Author: admin

புதுடெல்லி: கடந்த 1999-ம் ஆண்டு டிசம்​பர் 24-ம் தேதி நேபாள தலைநகர் காத்​மாண்​டு​வில் இருந்து டெல்​லிக்கு புறப்​பட்ட இந்​தி​யன் ஏர்​லைன்ஸ் விமானத்தை ஹர்​கத் உல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த 5 தீவிர​வா​தி​கள் கடத்​தினர். இந்த விமானம் ஆப்​கானிஸ்​தானின் காந்​த​காருக்கு கடத்தி செல்​லப்​பட்​டது. விமானத்​தில் 178 பயணி​கள், 2 விமானிகள், 13 ஊழியர்​கள் என 193 பேர் இருந்​தனர். அவர்​களை பத்​திர​மாக மீட்க மத்​திய அரசு சார்​பில் தீவிர​வா​தி​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்​டது. இதன்​படி இந்​திய சிறை​களில் இருந்த 3 தீவிர​வா​தி​கள் விடு​தலை செய்​யப்​பட்​டு, விமான பயணி​கள் மீட்​கப்​பட்​டனர். இந்​தி​யன் ஏர்​லைன்ஸ் விமான கடத்​தலுக்கு தீவிர​வாதி அப்​துல் ரவூப் அசார் என்​பவர் மூளை​யாக செயல்​பட்​டார். பாகிஸ்​தானின் பாவல்​பூரில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிர​வாத முகாமில் தீவிர​வாதி அப்​துல் ரவூப் அசார் தங்​கி​யிருந்​தார். இந்திய ராணுவம் நடத்​திய ‘ஆபரேஷன் சிந்​தூர்’ தாக்​குதலின்​போது அவர் உயி​ரிழந்​தார். ஜெய்ஷ் இ முகமது அமைப்​பின் தலை​வர் மசூத் அசா​ரின்…

Read More

சென்னை: சென்னை விமான நிலையம், கார்கோ, துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் இருந்து 273 சுங்கத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையராக இருந்த சீனிவாச நாயக், சுங்கத்துறையில் இருந்து ஜிஎஸ்டி துறைக்கு சமீபத்தில் மாற்றப்பட்டார். இதையடுத்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையராக, டெல்லி சுங்கத்துறை ஆணையராக இருந்த தமிழ் வளவன் பொறுப்பேற்றார். இந்நிலையில் சென்னை சுங்கத்துறையில் கூடுதல், இணை, துணை, உதவி ஆணையர்கள் உட்பட 273 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, சென்னை விமான நிலைய சுங்கத்துறையில் இருப்பவர்கள், விமான நிலைய கார்கோ சுங்கப் பிரிவுக்கும், மற்றும் சென்னை துறைமுகம், ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை தலைமை அலுவலகம், ஜிஎஸ்டி வரி விதிப்பு பிரிவு ஆகியவற்றுக்கும் இடமாற்றப்பட்டுள்ளனர். வழக்கமான நடவடிக்கைதான்: அதேபோல், ஜிஎஸ்டி பிரிவில் உள்ளவர்கள், சென்னை விமான நிலைய சுங்கத்துறை, விமான நிலைய கார்கோ பிரிவு, சென்னை துறைமுகம் ஆகிய…

Read More

கோப்பு – பில் கேட்ஸ் (காலா கெஸ்லர்/தி நியூயார்க் டைம்ஸ்) தொழில்நுட்ப கோடீஸ்வரரும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸும் உலகெங்கிலும் உள்ள அவரது பரோபகார படைப்புகளுக்காக அறியப்படுகிறார்கள். மே 8 அன்று, கேட்ஸ் தனது மீதமுள்ள 99% செல்வத்தை பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு அடுத்த 20 ஆண்டுகளில் நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தார். கேட்ஸ் அறக்கட்டளை 2045 க்குள் அதன் செயல்பாடுகளை மூடிவிடும் என்றும் அவர் பகிர்ந்து கொண்டார்.69 வயதான பில் கேட்ஸ், 168 பில்லியன் டாலர் தனிப்பட்ட செல்வத்தைக் கொண்டுள்ளார், இது அவரை உலகின் ஐந்தாவது பணக்காரராக ஆக்குகிறது என்று ப்ளூம்பெர்க்கின் பில்லியனர்களின் குறியீட்டின்படி.அவர் தனது முடிவைப் பற்றி தனது தனிப்பட்ட வலைப்பதிவில் வெளியிட்டார். அவர் எழுதினார், “நான் இறக்கும் போது மக்கள் என்னைப் பற்றி நிறைய விஷயங்களைச் சொல்வார்கள், ஆனால் ‘அவர் பணக்காரர் இறந்தார்’ அவர்களில் ஒருவராக இருக்க மாட்டார் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்…

