தர்மஸ்தலா வழக்கில் கைது செய்யப்பட்ட புகார்தாரர் சின்னையா நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். கர்நாடகாவின் தட்சிண கன்னட மாவட்டம், தர்மஸ்தலாவில் புகழ்பெற்ற மஞ்சுநாதா கோயில் உள்ளது. அங்கு கடந்த 1995 முதல் 2014 வரை தூய்மைப் பணியாளராக வேலை செய்த சின்னையா கடந்த ஜூனில் தர்மஸ்தாலா காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்தார். அதில், “மஞ்சுநாதா கோயிலில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் உடல்களை நான் புதைத்தேன்’’ என்று தெரிவித்தார். இதுதொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நடத்திய விசாரணை, சோதனையில் சின்னையா பொய் புகார் அளித்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் கைது செய்யப்பட்டார். இந்த சூழலில் கர்நாடகாவின் பெள்தங்கடி நகர நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையில் சின்னையா நேற்று முன்தினம் வாக்குமூலம் அளித்தார். இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறும்போது, “தர்மஸ்தலா மஞ்சுநாதா கோயில்…