Read More

இது AI- உருவாக்கிய படம், இது பிரதிநிதித்துவ நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. Aஒரேகான் கடற்கரையிலிருந்து சுமார் 300 மைல் தொலைவில் உள்ள நீருக்கடியில் எரிமலை மீண்டும் உயிர்ப்பிக்கிறது, விஞ்ஞானிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் எந்த நேரத்திலும் வெடிப்பு ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கின்றனர்.அசாக்சியல் சீமவுண்ட் அறியப்பட்ட இந்த எரிமலை கடலின் மேற்பரப்புக்கு அடியில் கிட்டத்தட்ட ஒரு மைல் தொலைவில் உள்ளது மற்றும் சமீபத்திய வாரங்களில் செயல்பாட்டின் தெளிவான அறிகுறிகளைக் காட்டுகிறது.என்.பி.சி செய்திகளின்படி, ஆராய்ச்சியாளர்கள் மார்ச் மாத இறுதியில் மற்றும் ஏப்ரல் தொடக்கத்தில் ஒரு நாளைக்கு 1,000 பூகம்பங்களை பதிவு செய்தனர். மூன்று தசாப்தங்களாக அச்சு படித்த ஒரேகான் மாநில பல்கலைக்கழகத்தின் எரிமலை நிபுணர் பில் சாட்விக், “கடற்பரப்பு உண்மையில் அதிகரித்து வருகிறது, அது ஒரு பெரிய சமிக்ஞை” என்று கூறினார். இந்த வீக்கம் மாக்மா கட்டமைப்பின் அடியில் குவிந்து வருவதைக் குறிக்கிறது, வெடிப்பதற்கு அறியப்பட்ட முன்னோடி.புவியியல் ஹாட் ஸ்பாட் மற்றும் பசிபிக் மற்றும்…

Read More

​முதல் பார்​வை​யில், ‘ஆபரேஷன் சிந்​தூர்’ என்​பது பாகிஸ்​தான் மற்​றும் ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்​களில் ஒருங்​கிணைந்த தாக்​குதலாகத் தெரி​கிறது. ஆனால் இந்த நடவடிக்​கை, இந்​திய சமூகம் மற்​றும் அரசி​யல் பற்றி ஆழமானப் புரிதலுடன் பிரதமர் நரேந்​திர மோடி​யால் எடுக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த ஏப்​ரல் 22-ல் பஹல்​காமில் பாகிஸ்​தான் தொடர்​புடைய தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலில் 26 பேர் உயி​ரிழந்​தனர். மணமான இந்​துப் பெண்​களின் நெற்​றித் தில​கம் துடைக்​கப்​பட்ட துயரம் நிகழ்ந்​தது. இதற்கு 15 நாட்​களில் மே 7-ல் இந்​தியா பதிலடி கொடுத்​துள்​ளது. இதற்​கானப் பெயரை இந்​திய ராணுவம் முதன்​முறை​யாக கவன​மாக சிந்​தித்​தது. காரணம் இந்த நடவடிக்​கையை இந்​திய மக்​களு​டன் உணர்​வுபூர்​வ​மாக இணைக்​க​வும் விரும்​பியது. இதற்கு பிரதமர் மோடியே யோசித்து ‘ஆபரேஷன் சிந்​தூர்’ எனப் பெயரிட்​டிருந்​தார். இந்த தாக்​குதல் பாகிஸ்​தானுக்கு கற்​பனை செய்து பார்த்​தி​ராத சேதத்தை ஏற்​படுத்தி விட்​டது. இந்​திய ராணுவ நடவடிக்கை தொடர்​பான பத்​திரி​கை​யாளர் சந்​திப்பை நடத்​தும் பொறுப்​பு, ராணுவத்​தின் இரண்டு பெண் அதி​காரி​களான…

Read More

சென்னை: ஒவ்வொருவரையும் தொழில்முனைவோராக உருவாக்கும் பணியை ரெப்கோ நுண்கடன் நிறுவனம் செய்து வருவது பாராட்டுக்குரியது என, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வி.கீதாலஷ்மி கூறினார். ரெப்கோ நுண்கடன் நிறுவனத்தின் 15-வது ஆண்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் வரவேற்புரை ஆற்றுகையில், “ரெப்கோ நுண்கடன் நிறுவனம் கடந்த 2010-ம் ஆண்டு நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் தனது முதல் கிளையை தொடங்கி, தற்போது 130 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. தென் மாநிலங்களில் 12 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி கடன் வழங்கியுள்ளது. மகளிர் மேம்பாட்டுக்காக இந்நிறுவனம் பணியாற்றி வருகிறது” என்றார். ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் தலைவர் சி.தங்கராஜு தலைமை விருந்தினராக பங்கேற்று பேசும்போது, “இந்தியாவில் தற்போது ஆயிரம் ஆண்களுக்கு 1,200 பெண்கள் உள்ளனர். அதாவது சுமார் 70 கோடி பெண்கள் உள்ளனர். இந்தியா வல்லரசாகும் கனவை நனவாக்க பெண்கள்…

Read More

தூங்கும் போது கூட, எங்கள் மூளை நிறைய ஆச்சரியமான காரியங்களைச் செய்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை சரிசெய்வதிலிருந்து அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரிக்கும் வரை, எங்கள் மூளை தூக்கத்தில் கூடுதல் கடினமாக உழைக்கிறது.இருப்பினும், இப்போது, ​​நீங்கள் தூங்கும்போது உங்கள் நினைவகத்தை 226% அதிகரிக்க ஒரு வழி உள்ளது! எப்படி, நீங்கள் கேட்கலாம்? இரவில் இனிமையான வாசனை திரவியங்களில் சுவாசிப்பதன் மூலம். இங்கே எப்படி …வாசனை உணர்வுஎங்கள் வாசனை உணர்வு மூளையின் நினைவகம் மற்றும் உணர்ச்சி மையங்களுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. மூளையின் தாலமஸ் வழியாக சமிக்ஞைகளை அனுப்பும் மற்ற புலன்களைப் போலல்லாமல், ஆல்ஃபாக்டரி சிஸ்டம் சிக்னல்களை நேராக லிம்பிக் அமைப்புக்கு அனுப்புகிறது, இது நினைவகம் மற்றும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது. இந்த தனித்துவமான பாதை என்றால், வாசனை நம் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதை கடுமையாக பாதிக்கும், குறிப்பாக கற்றல் மற்றும் நினைவகம் தொடர்பான பகுதிகளில்.சமீபத்தில், கலிஃபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், இர்வின்,…

Read More

கர்நாடக இந்து அறநிலைய மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட இந்திய‌ ராணுவ வீரர்களுக்காக அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜை நடத்துமாறு உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று அனைத்து இந்து கோயில்களிலும் ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட இந்திய ராணுவ வீரர்களுக்கு கூடுதல் பலமும், பாதுகாப்பும் கிடைக்க வேண்டும் என சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள ஹனுமன் கோயிலில் நடைபெற்ற பூஜையில் அமைச்சர் ராமலிங்க ரெட்டி பங்கேற்று, பிரார்த்தனை செய்தார். இந்நிலையில் சிறுபான்மை யினர் நலத்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறுகையில், ‘‘மே 9-ம் தேதி கர்நாடகாவில் உள்ள அனைத்து மசூதிகளிலும் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது, ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட இந்திய ராணுவ வீரர்களுக்கு கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்க பிரார்த்தனை செய்ய உத்தரவிட்டுள்ளேன். பெங்களூரு கே.ஆர்.மார்க்கெட்டில் உள்ள ஜும்மா மசூதியில் நடைபெறும் தொழுகையில் நானும் பங்கேற் கிறேன்” என்றார்.

Read More

சென்னை: நடப்பாண்டு பிளஸ்-2 பொதுத் தேர்வை தமிழக சிறை​களில் உள்ள 2 பெண் கைதி​கள் உட்பட 130 கைதி​கள் எழு​தினர். தேர்வு முடிவு​கள் நேற்று வெளி​யான நிலை​யில், 10 கைதி​கள் மட்​டும் தேர்ச்சி பெற​வில்​லை. புழல் சிறை​யில் தேர்வு எழு​திய 21 பேரில் 18 பேரும், புழல் மத்​திய சிறை​யில் தேர்வு எழு​திய 4 பேரில் 2 பேரும், வேலூர் மத்​திய சிறை​யில் தேர்வு எழு​திய 9 பேரில் 5 பேரும், கடலூர் மத்​திய சிறை​யில் தேர்வு எழு​திய 7 பேரும் தேர்ச்சி பெற்​றுள்​ளனர். இதே​போல கோவையில் 20, சேலத்​தில் 8, திருச்​சி​யில் 22, மதுரை​யில் தேர்வு எழு​திய 30 பேரில் 29 பேரும், பாளை​யங்​கோட்​டை​யில் 7 பேரும், மதுரை மற்​றும் திருச்சி பெண்​கள் தனிச்​சிறை​யில் தலா ஒரு​வரும் தேர்ச்சி பெற்​றனர். பாளை​யங்​கோட்டை மத்​திய சிறை கைதி மீனாட்சி சுந்​தரம் 524 மதிப்​பெண்​களும், அதே சிறைக் கைதி வைத்​திலிங்​கம் 517 மதிப்​பெண்​களும்,…

Read More

சென்னை: பொது பயன்பாடு மற்றும் அரசு ஆவணங்களில் இருந்தும் ‘காலனி’ என்ற சொல் நீக்கப்படுவதாக அறிவித்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் பாராட்டு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆணையத்தின் தலைவர் நீதிபதி தமிழ்வாணன், துணை தலைவர் இமயம், உறுப்பினர்கள் ஆனந்தராஜா, ரேகா பிரியதர்ஷினி, செல்வக்குமார், பொன்தோஸ், இளஞ்செழியன் ஆகியோர் அனுப்பிய கடிதத்தில், ‘பொது பயன்பாடு மற்றும் அரசு ஆவணங்களில் இருந்து காலனி என்ற சொல் நீக்கப்படும் என அறிவித்திருப்பதன் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனில் முதல்வர் அதிக அக்கறையுடன் செயல்படுவது உறுதியாகி இருக்கிறது. இதற்காக முதல்வருக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் மனப்பூர்வமாக பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது’ என கூறியுள்ளனர்.

Read More